பைத்தியக்காரன் ராவணன் விமர்சனம் படித்தேன் , விமர்சனம் அற்புதமாய் இருந்தது என்றே நினைக்கிறேன் . ஆனால் அதில் பின்னூட்டங்கள் மிகவும் பாதித்தது ,பதிவர்கள் அவர் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் என்ற வண்ணத்தில் பின்னூட்டம் செய்திருந்தார்கள் . வால் பையன் கூட இஸ்லாமிற்கு சொம்பு தூக்குகிறார் என்கிறார் பாம்பே பற்றி குறிப்பிடும் பொழுது .சரி அப்படி என்றால் பாம்பே படத்தின் வரும் காட்சிகளை வால் ஒத்துக்கொள்கிறாரா ???????அந்த பாபர் மசூதி விடயம் மறைக்கப்பட்டு , வெறும் முஸ்லிம் தீவிரவாதம் போல் காட்டி உள்ளாரே மணி சார் . அப்பொழுது வால் மணி சார் அவர்களுக்கு சொம்பு தூக்குகிறாரா.சும்மா சொம்பு தூக்குகிறார் என்பதை சொல்வதை விட்டுவிட்டு சிவராமன் சொல்வதில் என்ன நியாயம் என்பதை பார்க்க வேண்டும் . பம்பாய் படத்தில் முஸ்லிம் மக்களே தீவிரவாதத்தை ஆரம்பிப்பது போல் காட்சி துடங்குகிறது, ஆனால் உண்மை என்ன பாபர் மசூதி இடிக்கப்பட்டது தான் பிரச்சனையின் மையப்புள்ளி மணி சார் எந்தகாட்சியை முதலில் காண்பித்திருக்க வேண்டும் .
ஆனால் வரலாற்றை திரிக்கும் வேலையை பால் தாக்கரே ஆசியுடன் செய்கிறார் மணி சார் . முதலில் முஸ்லிம்கள் வன்முறையை ஆரம்பிப்பது போல் காட்டுகிறார் , பின்பு முஸ்லிம்களுக்கு close UP காட்சிகள் , அவர்கள் வன்முறையாளர்கள் என்று மனதில் பதிய வேண்டும் , ஹிந்துக்களுக்கு wide அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை .அப்புறம் ஒரு பேரன் ஹிந்து தாத்தாவின் விபூதியை அழிப்பான் , ஏன் என்றால் முஸ்லிம் மக்கள் ஹிந்து விபூதியை கூட ஏற்க மாட்டார்கள் , ஆனால் ஒரு ஹிந்து தாத்தா வீட்டை எரிக்கும் பொழுது , உள்ளே புகுந்து இஸ்லாமின் புனித நூலான குரானை காப்பாற்றுவார் , என்பது போல காட்சி அமைப்பு . இது என்ன ஹிந்து வெறியா , இதை சிவராமன் சொன்னால் சொம்பு தூக்குவது என்று சொல்வதா ??? வரலாறு ஒன்று சொல்லும் , மணி சார் ஒன்றை சொல்வார் அதை விமர்சனம் செய்யாமல் ஒரு CORPERATE முதலாளிகளுக்கும் , மத வெறியர்களுக்கும் சொம்பு தூக்கும் மணி சார் அவர்க்களுக்கு சொம்பு தூக்க வேண்டுமா .
அப்பொழுது பாபர் மாசூதி பிரச்சனை அதை திசை திருப்பும் எட்டப்பன் வேலையை பார்த்தார் மணி , இப்பொழுது "OPERATION GREEN HUNT "பசுமை வேட்டை , கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதி தண்டக்காரண்யா , அதன் மீது பண முதலைக்களுக்கு ஒரு கண் , வேதாந்தா நிறுவனத்திற்கு மலையை விற்பதற்கு பூர்விக மக்களை துரத்தப்பார்க்கிறார் சிதம்பரம் , அவரும் அந்த நிறுவனத்தின் வேலை செய்து இருக்கிறார் . இப்பொழுது மக்களை
துரத்தப்பார்க்கிறார் .அங்கே போராளிகள் என்பவர் வேறு யாரும் அல்ல அந்த உழைக்கும் மக்கள் . அந்த வடக்கிழக்கு ஏழு மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடப்பதே இல்லை . அங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் , சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம் , பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள் . அங்கு மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே தவிர தனிமனித விருப்பு வெறுப்புகளால் அல்ல ,ஆனால் இப்பொழுது பசுமை வேட்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது , இப்படி ஒரு படம் எடுத்தால் அது எட்டப்பன் வேலை , அதாவது ஒரு போராளி என்பவன் தனிப்பட்ட கோபத்தால் நாயகியை கடத்துகிறான் , அதுவும் காதல் கொள்கிறான் .
ஒரு இனம் அடிக்கப்படும் பொழுது , தன் மக்கள் துன்பப்படும் பொழுது , பெண்கள் கற்பழிக்க படும் பொழுது , எப்படி அந்த மேட்டுக்குடி பெண்ணை காதலிக்க முடியும் . அதை விட தையிரியாமான பெண்கள் போராடும் மக்களிடம் அல்லவா இருப்பார்கள் . எதோ ஒரு SOFTWARE ENGINEER காதல் செய்வதை போல "உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே " என்று காதல் செய்வானா ஒரு போராளி , மசுரைப்போல்
இருந்தது அந்த காட்சி . எதனால் அவன் இப்படி ஆனான் என்ற சமூக விளக்கத்தை தந்திரமாய் தவிர்த்து அவன் காதல் தாபம் போன்றவைகளை பிரதானப்படுத்தி போராளிகளை அசிங்கப்படுத்துகிறார் இந்த CORPERATE அறிவாளி . அதுவும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப படம் செய்கிறார் , அவர் எந்த காலத்தில் அந்த படத்தை எடுத்தார் என்பது கட்டாயம் விவாததிற்கு உட்பட்டது. அவருடைய கொள்கைகளை அவர் காட்சி அமைப்பை வைத்தே விமர்சனம் செய்யலாம். இதற்கும் பின்லேடனுக்கும் சம்பந்தம் இல்லை , ஆனால் மணி சார் படத்திற்கு கட்டாயம் தாக்ரே , வேதந்தா , சிதம்பரம் , அம்பானி போன்றவர்களின் ஆசி உள்ளது . "குரு" எடுத்தார் என்று தானே அவைக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது , உண்மை தானே ???
