ஒரு பிரச்சனை என்று வந்தால் நடுநிலையாக இருக்கிறோம் என்று சிலர் வாயை திறப்பது இல்லை , இதன் பெயர் நடுநிலையா ? இந்த விடயங்கள் தான் நம் அரசியல் சமூகத்தை நிர்ணயம் செய்கிறது என்று நினைக்கிறேன் . ஒரு பிரச்சனை என்று வந்தால் நமக்கு ஏன் வம்பு என்று போகிறவனை, இந்த சமூகம் வம்பு தும்பிர்க்கு போகாதவன் நல்ல பையன் என்கிறது ???? அதாவது ஊர் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் நான் நல்ல இருந்தால் போகும் என்ற நினைப்பு . தப்பான அணியில் இருப்பவர்களை கூட ஏற்றுக்கொள்ளலாம் அவர்களிடம் கருத்து என்பது உண்டு , ஆனால் இந்த புறமும் சேர மாட்டேன் அந்த புறமும் சேர மாட்டேன் நான் நடுநிலைவாதி என்று சொல்பவனை ஏற்றுக்கொள்ளவே முடியாது .
நடுநிலை என்பது அதாவது இவர்கள் சொல்லும் நடுநிலை என்பது என்னவென்றால் யாருக்கும் குரல் கொடுக்கமால் நான் உங்களுக்கும் நல்ல பிள்ளை எங்களுக்கும் நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க நினைப்பது , இவை எல்லாமே பிழைப்புவாதம் , இந்திய நடுத்தரவர்க்கத்தின் மனநிலை . இந்த உப்பு சப்பு இல்லாதநடுத்தரவாதிகள்
ஆபத்தானவர்கள் .......!!!!!இவர்கள் நடுத்தரம் என்ற பெயரிலே தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறுகளுக்கு ஒரு விதத்தில் துணையாய் இருக்கிறது என்பதே உண்மை நிலவரம் ..............!!!!!ஏன் இதை எழுதுகிறேன் என்று குழப்பமாய் இருக்கிறதா .....கட்டாயமாய் முல்லை நரிசிம் விடயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
14 comments:
நடுநிலையாக இல்லாமல் உங்கள் கருத்தை ஆணித்தனமாய் தெரிவிக்கவும்
"ஏன் இதை எழுதுகிறேன் என்று குழப்பமாய் இருக்கிறதா ....."
நிச்சயம் குழப்பம் இல்லைங்கனா
"கட்டாயமாய் முல்லை நரிசிம் விடயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை"
ஐயா சாமி நெசமா நம்பிட்டோங்கோ
அப்புடி போடு அருவாள! இந்து ஆதிக்கம்னா பாஞ்சிகிட்டு எழுதுறானுங்க பரதேசிங்க. இந்த பாதிரியாருங்க கொழந்தைய கடத்தினத பத்தி எங்க ஒரு கருத்து சொல்லுங்க பார்ப்போம். கலியாணத்துக்கு கூப்புட்டு புட்டு பொம்பளைங்க தனியா ஆம்பளைங்க தனியான்னு மறைப்பு போடுறாங்களே முஸ்லீம் அது ஆணாதிக்கமா இல்லையா. எங்க தில்லா கருத்து சொல்லுங்கண்ணா பார்க்கலாம்.
மக்கள் பேசாமடந்தைகளாக ஆகிவிடும் நிலை ஆதிகாலந்தொட்டது.
‘நெட்டைமரங்களென நின்று புலம்பினார்;
ஊரவர்தம் கீழமை உரைக்குந்தரமாமோ?
பெட்டைப்புலமபலது;
பிறர்க்குத் துணியாமோ?.
வீரமிலா நாய்கள்.’
என்றிழுதினார் பாரதியார்.
இங்கிலிசில் ‘The Emperor has no clothes' என்ற கதையும் இதைத்தான் சொல்கிறது.
மக்கள் வாழ்க்கையில் தன்னிச்சையாக செயல் படமுடியாது. அதிகாரத்துக்கும் வலிமைக்கும் கட்டுப்பட்டுப் பயந்துதான் வாழவேண்டும்.
ஒரு விடயத்தில் நியாயம் அனியாயம் எஃதென்று அவர்களால் வெளியில் சொல்லிவிடமுடியாது.
பதிவகள் ஒரிருவரைத் தவிர அனைவரும் மக்களப் போலத்தான்.
அந்த ஓரிருவரும் எது நியாயம் கருதுவ்தும் மகா வேடிக்கை.
ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதுதான் நியாயமென்றும் ’அஃதில்லை வேறிருக்கலாம்‘ என்பவனை, ஆபாசச்சொற்களால் திட்டுவதும் நான் பார்க்கிறோம்.
இவர்களுக்கு, பேசாமடந்தைகள் கொஞ்சம் பெட்டர்.
