Friday, 30 April 2010

சுறவும் தல பிறந்த நாளும்












இன்று சுறா படம் வெளியாகி உள்ளது நாளை அஜித் பிறந்தநாள் வேறு . ஏற்கனவே IPL போதைகளில் பதிவுலகம் இருக்க இப்பொழுது அடுத்து சுறா . கொஞ்சம்
நேரம் இருந்தால் என்னுடைய போன பதிவை படியுங்கள் http://vennirairavugal.blogspot.com/2010/04/blog-post_29.html
இது உலக உழைப்பாளர் தின சிறப்பு பதிவு தோழர்களே

Thursday, 29 April 2010

உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள்






















நாளை உலக உழைப்பாளர்கள் தினம் . உழைக்கும் மக்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் சுரண்டும் முதலாளி வர்க்கம் சுரண்டிக்கொண்டே இருக்கிறது. இது IT துறை முதல் கீழே இருக்கும் தொழிலாளிகள் வரை ஒன்றே ,சுரண்டும் முறை வேண்டுமென்றால் மாறுபடலாம். நாள் ஒன்றிற்கு பத்து மணி நேர வேலை , நாளை நிற்க வேண்டுமென்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மக்கள் சாரை சாரையாய் கிராமங்களை விட்டு விட்டு நகரங்களுக்கு புலம் பெயரும் சுழல் , நகரமயமாக்கல் இவை எல்லாம் கண் முன்னே அரங்கேறி கொண்டிருக்கிறது.

சரி இந்த உழைப்பு எல்லாம் சரியான பயன் இருக்கிறதா என்ன இல்லை என்றே சொல்ல வேண்டும் . முதாளித்துவ சமூகம் தமக்கு தேவை என்பதற்காக கீழே உள்ள மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது. முன்பு TV வாஷிங் machine போன்ற ஆடம்பர செலவுகள் இப்பொழுது அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. ஒரு பொருளை தயாரிப்பது
அப்பொருளுக்கு சந்தை ஏற்படுத்துவது மக்களுக்கு ஆசையை தூண்டுவது விற்பனை செய்வது என்ற பாணியில் முதலாளித்துவம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது . சென்னை போன்ற நகரங்களில் மாதம் பத்து ஆயிரம் ருபாய் இல்லை என்றால் காலம் தள்ள முடியாது என்கிற சூழலுக்கு கொண்டு செல்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம் . கட்டாயம் நீங்கள் பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டும் குறைந்தது சிலநேரங்களில் பனிரெண்டு பதினைந்து மணி நேரங்கள் கூட உழைக்க வேண்டி உள்ளது . குடும்பங்களில் அக்கறை செலுத்த முடியாமல் அன்பு குறைந்து உடல் நலம் குறைந்து போராட்டமான சூழல் இருக்கின்றது.

ஒருவரது வாழ்க்கையே சுரண்டப்படுகிறது. சரி நாம் சுரண்டப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது வேதனை. என் நண்பர் முதலாளித்துவம் பற்றி எளிதாய் விளக்கினார் . நூறு சட்டை ஒரு ஊரிற்கு தேவைபட்டால் ஒவ்வொரு முதலாளியும் 1000 சட்டை தைத்தால் என்ன ஆகும் அதுவே இந்த சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது தேவைக்கு அடிக்கமான தயாரிப்பு ஊருக்கே நூறு சட்டை தான் தேவை படும் பொழுது 100 கம்பெனி அதிக லாபம் பெற 1000 சட்டை தைத்தால் உழைப்பு வீண் தானே இதை தான் உபரி மதிப்பு
என்கிறார்கள் எவ்வளவு உழைப்பு வீண் அது பந்தை போலவே சுற்றிக்கொண்டிருக்கும் அது தான் recission போன்றவைகளுக்கு காரணம்.

எவ்வளவு உழைப்பு நேரம் வீண் . தேவை இல்லாத வேலைக்கு ஆள் குறைப்பு சம்பள குறைப்பு . இப்படி உபரி மதிப்பு இருக்கும் வரை முதலாளித்துவத்தால் ஜெயிக்கவே முடியாது என்பதே உண்மை , ஆனால் எவ்வளவு மக்களின் உழைப்பு வீணடிக்க படுகிறது. முதலாளித்துவம் இல்லாத தேசத்தில் மூன்று அல்லது நான்கு மணிநேரம் மட்டுமே
வேலை இருக்கும் . மார்க்ஸ் சொல்வதை போல் உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள். அரசியல் ரீதியாக பார்த்தாலும் விஞ்ஞான ரீதியாய் பார்த்தாலும் முதலாளித்துவம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை. மார்க்ஸ் சொன்னது போல் உலக உழைப்பலர்களே ஒன்று கூடுங்கள்.