42 comments:
அருமையான பதிவு ..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html
அன்பின் வெண்ணிற இரவுகள்,
'சிதைவுகள்' தளத்தில் வெளியான 'ராவணன்' விமர்சனத்துக்கு வந்த எதிர்வினைகள், அந்த இடுகைக்கான மறுமொழிகள் மட்டுமே அல்ல. ஒரு ஆணாதிக்க பார்ப்பன வக்கிரத்தை சமீபத்தில் சமரசமின்றி எதிர்த்ததற்கான என் செயல் குறித்த விமர்சனங்கள் அவை. அதற்காக ஆணாதிக்க, பார்ப்பன வக்கிரத்துக்கு அனைவரும் துணை போனார்கள் என்று சொல்லவில்லை.
நட்பையும், ஆணாதிக்க - பார்ப்பன எதிர்ப்பையும் ஒன்றாக்கி பார்க்கும்போது சமரசங்களை நோக்கியே நகருவோம். அப்போது ஏற்படும் சிக்கல்களைத்தான் வந்த மறுமொழிகளில் பெரும்பாலானவை பிரதிபலிக்கின்றன.
மற்றபடி அந்த இடுகையில் வந்த மறுமொழிகள் ஒரு உரையாடலை முன்வைப்பதாகவே கருதுகிறேன். எந்தளவுக்கு சிந்தனை அளவில் பலரும் காயடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
பெண்ணடிமைத்தனத்தை பிரதிபலிக்கும் ஆணாதிக்க, பார்ப்பன வக்கிரத்தை துணிவுடன் எதிர் கொண்டது போலவே ஆபரேஷன் க்ரீன் ஹண்டுக்கான எதிர்ப்பையும் அழுத்தமாக, உரத்த குரலில் துணிவுடன் பதிவு செய்யவேண்டும். சமரசமின்றி போராட வேண்டும்.
அந்தவகையில் ஓர் உரையாடலை இந்த இடுகையும் முன்வைக்கிறது. நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கதையெல்லாம் எனக்கு ஆகாது தோழரே!
பூனூலை கூட கழட்டாத சிவராமன் விளம்பரத்திற்காக செய்யும் சல்ஜாப்பு வேலைகெல்லாம் நான் மண்டையாட்ட முடியாது!
மூட நம்பிக்கை என்று வந்துவிட்டால் எல்லா மதமும் குப்பை தான், அதில் இஸ்லாம் என்ன, இந்துத்துவா என்ன? மணிரத்னம் இஸ்லாத்தை குற்றவாளியாக காட்டினால் சிவராமன் இத்துத்துவாவை குற்றவாளியாக காட்ட முனைக்கிறார், காட்ட என்பதன் காரணம், குங்கமபொட்டு இல்லாமல் அந்த நாத்திகவாதி வெளியே வருவதில்லை, இவரு இஸ்லாத்தை பற்றி பேசினால் சொம்பு தூக்குகிறார் என்று தான் சொல்ல முடியும்!
என்னுடய 303 பதிவில் எங்கேயாவது மணிரத்னத்தை தூக்கி எழுதி பார்த்ததுண்டா தோழரே! ஆனால் சிவராமன் ஒரு பதிவில் விளிம்புநிலை மனிதர்களின் பாதுகாவலன் என ஒருவரை பாராட்டி விட்டு மறு பதிவில் முதலாளித்துவ கொடுங்கோலன் என எழுதக்கூடிய கொள்கையுடய அரசியல்வாதி!
காயடிக்க பட்டிருப்பது யாரென்று அவர்களின் முகமூடியில் தெரியும், உண்மையிலேயே சமூக அக்கறை உள்ள மனிதன் கூட இருந்தே குழாவி, வேறு பெயரில் அதே ஆளை பற்றி எழுத மாட்டான், ஆணென்று சொல்லி கொள்பவன் செய்யும் காரியம் அல்ல என்பது என் கருத்து!
பெரும்பாலோனர்க்கு தெரியும் அந்த பதிவு மாற்று அரசியல் என்ற பெயரில் பிரிவினையை தூண்டக்கூடியது மட்டுமே, மணிரத்னம் ஒரு வியாபாரி என்று சொல்லியிருந்தால் கூட நானும் ஆதரித்திருப்பேன், ஆனால் பார்பனியத்தை பற்றி பேச இன்னொரு பக்கா பார்பனீயவாதிக்கு என்ன தகுதி இருக்கிறது தோழரே!
சிவராமனும் ஒருநாள் எனக்கு மரியாதைக்குறிய நண்பர் தான், அதற்காக அவர் என்ன செய்தாலும் நான் ஒத்துக்கனுமா!?
அவர் செய்து கொண்டிருக்கும் திரைமறைவு அரசியல் ஒருநாள் உங்களுக்கு புரியும்! பதிவரசியல் தாண்டி ஒரு குடும்பத்தை கெடுத்த பெருமையை அவர் அடையும் போது நீங்களும் அதை ஆதரித்து ஒரு பதிவு போடுங்கள், இப்போது மாதிரியே அதற்கும் ப்ளஸ் ஓட்டு போட்டு செல்கிறேன்!
//பாபர் மசூதி விடயம் மறைக்கப்பட்டு//
இது தான் நீங்க படம் பார்த்த லட்சணமா தோழரே!
மேல் ஏறி இடிக்கும் காட்சி காட்டப்பட்டிருக்கும், மேலும் நாசர்(ஒரு இஸ்லாமியர் என்பதை கருத்தில் கொள்க) இஸ்லாமிய(பெயர் ஞாபகம் இல்லை)செங்கல் சூளை வைத்திருப்பவரிடம், ராமா என்று பெயரிட்டு செங்கல் வேண்டும், அனைத்தும் அயோத்திக்கு என்று சொல்லவும் சண்டை ஆரம்பிக்கும், தேவையானவை குறியீடுகளாக தான் காட்ட முடியும்!
