Monday, 12 April 2010

உலக அங்காடித் தெருஅங்காடித் தெரு பார்த்தேன் முதலில் வாழ்க்கையை பதிவு செய்த வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள். ஆனால் படத்தில் சில கேள்விகள் இருக்கிறது . படத்தின் மைய்ய கருத்து வந்த இடம் "யானை வாழ்ந்த இடத்தில தான் எறும்பும் வாழுது" என்ற ஒரு கருத்து வரும், அது சாத்தியாமா????? பெப்சி கோக் முன்னால் நம் நன்னாரி சர்பத் நிக்குமா ????? எனக்கு தெரிந்து ஒரு கடைக்காரர் ரிலையன்ஸ் பிரெஷ் வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஏன் யானை இருக்கும் பொழுது எறும்பு வாழலாம் அடிமையாக மட்டுமே . ஏன் வெளியூர்க்காரர்களிடம் உள்ளூர் வியாபாரிகள் போட்டி போடமுடியவில்லை .
வேண்டுமென்றால் செல் போன் கவர் சீடீ கவர் எல்லாம் விற்பனை செய்யலாம் ஆனால் முதலாளிக்கு போட்டியாக கடை எல்லாம் வைக்க முடியாது என்பது தான் எதார்த்தம்.

சரி கதாநாயகியின் கால் ஊனம் ஆகிறதே அந்த காட்சி வலுக்கடயமாய் திணிக்கப்பட்டது போல் உள்ளது அந்த காட்சி அப்படி காட்டப்பட்டதால் இன்னொரு பிரச்சனை உள்ளது . கிராமத்தில் ஏன் மக்கள் புலம்பெயர்ந்து சிமெண்ட் தொழிலாளர்கள் ஆனார்கள் , ஏன் அவர்களுக்கு வீடில்லை என்ற கோணத்தில் காட்டாமல் அவர்கள் பிரச்சனை விளக்காமல் ,கதாநாயகி கனி அங்க தங்க நேர்கிறது அப்பொழுது கால் போகிறது என்ற இடத்தில் உண்மை நிலவரம் இரண்டாம் பட்சமாகி காதல் திணிக்கப்பட்ட அனுதாபம் பிரதனமாகிறது. ஏன் இயக்குனர் அந்த தெருவில் உழைத்தே முன்னேறும் படி காட்டி இருக்கலாமே???? ஏன் கால் போனால் தான் கதையில் அழுத்தம் வருமா என்ன????


இந்த அங்காடி தெருவில் நடப்பது ஓரளவு உண்மையே என்றாலும் அண்ணாச்சிகளை விட அம்பானிகள் மோசமானவர்கள் என்ற கண்ணோட்டம் படத்தில் இல்லை. சரி நாம் எல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிராண்ட் சட்டை சூ தயாரிக்கும் எல்லா இடத்துலயும் இதே நிலைமை என்பதே உண்மை. உலெகெங்கும் எங்கெல்லாம் முதாலாளித்துவம் உள்ளதோ அங்கெல்லாம் இதே நிலைமை. nike Gap Walmart போன்ற நிறுவனங்களில் குழந்தைகள் அடிமைகள் போல நடத்த படுகிறார்கள். கடுமையான சுழல் குறைவான சம்பளம் அதிக நேரம் வேலை இவை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. வால்மார்டில் வேலை செய்யும் ஒரு பெண் சொல்கிறாள் வேலையில் சிறு தவறு இருந்தாலோ இல்லை வேலை செய்யும் இடத்தை பற்றி அந்த பெண் குறை சொன்னாலோ அவர் கடத்தப்படுவார் என்று மிரட்ட படுகிறாள். மேலும் ஒழுங்காக வேலை செய்யாதவர்களை இரும்பு கம்பியால் அடிக்கிறார்கள் என்று அந்த பெண் சொல்கிறாள்.