Wednesday, 28 April 2010

நூல் என்னும் பாதுகாப்பு வலையம்

வெடித்து சிதறியது வார்த்தைகள்
"சாமியாரை சிறையில் போட வேண்டும் " என்றான் ஒருவன்
" ஊரையே ஏமாத்தி இருக்கான் " என்றாள் பாட்டி
சட்டம் தன் வேலையே செய்தது
தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி போட்டது
அந்த வீட்டில் மேட்டுக்குடி பார்ப்பன சாமியார் படம் இருந்தது
மாட்டிக்கொண்ட சாமியார் மட்டும் நூல் என்ற பாதுக்காப்பான வலையத்திலே
இருந்திருந்தால் ......................!

Monday, 12 April 2010

உலக அங்காடித் தெரு















அங்காடித் தெரு பார்த்தேன் முதலில் வாழ்க்கையை பதிவு செய்த வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் படத்தில் சில கேள்விகள் இருக்கிறது . படத்தின் மைய்ய கருத்து வந்த இடம் "யானை வாழ்ந்த இடத்தில தான் எறும்பும் வாழுது" என்ற ஒரு கருத்து வரும், அது சாத்தியாமா????? பெப்சி கோக் முன்னால் நம் நன்னாரி சர்பத் நிக்குமா ????? எனக்கு தெரிந்து ஒரு கடைக்காரர் ரிலையன்ஸ் பிரெஷ் வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஏன் யானை இருக்கும் பொழுது எறும்பு வாழலாம் அடிமையாக மட்டுமே . ஏன் வெளியூர்க்காரர்களிடம் உள்ளூர் வியாபாரிகள் போட்டி போடமுடியவில்லை .
வேண்டுமென்றால் செல் போன் கவர் சீடீ கவர் எல்லாம் விற்பனை செய்யலாம் ஆனால் முதலாளிக்கு போட்டியாக கடை எல்லாம் வைக்க முடியாது என்பது தான் எதார்த்தம்.

சரி கதாநாயகியின் கால் ஊனம் ஆகிறதே அந்த காட்சி வலுக்கடயமாய் திணிக்கப்பட்டது போல் உள்ளது அந்த காட்சி அப்படி காட்டப்பட்டதால் இன்னொரு பிரச்சனை உள்ளது . கிராமத்தில் ஏன் மக்கள் புலம்பெயர்ந்து சிமெண்ட் தொழிலாளர்கள் ஆனார்கள் , ஏன் அவர்களுக்கு வீடில்லை என்ற கோணத்தில் காட்டாமல் அவர்கள் பிரச்சனை விளக்காமல் ,கதாநாயகி கனி அங்க தங்க நேர்கிறது அப்பொழுது கால் போகிறது என்ற இடத்தில் உண்மை நிலவரம் இரண்டாம் பட்சமாகி காதல் திணிக்கப்பட்ட அனுதாபம் பிரதனமாகிறது. ஏன் இயக்குனர் அந்த தெருவில் உழைத்தே முன்னேறும் படி காட்டி இருக்கலாமே???? ஏன் கால் போனால் தான் கதையில் அழுத்தம் வருமா என்ன????


இந்த அங்காடி தெருவில் நடப்பது ஓரளவு உண்மையே என்றாலும் அண்ணாச்சிகளை விட அம்பானிகள் மோசமானவர்கள் என்ற கண்ணோட்டம் படத்தில் இல்லை. சரி நாம் எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிராண்ட் சட்டை சூ தயாரிக்கும் எல்லா இடத்துலயும் இதே நிலைமை என்பதே உண்மை. உலெகெங்கும் எங்கெல்லாம் முதாலாளித்துவம் உள்ளதோ அங்கெல்லாம் இதே நிலைமை. nike Gap Walmart போன்ற நிறுவனங்களில் குழந்தைகள் அடிமைகள் போல நடத்த படுகிறார்கள். கடுமையான சுழல் குறைவான சம்பளம் அதிக நேரம் வேலை இவை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. வால்மார்டில் வேலை செய்யும் ஒரு பெண் சொல்கிறாள் வேலையில் சிறு தவறு இருந்தாலோ இல்லை வேலை செய்யும் இடத்தை பற்றி அந்த பெண் குறை சொன்னாலோ அவர் கடத்தப்படுவார் என்று மிரட்ட படுகிறாள். மேலும் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை இரும்பு கம்பியால் அடிக்கிறார்கள் என்று அந்த பெண் சொல்கிறாள்.

