
தரவு என்னும் தளத்தில் பார்த்தேன் , செம்மொழி மாநாட்டின் வரலாறு இருந்தது ,செம்மொழி மாநாட்டை ஆரம்பித்தவர் தனநாயகம் என்னும் ஈழ தமிழர் . மேடையில் அவர் படமே இல்லையாம் , தமிழ் என்றால் கலைஞர் என்ற பிம்பத்தை உருவாக்க பார்க்கிறார்கள் .மேலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்கிறார்கள் . சுவரொட்டி கூட ஓட்ட முடியாது என்பதே நிலை , மேலும் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டு வடுக்கள் கூட இன்னும் ஆறவில்லை நிலைமை இப்படி இருக்க , பழமை பேசி அவர்களின் கட்டுரை மிகவும் எரிச்சல் ஏற்படுவதை இருந்தது ,அவர் காவலர் பணிகள் மாநாட்டிலே நல்லதாக உள்ளது , அரசிற்கு நன்றி என்கிறார் . எதற்கு நன்றி எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்து கொள்வதற்க்கா ........??????
அந்த மாநாடு கட்சி மாநாடு என்று சொல்ல கூட முடியாது , கலைஞரின் குடும்ப மாநாடு . கலைஞரை புகழ்ந்தால் மட்டுமே கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் . கனிமொழி எல்லாம் தமிழிற்கு என்ன செய்தார் என்று கேள்விக்கேட்க கூடாது , கலைஞரின் மகள் அதனால் அவர் கவிஞர் . இப்படி தான் இருக்கிறது நிலைமை , நேற்று கவியரங்கத்தில் என்ன நடந்துள்ளது , தமிழ் பற்றி பேசாமல் தமிழர்கள் பற்றி பேசாமல் இந்த ஓணாண்டி புலவர்கள் கலைஞர் மட்டும் பற்றி பேசுவது எரிச்சலாய் இருந்தது
வாலி சொல்கிறார்
விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம் பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !எய்த இடம் வேடம்போல் ஆவேன் !நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !அது ஈர்த்தது வையநோக்கு ! சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐயர் நோக்கு !காது கொடுத்து கேட்டேன் பாட்டை அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்புல்லரிக்காதா கேட்டு !இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் !அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !இதற்கு காரணம் இரு மாமிகள்!பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ? (குஷ்பூ) கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !
வைரமுத்து :-
மேற்கு மலை தொடர்ச்சி மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுங்கள். தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ ஆகாயமே உன் நட்சத்திரங்களை காணோம் என்று இரவோடு முறை இடாதே, எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடிவிட்டன. நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,யாருக்கு? முத்தமிழ் அறிஞரே, மூத்த முதல் அமைச்சரே, செம்மொழி தங்கமே, எங்கள் செல்ல சிங்கமே, தாய் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்.உங்கள் உயரத்தை நீங்கள் தாண்டுக்றீர்கள். வள்ளுவர் கோட்டம் வரைந்தீர்கள், அன்னை தமிழ்நாடே அண்ணாந்து பார்த்தது. வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அணைத்து இந்தியா அண்ணாந்து பார்த்தது.செம்மொழி மாநாடு கண்டீர்கள், அணைத்து உலகமே அண்ணாந்து பார்க்கிறது.
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் நீங்கள் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்து உள்ளீர்கள்.உங்கள் உள்ளங்கை விரிந்தால் சூரியன். குவிந்தால் கூட்டணி.கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்.
தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்.ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை. நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது ஆறு, காவிரி ஆறு. உங்கள் தந்தை முத்துவேலரை எண்ணி பார்த்தால் எழுத்துக்கள் ஆறு. முதல் எழுத்தோடு சேர்த்தால் உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு. இது வரலாறு.
வீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா?, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்
நாம் நினைத்து விடக்கூடாது இவர்கள் மட்டும் பிழைப்பு வாதிகள் , நாமெல்லாம் ஒழுங்கு என்று . இங்கே ஈழத்தில் முள் வேலி பற்றி கவிதை போட்டவர்கள் எல்லாம் மாநாட்டிற்கு முதல் ஆளாய் செல்கிறார்கள் , அதற்க்கு சில பேர் வாழ்த்து வேறு , அவர்களுக்குள்ளும் பிழைப்புவாதி இருக்கிறான் .வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்
12 comments:
இங்கே பதிவுலகத்தில் தனிநபர் வழிப்பாடுகள் இருக்கிறது , நண்பர் என்பதற்காய் நாம் நம் கருத்தை சொல்லாமல் இருக்க முடியாது .
கேட்டால் நீ என்ன அவர் நண்பர் நல்ல மனிதர் என்பார்கள் , நல்லவர்கள் கெட்டவர்கள் என்பது அவர்கள் எழுத்து மூலம் அல்ல .
எழுத்திற்கு ஏற்றதாய் இருக்கிறார்களா என்பதில் இருந்தே வருகிறது
சென்ற மாத உயிர்மையில் 'எங்கள் காலத்தில்தான் ஊழி நடந்தது' என்றூ உருகியவர் கூட அதே காலத்தில்தான் செம்மொழி மாநாடும் நடந்தது என்று ஜோதியில் கலந்துவிட்டார்.
