Tuesday, 1 May 2012

'தல' உண்மையில் தலையா

எனக்கும் அஜித் அவர்களை பிடிக்கும். இவர் போல நல்லவர் இல்லை அதனால் நான் அவரை ரசிக்கிறேன் என்று ரசிகர்கள் சொல்வது


விமர்சனத்துக்கு உரியது.கடுமையாக உழைத்து தன் தொழிலில் முதலில் இருக்கிறார் சரிதான் இன்றைய சூழலில் யார் தான் கடுமையாக

உழைக்கவில்லை . ஒரு முறை நேரம் கிடைத்தால் கோயம்பேடு மார்க்கெட் சென்று பாருங்கள், அதிகாலையில் மானிட கூட்டங்கள் காய்கறி

மூட்டைகளை முதுகில் சுமந்து வேலை செய்யும். ஒரு கேள்விக்குறி போல முதுகு வளைந்து மூடைகளை தூக்கிசெல்வார்கள். சாதரண இளைங்கராய்

இருந்தால் பரவாஇல்லை , எழுபத்தி ஐந்து வயதில் மூடைகளை சுமப்பவர்கள் இருக்கிறார்கள் .காலை இரண்டு மணி முதல் கோயம்பேடு மார்க்கெட்

போர்க்களம் போல இருக்கும் .வெளியூரிலிருந்து வந்து வேலை செய்யும் இளைங்கர்கள் அதிகம். கேள்விக்குறி போல் முதுகு வளைந்து வேலை செய்தால்

நாள் ஒன்றிருக்கு அவருக்கு கிடைக்கும் வருமானம் தினக்கூலி நூற்றி ஐம்பது முதல் முன்னூறு ரூபாய்க்கள். பால், பஸ் விலை ஏற்றத்தில் இந்த சம்பளம்

எப்படி பத்தும் . அவர்களை விடவா தல உழைத்துவிட்டார் .தல வாங்கும் சம்பளம் பதினைந்து கோடி .மேலும் சொல்லப்படும் செய்தி 'தல' அவர்கள் தொழிலாளியுடன் எளிமையாக பழுகுவார் , சரிதான் சாப்பிட்டாயா என்று கேட்ப்பார்

பிரியாணி போடுவார் சரி தான்.'சாப்பிட்டாயா ' என்று கேட்க்கும் தல , ஏன் பா ASSISTANT டைரக்டர் உனக்கு சம்பளம் ஒழுங்கா போகுதா

என்று கேட்ப்பாரா ????????சமூக பிரச்சனையெல்லாம் பேச வேணாம் பா ? மாடா உழைக்கிற உதவி இயக்குனர் சம்பளம் , உதவி ஒளிப்பதிவாளர்

சம்பளம் பத்தி பேசலாம்ல ? ஏன் தனக்கு குடுக்கிற பதினைந்து கோடி சம்பளத்துல இருந்து ஒரு பத்து லட்சம் குறைச்சா போதும் அவங்களுக்கு பாட்டா

ஒழுங்கா கிடைக்கும்ல ?ரசிகர்கள் மேல அக்கறை இருக்கிற பட்சத்தில் தன் ரசிகர் மன்றத்தை களைத்தவர் ஏன் ப்ளாக் டிக்கெட் கூடாது ரசிகர்களை பாதிக்கும்னு

ஏன் சொல்லல . அஜித் படம் வசூலே முதல் மூணு நாளு தான். அதுல வசூல அல்ல ஒரு டிக்கெட் முந்நூறு நானூறு ருபாய் போகும் .