ஒரு பெண் கருவுற்றால் கட்டாயம் கலைக்க வேண்டும் இல்லை என்றால் அவள் கடத்த படுவாள். காசு கொடுத்து தான் வெளியே வர முடியும். எலித்தொல்லைகள் அதிகம் இருக்கும் வீடுகளில் மிக குறைந்த இடத்தில் அனைவரும் தங்கவைக்க படுவார்கள் . வால்மார்டிலே பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டுமாம் , ஒரு நாள் கூட ஒய்வு என்பது இல்லை. ஒரு நாளுக்கு வெறும் 20 டாலர் சம்பளத்திற்கு. அங்கு வேலை செய்பவர்கள் காதல் கல்யாணம் என்றால் கடத்தப்பட்டு கொடுமை படுத்த படுவார்கள். 12 மணி நேரம் வேலை பார்த்தாலும் வெறும் 8 மணி நேரத்திற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும். அதிக நேரம் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது கட்டாயம் வேலை செய்யவேண்டும். அந்த பாக்டரி இடத்தில் 100 டிகிரி தட்பவெட்பம் இருக்கும் குறைந்த அளவே குடிநீர் இருக்கும்.

வேலையில் சிறுதவறு இருந்தால் அந்த பொருள் மூஞ்சியில் வீசப்படும். மேலும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்ப்படுத்தபடுவார்கள் , supervisor கூட படுக்கவில்லை என்றால் அவ்வளவுதான் . nike கம்பெனியிலும் இதே கதி தான் ஒரு பெண் ஒரே ஒரு நாள் தன் தங்கையை பார்க்க சென்றதால் துன்புறுத்தபட்டாள். வேலை செய்யும் பொழுது ஒரே ஒரு முறை தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் ஒரு நாளில். மேலும் வேலை செய்யும் இயந்திரங்களால் ஒருவர் இறந்துள்ளார் ஒருவர் கை போய் உள்ளது மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

Honduras என்னும் இடத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் கையால் பாய் செய்ய கூட்டி வரப்படுகிறார்கள் Houndrasil கட்டாயம் கருக்கலைக்க பெண்கள் மாத்திரைகள் எடுக்க வேண்டும் ஏன் என்றால் maternity லீவ் தரவேண்டுமே. இன்னும் நமக்கு தெரியாத மிகபெரிய முதலாளிகள் எல்லாம் இருக்கிறார்கள். நமக்கு தெரியாமல் வரலாற்றில் பதியப்படாமல் எத்தனையோ தொழிலாளி கதைகள் இருக்கின்றன .வெற்றி பெற்றவர்களை பற்றி மட்டுமே உலகம் பேசுகிறது. அப்படி பார்க்கும் பொழுது அங்காடி தெரு குறைகள் இருந்தாலும் நல்ல பதிவே.

Tuesday, 30 March 2010

காதலும் கற்று மற

















என் இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர் , ஒருவர் காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி என்று வாதிடுபவர். இன்னொருவர் காதல் என்று ஒன்று உள்ளது அது இந்த மண்ணில் சாத்தியம் இல்லை என்று சொல்பவர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .முதல் நண்பர் அவரிடம் "காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி தான் மரினா பீச் சத்யம் திரையரங்கில் எல்லாம் பாருங்கள்" என்றார் அதற்க்கு இரண்டாம் நண்பர் "பால் உணர்ச்சியில் வருவது தவறல்ல ஆனால் வர்க்கம் சார்ந்து தான் காதல் வருகிறது அது காதலே அல்ல
உடன்படிக்கை" என்றார் . எனக்கும் என் நண்பருக்கும் வர்க்கம் என்று எதை சொல்கிறார் என்று புரியவில்லை .

