Thursday 4 March 2010

நித்தியானந்தரும் கடவுளை தேடும் நாமும்


















நானும் என் நண்பனும் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டு " உழைக்காமல் உன்ன வேண்டும் என்றால் கோவில் கட்ட வேண்டும் என்று ".எனக்கு தெரிந்து மனிதனின் அவநம்பிக்கை மற்றும் சோகங்களுக்கு வடிகாலாய் இருக்கின்றன கோவில்களும் மடங்களும். மனிதனின் நம்பிக்கை சார்ந்த விடயம் என்பதாலோ மடங்கள் புற்றீசல் போல தோன்றுகின்றன. தெருவிற்க்கொரு சாமியார் தோன்றுகிறார்.

சாமியார் என்று அறிவித்து விட்டால் போதும் எத்தனை எத்தனை பக்தர்கள் பணம் கொட்ட துடங்கும். ஆனந்த விகடன் ,குமுதம் போன்றவைகள் கவர்ச்சி படங்களுடன் இணைத்து அடுத்த பக்கத்தில் ஆன்மிக கட்டுரை எழுத அழைக்கும். ஒரு நட்சத்திரம் போல் அந்த சாமியார் பார்க்கபடுவார். நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் அவர்கள் பின்னால் ஓடுவார்கள். லிங்கம் வரவைப்பார் சாமியார்,வெளி நாட்டு பக்தர்கள் அதிகம் இருப்பார்கள். ஒரு ஊரையே வளைத்து போட்டிருப்பார் சாமியார்.

இந்த மடங்கள் தோன்றுவதற்கு மனிதன் ஒரு காரணம். இவனின் அவநம்பிக்கை வாழ்கையில் போராடமுடியவில்லை உடனே கடவுளிடம் செல்கிறான் இல்லை மடத்திடம் செல்கிறான். மனதில் தியானம் என்ற பெயரில் மனதில் அந்த சாமியாருடன் மானசீகமாய் பேசுகிறான் உடனே அவன் மனது அமைதி அடைகிறது, அவன் மனது அமைதி அடைந்தவுடன் அதை அவன் சாமியார் செய்தார் என்று நினைக்கிறான். சாமியார் மீது பைத்தியமாய் இருக்கிறான்.

சிலர் தன் மனதை அடக்க வேண்டும் என்று கடவுளிடம் செல்கின்றனராம். அவர்கள் பாதி பேர் போராட தைரியம் இல்லாமல் இருப்பவர்கள். "உள் கட" என்றால் கடவுளாம். எதற்கு உள்ளே கடக்க வேண்டும். எதற்கு உறுப்புக்களை அடக்க வேண்டும். ஆண் என்றால் பெண் மீது மோகம் கொள்வான் அதுவே இயற்க்கை. உடல் உறுப்புக்களும் ஆண் என்றால் பெண் மீதும் பெண் என்றால் ஆண் மீதும் மோகம் கொள்வதை போலவே உடல் அமைப்புகளும் இருக்கின்றன அதுவே இயற்க்கை.

இத்தகைய மனம் உள்ளவர்கள் அதிகம் இருப்பதினாலே மடங்கள் அதிகரிக்கின்றன . மடங்களும் போலிசாமீயார்களும் உருவாக அவர்கள் மட்டும் காரணம் இல்லை, காரணம் இல்லாமல் அவர்களை ஆதரிக்கும் மக்கள். இவர்களுக்கு நம்பிக்கை இல்லை கட்டயாம் கடவுள் என்று ஒருவர் வேண்டும்.

கடவுள் என்ற ஒருவர் அரசர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். மக்கள் குறை தீர்ப்பவன் அரசன். மக்கள் குறையுடன் இருந்தால் புரட்சி வெடிக்கும். அரசனின் சொத்துக்கள் பிடுங்கப்படும். இப்பொழுது கடவுள் என்று ஒருவர் இருந்து விட்டால்,மக்கள் கடவுளிடம் முறையிடுவார்கள். புரட்சி வெடிக்காது,போராட்ட குணம் நீர்த்துப்போகும் அரசன் மக்களை நன்றாய் சுரண்டலாம்.