பின்நவீனத்தில் லஃப்டு, ரைட்டு, கால் சந்து என்று அனைத்து ஓட்டௌகுள்ளும் புகுந்து விளையாடும் உங்கள் அன்புகுறிய தோழருக்கு அது ஏன் தெரியவில்லை!
அந்த படத்தில் வன்முறை செய்தது அனைத்தும் இஸ்லாமியர் என்றா காட்டப்பட்டுள்ளது!, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லுங்கள்!
அன்பின் வால் பையன்,
ஒருமுறையோ அல்லது இருமுறையோ நாம் நேரில் சந்தித்திருப்போம். அப்போது நான் மேல் சட்டைத்தான் அணிந்திருந்தேன். உள்ளே கை வைத்த பனியன் இருந்தது. அதனுள்ளே கொஞ்சம் முடிகளும், எலும்புகளும் உண்டு. அதைத்தாண்டி எனது அனடாமியில் வேறு எதுவும் இல்லை.
அப்படியிருக்க நீங்கள் வேறு ஒருவருடைய வெற்று மார்பை பார்த்துவிட்டு அதை என் மார்புடன் பொருத்திச் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.
நெற்றியில் குங்குமப் பொட்டு உண்டு என்பது உலகுக்கே தெரியும். போலவே பார்ப்பன அடையாளங்கள் கிடையாது என்பதும்.
'ராவணன்' விமர்சன இடுகையில் பிரிவினைவாதத்தை கண்டுப்பிடித்த உங்கள் எக்ஸ்ரே கண்களுக்கு வந்தனம்.
காற்றில் உலவும் வதந்திகளையே அரசியல் கோட்பாடுகளாக நினைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//காற்றில் உலவும் வதந்திகளையே அரசியல் கோட்பாடுகளாக நினைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.//
நீங்க ஆதாரம் எல்லாம் கொடுத்த போதே தெரிந்து கொண்டேன், லெனின் கருப்பன் போல் எல்லா பக்கமும் கேமரா வைத்து தான் எதையும் எழுதுவிங்கன்னு!
//பம்பாய் படத்தில் முஸ்லிம் மக்களே தீவிரவாதத்தை ஆரம்பிப்பது போல் காட்சி துடங்குகிறது,//
எதை வைத்து இதை சொல்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா தோழரே!
ஒருவருடய மகள் வேற்றூ சாதிகாரனையோ, மதக்காரனையோ காதலிப்பதை எதிர்ப்பது தீவிரவாதத்தில் சேருமா, அல்லது மூடநம்பிக்கையில் சேருமா?
திரும்பவும் சொல்கிறேன், மணிரத்னம்(சார், மோர் கூட நான் சொவதில்லை தோழரே)ஒரு பக்கா வியாபாரி, நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை புனையும் ஒரு கதாசிரியர், அதில் அவரது பார்பனீய திணிப்புகள் நிச்சயம் உண்டு, அதை சுட்டி காட்ட வேண்டுமே தவிர பார்ப்பதெல்லாம் பார்பனீயம் என்பது வெறும் பிதற்றல் நண்பரே!
சினிமாவை சினிமாவாக பார்க்காமல் அவன் மேட்டுகுடியை காதலிப்பானா, மசுரே போகுதேன்னு பாட்டுபாடுவானா என்று ஆதங்கபடும் நண்பரே!
இதுக்கு தான் நான் சினிமாவுக்கே போறதில்ல,
ஒருத்தனுக்கு யார்கிட்ட காதல் வரணும்னு உங்ககிட்ட கேட்டுகிட்டு தான் பண்னனும் போலயே, அதை செய்யாமல் காதலித்த ஹிட்லரை அதனால் தான் கொன்றீர்களோ!?
:)
அன்பின் வால் பையன்,
////பம்பாய் படத்தில் முஸ்லிம் மக்களே தீவிரவாதத்தை ஆரம்பிப்பது போல் காட்சி துடங்குகிறது,//
எதை வைத்து இதை சொல்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா தோழரே!//
இதற்கு பதில், 'பம்பாய்' படத்தை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
இஸ்லாமிய இளைஞன், இந்துப் பெண்ணை காதலிப்பதுபோல் மணிரத்னம் ஏன் அப்படத்தை இயக்கவில்லை என்று கேள்வியில்தான் அவரது பார்ப்பனீய மேல்சாதி - வர்க்க சிந்தனை அடங்கியிருக்கிறது. பெண்ணின் கருப்பையை எந்த இன ஆண் ஆளவேண்டும் என்று தீர்மானிப்பதிலேயே சீழ் வடியும் மேட்டுக்குடி வர்க்க பாசிச சிந்தனை அடங்கியிருக்கிறது. இதை கடவுளை மறுத்து சாதியை மறுக்கும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்புறம்,
//காதலித்த ஹிட்லரை அதனால் தான் கொன்றீர்களோ!?//
அன்பின் வால், என் மீதுள்ள கடுப்பில், கோபத்தில் நிதானத்தை இழக்காதீர்கள். உங்கள் மீது என்றுமே எனக்கு மரியாதை உண்டு. ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டதற்கு காரணம் காதல் என்றா நினைக்கிறீர்கள்?
என்னை தூற்ற வேண்டும் என்பதற்காக தயவுசெய்து தடம் புரளாதீர்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//இஸ்லாமிய இளைஞன், இந்துப் பெண்ணை காதலிப்பதுபோல் மணிரத்னம் ஏன் அப்படத்தை இயக்கவில்லை என்று கேள்வியில்தான் அவரது பார்ப்பனீய மேல்சாதி - வர்க்க சிந்தனை அடங்கியிருக்கிறது.//
அவர்களுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகலின் முழுப்பெயர்களை வெளியிட்டால் மகிழ்வேன்! யார் சுமப்பது என்பதைவிட, குழந்தைகள் என்னவாக வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வைத்த பெயரில் இருக்கும்!.