நண்பர் இன்னொரு நண்பரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.கடைசியில் வர்க்கம் என்று விவாதம் செய்த நண்பர் ஒரே ஒரு கேள்வி கேட்டார் இன்னொரு நண்பரால் பதில் சொல்ல முடியவில்லை " அழகா இருக்கு ஒரு பொண்ணு உங்களுக்கும் பிடிச்சிருக்கு அந்த பொண்ணு சித்தாள் வேலை செய்கிறாள் நீங்க காதலிப்பீங்களா" சக நண்பர் சாப்ட்வேர் "அது எப்படி முடியும் " என்றார் . இதன் பெயர் தான் வர்க்கம் கிளாஸ் சார்ந்தே ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று நண்பர் விளக்கினார்.

வர்க்கம் என்பது இனம் சார்ந்து இருக்கலாம் மதம் ஜாதி சார்ந்து இருக்கும் அது எல்லாம் இல்லாத வகையில் பொருளாதாரம் சார்ந்து இருக்கும். நானும் அந்த நண்பரும் பேசிக்கொள்ளும் பொழுது கூட நிறைய கேள்வி கேட்டு மடக்குவார் பேசிப்பார்க்கும் பொழுது நண்பரிடம் ஒரு ஆழம் இருக்கும் அஜித் பிடிக்கும் என்றால் ஏன் பிடிக்கும் என்பார் . நான் தொழிலாளியுடன் சமமாய் பழகுவார் என்பேன். அப்படி என்றால் அந்த தொழிலாளி வீட்டில் பெண் எடுப்பாரா????? என்பார் நான் முழிப்பேன் அப்புறம் என்ன தொழிலாளி எல்லாம் வர்க்கம் சார்ந்தது கார்த்திக் என்பார்.

நானும் யோசித்து பார்த்தேன் சினிமாவில் காட்டுவதை போல் ஒரு பணக்கார பெண் ஏழை பையனை காதலிப்பது பணக்கார பையன் ஏழை பெண்ணை காதலிப்பது இது எல்லாம் சாத்தியமே இல்லை அப்படி இருந்தாலும் மிக குறைவு. மனிதனின் லெவல் மாற மாற நட்பு வட்டாரம் மாறும் அந்த அளவிலே மட்டுமே யோசிப்பான். காரில் வரும் பெண்கள் காரில் வரும் பையனையே காதலிப்பாள் . ஒரு கல்லூரியில் படிக்கும் இரு பாலார் காதலித்தால் ஏறக்குறைய ஒரே பொருளாதார அமைப்பையே சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஜாதி மத ரீதியாகவோ ஒரே வர்க்கம் சார்ந்து இருப்பார்கள்.

அப்படியே ஏழை பையனாய் இருந்தால் கூட அவன் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நன்றாய் படித்து மென்பொருள் நிறுவனம் அல்லது அதை ஒத்த மேட்டுக்குடி வேலை இதை பார்த்தே காதல் வருகிறது . இன்னொரு நண்பரிடம் கேட்டேன் "high கிளாஸ் பொண்ணுகள பார்பீங்களா" அதற்க்கு அவர் சொன்ன பதில் "அழகா இருந்தாலும் லவ் பண்ண தோணாது" " ஏன் " என்று கேட்டேன் . "அந்த பொண்ணெல்லாம் நமக்கு செட் ஆகாது" என்றார் நண்பர் . ஒரு மிடில் கிளாஸ் பையன் காதலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு
குடும்ப பாங்கான பெண்ணையே பார்ப்பான் ஏன் என்றால் அதை பார்த்தால் தான் இவனுக்கு ஒத்துவரும் என்று இவனுக்கு தெரியும் .

எல்லாமே வர்க்கம் சார்ந்து என்றால் உண்மையான காதல் என்ன என்று நண்பரிடம் கேட்டேன் . எதுவுமே பொருள் வைத்து கொள்ளாமல் பாதுகாப்பு இல்லாமல் அன்றைய நாளுக்கு மட்டும் உழைக்கும் மக்களிடம் இது சாத்தியம் என்றார். எப்படி என்று யோசித்து பார்க்கும் பொழுது சரியாகவே தோன்றியது . ஆம் இவனிடமும் பாதுகாப்பு இல்லை அவளிடமும் பாதுகாப்பு இல்லை சொத்துக்கள் இல்லை இங்கு இருவருக்கும் பிடிக்கும் உயிரை கூட விடுவார்கள் என்பது முன்னிலை படுகிறது , பணம் தேவை ஜாதி வர்க்கம் எல்லாம் பின்னிலை அடைகிறது, அதனால் அந்த இடத்தில் காதல் சாத்தியம்.