அப்படி அடுத்தவண்ட இருந்து அடிச்ச பணம் தான் பதினைந்து கோடி சம்பளம் .உண்மையான நேர்மை இருந்தா அதை தடுக்க முடியுமா ?ஒரு கலைங்கனுக்கு சமூக பொறுப்பு வேணும் ? ஏன் நா கலையோட பிறப்பே சமூகம் தான் ? அப்படி சமூக பொறுப்பில் இருந்து

விலகுவது ஒத்துக்கொள்ளவே முடியாது ,அதுவும் பல கோடி இளைங்கர்களின் ரோல் மாடல் . எனக்கு என் லைப் அமைதியா இருக்கணும்

அடுத்தவன் எப்படி போனா என்ன ? இது பேரு வாழ்க்கையா ? தனக்கு உணவு போடும் தொழிலில் தொழிலாளியின் சம்பளத்தை பற்றி பேச மறுக்கும்

தல எப்படி தலையாக இருக்க முடியும்(எனக்கு சினிமா நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சம்பள பிரச்சனை என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்) .நீங்கள் அவர் நன்றாக நடிக்கிறார் அதனால் நான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பிரச்சனை இல்லை .ஆனால் அவர் நல்லவர்

அதனால் நான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது? விமர்சனத்துக்கு உரியது.அடுத்தவர் பிரச்னையை யாரும் கண்டுகொள்ளாத

காலத்தில் , "நீ சாப்பிட்டாயா?" என்று கேட்பதே ஒரு பாமர ரசிகனுக்கு போதுமாய் இருக்கிறது .


10 comments:

"ராஜா" said...

அண்ணே உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை .... உங்க எழுத்துல அது பிதுங்கி வழியிது ...

"ராஜா" said...

//எப்படி பத்தும் . அவர்களை விடவா தல உழைத்துவிட்டார் .தல வாங்கும் சம்பளம் பதினைந்து கோடி .


அதான எப்படி சொல்லலாம் அவரை ஒரு உழைப்பாளி என்று... எல்லாரும் கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் ஏழை தொழிலாளிக்கு மன்றம் ஆரம்பித்து இனிமேல் அவரை தல தல என்று போற்றும்படி அண்ணன் அன்போடு கேட்டு கொள்கிறார்...

"ராஜா" said...

//ரசிகர்கள் மேல அக்கறை இருக்கிற பட்சத்தில் தன் ரசிகர் மன்றத்தை களைத்தவர் ஏன் ப்ளாக் டிக்கெட் கூடாது ரசிகர்களை பாதிக்கும்னு

ஏன் சொல்லல . அஜித் படம் வசூலே முதல் மூணு நாளு தான். அதுல வசூல அல்ல ஒரு டிக்கெட் முந்நூறு நானூறு ருபாய் போகும் .


அண்ணே அஜீத் ரசிகர்கள் வீடு வீடாக சென்று எல்லாரையும் மிரட்டி முன்னூறு ரூபாய் நானூறு ரூபாய்க்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்களா?

எங்களுக்கு எந்த பொருளுக்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று தெரியும் , உமக்கு பிடிக்கவில்லை என்றாள் ஓரமாக சென்று உண்டியல் குலுக்கவும்...

"ராஜா" said...

//ஒரு கலைங்கனுக்கு சமூக பொறுப்பு வேணும் ? ஏன் நா கலையோட பிறப்பே சமூகம் தான் ? அப்படி சமூக பொறுப்பில் இருந்து

விலகுவது ஒத்துக்கொள்ளவே முடியாது ,அதுவும் பல கோடி இளைங்கர்களின் ரோல் மாடல் . எனக்கு என் லைப் அமைதியா இருக்கணும்

அடுத்தவன் எப்படி போனா என்ன ? இது பேரு வாழ்க்கையா ? தனக்கு உணவு போடும் தொழிலில் தொழிலாளியின் சம்பளத்தை பற்றி பேச மறுக்கும்

தல எப்படி தலையாக இருக்க முடியும்(எனக்கு சினிமா நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சம்பள பிரச்சனை என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்) .


இதை பற்றி தெளிவாக ஆதாரபூர்வமாக உம்மால் எழுத முடியுமா? எல்லாரையும் உங்களை போல கோடி பிடித்து கொண்டு கோஷம் போட சொல்கிறீர்களா? அப்படி கோடி பிடித்து கோஷம் போட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சமூக மாற்றம் என்பது முதலில் தனிமனிதனிடம் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது , முதலில் நாம் நல்லவானாக இருப்போம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்து விட்டால் போதும் நாடு தானாக திருந்தும்... அந்த தனி மனித ஒழுக்கம் உம்மிடம் இருக்கிறதா என்று முதலில் பாரும், பிறகு அப்படிபட்ட ஒருவரை விமர்சிக்கலாம்...