யார் யாரை காதலிக்கனும்னு இனிமேல் சட்டம் போட்டு தான் படம் எடுக்க விடுங்களா, இல்ல கதாபாத்திரத்தை மட்டும் பார்ப்பிங்களா!?
//அன்பின் வால், என் மீதுள்ள கடுப்பில், கோபத்தில் நிதானத்தை இழக்காதீர்கள். உங்கள் மீது என்றுமே எனக்கு மரியாதை உண்டு. ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டதற்கு காரணம் காதல் என்றா நினைக்கிறீர்கள்?//
போராட்டத்தில் ஈடுபடம் ஒருவனுக்கு மேட்டுகுடி பெண் மேல் எப்படி காதல் வரும் என்ற நண்பரின் கேள்விக்கான பதில் அது, ஹிட்லரை பொறுத்தவரை அவனுக்கு அது போராட்டம் தான்!
எனக்கு உங்கள் மீது கோவம் அல்ல, டோண்டு கூட தான் பூனூல் போட்டிருக்கார் ஆனால் ஆமா நான் அப்படி தான் என்கிறார், ஆனால் நீங்களோ சமூக அக்கறை உள்ளவர் போல் மாயபிம்பம் தோற்றுவிக்கிறீர்கள், அது கொலைவெறியே கொடுக்கும்!
//என்னை தூற்ற வேண்டும் என்பதற்காக தயவுசெய்து தடம் புரளாதீர்கள்.//
தனிபட்ட முறையில் நீங்கள் ஜெயமோகன் ஆதரவாளர் என்பது அனைவருக்குமே தெரியும், அதை பற்றி எங்கேயாவது பேசினேனா! நீங்க இப்படியெல்லாம் இழுத்தா எல்லாம் தான் வரும்! அதெப்படி ஒரே நேரத்தில் இரண்டு இஸத்திற்குள்ளும் கால் வைத்து பயணகிக்க முடிகிறது!
அன்பின் வால்,
//கொலைவெறியே கொடுக்கும்!// நன்றி. அப்படியே வதந்திகளை நம்பி உங்கள் அரசியல் கோட்பாட்டை வகுத்துக் கொள்ளுங்கள்.
//தனிபட்ட முறையில் நீங்கள் ஜெயமோகன் ஆதரவாளர் என்பது அனைவருக்குமே தெரியும், அதை பற்றி எங்கேயாவது பேசினேனா! நீங்க இப்படியெல்லாம் இழுத்தா எல்லாம் தான் வரும்!//
பட்டியலுக்காக காத்திருக்கிறேன்.
ஆனால், பாருங்கள் இடுகையில் நண்பர் வெண்ணிற இரவுகள் சுட்டிக்காட்டிய விஷயத்தை விட்டுவிட்டு தடம் மாறுகிறீர்கள் பார்த்தீர்களா... இதை குறைத்துக் கொள்ளுங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
"பூனூலை கூட கழட்டாத சிவராமன் விளம்பரத்திற்காக செய்யும் சல்ஜாப்பு வேலைகெல்லாம் நான் மண்டையாட்ட முடியாது!"
நானும் "அவாள் " ஆதிக்கத்தை விரும்பாதவன் என்ற போதிலும், இந்த வார்த்தையை ஏற்கவில்லை... அவர் பூணுல் போட்டு இருந்தாலும், போடா விட்டாலும் பிரசினை இல்லை... அவர் கருத்து சரியானதுதான்...
//அவர் பூணுல் போட்டு இருந்தாலும், போடா விட்டாலும் பிரசினை இல்லை... அவர் கருத்து சரியானதுதான்... //
நர்சிம் மேட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை பார்வையாளரே! எது சொன்னாலும் மண்டையாட்ட நான் என்ன அடிபொடியா!?,
அதென்ன பூனூல் போட்டாலும் போடாவிட்டாலும், அவர் எதிர்த்தது ஆணாதிக்கத்தை என்றால் அதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது, ஆனால் பார்பனீயத்தை என்றால் அதை எப்படி போட்டாலும், போடாவிட்டாலும் என்று பிரிக்க முடியும்! அவாள் புத்தியை நம்பி ரொம்ப சப்போர்ட் பண்ணாதிங்க, ஒரு நாள் உங்களுக்கே ஆப்பு வைப்பா!
நண்பருக்கு உங்களது இந்தப் பதிவை படித்து மிகவும் வருத்தமுற்றேன். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் அப்பதிவையும் அதன் பின்னுட்டங்களையும் நான் படித்தேன் அது பற்றியான எனது விமர்சனங்கள் அல்ல இவை.
///அங்கே போராளிகள் என்பவர் வேறு யாரும் அல்ல அந்த உழைக்கும் மக்கள் . அந்த வடக்கிழக்கு ஏழு மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடப்பதே இல்லை . அங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் , சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம் , பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள் . அங்கு மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே தவிர தனிமனித விருப்பு வெறுப்புகளால் அல்ல ,ஆனால் இப்பொழுது பசுமை வேட்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது///
இந்த மேற்குறிப்பிட்ட பகுதி ஒரு மேடைப் பேச்சைப் போல உள்ளது. தங்களின் போதிய புரிவின்மையை காட்டுகிறது.
ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டமானது வடகிழக்கின் ஏழு மாநிலங்கள் அதாவது செவன் சிஸ்டர்ஸ் என்பதில் மட்டுமே உள்ளது. அங்கு எவ்வித நக்சல் இயக்கங்களும் இல்லை. ஒத்துக் கொள்கிரீரா?
அங்கு உள்ள பிரச்சினையானது தனிநாடு வேண்டியும் மாநில சுயாட்சி வேண்டியும் இன்னபிற பிராந்திய காரணங்களுக்காகவும் நடைபெறும் பிரச்சினைகள். அவற்றை இங்கு சிறிய இடத்தில் விவரிக்க இயலாது.