ஒரு பெண் கருவுற்றால் கட்டாயம் கலைக்க வேண்டும் இல்லை என்றால் அவள் கடத்த படுவாள். காசு கொடுத்து தான் வெளியே வர முடியும். எலித்தொல்லைகள் அதிகம் இருக்கும் வீடுகளில் மிக குறைந்த இடத்தில் அனைவரும் தங்கவைக்க படுவார்கள் . வால்மார்டிலே பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டுமாம் , ஒரு நாள் கூட ஒய்வு என்பது இல்லை. ஒரு நாளுக்கு வெறும் 20 டாலர் சம்பளத்திற்கு. அங்கு வேலை செய்பவர்கள் காதல் கல்யாணம் என்றால் கடத்தப்பட்டு கொடுமை படுத்த படுவார்கள். 12 மணி நேரம் வேலை பார்த்தாலும் வெறும் 8 மணி நேரத்திற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும். அதிக நேரம் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது கட்டாயம் வேலை செய்யவேண்டும். அந்த பாக்டரி இடத்தில் 100 டிகிரி தட்பவெட்பம் இருக்கும் குறைந்த அளவே குடிநீர் இருக்கும்.

வேலையில் சிறுதவறு இருந்தால் அந்த பொருள் மூஞ்சியில் வீசப்படும். மேலும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்ப்படுத்தபடுவார்கள் , supervisor கூட படுக்கவில்லை என்றால் அவ்வளவுதான் . nike கம்பெனியிலும் இதே கதி தான் ஒரு பெண் ஒரே ஒரு நாள் தன் தங்கையை பார்க்க சென்றதால் துன்புறுத்தபட்டாள். வேலை செய்யும் பொழுது ஒரே ஒரு முறை தான் கழிவறைக்கு செல்ல வேண்டும் ஒரு நாளில். மேலும் வேலை செய்யும் இயந்திரங்களால் ஒருவர் இறந்துள்ளார் ஒருவர் கை போய் உள்ளது மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

Honduras என்னும் இடத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் கையால் பாய் செய்ய கூட்டி வரப்படுகிறார்கள் Houndrasil கட்டாயம் கருக்கலைக்க பெண்கள் மாத்திரைகள் எடுக்க வேண்டும் ஏன் என்றால் maternity லீவ் தரவேண்டுமே. இன்னும் நமக்கு தெரியாத மிகபெரிய முதலாளிகள் எல்லாம் இருக்கிறார்கள். நமக்கு தெரியாமல் வரலாற்றில் பதியப்படாமல் எத்தனையோ தொழிலாளி கதைகள் இருக்கின்றன .வெற்றி பெற்றவர்களை பற்றி மட்டுமே உலகம் பேசுகிறது. அப்படி பார்க்கும் பொழுது அங்காடி தெரு குறைகள் இருந்தாலும் நல்ல பதிவே.

16 comments:

க.பாலாசி said...

உங்களையும் என்னையும் இந்த பார்வைக்கு திருப்பிவிட்டதே இந்தப்படம்தாங்க நண்பரே... இல்லன்னா நாம இந்தளவுக்கு ஆராய்ச்சிபூர்வமா மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பேசியிருக்கமாட்டோம்....

நல்ல பதிவு.... இத்தனைக்கொடுமைகளையும் கண்டு மனது பதறுகிறது... தீர்வு???? நாலைந்து கேள்விக்குறிகளை அடுக்கிவைப்பதைவிட வேறு வழியில்லை.....

rajeshkannan said...

மிக அருமையான பதிவு
என்ன செய்வது நம்மால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது

Madumitha said...

இந்த walmart ஐ உள்ளே விடத்தான்
நம்மூர் அரசியல்வாதிங்க
துடியாத் துடிக்கிறாங்க.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அப்பாவி தங்கமணி said...

நெறைய பதிவர்கள் இந்த படம் பத்தி பதிவு போட்டு இருக்காங்க. பாக்கணும்னு ஆர்வத்த தூண்டுற மாதிரி.... உங்க பதிவு அழகா இருக்கு. அதோட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

முகிலன் said...

ரெண்டு விசயம்.

1. வால்மார்ட்டில் எந்த நாட்டில் இப்படியேல்லாம் நடக்கிறது என்பதை ஆதாரச் சுட்டியுடன் காட்ட இயலுமா? இது அமெரிக்காவில் நடக்க வாய்ப்பு இல்லை.

2. உங்கள் வலைப்பூவில் எந்த தொடுப்பைச் சொடுக்கினாலும் பாப்-அப் வருகிறது. இதைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன்?