கடவுள் ஒருவர் இருந்துவிட்டால் அரசன் எவ்வளவு சுரண்டினாலும் மக்களுக்கு தெரிந்தாலும் "மேல ஒருத்தன் இருக்கான் பாத்துக்கிட்டே இருக்கான்" என்று மக்கள் புலம்புவார்களே தவிர, அரசினிடம் சண்டையிட மாட்டார்கள். இது அரசனுக்கு நல்லது, மக்கள் புரட்சி என்றுமே இருக்காது கோவில்கள் மடங்கள் அதிகம் இருக்கும் நாட்டில். இந்தியாவில் கோவில்கள் மடங்கள் அதிகம் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்பிவிட்டால் நாம் என்ன சொன்னாலும் நம்புவோம் நம்மை எளிதாய் ஏமாற்றிவிடலாம். கடவுள் பற்றி படம் மூட நம்பிக்கைகள் வளர்க்கும் படம் என்றால் தேசிய விருது கொடுக்கும் நாடு இது. இங்கே கஞ்சா அடித்தால் அவன் கடவுள். போதையில் அவன் உளறினால் அது வேதம்.

நித்யானந்தர்கள் உருவாக நாமும் ஒரு காரணம். இந்தியாவில் அதிக கோவில் இருப்பதால் இது புண்ணியபூமி அல்ல, உலகத்திலேயே அதிகமாய் ஏமாற்றப்பட்டவர்கள் இந்தியர்கள். கடவுள் என்ற பெயரை வைத்து சுரண்டப்பட்ட நாடு. மனதளவிலே வலிமை குறைந்ததால் மட்டுமே கடவுளிடம் செல்கிறோம்.

ஏன் இந்த நித்யானந்தர்களும் பாபாக்களும் சுனாமி என்றால் சொல்வதில்லை பூகம்பம் என்றால் சொல்வதில்லை. ஏன் புத்தன் கடவுள் தானே அவனுக்கு ஈழம் பற்றி தெரிந்துருக்கும் ஏன் அவன் தடுப்பதில்லை. ஏன் வெங்கட் தெலுங்கானா பிரச்னையை தீர்ப்பதில்லை. இமய மலை ஆன்மீக மலை என்கிறார்கள் ஏன் இமைய மலையில் இருக்கும் பாபாக்கள் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டியது தானே.

போராடத் தெரியாதவனே கடவுளிடமும் மடத்திடமும் செல்வான். இந்தியாவில் கோவில்கள் அதிகமாய் இருப்பதால் தான் ஊழல்களும் அதிகமாய் இருக்கிறது. மக்கள் என்று குறைகளுக்கு போராடாமல் கோவில்களுக்கு செல்கிறாரோ அந்த சமூகம் உருப்படாமல் போகும். எங்கு கோவில்களும் மடங்களும் உள்ளதோ அங்கு ஏமாற்றப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் , ஒரு வகையில் நித்யானந்தர் போன்ற சாமியார்கள் உருவாக நாமும் ஒரு காரணம்.

11 comments:

Ganesan said...

நல்ல சிந்திக்க வைக்க கூடிய பதிவு.

Unknown said...

Welcome back friend...


சரியான பதிவு...

சிவாஜி சங்கர் said...

வெல்கம் பேக் தலைவரே.. ஏமாறுபவன் இருக்கும் வரை இது தொடரும்... இன்னும் நிறைய பேர் இருக்கிறாங்க.. அவங்க முகத்திரையும் கிழியும்.. அதுவரைக்கும் அவன் போட்டோ போட்ட டாலரையே கழுத்துல மாட்டி இருப்பானுக.. இது காலத்துக்கு ஏத்த மாதிரி தொடரத்தான் செய்யும்..

அறிவு GV said...

முற்றிலும் உண்மை. அதிலும் கடைசி இரண்டு பாரா நச்...! தமது சக்தியை நம்பாமல் இறை சக்தியை நம்புபவனை இறைவனால் கூட காப்பாற்ற முடியாது.

க.பாலாசி said...

வழிமொழிகிறேன் நண்பா....

chosenone said...