நக்சல்கள் அல்லது மாவோவாதிகள் உள்ள பிரதேசமானது ரெட் காரிடார் என்றழைக்கப்படும் இந்தியாவின் மெயின்லேண்ட் ஆன சத்தீஸ்கர் ஜார்க்கண்ட் பீகார் ஒரிசா மேற்குவங்கம் ஆந்திராவின் தெலுங்கானா உள்ளிட்ட பிரதேசமாகும். அங்கு இத்துணை பாரிய அளவில் ஆயுதப் போராட்டம் உருக்கொண்டாலும் அரசு இதுவரை ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அங்கு பிறப்பிக்கவில்லை.
//சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்//
சட்டங்கள் இல்லாத ஊர் எது. நாடு எது. என்ன சட்டம் என்று குறிப்பாக சொல்லவேயில்லை. ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டமானது அங்குள்ள போலீசின் அதிகாரமல்ல. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய காவல் படையைச் சார்ந்தவர்களுக்கான மற்றும் இராணுவத்திற்கான அதிகாரம்.
//மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே//
முதலில் அடக்குமுறை அடக்குமுறை என்று பேசுவதை விட்டு எதனால் என்ன மாதிரியான அடக்குமுறை நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். நக்சல் பிரச்சினையானது அறுபதுகளில் தொடங்கி பெரிய வரலாறு கொண்டது. அதில் அரசின் அடக்குமுறையானது (அந்த) பின்னால் புகுந்தது.
//பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள்//
முதலில் இந்த வார்த்தை பதத்தை மாற்றவும் கற்பழிக்க-- இது வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்று அழைக்க பொருத்தமாயிருக்கும்.
ஏதோ கண்ணில் படும் பெண்களை எல்லாம் அல்லது ஒரு பெண் விடாமல் வல்லுறவுக்கு ஈடுபடுத்துவது போல பேசுகிறீர்கள்.. பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தபாடுகிறார்கள் என்றல்லவா இருக்க வேண்டும்.
நான் முதல் முறையாக உங்களது வலைத்தளத்தில் ஒரே ஒரு பின்னூட்டமிருக்கையில் இதை எழுதி வைத்து ஆனால் அவசர வேலை காரணமாக முடித்து வெளியிட முடியாது திரும்ப வந்து பார்க்கையில் நண்பரிருவர் அதனை எங்கெங்கோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஆனால் அவர்களிருவரும் இந்தக் கருத்துப் பிழையை பற்றியோ அல்லது பெண்ணடிமை பற்றி பேசும் இருவரும் //பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள்// இந்த வார்த்தைகளைப் பற்றியோ எதுவுமோ கூறாமல் சென்றிருப்பது மிகவும் வருத்தமாயிருக்கிறது. இதுதான் தமிழ் வலையுலக அறிவாளிகளின் நிலை என்றறிய மிகவும் வருத்தமாயிருக்கிறது.
இங்குள்ளவர்களுக்கு யார் யாருக்கு சொம்பு தூக்குகிறார்கள் என்று கண்டறிவதும் யாருடைய சோம்பு நசுங்கி விட்டது என்று கண்டறிவதும் தான் முக்கியம் போல.
நண்பருக்கு உங்களது இந்தப் பதிவை படித்து மிகவும் வருத்தமுற்றேன். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் அப்பதிவையும் அதன் பின்னுட்டங்களையும் நான் படித்தேன் அது பற்றியான எனது விமர்சனங்கள் அல்ல இவை.
///அங்கே போராளிகள் என்பவர் வேறு யாரும் அல்ல அந்த உழைக்கும் மக்கள் . அந்த வடக்கிழக்கு ஏழு மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடப்பதே இல்லை . அங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் , சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம் , பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள் . அங்கு மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே தவிர தனிமனித விருப்பு வெறுப்புகளால் அல்ல ,ஆனால் இப்பொழுது பசுமை வேட்டை நடந்து கொண்டிருக்கும் பொழுது///
இந்த மேற்குறிப்பிட்ட பகுதி ஒரு மேடைப் பேச்சைப் போல உள்ளது. தங்களின் போதிய புரிவின்மையை காட்டுகிறது.
ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டமானது வடகிழக்கின் ஏழு மாநிலங்கள் அதாவது செவன் சிஸ்டர்ஸ் என்பதில் மட்டுமே உள்ளது. அங்கு எவ்வித நக்சல் இயக்கங்களும் இல்லை. ஒத்துக் கொள்கிரீரா?
அங்கு உள்ள பிரச்சினையானது தனிநாடு வேண்டியும் மாநில சுயாட்சி வேண்டியும் இன்னபிற பிராந்திய காரணங்களுக்காகவும் நடைபெறும் பிரச்சினைகள். அவற்றை இங்கு சிறிய இடத்தில் விவரிக்க இயலாது.
நக்சல்கள் அல்லது மாவோவாதிகள் உள்ள பிரதேசமானது ரெட் காரிடார் என்றழைக்கப்படும் இந்தியாவின் மெயின்லேண்ட் ஆன சத்தீஸ்கர் ஜார்க்கண்ட் பீகார் ஒரிசா மேற்குவங்கம் ஆந்திராவின் தெலுங்கானா உள்ளிட்ட பிரதேசமாகும். அங்கு இத்துணை பாரிய அளவில் ஆயுதப் போராட்டம் உருக்கொண்டாலும் அரசு இதுவரை ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை அங்கு பிறப்பிக்கவில்லை.
//சட்டங்கள் உண்டு . போலிஸ் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்//
சட்டங்கள் இல்லாத ஊர் எது. நாடு எது. என்ன சட்டம் என்று குறிப்பாக சொல்லவேயில்லை. ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டமானது அங்குள்ள போலீசின் அதிகாரமல்ல. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய காவல் படையைச் சார்ந்தவர்களுக்கான மற்றும் இராணுவத்திற்கான அதிகாரம்.
