Sunday, 5 September 2010

MODERN TIMES

முதலாளிகளின் உலகத்திலே , ஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது அதன் தொழிலாளர்கள் எப்படி பாதிக்கபடுகிறார்கள் என்பதை அற்புதமாகவும் நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் படம் சார்லி சாப்ளின் நடித்த "MODERN TIMES " . எந்திரங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது அனைத்தையும் ஒரு தொலைகாட்சி போல ஒன்றை வைத்துக்கொண்டு தொழிற்சாலையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதாலாளி பார்த்துக்கொண்டிருக்கிறார் , அதன் மூலமாகவே ஒரு தொழிலாளியிடம் வேகத்தை அதிகப்படுத்த சொல்கிறார் . இக்காட்சி இப்பொழுது மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் TELECONFERENCING உடன் பொருத்தி பார்க்கலாம் . சாப்ளின் ஒரு screw driver வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஸ்க்ருவை டைட் செய்யும் வேலை . வேகமாய் வர வர டைட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.கொஞ்சம் சாப்ளின் மெதுவாய் வேலை பார்த்தாலும் supervisor அவரை வேகமாய் வேலை பார் என்று திட்டிக்கொண்டே இருப்பார் . சாப்ளின் கழிவறைக்கு செல்கிறார் , அங்கு ஆற அமர உட்கார்ந்து தம் அடிக்கிறார் , அதை தொலைக்காட்சியில் இருந்து முதலாளி பார்க்கிறார் , சாப்ளினை திட்டுகிறார் , சாப்ளின் மறுபடியும் வேலை பார்க்க செல்கிறார் . இத்தகைய கழிவறை கூட முதலாளி கட்டுப்பாட்டில் இருக்கிறது , nike போன்ற நிறுவனங்களில் ஒன்றுக்கு சென்றால் கூட குழந்தைகளை திட்டுவார்கள் , அதற்க்கு கூட நேரம் ஒதுக்காமல் செல்ல வேண்டும் , அங்காடி தெரு படத்திலும் அத்தகைய காட்சி பார்த்தாய்
நியாபகம் , இப்படி முதலாளித்துவம் எப்படி இருக்கிறது , எப்படி எல்லாம் இருக்கும் என்பதை 1936 அந்த ஆண்டிலேயே சித்தரித்து விட்டார் சாப்ளின் . screw டைட் செய்து செய்து சாப்ளினுக்கு இயல்பாகவே அது ஒரு குணாதிசயம் போல மாறிவிட்டது . SCREW இல்லை என்றாலும் அதை போலவே செய்கிறார் . ஒரு பெண்மணியின் பட்டன் வைத்த ஷர்டை டைட் செய்ய பாய்கிறார் , அந்த பெண்மணி ஓடுகிறாள் . சாப்ளினுக்கு அதிக வேலை பளு அவரை ஒரு நரம்பு தளர்ச்சி உள்ளவன் போல மாற்றுகிறது . எந்திரத்தனமாய் ஒரு இயந்திரம் போல அவர் நடவடிக்கைகள் இருக்கிறது . எப்படி பணக்காரர்கள் நுகர்கிறார்கள் , எப்படி சாமனியன் கஷ்டப்படுக்கிறான் என்பதை அற்புதமாய் படம் சித்தரிக்கிறது . இப்படி படம் நெடுக அற்புதமான நகைச்சுவை , சிந்தனை , ஆழ்ந்த சோகம் என்று சாப்ளின் பின்னி எடுக்கிறார் . கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் "MODERN TIMES ".