Tuesday, 1 May 2012

'தல' உண்மையில் தலையா

எனக்கும் அஜித் அவர்களை பிடிக்கும். இவர் போல நல்லவர் இல்லை அதனால் நான் அவரை ரசிக்கிறேன் என்று ரசிகர்கள் சொல்வது


விமர்சனத்துக்கு உரியது.கடுமையாக உழைத்து தன் தொழிலில் முதலில் இருக்கிறார் சரிதான் இன்றைய சூழலில் யார் தான் கடுமையாக

உழைக்கவில்லை . ஒரு முறை நேரம் கிடைத்தால் கோயம்பேடு மார்க்கெட் சென்று பாருங்கள், அதிகாலையில் மானிட கூட்டங்கள் காய்கறி

மூட்டைகளை முதுகில் சுமந்து வேலை செய்யும். ஒரு கேள்விக்குறி போல முதுகு வளைந்து மூடைகளை தூக்கிசெல்வார்கள். சாதரண இளைங்கராய்

இருந்தால் பரவாஇல்லை , எழுபத்தி ஐந்து வயதில் மூடைகளை சுமப்பவர்கள் இருக்கிறார்கள் .காலை இரண்டு மணி முதல் கோயம்பேடு மார்க்கெட்

போர்க்களம் போல இருக்கும் .வெளியூரிலிருந்து வந்து வேலை செய்யும் இளைங்கர்கள் அதிகம். கேள்விக்குறி போல் முதுகு வளைந்து வேலை செய்தால்

நாள் ஒன்றிருக்கு அவருக்கு கிடைக்கும் வருமானம் தினக்கூலி நூற்றி ஐம்பது முதல் முன்னூறு ரூபாய்க்கள். பால், பஸ் விலை ஏற்றத்தில் இந்த சம்பளம்

எப்படி பத்தும் . அவர்களை விடவா தல உழைத்துவிட்டார் .தல வாங்கும் சம்பளம் பதினைந்து கோடி .



மேலும் சொல்லப்படும் செய்தி 'தல' அவர்கள் தொழிலாளியுடன் எளிமையாக பழுகுவார் , சரிதான் சாப்பிட்டாயா என்று கேட்ப்பார்

பிரியாணி போடுவார் சரி தான்.'சாப்பிட்டாயா ' என்று கேட்க்கும் தல , ஏன் பா ASSISTANT டைரக்டர் உனக்கு சம்பளம் ஒழுங்கா போகுதா

என்று கேட்ப்பாரா ????????சமூக பிரச்சனையெல்லாம் பேச வேணாம் பா ? மாடா உழைக்கிற உதவி இயக்குனர் சம்பளம் , உதவி ஒளிப்பதிவாளர்

சம்பளம் பத்தி பேசலாம்ல ? ஏன் தனக்கு குடுக்கிற பதினைந்து கோடி சம்பளத்துல இருந்து ஒரு பத்து லட்சம் குறைச்சா போதும் அவங்களுக்கு பாட்டா

ஒழுங்கா கிடைக்கும்ல ?



ரசிகர்கள் மேல அக்கறை இருக்கிற பட்சத்தில் தன் ரசிகர் மன்றத்தை களைத்தவர் ஏன் ப்ளாக் டிக்கெட் கூடாது ரசிகர்களை பாதிக்கும்னு

ஏன் சொல்லல . அஜித் படம் வசூலே முதல் மூணு நாளு தான். அதுல வசூல அல்ல ஒரு டிக்கெட் முந்நூறு நானூறு ருபாய் போகும் .

அப்படி அடுத்தவண்ட இருந்து அடிச்ச பணம் தான் பதினைந்து கோடி சம்பளம் .உண்மையான நேர்மை இருந்தா அதை தடுக்க முடியுமா ?



ஒரு கலைங்கனுக்கு சமூக பொறுப்பு வேணும் ? ஏன் நா கலையோட பிறப்பே சமூகம் தான் ? அப்படி சமூக பொறுப்பில் இருந்து

விலகுவது ஒத்துக்கொள்ளவே முடியாது ,அதுவும் பல கோடி இளைங்கர்களின் ரோல் மாடல் . எனக்கு என் லைப் அமைதியா இருக்கணும்

அடுத்தவன் எப்படி போனா என்ன ? இது பேரு வாழ்க்கையா ? தனக்கு உணவு போடும் தொழிலில் தொழிலாளியின் சம்பளத்தை பற்றி பேச மறுக்கும்

தல எப்படி தலையாக இருக்க முடியும்(எனக்கு சினிமா நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சம்பள பிரச்சனை என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்) .



நீங்கள் அவர் நன்றாக நடிக்கிறார் அதனால் நான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பிரச்சனை இல்லை .ஆனால் அவர் நல்லவர்

அதனால் நான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது? விமர்சனத்துக்கு உரியது.அடுத்தவர் பிரச்னையை யாரும் கண்டுகொள்ளாத

காலத்தில் , "நீ சாப்பிட்டாயா?" என்று கேட்பதே ஒரு பாமர ரசிகனுக்கு போதுமாய் இருக்கிறது .