Saturday 19 June 2010

ராவணனும் அருந்ததி ராயும்

















நேற்று நண்பன் புலிகேசியின் ராவணன் விமர்சனம் பார்த்தேன் நன்றாய் இருந்தது , அதில் அழகிய அனானி என்று ஒருவர் பின்னூட்டம் செய்திருந்தார் ,வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்ததில் இருந்து உங்கள் போக்கு சரி இல்லை என்று . அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் புலிகேசி பதிவுலகம் வரும் முன்பே எனக்கு நண்பன் என்று , இரண்டாவது அப்படி என்ன அவர் கெட்டுப்போய்விட்டார் , இப்பொழுது அவர் எழுதும் பதிவுகள் மிக ஆழமாய் இருக்கின்றது , சரி அந்த விமர்சனத்தில் என்ன குற்றம் கண்டீர்கள் , அதை பற்றி பேசாமல் வெண்ணிற இரவுகள் கூட சேர்ந்து கெட்டுப்போய்விட்டார் என்று சொல்வதில் என்ன நியாயம் நண்பரே.

சரி ராவணன் கதாப்பாத்திரம் , எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் kobad ghandy என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது . அப்படி நக்சல் தலைவன் விக்ரம் என்று காட்டும் பொழுது , அவன் ஏன் அப்படி ஆனான் அவனை மக்கள் ஏன் தலைவனாய் கடுவுளாய் நினைக்கிறார்கள் என்று சொல்லி இருக்கவேண்டாமா ????? இது ஒரு பாமரனக்கு கூட தெரியும் ஆனால் மணி சார் இயல்பாகவே அதை தவிர்த்தான் உள் நோக்கம் என்ன .மணி சார் ஒன்றும் இதெல்லாம் தெரியாதவர் அல்ல ,corporate கம்பனியுடன் கூட்டணி போட்டு எப்படி உழைக்கும் மக்களுக்கான படம் எடுக்கமுடியும் நண்பரே .

சரி வடக்கிழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா ?????????? 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்..


இதை போல் இருக்கும் பொழுது என்ன நடக்கும் ஒரு பெண் அழகாய் இருந்தால், அவள் அண்ணனை உள்ளே போட்டுவிட்டு , அதிரடி படை அனுபவிப்பார்கள் . இந்த மாதிரி அடக்கு முறை நம் தமிழ்நாட்டில் உள்ளதா ???? மணி சார் போல சத்யம் திரையரங்கு மக்களுக்கு படம் எடுப்பவர்களுக்கு இது புரியாது என்றே நினைக்கிறேன் . அங்கே சட்டம் எப்படி உள்ளது , அந்த சமூகம் எவ்வளவு அடக்குமுறை உள்ளது , மக்கள் ஏன் அங்கு நக்சலாய் மாறுகின்றனர் ,என்பதை தவிர்த்து விட்டு , அது என்னமோ பழிவாங்கும் கதை
போல , நாயகன் நாயகி விக்ரம் மூவருக்குள் நடக்கும் தாப போராட்டம் போல சித்தரித்தது உள்ளடக்கத்தில் எந்த விதத்தில் நியாயம் . மணி சார் சொல்வதை போல வெறும் நாயகனின் தங்கை மட்டுமா கற்பழிக்க படுவார் . இது பிரச்னையை எளிமை படுத்துவதை போல் உள்ளது அல்லவா?????

மக்கள் பிரச்னையை பலவீன படுத்திவிட்டு , நாயகன் தங்கை கெடுக்கப்படுகிறாள் , அதனால் அவர் போராடுகிறார் என்று காட்டுவது சிறு பிள்ளைத்தனம் , இது எல்லாம் மணி சார் அவருக்கு புரியாதா ????? ஆனால் கைகோர்த்திருப்பது முதலாளிகளுடன் , எப்படி அவரால் இதை செய்ய முடியும் . சரி வடகிழக்கில் தண்டகாரண்யாவில் மலையை "வேதாந்தா" என்னும் கம்பெனி வாங்க நினைக்கிறது , அது கனிம வளம் உள்ள பகுதி , உண்மையில் மக்களை விரட்டினால் தான் அந்த இடத்தை கைப்பற்ற முடியும் என்பதே உண்மை , அதனால் மக்களை விரட்டும் பணி, "OPERATION GREEN ஹன்ட்" என்னும் பெயரில் , நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்களை வேட்டையாடுகின்றன. சரி அந்த மக்கள் ஒடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் ஏன் தீவிரவாதியாய் சித்தரிக்க படவேண்டும் , அவர்கள் மண்ணிற்காக போராடுகிறார்கள் .
இதில் என்ன தவறு , இதை எல்லாம் துளிக்கூட காத்த மணி சார் , இதை பூசி மொழுகுகிறார் , அவன் மக்கள் தலைவன் என்று எளிமையாய் மறைத்து விட்டார் .இது தான் மணி டச் முக்கியமான விடயங்களை மணி தொடுவதில்லை .

