Tuesday, 22 June 2010

ராவணன் என்னை கவர்ந்த விமர்சனங்கள்

ராவணன் பற்றி விமர்சனம் எழுதி இருந்தேன் , நெருங்கிய நண்பர் சக பதிவர் திரைத்துறை சார்ந்தவர் எனக்கு போன் செய்து இருந்தார் , இந்திய தணிக்கை துறையை பற்றி விளக்கினார் . இந்த அளவே காட்டியதே பெரிது என்று சொன்னார் ,"காற்றுக்கு என்ன வேலி" என்ற சிறந்த படம் வரவே இல்லை என்று ஆதங்கப்பட்டார் . சரி அப்பொழுது திரைப்படம் என்பது இந்திய சூழலில் சரியான திரைவடிவமாய் இல்லை என்று தானே பொருள் . அப்படி
இருக்கும் பொழுது , படம் எடுப்பது எல்லாம் ஒரு பிழைப்பிற்க்கான பிழைப்புவாதம் மட்டுமே என்பது உண்மை சரியா. தெரு கூத்து, வீதி நாடகங்கள் போடலாமே . சினிமா என்பது கலையின் வடிவம் , ஆனால் சினிமா மட்டுமே கலை ஆகாது , ஏன் வேறு வடிவத்திற்கு அந்த மணிரத்னம் போன்றோர் செல்வதில்லை , ஏன் என்றால் சினிமா என்ற வடிவத்திலே மட்டுமே பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதே உண்மை . ஒரு கலைஞன் தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்றால் என்ன கலை வடிவம் அது ??? அது முதலாளித்துவத்தின் கைப்பாவை என்பதை தவிர அந்த கலையில் என்ன இருக்கிறது . அப்படி உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞன் இந்த கலைவடிவத்தை தேர்ந்து எடுப்பானா ??????தணிக்கை இருக்கிறது , தணிக்கை யாருக்கு சாதகமாய் இருக்கும் அரசிற்கும் முதலாளிகளுக்கும் ???? உண்மையான கலைஞன் என்றால் தன்னை வெளிப்படுத்த வீதி நாடகம் போதும் என்றே நினைக்கிறேன் .

ஒரு விமர்சனம் படித்தேன் ராவணன் பற்றி மிக அற்புதமாய் இருந்தது , படத்தில் உள்ள காட்சிகளை அரசியல் பார்வையுடன் அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேய்ந்து இருந்தது விமர்சனம் என்றால் இது அல்லவா விமர்சனம் என்று சொல்வது போல் இருந்தது
http://tamilkatturaigal.blogspot.com/2010/06/blog-post_22.html

மேலும் சில கட்டுரைகளும் என்னை ஈர்த்தன
http://naayakan.blogspot.com/2010/06/master-piece-of-money.html
புதிதாய் இப்பொழுது படித்த அண்ணன் பைத்தியக்காரன் கட்டுரை மார்க்சிய பார்வை உள்ள கட்டுரை


http://skaamaraj.blogspot.com/2010/06/blog-post_20.html


http://pulavanpulikesi.blogspot.com/2010/06/blog-post_19.htmlhttp://agnipaarvai.blogspot.com/2010/06/blog-post_20.html

பதிவுலகம் உலக அரசியலை புரிந்து கொண்டு எழுந்து கொண்டிருக்கிறது என்பது ஆறுதலான விடயம் .ஆனால் நான் வருந்தும் சம்பவம் ஒன்று நடந்தது , பதிவர் கதிர் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கிறார் .அதற்க்கு பாராட்டுகளும் வணக்கங்களும் செய்கின்றனர் . கதிர் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார் ,உங்களுக்கு தெரியாதா மாநாடு எந்த ஈழத்தின் குருதியில் நடக்கிறது என்று , வேதையான விடயம் , நான் என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்.

4 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

இதில் பைத்தியக்காரன் பதிவு மிக ஆழமாய் உள்ளது , அது கடைசியாய் சேர்க்கப்பட்டது , நல்ல பதிவு
எல்லா பதிவுகளும் ஒரு ஆழத்தில் ஒரு தளத்தில் இருக்கிறது .....படித்துவிட்டு சொல்லுங்கள்

காமராஜ் said...

நன்றிதோழர்,

இனியாள் said...

http://pitchaipathiram.blogspot.com/2010/06/blog-post_19.html

vinodh said...

//, பதிவர் கதிர் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கிறார் .அதற்க்கு பாராட்டுகளும் வணக்கங்களும் செய்கின்றனர் . கதிர் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார் ,உங்களுக்கு தெரியாதா மாநாடு எந்த ஈழத்தின் குருதியில் நடக்கிறது என்று , வேதையான விடயம் , நான் என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன். //

நானும் எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தமக்குப் பெயர் கிடைக்கிறத் என்றவுடன் தன்மானமின்றி இப்படி விலை போகிறவர்கள் மத்தியில் இருக்கிறோம் என்பதற்கு வெட்கப்படுகிறேன்.