Sunday, 7 March 2010

விண்ணைத் தாண்டிய பிறந்த நாள் வாழ்த்து















மார்ச் 8 உலக மகளிர் தினம் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. மார்ச் 8 2001 என் கல்லூரி ஆண்டு விழாவில் நான் நிரூபித்த நாள் நான் எதவாது செய்தால் பத்து பேர் எனக்கு கை தட்டுவார்கள் என்று நிரூபித்த நாள். வெறும் ஒரே நாள் regursal பார்த்துவிட்டு அடுத்த நாள் போட்ட நிகழ்ச்சி மிக பெரிய வெற்றி பெற்றது என்னால் அந்த நாளை மறக்கவே முடியாது .அன்று என் நண்பன் ஒருவனுக்கும் என் தோழி ஒருத்திக்கும் பிறந்த நாள் வேறு . அன்றில் இருந்து அந்த நாள் வந்தால் என்னால் மறக்கவே முடியாது.















எனக்கும் அந்த தினத்திற்கும் தொடர்புகள் அதிகம் உண்டு. ஆண்டு 2005 பிறகு ஒரு பெண் என் வாழ்கையில் வந்தாள் அவளின் பிறந்த நாள் கூட அதே நாள் தான்.மகளிர் தினம் எனக்கு மட்டும் காதலர் தினமாய் இருந்தது. தெருவை விட்டு வெளியே வராத நாட்கள் .
இப்பொழுது அமெரிக்காவில் இருப்பாள் படித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.

மகளிர் என்றாலே எனக்கு மரியாதை அதிகம் உண்டு அதற்க்கு காரணம் என் அன்னை . எனக்கு சகோதரிகள் அதிகம். எனக்கு உயிர் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ஐரோம் ஷர்மிளா பற்றி கேட்டப்பிறகு தனி மரியாதையே வந்தது. என்ன பெண்மணி அவர்கள். ஆண்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் ஒரு பெண் மட்டுமே தாயாக
முடியும். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். என் காதலிக்கு மட்டும் விண்ணைத் தாண்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

1 comment:

ஹாய் அரும்பாவூர் said...

" 2005 பிறகு ஒரு பெண் என் வாழ்கையில் வந்தாள் அவளின் பிறந்த நாள் கூட அதே நாள் தான்.மகளிர் தினம் எனக்கு மட்டும் காதலர் தினமாய் இருந்தது. தெருவை விட்டு வெளியே வராத நாட்கள் .
இப்பொழுது அமெரிக்காவில் இருப்பாள் படித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்."

என்னுடைய வாழ்த்துக்கள்