ஐரோம் சர்மிளா என்ற கவிஞர் பத்து வருடமாய் உண்ணா விரதம் இருக்கிறார் , அவரை பற்றி ஏற்க்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் . சாமானியன் எனக்கே அந்த விடயம் தெரியும் பொழுது மணி சார் அவருக்கு தெரியாதா .ஒரு தலைவனது தங்கை மட்டுமே கெடுக்கபடுவாளா????? ஈழத்தில் எத்தனை சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர் , ஒரு சமூக பிரச்னையை தனிமனித பிரச்சனையாக சித்தரித்து , அவர்களுக்கு ஏற்படும் கோபதாபத்தை காட்டியதில் முக்கிய
பிரச்சனைகளை மறைக்கப்பார்க்கிறார் மணி .

சில ரசிகர்களுக்கு ஒரு பொது புத்தி உண்டு பேரரசு படம் பார்த்தால் அவனை எள்ளி நகையாடுவர் , நாங்க பார்த்தா மணிரத்னம் படம் மட்டுமே பார்ப்பேன் என்கிறார்கள் . ஒருவர் புலிகேசி பதிவில் பதில் போடுகிறார் படத்தின் தொழில் நுட்ப விடயங்களை நீங்கள் பாராட்டி இருக்கலாம் . ஒரு மயானம் அழகாய் இருக்கிறது என்பதற்காக நாம் எல்லாம் பிணமாய்
படுத்துக்கொள்வோமா ........ ஒரு அழகான ஒரு அழகான கிண்ணத்தில் விடம் இருந்தால் குடிப்பீர்களா ???? என்ன .......நான் ஒரு சாமனியன் என்னிடம் வந்து மணி சார்
படம் நன்றாய் இருக்கிறது என்றால் , நான் திருப்பதி , திருப்பாச்சி பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டு கலாய்ப்பது உண்டு . குளிர் சாதன அறையில் உட்க்கார்ந்து கொண்டு ஈழத்தை பற்றியும் , தண்டகாரண்யா பற்றியும் படம் எடுக்க முடியாது . அப்படி உண்மையிலேயே அப்படி அதை பற்றி கலை மக்களுக்காய் இருக்கவேண்டும் என்றால் அந்த மக்களிடம் கலக்க வேண்டும் .
அந்த மக்களிடம் பேசவேண்டும் . அவர்கள் சொல்வதில் தான் உண்மை நிலைமை தெரியும் பின்பு படம் பிடிக்கவேண்டும் நேர்மையாய் . மணி சார் ஏன் இந்த கதைக்களம் எடுத்தார் , ஏன் இதே ராமாயண புனைவை ஒரு SOFTWARE கம்பெனி வைத்துக்கொண்டு எடுக்கலாமே , ஏன் என்றால் இப்பொழுது அவர் வணிகம் அதிகம் , அதனால் இந்தி மக்களின் ஒட்டு மொத்த மக்களுக்கும் புரியும் படி ஒரு கதைக்களம் வேண்டும் , ஏன் என்றால் அப்பொழுது தான் கல்லா கட்ட முடியும் . தமிழிற்கு விக்ரம் , ஹிந்தி பச்சன் குடும்பம் , மலையாளம் பிரிதிவிராஜ்
என்று கணக்கு போடுக்கிறார் மணி , ஏன் இந்த புனைவை வேறு ஒரு கதைகளத்தில் சொல்லலாமே . இடம் திருநெல்வேலி என்கிறார் , திருநெல்வேலி இப்படி தான் இருக்கிறாதா என்ன ????? அவருக்கு தேவை இரண்டு மக்களுக்கும் புரியும் கதைக்களம் , அதனால் தான்
அவர் தேசிய பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு படம் செய்கிறார் .

