இன்னொரு இடத்திலும் காதல் சாத்தியம் எங்கே என்றால் ஒரு போராளி போல இருக்கிறான் , போராட்டங்களில் கலந்து கொள்கிறான், எப்பொழுது ஜெயிலுக்கு போவான் என்று தெரியாது இதை போல் ஒருவன் இருந்தால் எந்த பெண்ணும் நெருங்கி வர மாட்டாள். அவன் வாழ்கையில் பாதுகாப்பு இல்லை அவனையே ஒரு பெண் காதலித்தால் அங்கே உண்மையான காதலுக்கு சாத்தியம் இருக்கிறது ஏன் என்றால் இங்கே பிடிப்பது மட்டுமே பிரதானம் ஆகி விடுகிறது .

நண்பரிடம் பேசிவிட்டு வந்த பொழுது பெசென்ட் நகர் பீச்சில் காருக்குள் மேட்டுக்குடி காதல் நடந்து கொண்டிருந்தது உள்ளே A R ரஹ்மான் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஹோசன்ன" பாடிக்கொண்டிருந்தது. உள்ளே நூறு காதலர்கள் இருப்பார்கள் பீச்சில் அந்த வர்க்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கோ ஒரு இடத்தில் "கண்கள் இரண்டால்" பாடல் ஒலித்து கொண்டிருந்தது எப்பொழுதுமே கிளர்ச்சி ஏற்ப்படுத்தும் அந்த பாடல் இப்பொழுது என்னை ஒன்றும் செய்யவில்லை. என் காதலி என்னை விட்டு போய்விட்டால் என்ற வடு கூட இல்லை கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தது வெகு நாட்களுக்கு பின்.

Thursday, 25 March 2010

உற்று பார்த்துக்கொண்டே இருந்தது


















காரி உமிழ்ந்து
விட்டு போனார் பெரியவர் .......!
மழை வந்து குளிப்பாட்டியது ............
வண்டிகள் ஊர்ந்து சென்றன .......
நேற்று ஒரு காதலனுடன்
பிரிந்த காதலி இன்னொரு காதலனுடன்
நடந்து சென்றாள்............!
பிராத்தல் நின்று கொண்டு கூப்பிட்டு
கொண்டிருந்தாள் ...........!
பார் சென்றனர் A சென்டர் குடிமகன்கள்
டாஸ்மாக் சென்றனர் C சென்டர் .............!
ஒரு குழந்தை பஞ்சு மிட்டாய்க்காக அழுது கொண்டிருந்தது .........
ஆயிரம் ருபாய் பொம்மை வைத்து காருக்குள் சென்றது பணக்கார குழந்தை .......
தோழர்கள் ஏதோ பிரச்சனைக்காக
சுவரொட்டியிலே ஓட்ட ..............பக்கத்திலே
ஷகிலா பட சுவரொட்டி .....................!
துரோகி விரோதி நல்லவன் யாராக இருந்தாலும்
தெருவிற்கு மிதி மட்டுமே ..................
சில நேரம் காரி உமிழ்தல்
சில நேரம் அதன் பெயர் மூத்திர சந்து .............!
இருந்தாலும் அந்த அங்காடி தெரு அனைவரையும்
உற்று பார்த்துக்கொண்டே இருந்தது ....................!

Wednesday, 24 March 2010

இந்த பதிவிற்கு யாரும் vote போட வேண்டாம் - பார்ட் இரண்டு

கோகோ கோலா பதிவு பற்றி எழுதினேன் .........கோகோ கோலா குடிப்பவர்கள் அதிகமா இல்லை
நாம் சரியாக சென்றடயவில்லையா என்று தெரியவில்லை ............................!தயவு செய்து போன பதிவிற்கு
வாக்கு அளிக்க கூட வேண்டாம் படித்து விட்டாவது செல்லுங்கள் .....
http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_23.html