Thursday 18 March 2010

முரண்




















"சினிமாவை பார்"
"ஸ்பென்சர் போகலாம்"
"queensland போகலாம் "
என்று நுகர்வு கலாச்சாரத்திலே இருந்தான் நண்பன்.
மார்க்ஸ் படித்தேன் , நுகர்வு கலாச்சாரம் எதிர்த்தேன் நான் ...........
காதல் பதிவுகள் சினிமா பதிவுகள் போட்டான் நண்பன் ................
சமூக பதிவுகள் போட்டேன் நான் ...................
காதலிக்கு பதிவின் மூலம் தூது விட்டான் நண்பன்
"இது உனக்கு தேவையா டா அவ தான் காரி துப்பிட்டால" என்றேன்
சாரு ராமகிருஷ்ணன் படித்தான் நண்பன்
மூலதனம் படி டா உழைக்கும் மக்களுக்கான கலை இருக்கணும்
என்றேன் நான் ...................
படத்தை விமர்சனம் செய்தேன் நான்
ரசித்தான் நண்பன் .....................!
களப்பணி செய்யலாம் என்று தீர்மானித்தேன் ...............
என் நண்பனும் சரி என்றான் .........................!
முதலில் என் களத்தில் இருக்கும் அழுக்குகள்
உடைபட வேண்டும் என்றேன் ........!
அற்பவாதம் கடவுள் நம்பிக்கை ஒழித்தேன்.............
என் நண்பன் நெருங்கி வந்தான் ..................
மக்களுக்காய் படைக்க வேண்டும் என்று நினைத்து
எழுதினேன் இன்னும் கொஞ்சம் அருகில் வந்தான் ..........!
நெருங்கி வர வர தெரிந்தது
என் நண்பனும் நானும் ஒருவனே
என் பெயர் கார்த்திக் என்று ..........!
மார்க்ஸ் சொன்ன முரண் புரிந்தது

3 comments:

Raja said...

முரண் நல்லது...

vidivelli said...

நல்ல முரண் தான் ரசித்தேன்........

நெருங்கி வர வர தெரிந்தது
என் நண்பனும் நானும் ஒருவனே
என் பெயர் கார்த்திக் என்று ..........!
மார்க்ஸ் சொன்ன முரண் புரிந்தது

vidivelli said...

நெருங்கி வர வர தெரிந்தது
என் நண்பனும் நானும் ஒருவனே
என் பெயர் கார்த்திக் என்று ..........!
மார்க்ஸ் சொன்ன முரண் புரிந்தது

நல்ல முரண் தான் ரசித்தேன்........