அருந்ததி ராய் எழுத்தாளர் , அவர் எழுத்துக்கள் எங்கு இருந்து வருகிறது ,அருந்ததி ராய் காட்டிற்குள் செல்கிறார் , மக்களை சந்திக்கிறார் எழுதுகிறார் , அதுவே உண்மையான கலைக்கு அழகு .மக்கள் பிரச்னையை தனிமனித கோபதாபம் என்று சிறுமை படுத்தி அப்பகுதி மக்களை கேவலப்படுத்திருக்கிறார் மணி சார் . இப்பொழுது சொல்லுங்கள் புலிகேசி என்னிடம் சேர்ந்து என்ன கேட்டுப்போயவிட்டார், சரி உங்களுடன் எல்லாம் சேர்ந்து என்ன உபயோகமாய் இருந்து விட்டார் . கட்டம் கட்டுவதெல்லாம் ஒன்றும் புதிதல்ல . நான்
இப்பொழுது பல பேருக்கு வாக்கு அளித்தால் பின்னூட்டம் போட்டால் எனக்கும் வாக்குகள் வரும் . அதில் என்ன இருக்கிறது நண்பா . நான் கட்டம் கட்ட பட்டவனாகவே இருக்கட்டும் . என்னுடைய கடைசி இருபது பதிவுகளில் , ஒன்று இரண்டு பிரபலமாயின , அதற்காய் நான் வருந்தவில்லை . இருந்தாலும் நான் நேர்மையாய் எழுதுகிறேன் என்பதில் கர்வம் உண்டு , அந்த நேர்மை புலிகேசிக்கும் வந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு பெருமை .

என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறார் .

26 comments:

Unknown said...

, //அதனால் மக்களை விரட்டும் பணி, "OPERATION GREEN ஹன்ட்" என்னும் பெயரில் , நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்களை வேட்டையாடுகின்றன. சரி அந்த மக்கள் ஒடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் ஏன் தீவிரவாதியாய் சித்தரிக்க படவேண்டும் , அவர்கள்
மண்ணிற்காக போராடுகிறார்கள்//

உண்மை தோழரே.. நசுக்கப்பட்ட உணர்வுகளை அருந்ததிராய் தவிர்த்து யாரும் தீவிரமாக புரிந்து கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம்..

அம்மக்களின் கதைகளை மேலோட்டமாக ராவணன் பெயரில் காசு பார்த்து விட்டனர் ரிலையன்சும், மணிரத்னமும்...

அக்னி பார்வை said...

//என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறார் .//

Unknown said...

தோழரே மிகசிறந்த பதிவு நிச்சியமாக நீங்கள்தான் வசீகரிகபட்டவர். அவர்களா ஒரு தரத்த தோற்றுவித்து விட்டு அதுதான் உலகத்தரம் என்று பீற்றுவது . கமல் ,கெளதம்,சங்கர் இன்னும் நிறையபேரு திரியிறாங்க

Unknown said...

மணிக்கு இது புதிதல்ல.., பம்பாய் ரோஜா கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பிரச்சனைகளின் அடிப்படைய தொடாமல் திராபையான சொலுயூசன் கொடுப்பார்

Unknown said...

மணிக்கு இது புதிதல்ல.., பம்பாய் ரோஜா கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பிரச்சனைகளின் அடிப்படைய தொடாமல் திராபையான சொலுயூசன் கொடுப்பார்

புலவன் புலிகேசி said...

அருமை நண்பா..உண்மை பேசுவதால் நான் கட்டம் கட்டப் பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சியே. அதற்கெல்லாம் கவலைப் படுவதாய் இல்லை. //என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறா// நச் நண்பா...

Amirthaganesan said...

வலியும் வேதனையும் பாதிக்கப்பட்டவருக்கும் சம்பந்தபட்டவருக்கும் தான். அவங்களுக்கு துயரின் பெரும் வாழ்வு, மத்தவங்களுக்கு வெறும் நிகழ்வு. காட்டுல வாழ்கிற மிருகங்க கூட உணவு தேவையை தவிர பிற உயிர்களை வதைப்பதில்லை, பிற உயிர்களின் வலியையும் வேதனையையும் உணர்கிறது, சோகத்திலும் துக்கத்திலும் பகிர்ந்து கொள்கின்றன. ஆனா நாட்டுல வாழ்கிற மனிதன் காட்டுல சக மனிதனின் வலியையும் வேதனையும் உணருவதில்லை, அதற்காக வருத்தாபடவிட்டலும் கேவலம் மகிழ்ச்சியடையாமல் இருக்கலாம். ஆக நாட்டு மனிதனிடம் மனிதம் இல்லை.

