Tuesday, 12 August 2014

மோட்சத்தை அடைந்தன

உன் 
முகத்தை 
முத்தமிட்ட 
சந்தன துகள்கள் 
மோட்சத்தை அடைந்தன 

Monday, 11 August 2014

காதல் என்னை கடந்து செல்கிறது

என்னை 
நேரில் பார்த்து விட்டு 
பார்க்கக்கூடாது 
என்று பல்லைக்கடித்து 
நீ நடந்து செல்கையில் 
 கடந்து செல்கிறது
காதல்

Wednesday, 9 July 2014

நீயே அருவியில் அருகில் இருந்தால்............!

நீ அருகில் 
இருந்தால் அருவியில் இருப்பது 
போல் இருக்கும் ...
நீயே 
அருவியில் அருகில் 
இருந்தால்............!

நயாகரா காதலியின் சிரிப்புக்கு முன்னால்

நயாகரா
அருவியாக
இருந்தாலும் காதலியின்
சிரிப்புக்கு முன்னால்

Thursday, 8 May 2014

காதலி உட்கார்ந்திருக்கும் படங்கள்

காதலி
உட்கார்ந்திருக்கும்
படங்கள்
மனதில் நின்றுகொண்டே
இருக்கின்றன 

Tuesday, 6 May 2014

மழை வந்துவிட்டது

அற்புதங்கள்
சொல்லிக்கொண்டு வருவதில்லை
மழை வந்துவிட்டது
காதலி ..?

Saturday, 12 April 2014

உலகின் சிறந்த கவிதை .....!!

உலகத்தின் 
ஏதோ  ஒரு 
மூலையில் யாரோ ஒருத்திக்காக 
மட்டும் 
எழுதப்படும் கவிதையே 
உலகின் சிறந்த கவிதை .....!!



Thursday, 27 March 2014

யார் யாராகவோ வருகிறாய் ....!

யாரோ 
உன் பெயரை கூப்பிடும் 
பொழுது அனிச்சையாய் 
திரும்புகிறது மனது ....!
டூ wheeler 
ஓட்டும்  பெண்கள் 
உன் சாயலிலே மட்டும்
 தெரிகிறார்கள் .....!
ஏதோ 
ஒரு சினிமா பாடல் 
கூட உன்னை நினைவு படுத்துகிறது ....!
நீ எப்பொழுதும் 
நீயாக  மட்டும்  வராமல் 
யார் யாராகவோ 
வருகிறாய் ....!