தனிநாயகம் அடிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தீரிகள். அவர் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு (மலேஷியாவில் 1966ல் )நடைபெற மூல காரணகர்த்தாக்களில் ஒருவர் அவர்.... அது போல இம்மாத தீராநதியில் ஈழத்துப் பூராடனார் என்பவர் பற்றி அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. தமிழில் முதலாவ்து எழுத்துரு உருவாக்கப்பட்டதில் பெரும் பங்காற்றியவர் அவர்.. அவருக்கும் அழைப்பில்லையாம்.....
உண்மை அவர் பத்திரிகை ஓட வேண்டுமே என்ற பிழைப்புவாதம்
அந்தக் காட்சியையும், வார்த்தைக் குப்பைகளையும் நானும் பர்த்தேன், கேட்டேன். அருவருப்பாய் இருந்தது. இந்த வைரமுத்துவுக்கெலாம் கொஞ்சம் கூட உண்மை இருக்காது போலிருக்கிறது. அர்த்தங்களற்று, வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கும், சில ஆரம்ப காலக் கவிஞர்களின் மனோ நிலையை இன்னும் தாண்டாமல் இருப்பது நகைப்பிற்குரியதெ!
என்னைப்பொறுத்தவரை எழுத்து அல்லது இலக்கியம் ஒருவரை பக்குவப்படுத்த வேண்டும் ..
ஆனால் இந்த குப்பைகள் என்ன பக்குவம் அடைந்தார்கள் என்று தெரியவில்லை
ஆம்.ஜால்ராக்களை
மட்டும் வைத்துக்கொண்டு
இசை கச்சேரி நடத்தமுடியாது.
//உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு//
கட்டிய மனைவி மூனு. வைப்பாட்டிகள்??????????????????? இது மாநாடு அல்ல மானங்கெட்ட நாடு. அப்பறம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்த பதிவர் ஒருவரைக் கேட்டேன். ஒரு வேலை நீங்கள் அழஇக்கப் படாமலிருந்திருந்தால் இதற்கு எதிராக எழுதியிருப்பீர்கள் தானே என்று. அதற்கு அவர் உங்கள் கூற்று தவறு என பதிலனுப்பியிருந்தார். அப்படியானால் இந்த மாநாடு குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன? எனக் கேட்டிருந்தேன்? இன்று வரை பதிலில்லை.
உண்மையில் நல்லவனாக இருப்பது வேறு,,, கெட்டது செய்ய வாய்ப்பு இல்லாததால் , வேறு வழியின்றி நல்லவனாக இருப்பது வேறு...
தமிழனாகப் பிறந்ததற்கு பெருமைப்படும் நிகழ்வுகள் பல இருப்பினும், தலை குனிய வைக்கும் நிகழ்வுகளும் உண்டு. வாலி, வைரமுத்து "கவிதை"களை காணும் பொது பின்னதே தோன்றியது.
செம்மொழி மாநாடே "வாழும் வள்ளுவர்" பஜனை மடம் என்றே புரிந்து இருந்தாலும், இவ்வளவா, அம்மா! தமிழ் தாங்காது.
தமிழ் நாட்டில் , குறிப்பாக கோவையில் இல்லை என மகிழ்ச்சி அடைகிறேன்.
http://vignaani.blogspot.com
தமிழனாகப் பிறந்ததற்கு பெருமைப்படும் நிகழ்வுகள் பல இருப்பினும், தலை குனிய வைக்கும் நிகழ்வுகளும் உண்டு. வாலி, வைரமுத்து "கவிதை"களை காணும் பொது பின்னதே தோன்றியது.
செம்மொழி மாநாடே "வாழும் வள்ளுவர்" பஜனை மடம் என்றே புரிந்து இருந்தாலும், இவ்வளவா, அம்மா! தமிழ் தாங்காது.
தமிழ் நாட்டில் , குறிப்பாக கோவையில் இல்லை என மகிழ்ச்சி அடைகிறேன்.
http://makaranthapezhai.blogspot.com
இப்படியெல்லாம் செய்து தான் தமிழ்ப்பற்றை நிரூபிக்க வேண்டுமென்றால் நான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ளவே விரும்பவில்லை.
மிகவும் வெட்கமாக இருக்கிறது.
ஆம் தமிழின் பெருமையை அதன் வளர்ச்சிக்கு இத்தனை ஆண்டுகளாக உழைத்தவர்களைப் பற்றி இருக்க வேண்டிய கவியரங்கில் தன்னைப் பற்றி மட்டுமே புகழ்பாடுவதை "கலைஞர்" எப்படி ரசிக்கிறார்?
//செம்மொழி மாநாட்டை ஆரம்பித்தவர் தனநாயகம் என்னும் ஈழ தமிழர் . மேடையில் அவர் படமே இல்லையாம் , //
அதிர்ச்சி.
Ithu oru jalra kacheri maanaadu, ithula thaninayagam padam vaipathu thevaiyillai.
Malayasia vil semmozhi maanaadu nadakavillai.ulaga tamil maanadu.
Kandanam sollittu padam yen vaikalai ketpathu muran!
Aduthathu paarattu vizha varum athukkum manasa thethikonga
Post a Comment