//மக்கள் naxal ஆனதே அந்த அடக்குமுறை காரணமாய் தானே//
முதலில் அடக்குமுறை அடக்குமுறை என்று பேசுவதை விட்டு எதனால் என்ன மாதிரியான அடக்குமுறை நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். நக்சல் பிரச்சினையானது அறுபதுகளில் தொடங்கி பெரிய வரலாறு கொண்டது. அதில் அரசின் அடக்குமுறையானது (அந்த) பின்னால் புகுந்தது.
//பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள்//
முதலில் இந்த வார்த்தை பதத்தை மாற்றவும் கற்பழிக்க-- இது வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்று அழைக்க பொருத்தமாயிருக்கும்.
ஏதோ கண்ணில் படும் பெண்களை எல்லாம் அல்லது ஒரு பெண் விடாமல் வல்லுறவுக்கு ஈடுபடுத்துவது போல பேசுகிறீர்கள்.. பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தபாடுகிறார்கள் என்றல்லவா இருக்க வேண்டும்.
நான் முதல் முறையாக உங்களது வலைத்தளத்தில் ஒரே ஒரு பின்னூட்டமிருக்கையில் இதை எழுதி வைத்து ஆனால் அவசர வேலை காரணமாக முடித்து வெளியிட முடியாது திரும்ப வந்து பார்க்கையில் நண்பரிருவர் அதனை எங்கெங்கோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஆனால் அவர்களிருவரும் இந்தக் கருத்துப் பிழையை பற்றியோ அல்லது பெண்ணடிமை பற்றி பேசும் இருவரும் //பெண்கள் எல்லாம் கற்பழிக்க படுகிறார்கள்// இந்த வார்த்தைகளைப் பற்றியோ எதுவுமோ கூறாமல் சென்றிருப்பது மிகவும் வருத்தமாயிருக்கிறது. இதுதான் தமிழ் வலையுலக அறிவாளிகளின் நிலை என்றறிய மிகவும் வருத்தமாயிருக்கிறது.
இங்குள்ளவர்களுக்கு யார் யாருக்கு சொம்பு தூக்குகிறார்கள் என்று கண்டறிவதும் யாருடைய சோம்பு நசுங்கி விட்டது என்று கண்டறிவதும் தான் முக்கியம் போல.
//இடுகையில் நண்பர் வெண்ணிற இரவுகள் சுட்டிக்காட்டிய விஷயத்தை விட்டுவிட்டு தடம் மாறுகிறீர்கள் பார்த்தீர்களா... இதை குறைத்துக் கொள்ளுங்கள்.//
அதற்குண்டான விவாதத்தையும் முன் வைத்திருக்கிறேன், குறைத்து கொள்ளட்டுமா அதை!?, என்னை என்ன உங்களை போல் பிரச்சனையை ஊர் முழுக்க சுத்தி திசை திருப்பும் ஆசாமி என்று நினைத்தீர்களா!?
followuppkku
பப்பாய் படத்தில் வரும் இரட்டை குழந்தைகளின் பெயர்கள்!
கமல் பஷீர்
கபீர் நாராயணன்!
இது எப்படி உங்க கண்ணுல இருந்து மறைஞ்சது?
நாயகனின் பாத்திரம் இந்துவாக இருந்தாலும் மதமற்ற சமுதாயம் வேண்டும் என்பது தானே அவனின் நோக்கமாக இருந்தது!
இரண்டு தரப்பிலும் பேட்டி எடுக்கும் பொழுது இதனால் அப்பாவி ஜனங்கள் உயிரிழக்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போறிங்க என்ற கேள்விக்கு என்ன அர்த்தம்!?, நாயகன் தீவிரமாக இந்துத்துவாவை தூக்கி பிடிக்கிறான் என்று அர்த்தமா!?
me the 15 th
மணிரத்னம் ஒரு இந்து தீவிரவாதி என்கிறீர்களா?
//அப்புறம் ஒரு பேரன் ஹிந்து தாத்தாவின் விபூதியை அழிப்பான் , ஏன் என்றால் முஸ்லிம் மக்கள் ஹிந்து விபூதியை கூட ஏற்க மாட்டார்கள் , ஆனால் ஒரு ஹிந்து தாத்தா வீட்டை எரிக்கும் பொழுது , உள்ளே புகுந்து இஸ்லாமின் புனித நூலான குரானை காப்பாற்றுவார் , என்பது போல காட்சி அமைப்பு .
இது பல பேருக்கு தெரியாது. நீங்கள் சொல்லித்தான் தெரியும். மணிரத்தினம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் தான் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இப்பொழுது என்ன சொல்கிறீர்கள் ............மணிரத்தனம் எடுத்தது சரி நான் சுட்டிக்காட்டியது தவறு என்றா ..............சினிமா எப்பொழுதுமே காட்சி படிமம்
அது உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் , அந்த காட்சியில் ஹிந்து நல்லவன் முஸ்லிம் கெட்டவன் என்று நம் உளவியலை நமக்கு தெரியாமலேயே
ஆட்கொள்ளும் நண்பா ...நீங்கள் சொல்வதை பார்த்தால் யாருமே யாரையும் விமர்சனம் செய்ய முடியாது பாலா ?????? அவர்களே .................. நீங்கள் சொல்வது எப்படி தெரியுமா இருக்கிறது ...போதை தவறு என்று சொல்கிறேன் அது தவறு ....ஆனால் சாரயக்கடை இருக்கலாம் என்கிறீர்கள் .......................
புகையிலை ஒருவனுக்கு அவனுக்கு தெரியாமலேயே அடிமை ஆக்குகிறது , கடவுள் நம்பிக்கையும் அதை போலவே , மக்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை கண்ணுக்கு தெரியாமல் காட்சி படிமங்கள் உளவியல் ரீதியாய் வேலை செய்யும் பாலா ????
அரைகிறுக்கன் அவர்களே விளக்கத்திற்கு நன்றி ................. போதிய புரிவின்மை என்றாலும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்
நண்பரே ..வார்த்தை பதங்கள் மாறலாம் ஆனால் நான் எழுதும் நோக்கம் சரி என்றே நினைக்கிறேன் .... ஆனால் நீங்கள் அதை மட்டும்
திருத்தி விட்டு மையக்கருத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை ........ என்றே நினைக்கிறேன் ????? விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன் ..