Madumitha said...

நிச்சயமக நான் உங்களை
வழிமொழிகிறேன்.
உண்மையைச் சொல்ல தைரியம் வேண்டும். அது மணிரத்னத்திற்கு
இருப்பது போல் தெரியவில்லை.

pichaikaaran said...

"என்னுடைய கடைசி இருபது பதிவுகளில் , ஒன்று இரண்டு பிரபலமாயின , அதற்காய் நான் வருந்தவில்லை"

நல்ல அணுகுமுறை.. பலரால் பொழுபோக்குக்கு படிக்கப்படுவதை விட, வெகு சிலரால், புரிதலோடு படிக்கப்படுவதே எழுத்துக்கு கவுரம்.

நச் பார்வை..

மணிரத்தினத்தை பொறுத்தவரை, ஆபத்து இல்லாமல் ஒரு புரட்சி செய்து பார்க்க விரும்புகிறார். இதே படத்தை , வேறு மாதிரி எடுத்து இருக்க முடியும்

காமராஜ் said...

அன்பினிய வெண்ணிற இரவுகள். இந்த கோணம் மிக வலுவானது. afspa 1958 என்கிற மணிப்பூர் ஆவணப்படம் பார்த்த இரவில் எங்களால் தூங்க முடியவில்லை.மரணத்துக்கு நடுவிலும்,அவமானங்களுக்கு அருகிலும் வாழும் அவர்கள் போராட்டம் இன்றியமையாதது. இது பெருவாரியான இந்தியர்களுக்குத் தெரியவிடாமல் பாதுகாப்பதில் அரசோடு சேர்த்து ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

அருந்ததிராய் எனக்குப்பிடித்த பத்துப்பெண்களில் ஒருவர்.
அரசியலில் ஓட்டுப்போடுவது வெளியில்.ஓட்டில் அரசியல் இருப்பது வலையில். துவண்டு விடாதீர்கள் தொடருங்கள். வாழ்த்துக்கள் தோழரே. காலையிலேயெ மாது சொன்னான் நல்லதொரு விமர்சனம் உங்களுடையது என்று.உலர்ந்த மனிதர்கள் அரிதாக காணப்படும் தேசத்தில் சுட்டெரிக்கும் எழுத்து அத்தியாவசியாமாகிறது.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நண்பர்களே பின்னூட்டங்களுக்கு நான் அதிகம் மைனஸ் வாக்குகள் எதிர்ப்பார்த்தேன் ஆனால் இல்லை ஆறுதலான விடயம்

Thekkikattan|தெகா said...

//என்னுடைய கடைசி இருபது பதிவுகளில் , ஒன்று இரண்டு பிரபலமாயின , அதற்காய் நான் வருந்தவில்லை . இருந்தாலும் நான் நேர்மையாய் எழுதுகிறேன் என்பதில் கர்வம் உண்டு , அந்த நேர்மை புலிகேசிக்கும் வந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு பெருமை .//

உங்க மனசு அப்படியே நிலைத்து நிற்கட்டும் நண்பரே... ஒன்னும் கெட்டுப் போயிட மாட்டாரு உங்க நண்பரும் சரி, நீங்களும் சரி - மாட்டீங்க.

பின்வருமாறு வேறு எங்கோ ஒரிடத்தில் இராவணன் படத்திற்கான கருத்தாக வைத்திருந்தேன்... அதேதான் இந்தக் கட்டுரைக்கும். உங்களோட பதிவு எல்லார் கண்ணிலும் படணும், வாசிக்கப்படணும். வாழ்த்துக்கள்.

...படத்தின் மூலமாக எப்பயாவது ஒரு சமூக நிகழ்விற்கு இதுதான் தீர்வுங்கிற மாதிரியோ, அல்லது தான் சொல்ல வந்த கருத்தை படீர்னு தைரியமா சொல்லியிருக்காய்ங்களா - குழப்பாம? எல்லாம் சந்தர்ப்பவாதம், எந்த நேரத்தில எத வித்தா சந்தையில விலை போகுமோ அதை வைச்சு விக்கிறதுதான் தொழில்.

உங்களோட எதிர்பார்ப்பும், ஆதங்கமும் விளங்குது, ஆனா யார்கிட்ட போயி எத எதிர்பார்க்கிறீங்க?..

Unknown said...

மிக நேர்மையான பதிவு. இந்தப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை நாம் சரியான கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த கட்டுரை அதைத்தான் செய்கிறது. நன்றி நண்பரே..