பூசாரி கள்ளனா இருந்ததற்கு சாமி என்ன பண்ண முடியும் ?
அல்லது ..
சாமியார் போலியா இருந்ததற்கு "ஆன்மிகம்" பொய்யாகி விட முடியுமா ?
ஆன்மிகம் என்ற பெயரில் பொருளாதார மையங்கள் அமைக்கும்,மக்களை ஏமாற்றும் நித்யானன்தரை போன்ற நபர்கள் கடுமையான தண்டனை பெற வேண்டும் என்பதில் மாற்றுகருத்துக்கோ ,விவாதத்திற்கோ இடமே இல்லை .

ஆனால் ...

ஒரு நபர் சாமியார் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றியதற்கு ஆன்மிகமே பொய் என்று சொன்னால் அது மூடத்தனம் .
ஆன்மிகம் என்பது நான் ஏற்கவோ நீங்கள் மறுக்கவோ அல்லது நாங்கள் சேர்ந்து விவாதிக்க ஒரு தலைப்போ,வாதமோ அல்ல .
நவீன விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட ஒரு தகவல்.

//***நாம் காணும் எல்லா பொருட்களும் ஷக்தி நிலையில் நடக்கும் ஒரு நொடி விபத்து .
***matter ஒன்று ஒன்றுமே இல்லை .
அது ஒரு மாயை.(the very concept of matter is an illusion !!!)
***நீயோ நானோ கல்லோ மரமோ என் இந்த பிரபஞ்சமே ஒரே சக்தியின் பல்வேறு முகங்கள் தானே தவிர வெவ்வேறு அல்ல .////
இங்கு குறிப்பிட்ட தகவல் அனைத்தும் நான் யாரோ ஒரு சாமியார் சொன்னவி சொன்னவை அல்ல .modern quantum scientists களால் உறுதி செய்யபட்டவை.

http://www.youtube.com/watch?v=AqnEGu8VF8Y

http://www.youtube.com/watch?v=FgeTPubpE8s&feature=related

http://www.youtube.com/watch?v=Uk5NUD9if0c

வால்பையன் said...

//போராடத் தெரியாதவனே கடவுளிடமும் மடத்திடமும் செல்வான்//

well said!

பாலா said...

நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை நண்பா..
சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகளின் போது இவர்கள் எல்லாம் எங்கே சென்று விடுகிறார்கள், செவ்வாய் கிரகத்திற்கா?

பாலா said...

ஆனால் கடவுளைப்பற்றி நீங்கள் சொல்வதில் உடன்பாடில்லை. புலன்களை அடக்க வேண்டும் என்பது தவறான புரிதல். புலன்களை கடக்க வேண்டும் என்பது தான் சரி. நமக்கு தும்மல் வந்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் அதற்காக தும்மிக்கொண்டே இருக்க முடியுமா. அதுவாக நிகழ வேண்டும். அது மாதிரிதான் பாலுணர்வும். இதனைதான் புலன்களை கடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பெரிய (உண்மையான) ஆன்மீக வாதிகள் எல்லாம் தன்னை பின்பற்றும்படி எப்போதும் சொன்னதில்லை. விவேகானந்தர் கடவுளை வெளியே தேடாதே. உனக்குள்ளே தேடு என்றுதான் சொன்னார். தேநீரின் சுவையை அனுபவி ஆனால் தேநீர் கோப்பையை கொண்டாடாதே என்கிறது ஜென் தத்துவம். நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்றுகொள்ளலாம். அதற்காக சொன்னவர்களை கடவுளாக நினைப்பதுதான் தவறு.

அகல்விளக்கு said...

//போராடத் தெரியாதவனே கடவுளிடமும் மடத்திடமும் செல்வான்//

சரியாகச்சொன்னாய் நண்பா...

Srikanth said...

// இந்தியாவில் கோவில்கள் அதிகமாய் இருப்பதால் தான் ஊழல்களும் அதிகமாய் இருக்கிறது.

அனால் கோவிலை எதிர்த்து போராடிய கட்சியான தி மு க ஆட்சியிலும் ஊழல் நடக்கிறதே!