ஆனால் இங்கு naxal என்றே வார்தைபதம் முக்கியம் அல்ல . சொல்லவந்த கருத்து என்றே நினைக்கிறேன் .........!!! உங்கள் விமர்சனத்திற்கு
நன்றி கற்றுக்கொண்டு எழுதப்பார்க்கிறேன் தோழரே
//நாசர்(ஒரு இஸ்லாமியர் என்பதை கருத்தில் கொள்க) இஸ்லாமிய(பெயர் ஞாபகம் இல்லை)செங்கல் சூளை வைத்திருப்பவரிடம்,//
ஞாபகமில்லாத பெயர் கிட்டி!
அவர் பிறப்பால் இந்து என நண்பர்கள் சொன்னார்கள்!
மாத்தி நடிக்க வச்சது மணியின் பார்ப்பணிய தந்திரமாக இருக்குமோ!?
அதை ஏன் யாரும் சொல்லல!?
அப்படி சொல்வதற்கில்லை. இந்த மாதிரி விஷயங்களில் பெரும்பாலும் என்னை நானே உதாரணம் எடுத்துக்கொள்வேன். உங்கள் பதிவுகளை படித்த பின்தான் இவை எல்லாவற்றையும் உற்று கவனிக்க தொடங்கினேன் என்பது கசப்பான உண்மை. பார்ப்பனர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற எண்ணத்தை உங்களை போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கி விட்டீர்கள். உங்கள் விமர்சனத்தில் விக்ரமை மட்டும் கவனமாக தவிர்த்திருப்பதன் காரணம் என்ன? இதை நான் சொல்வதால் நானும் பார்ப்பனன், மேட்டிமை திமிர் பிடித்தவன் அப்படித்தானே?
இப்போது தொலைக்காட்சிகளில் 'ஹமாம் சோப் விளம்பரத்தில்' இடம்பெறும் வசனங்களையும் இதேபோல மணிரத்னம் பாணி பார்ப்பனீய வசன-காட்சியமைப்புகளுடன் ஒப்பிடலாம்...
கடுஞ்சினத்துடன் ஒரு பாட்டி, "கண்ட தெருநாய்களுடன் விளையாடுவதால்..."என்பதும்,
"ஆட்டோல போற பசங்களோட ஒட்டி உக்காந்து போறது..." என்று ஒரு பெரியவர் கேரம்போர்ட் ஸ்டிரைக்கரை வெறுப்புடன் இலக்கில்லாமல் அடிப்பது...
என்பன போன்ற வக்கிரங்களும் 'ஹமாம் சோப் விளம்பரங்கள்' என்பதா? 'வர்ணாசிரம வெளிப்பாடு' என்பதா? இதெற்கெல்லாம் இங்கே கொக்கரிக்கும் வால்பையன்களும் அரைக்கிருக்கன்களும் எண்ண சப்பைக்கட்டு சொல்வார்களோ..?
இப்போது தொலைக்காட்சிகளில் 'ஹமாம் சோப் விளம்பரத்தில்' இடம்பெறும் வசனங்களையும் இதேபோல மணிரத்னம் பாணி பார்ப்பனீய வசன-காட்சியமைப்புகளுடன் ஒப்பிடலாம்...
கடுஞ்சினத்துடன் ஒரு பாட்டி, "கண்ட தெருநாய்களுடன் விளையாடுவதால்..."என்பதும்,
"ஆட்டோல போற பசங்களோட ஒட்டி உக்காந்து போறது..." என்று ஒரு பெரியவர் கேரம்போர்ட் ஸ்டிரைக்கரை வெறுப்புடன் இலக்கில்லாமல் அடிப்பது...
என்பன போன்ற வக்கிரங்களும் 'ஹமாம் சோப் விளம்பரங்கள்' என்பதா? 'வர்ணாசிரம வெளிப்பாடு' என்பதா? இதெற்கெல்லாம் இங்கே கொக்கரிக்கும் வால்பையன்களும் அரைக்கிருக்கன்களும் எண்ண சப்பைக்கட்டு சொல்வார்களோ..?
விஷமத்த்தனமாய் எடுப்பதால் தான் அதை சொல்ல வேண்டி இருக்கிறது பாலா ?????
//என்பன போன்ற வக்கிரங்களும் 'ஹமாம் சோப் விளம்பரங்கள்'//
உம்மை யாருய்யா யூனிலிவர் கம்பெனி சோப்பு வாங்க சொன்னது, அவனுங்க தான் செண்ட் அடிச்சா பொண்ணுங்க பின்னாடி வரும்னு சொல்றானுங்களே!
பர்தா போட்ட பொண்ணுங்களும் வருவாங்களான்னு கேட்க வேண்டியது தானே!
நான் இங்கே பார்பனீயத்துக்கு ஆதரவா பேசுறதா தெரியுதா உங்களுகெல்லாம், உண்மையான பார்னபருக்கு வக்காலத்து வாங்குவது யாரு இங்கே!?
இருக்கலாம் வால் அவர்களே .....!!!!!!மணிரத்தினத்தின் கோர முகம் உற்று கவனித்தால் தெரியும்
கவனிப்பதே தவறு என்று எப்படி சொல்வது ........நீங்கள் சொல்வது போல் பெயரெல்லாம் முற்ப்போக்காய்
இருந்தால் கூட ???? காட்சி படிமங்கள் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்பது போலல்லவா இருக்கிறது ???
சரி இதை விடுங்கள் , ரோஜா படத்தில் கொடியை எரிக்கும் பொழுது நமாஸ் செய்வாரே , இதில் என்ன சொல்லவரார்
....