வெண்ணிற இரவுகள், உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்...
தமிழ்மணம் என்ன செய்யலாம் என்று என் கருத்தை எழுதியிருக்கிறேன் வந்து உங்கள் கருத்தை தெரிவிப்பீர்களா?
ஒரு ஜாதிக்குள்ளேயே தீட்டு மனிதனை தொடக்கூடாது என்று சொன்ன ஒரே மதம் ஹிந்து மதம் . அதை சொன்னவர்கள் பார்பனர்கள் , ஒரு தலை வெட்டப்படும் பொழுதே
எல்லாம் வெட்டப்படும் , அப்படி அதிகாரம் செய்வதில் தலை பார்பனீயம் , அதனால் அந்த அதிகார எண்ணங்கள் முதலில் எதிர்க்க படவேண்டும் .
பேசாமடந்தைகள் பிழைப்புவாதிகள் , பிழைப்பிற்காக எதுவேண்டுமானாலும் செய்பவர்கள் அவர்களை எப்படி அனைவருக்கும் அவர்கள் பரவாஇல்லை
என்று சொல்கிறீர்கள்
/கட்டாயமாய் முல்லை நரிசிம் விடயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை./
போனாப்போகுது! நம்பறோம்!
இதில் ஏதோ ஒரு பக்கச் சார்பு நிலை அல்லது எதிர்ப்பு நிலை எடுக்க வேண்டிய அளவுக்கு அவ்வளவு சர்வதேசீய முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரியாமல் போய் விட்டது!
சிறுமை கண்டு பொங்குவாய் என்று இந்த மண்ணில் நடக்கும் மற்ற எல்லாச் சிறுமைகளையும் கண்டு கொதித்துப் பொங்கி விட்டோமா என்ன?
ஊழல், வன்முறை காசுக்குத்தான் கல்வி என்று இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அப்போதெல்லாம் வராத கோபம், இங்கே இதில் மட்டும் ஏன் வருகிறது?
சரி அதெல்லாம் கூடப் போய்த் தொலையட்டும்!
இதில் நடுநிலைமை என்ற வார்த்தை எங்கே இருந்து, எதற்காக வந்து மாட்டிக் கொண்டது?
ஒன்று முதலாளித்துவ அமெரிக்காவாக இரு, இல்லையேல் கம்யுனிச ரஷ்யாவாக இரு. நடுத்தரமாக மட்டும் இருக்காதே. இல்லையேல் Third World Country என்று சொல்லி விடுவார்கள் என்கிறீர்களா?
//கட்டாயமாய் முல்லை நரிசிம் விடயத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
கண்டிப்பாக இல்லை. இந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்து என்ன ஆக போகிறது? ஆணாதிக்கம், பார்ப்பனியம் ஒழிந்து
விடப்போகிறதா?
//இந்திய நடுத்தரவர்க்கத்தின் மனநிலை
இந்த வார்த்தையை கூற காரணம் என்ன?
வேறு எந்த நாடுகளுமே இப்படி இல்லாததாலா?
இந்திய கம்யுனிச நாடாக இல்லாமல் இருப்பதாலா?
நீங்கள் ஒரு இந்தியனாக இருப்பதாலா?
’நடுநிலை’-க்கும், ’இவர்கள் சொல்லும் நடுநிலை’-க்கும் என்ன வித்தியாசம்?
நடுநிலை என்ற ஒன்று எப்போதுமே இருக்கக்கூடாது என்கிறீர்களா?
யாரோ ஒருவர் நடுநிலையாக இருந்தால், அவர் ஏன் நடுநிலையில் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?
எனக்குத் தெரிந்தவரை நடுநிலையில் இரண்டுவகை உண்டு... முதல் வகை, எது தவறு எது சரி என்று ஒரு கருத்து இருந்தும், தங்கள் பாதுகாப்பிற்காக கண்டும் காணாமலும் போகிறவர்கள்.. இரண்டாம் வகை, தான் தலையிட்டால் மொத்த பிரச்சினை அதிகமாகவே வாய்ப்புள்ளது என்று நினைத்தோ, அல்லது இருபக்கமும் தவறுள்ளது எனத்தெரிந்தோ நடுநிலையாக/விலகி இருப்பவன்...
முதல் வகையையும், இரண்டாம் வகையையும் குழப்பி உள்ளீர் என நினைக்கிறேன்...
There are three sides to every argument: your side, my side and the right side.
நடுநிலையாளர்கள் பிரச்சினையை வெளியில் இருந்து பார்ப்பவர்கள்... அவர்கள் right side-ல் இருக்கலாம்.. :)
உண்மை தான் ...
நன்றி ஜேகே
எல்லாப் பிரச்சினைக்கும்
எல்லாரும் சவுண்டு விடமுடியாது
அய்யா.
Post a Comment