வெண்ணிற இரவுகள்....! said...

http://ihscslnews.org/view_article.php?id=54

வெண்ணிற இரவுகள்....! said...

அமெரிக்க மீது அவ்வளவு நம்பிக்கையா

வெண்ணிற இரவுகள்....! said...

http://www.ufcw.org/press_room/fact_sheets_and_backgrounder/walmart/sweat_shops.cfm

வெண்ணிற இரவுகள்....! said...

http://www.now.org/issues/wfw/wm-facts.html
http://en.wikipedia.org/wiki/Criticism_of_Wal-Mart
http://www.organicconsumers.org/articles/article_14663.cfm
http://wakeupwalmart.com/facts

பாலா said...

//ஏன் இயக்குனர் அந்த தெருவில் உழைத்தே முன்னேறும் படி காட்டி இருக்கலாமே????

இதற்கு பதில் முதல் பத்தியிலேயே கொடுத்துள்ளீர்களே "செல் போன் கவர் சீடீ கவர் எல்லாம் விற்பனை செய்யலாம் ஆனால் முதலாளிக்கு போட்டியாக கடை எல்லாம் வைக்க முடியாது என்பது தான் எதார்த்தம்." உழைத்து முன்னேறுவதை காட்டி இருந்தால் ரஜினி படம் விஜய் படம் மாதிரி எதார்த்தம் இல்லாத கதை, ஒரே பாடலில் எப்படி முன்னேற முடியும் என்று விமர்சிப்பீர்களே?

//ஏன் அவர்களுக்கு வீடில்லை என்ற கோணத்தில் காட்டாமல் அவர்கள் பிரச்சனை விளக்காமல்

அப்படி சொல்ல ஆரம்பித்தால் கதை வேறு பக்கம் திசை திரும்பி விடுமே.

//இந்த அங்காடி தெருவில் நடப்பது ஓரளவு உண்மையே என்றாலும் அண்ணாச்சிகளை விட அம்பானிகள் மோசமானவர்கள் என்ற கண்ணோட்டம் படத்தில் இல்லை

படம் பாமர மக்களுக்கும் புரிய வேண்டும் என்று மிக சாதாரண கதை களமாக தேர்ந்தெடுக்க பட்டது தான் அண்ணாச்சியின் கடை. அதை எந்த முதலாளியுடன் வேண்டுமானாலும் பொருத்தி பார்த்து கொள்ளலாம்.

வெண்ணிற இரவுகள்....! said...

அப்படி கதையை இயக்குங்கள் என்று சொல்லவில்லை நண்பரே .........ஆனால் தனியாக வேலை செய்வது முன்னேற்றம் என்று இயக்குனர் சொல்லி உள்ளார் ........அது எப்படி முன்னேற்றம் ஆகும் வேண்டுமென்றால் செல் போன் கவர் விற்கலாமே தவிர முதலாளிகளோடு போட்டி போட முடியாது அது தான் எதார்த்தம் ........

வெண்ணிற இரவுகள்....! said...

ஏன் அம்பானி மாதிரி படம் எடுத்தால் மக்களுக்கு புரியாதா என்ன ????????? ஏன் அம்பானி பற்றி படம் எடுத்தால் குரு போல் செய்த தவறை எல்லாம் நியாய படுத்தி தானே எடுக்க முடியும் ......சரியா நண்பரே

இனியாள் said...

நல்ல பதிவு தோழர், இதை போன்ற செய்திகள் எல்லாம் எப்படி தெரிந்து கொண்டீர்கள், மனதை உலுக்கும் தகவல்களாய் இருக்கிறது.

anand said...

உங்களது தமிழ் ஈழம் கருத்துக்கள், தமிழ் ஈழ கவிதைகள் அத்தனையும் அருமை!!! ஆனால் தயவு செய்து சச்சினை விமர்சிக்க வேண்டாம்

Bharathi Alexei Manavalan said...

அண்ணே நல்ல பதிவு நிறைய தகவல்கள் இருந்தன.அண்ணே நமக்கு பிடித்த அழியாத கோலங்கள் படம் டிவிடி இருக்கா.இல்ல எங்க இருக்கும்-னு சொல்லுங்க.நானும் சென்னை முழுவதும் தேடுனே கிடைக்கல.