சிலவிடயங்களை முற்போக்கு போல காட்டிவிட்டு தனக்கு தேவையான கருத்தை வைப்பார் மணி
//ரோஜா படத்தில் கொடியை எரிக்கும் பொழுது நமாஸ் செய்வாரே , இதில் என்ன சொல்லவரார்//
பார்பனீய திணிப்பு இல்லைன்னு நான் சொல்லவேயில்லையே தோழர்!
அதை சொல்றதுக்கு அடிப்படை தகுதி வேணும்னு தான் சொல்றேன்!
மீண்டும் சொல்ரேன், எதிரிக்கு எதிரி நண்பன் பேசிக்குல ஆதிரிக்காதிங்க,
தப்புன்னா தலையில் அடி!
சரின்னா கட்டிபிடி, இது தான் என் பாலிஸி, யாராயிருந்தாலும்!
வால் நான் எதிரிக்கு எதிரி என்ற நோக்கில் ஆதரிக்கவில்லை ....
அந்த கட்டுரை வைத்து தான் ஆதரவு தெரிவித்தேன் ......
மற்றபடி எங்கு பார்பனீயம் இருந்தாலும் எதிர்க்கும் உங்கள் மேல் ஈர்ப்பு இருந்தது , ஆனால்
சிவராமன் கட்டுரையில் நீங்கள் பம்பாய் பற்றி சொன்ன கருத்துக்களில் எனக்கு முரண்ப்பாடு உண்டு ....
பின்னூட்டங்களுக்கு நன்றி வால் .........
விவாதம் தெளிவடைய தானே தோழர்!
பம்பாய் படம் முழுக்க முழுக்க பார்பனீய திணிப்பு அல்ல என்பதே என் வாதமாக இங்கே இருக்கிறது!
பணம் பிறப்பிலேயே இல்லை மணியிடம், இன்று இருக்கு, அவன் வியாபாரி அதை அனுபவிக்கிறான், அவன் எங்கே பொனான்னு கண்டுபிடிச்சி அதை மற்றொரு விசயத்தோடு ஒப்பிடுதலும் பார்பனீயம் தான்!
சிவராமன் பத்து டோண்டுவுக்கு சமம்!
வால் ,
அவர் மார்க்சிய பார்வையில் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளார் என்றே நினைகிறேன் ..,நீங்களும் இந்த விமர்சனத்தை (கடவுள் மறுப்பாளன் )எழுதி இருந்தீர்கலேன்றால் இந்த படத்தில் நிறைய குறைகளை படித்திருபேன் ...,அவரவர் கொள்கை ,கோட்பாடை வைத்து கொண்டு ஒருவரை விமர்சிப்பது விவாதம் அல்ல என்றே நினைகிறேன் ,,,,,,
எல்லா சட்டமும் பேசலாம். தப்பில்லை.ஆனா தனக்குன்னு ஒரு தர்க்க நியதி இருக்கணும். சக தோழ்ர்கள் (பத்திரிக்கையாளர்கள் ) மூன்று பேர்கள் எரித்துக் கொல்லப்பட்ட கம்பெனியில்தான் இன்னும் கூலி வாங்குகிறார் மேதகு பைத்தியக்காரன். போடாங்க....(இந்த பின்னூட்டம் அனுமதிக்கப் பட்டால் தொடர்கிறேன்)
விவாதம் என்ற பெயரில்
தடம் மாறவேண்டாம்.
புகையிலையையும்
கடவுள் நம்பிக்கையையும்
ஒன்றெனச் சொல்வது
சரியான பார்வையல்ல.
//Madumitha said...
விவாதம் என்ற பெயரில்
தடம் மாறவேண்டாம்.
புகையிலையையும்
கடவுள் நம்பிக்கையையும்
ஒன்றெனச் சொல்வது
சரியான பார்வையல்ல//
வேற எப்புடி சொல்றது? நீங்கள் கடவுளாக நினைக்கும் மதம் சார்ந்த கடவுள்கள் நிச்சயம் ஒரு போதைப் பொருள்தான்.
அருண் சண்ட போடுற பதிவு போல.நான் என்னத்த சொல்ல.அடுத்து பதிவுல வரேன்.
Arai kirukkan,
arai kuraiyaga solringa, "redcoridor" statesla spl law irukku athu policeku than, "Unlawful Activities Prevention Act-2008" (UAPA) .this is like "Tada or Pota"
anyone can be detained for 180 days without warrent,no bail and trial.
Ithu mattum illamal jharkhand areala "salwa judum" enra govt sponsored gundas padai iruku. Andrala "cobra force" gundas padai irukku .
They kills adivasi's and suspects, Naxals or supporters.
Then operation green hunt.
Ithellam adakku murai and azhithozhippu illaiya.
nalla sanda podranga pa!!!!!!!11
nalla sanda podringa pa...
நண்பர் வவ்வால் அவர்களே. ,
நான் சொல்ல வந்தது ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரம் பற்றி மற்ற சட்டங்கள் யாவும் காவல்துறைக்கு மட்டுமே என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
சல்வா சுடும் இல்லை என்றோ இல்லை மற்ற மடக்கு முறைகள் இல்லை என்றோ இல்லை அங்குள்ள மக்களின் நிலை பற்றியதொ அல்ல நான் சொல்ல வந்தது.
நீங்கள் சொல்வது போல கோப்ரா என்பது மாநில போலீசும் கிடையாது. அது ஆந்திர மாநிலத்துள் மட்டுமல்ல எல்லா பாதிக்கப் பட்ட மாநிலங்களிலும் உள்ள மத்திய துணை இராணுவப் படை பிரிவாகும்.
நான் எங்கே சொன்னேன் நக்சல்கள் கொள்ளப்படவில்லை என்றோ அல்லது பொது மக்கள் கொள்ளப்படுவதில்லை என்றோ. நீங்கள் நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளுங்கள் வெண்ணிற இரவுகளின் எழுத்தில் இருந்த கருத்துப் பிழையை நான் சுட்டிக் காட்டினேன். அவ்வளவே.
நான் வேகமாக தட்டிக்க இயலாதாகையால் நான் நிறைய சொல்ல முடிவதில்லை. பின்னர் முயற்சிக்கிறேன்.
Post a Comment