Sunday 7 March 2010
உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
இன்று உலக உழைக்கும் மகளிர் தினம். உருவாக்குவது கடவுள் என்றால் நம் கடவுள் நம் அன்னையே. பெண்கள் எப்பொழுதுமே உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் வெளியில் வேலை பார்க்காத பெண்கள் கூட வீட்டில் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது வேலைக்கு போகிறார்கள் படிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லி விட முடியாது.
பெண் எப்பொழுதுமே ஆண் சார்ந்தவளாகவே இருக்கிறாள். ஒரு ஆண் சம்பாதித்து தன் பணத்தை தன் தாயிடன் கொடுக்கலாம் ஆனால் ஒரு பெண் சம்பாதித்து தன் தாயிடன் கொடுக்க முடியுமா ஏன் ஒரு 1000 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றாலும் 1000 காரணம் சொல்லி ஆக வேண்டும். பெண்ணின் உழைப்பு எப்பொழுதுமே சுரண்டப்பட்டுகொண்டிருக்கிறது. இது சித்தாள் வேலை செய்யும் பெண் முதல் மென்பொருள் வேலை செய்யும் பெண் வரை பொருந்தும்.
ஒரு ஆட்டோகிராப் படம் எடுத்து ஒரு ஆண் நான்கு காதலிகளை காதலிக்கலாம் படம் வெற்றி பெரும். ஒரு பெண் அப்படி செய்ததை எடுத்தால் வெற்றி பெறுமா. ஏன் பெண் நான்கு ஆண்களை காதலிக்க கூடாதா ஏன் அவளுக்கும் சூழ்நிலை இல்லையா?????? இது வெறும் படம் என்று சொல்லவில்லை நம் சமூகம் அப்படி இருக்கிறது நம் சமூகத்தை படம் பிரதிபலிக்கிறது.
படங்களில் பெண்களை கேலி செய்யும் காட்சிகள் அல்லது அவர்களுக்கு எதிரான வசனங்கள் உள்ள காட்சிகள் மிகுந்த கை தட்டு வாங்கும் ஏன் கை தட்டு வாங்குகிறது ஆண் ஆதிக்க சமூகம். சரி எங்க ஊரிலே பாட்டாய அம்மா என்று ஒரு பாட்டி இருந்தாள் சாகும் வரை உழைத்தாள். காலையில் கூடையை எடுத்துக்கொண்டு காய்கறி விற்க செல்வாள் இத்தனைக்கும் பாட்டிக்கு சொத்துக்கள் அதிகம் காது பாரதிராஜா படத்தில் வருவது போல தொங்கட்டம் தொங்கும். தொங்கிய காது, ஏதாவது இழவு வீடு என்றால் அந்த அம்மாவை தான் ஒப்பாரி பாடல் பாட கூப்பிடுவார்கள். சாகும் வரை உழைத்தாள்.
எங்கள் வீட்டிற்க்கு முருங்கக்காய் பாட்டி ஒருவர் வாருவார், பாட்டிக்கு 75 வயது தொடும். பாட்டி முருங்கைக்காய் பறித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு மட்டும் வருவாள் . காசு எதுவும் வாங்க மாட்டாள் நன்றாக எங்கள் வீட்டில் அந்த பாட்டி சாப்பிட்டு விட்டு போவாள். இங்கே சென்னையில் பழைய ரூம் இருக்கும் இடத்தில் ஒரு பால் போடும் பாட்டி இருப்பாள் வேளச்சேரியில் இருந்து வருவாள் நான்கு மணிக்கு பால் போடுவாள் பின்பு பத்து பாத்திரம் தேய்ப்பாள் பாட்டிக்கு 70 வயது இருக்கும்.
பெண்கள் எங்கு பார்த்தாலும் உழைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். பெண் சுதந்திரத்தை ஆண் நிர்ணயம் செய்யக்கூடாது. பெண்கள் உழைப்பை நாம் அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கவில்லை என்றாலும் சுரண்டாமல் இருக்க முயற்சி செய்வோம்.
பெண்கள் பற்றி ஒரு தளம் யாரவது பதிவர் எழுதினால் அறிமுகப்படுத்துகிறது http://www.penniyam.com/
அந்தத் தளத்தில் நான் எழுதிய நூறாவது பதிவு வெளிவந்தது http://www.penniyam.com/2010/02/blog-post_14.html
எங்காவது பெண்ணிற்கான கட்டுரை வந்தால் இந்த பெண்ணியம் தளம் அதை வெளியிடுகிறது. பெண்கள் பற்றிய தெளிவான பார்வை இந்த தளத்திலே கிடைக்கிறது. படிப்பதற்கு பயனுள்ள தளம் உலக உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உண்மையை சொல்லணும்னா வயதானப் பெண்களில் உழைப்பவர்கள் அதிகம் நண்பா....எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
பெண்ணியம் தளம் பற்றின தகவலுக்கு நன்றி நண்பா....
Post a Comment