பார‌தி(Bharathy) said...

அருமையான‌ ப‌திவு ந‌ண்ப‌ரே.. ராவ‌ண‌ன் ப‌ட‌ம் பார்த்த‌/பார்க்க‌ போகும் அனைவ‌ரும் வாசிக்க‌ வேண்டிய‌ முக்கிய‌மான‌ ப‌திவு இது..!!
ப‌ட‌ம் பார்த்த‌தும் என‌து விம‌ர்ச‌ன‌ம்
//என்னைப் பொறுத்த‌ அள‌வில் க‌தையின் க‌ள‌ம் இக்கால‌ க‌ட்ட‌த்திற்கு ஏற்ற‌ பிர‌ச்ச‌னை/சிந்த‌னைக‌ளை (காட்டுவாழ் ம‌க்க‌ள் VS அர‌ச‌ வ‌ன்முறை) கொண்டிருந்தாலும்..ஐஸ்வ‌ர்யா ராய் மேல் ராவ‌ண‌ன் விக்ர‌ம் கொள்ளும் காத‌லை க‌விதையாக்கும் நோக்க‌த்தோடு ம‌ணிர‌த்ன‌ம் சினிமாவாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்..!! நோக்க‌ம் காட்டுவாழ் ம‌க்க‌ளின் பிர‌ச்ச‌னைய‌ ப‌ற்றிய‌தாக‌ இருந்திருப்பின் இப்ப‌ட‌ம் வேறுத‌ள‌த்தில் த‌மிழ்சினிமாவை உய‌ர்த்தியிருக்கும்..!ம‌ற்றும்ப‌டி பாத்திர‌ப்ப‌டைப்பு, ந‌டிப்பு சினிமாத்தொழில்நுட்ப‌ம் (முக்கிய‌மாக‌ ஒளிப்ப‌திவு) போன்ற‌வ‌ற்றில் ம‌ற்ற‌ய‌ இந்திய‌ சினிமாக்க‌ளை விட‌ ப‌ல‌ ப‌டிக‌ள் மேலுள்ள‌தாக‌ (உல‌க‌த‌ர‌த்தில்)என‌க்கு ப‌டுகிற‌து..!!//
இவ்வாறாக‌ இருந்த‌து.. உங்க‌ள் இந்த‌ ப‌திவு மிக‌வும் ஆழ‌மாக‌ ப‌ல‌ நியாய‌ங்க‌ளை எடுத்துரைத்து ப‌டத்தின் நோக்க‌த்தை தோலுரித்து காட்டுகிற‌து..!!மிக்க‌ ந‌ன்றிக‌லந்த‌ பாராட்டுக்க‌ள்..!!

இன்று... said...

எப்போதும் வாசகனாக இருந்து விடலாம் என நினைக்கும் பொது சில பதிவுகள் பதில் சொல்ல வைத்து விடும்...இதுவும் அது போலதான்.
//1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு//
அங்கே என்றில்லை,இங்கேயும்,அதே காலக் கட்டத்தில்-குற்றப் பரம்பரை சட்டம் இயற்றப்பட்ட பொழுது,மதுரையிலிருந்து புதுக்கோட்டை வரை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம்...கைக் கட்டை விரலை இழந்து திரியும் கிழவர்கள் இன்றும் ஆங்காங்கே அலைந்து வருகிறார்கள்-தத்தம் சரித்திரம் சொல்ல பயந்தும,வேறு காரணங்கள் சொல்லிக் கொண்டும்...

சதீஷ் said...

மிகவும் தரமான பதிவு. இராவனன் பார்த்த அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

vasan said...

காட் பாத‌ர் தாக்க‌த்திலிருந்து ப‌ல காட்சிக‌ளை
இருப‌ட‌ங்க‌ளிலும் (அக்னி ந‌ட்ச‌த்திர‌ம், நாய‌க‌ன்)
இட்டு நிர‌ப்பிய‌வ‌ர். லாபியிலேயே த‌ங்க‌ளை
அறிவுசீவி ஆக்கிக் கொள்ப‌வ‌ர்க‌ளின் அடிவ‌ருடிக‌ள்
அப்ப‌டித்தான் இருப்பார்க‌ள்.
இவர்க‌ள் காக்டெயில் க‌லாச்சார‌ ம‌க்க‌ள்.
சில ச‌ம‌ய‌ம் காம்பினேச‌ன் ஒர்க்கவுட்டாகும்,
சில‌ சம‌ய‌ம் ஒர்க் அவுட்டாகும்.
எரியும் பிர‌ச்ச‌னைக‌ளை காசு ப‌ண்ண‌ நினைக்கும் போது
ந‌டுனிலை இருக்க‌னும். 125 கோடி கொடுத்த‌ ரிலைய‌ன்ஸ்
வேணுமுன்ன‌, இன்னுமொரு 'குரு' எடுக்க‌ வேண்டிய‌து தானே?
அருமையான உண‌ர்வு பூர்ண‌மான‌ பதிலிடுகை.

Amirthaganesan said...

பேராண்மை படத்துல காட்சி படுத்தியதுல ஒரு பகுதியளவு கூட காட்டல ராவணன்ல. மத்தபடி ஒரு பொழுதுபோக்கு சினிமாவா ரசிக்கலாம், ஆனா அதுகூட சமுதாய பார்வையை மறந்ததான் முடியும்.
மக்கள் சேவையே மகேசனின் சேவை என்கிற அடிப்படை தத்துவத்தை அரசும் ஆள்வோரும் அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். அரசஊழியர்களும் அரசாங்க அதிகாரிகளும் காவல் துறையினரும் மக்களை மறந்து ஆளும் அரசியல்வாதிகளின் எடிபிடியாக அடிமையாக வாழ்வதில் பெருமை கொள்கின்றனர். புரட்சினா தீவிரவாதம் கிடையாது, மாற்றத்தின் மறுவடிவமாக மனித வாழ்க்கை அமைகிறது.

Amirthaganesan said...

ஒடுக்கபட்டோரின் குமுறல் ஒருசில ஊடகத்திலே வெளிவந்துள்ளன. விகடன், தெனாலி.காம் ஒரு சில பதிவுகள் காணமுடிகிறது.
Special ரிப்போர்ட் :
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!
http://www.thenaali.com/thenaali.aspx?A=349
இந்தியாவின் சொந்த முள்வேலி முகாம்கள்!
http://www.thenaali.com/thenaali.aspx?A=1688
"நான் மாவோயிஸ்ட்டா?" அருந்ததிராய் அதிரடி பேட்டி
http://www.thenaali.com/thenaali.aspx?A=2061

Amirthaganesan said...

COBOT GHANDHI பற்றி அறிய இணையத்தில் தகவல் தேடியபோது KOBAD GHANDY நக்சல் தலைவர் பற்றி அறியமுடிந்தது. தமிழில் கோபத் காண்டே என்பது சரியா. விளக்க வேண்டும்.

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே சிறு எழுத்து பிழை அது COBAT GANDHI இல்லை KOBAT GANDHY மன்னிக்கவும்

joe vimal said...

நச்! நீங்கள் இப்படியே இருக்க வேண்டும்

Amirthaganesan said...

சிறு எழுத்து பிழை எழுவது இயற்கையே.
விளக்கத்திற்கும் திருத்தத்திற்கும் மிக்க நன்றி நண்பா.

Hai said...

//சரி ராவணன் கதாப்பாத்திரம் , எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் kobad ghandy என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது .//
நான் ராவணன் படம் பார்க்கவில்லை என்றாலும் அது சம்பந்தமாக நிறைய படித்து விட்டதால் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானறிந்த வகையில் kobad ghandy என்பவர் மாவோவாதிகளின் ஆயுதப் பிரிவில் ஒரு ஆயுதப் போராளி இல்லை.
இணைப்பைக் காணவும். http://news.bbc.co.uk/2/hi/south_asia/8270583.stm

Hai said...

//சரி ராவணன் கதாப்பாத்திரம் , எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் kobad ghandy என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது .//
நான் ராவணன் படம் பார்க்கவில்லை என்றாலும் அது சம்பந்தமாக நிறைய படித்து விட்டதால் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானறிந்த வகையில் kobad ghandy என்பவர் மாவோவாதிகளின் ஆயுதப் பிரிவில் ஒரு ஆயுதப் போராளி இல்லை.
இணைப்பைக் காணவும். http://news.bbc.co.uk/2/hi/south_asia/8270583.stm

Hai said...

Amirthaganesan said...

//COBOT GHANDHI பற்றி அறிய இணையத்தில் தகவல் தேடியபோது KOBAD GHANDY நக்சல் தலைவர் பற்றி அறியமுடிந்தது. தமிழில் கோபத் காண்டே என்பது சரியா.//
கொபாட்(d) காந்தி.