"ராஜா" said...

//.அடுத்தவர் பிரச்னையை யாரும் கண்டுகொள்ளாத

காலத்தில் , "நீ சாப்பிட்டாயா?" என்று கேட்பதே ஒரு பாமர ரசிகனுக்கு போதுமாய் இருக்கிறது .

பாமர ரசிகன் என்று யாரை சொல்லுகிறீர் ... அவர்களை பாமரன் என்று சொல்லும் அளவுக்கு நீர் என்ன பெரிய அறிவாளியா? i want justification for this...

பாலா said...

வணக்கம் நண்பரே. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதி இருப்பதற்கு மிக்க நன்றி. அவசர அவசரமாக பதிவு எழுதி நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. தல மீது திடீரென்று கோபம் வருவதற்கு காரணம் என்ன? ஓஹோ நேத்து விஜய் டிவி பார்த்த எஃப்பெக்டா? உங்கள் கருத்துக்குள் தலையிட எனக்கு உரிமை இல்லை. ஆனால் என் கருத்துக்களை சொல்லவே இங்கு வந்தேன். உங்கள் பதிவிற்கு என் பக்க கருத்துக்களை நான் பதிவு பண்ணுகிறேன். இதற்கு பதில் சொல்வதோ, இல்லை பப்ளிஷ் செய்வதோ, அல்லது அப்படியே விட்டு விடுவதோ (போன பதிவு மாதிரி) உங்கள் இஷ்டம். இதை படித்து விட்டு ஒரு அஜீத் ரசிகனின் பதில் என்று நீங்கள் எண்ணினால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது.

பாலா said...

//உழைப்பு

இவர்கள் செய்தால் அதற்கு பேர் உழைப்பு. வேறொருவர் செய்தால் அது உழைப்பு அல்ல என்று எதை வைத்து கணக்கிடுவது?

//தல வாங்கும் சம்பளம் பதினைந்து கோடி

இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு. ஒரு வேலை தல கம்மியான சம்பளத்துக்கோ, இல்லை இலவசமாகவோ நடித்தால் அவரை உழைப்பாளி என்று ஒத்துக்கொள்வீர்களோ? பல முறை அப்படி செய்திருக்கிறார்.

அப்போ கோடியில் சம்பளம் வாங்குபவன் ஏமாற்றுக்காரன், பத்துகளில் சம்பளம் வாங்குபவன் ஏமாளி, பாட்டாளி.

நம்மை மாதிரி ஆயிரத்தில் வாங்குபவன்? ஓஹோ இந்த இடத்தில் உங்களை விட அதிகம் வாங்குபவன் எல்லாம் சுரண்டல் பேர்வழி. உங்களில் இருந்து உழைக்கும் வர்க்கத்தின் எல்லை தொடங்குகிறது சரிதானே?

பாலா said...

நாமெல்லாம் மாத சம்பளம் வாங்கும் முன், நம்ம கம்பெனில இருக்கிற பியூன், ஸ்வீபர் எல்லார் கிட்டேயும் ஒழுங்கா சம்பளம் வந்துருச்சானு கேட்டபுறம் தானே பணத்து மேலேயே கை வைப்போம்? நாம பார்க்கிற வேலைக்கு நமக்கு கொடுக்கபடும் சம்பளம் சரிதானா என்று நினைத்து பார்த்து, நம்ம சம்பளத்தில் ஒரு ஆயிரம் ரூபாய் குறைத்தால் இன்னொரு ஊழியருக்கு சரியாக சம்பளம் போய் சேருமே என்று தினமும் கஷ்டபட்டு முதலாளியிடம் சண்டை அல்லவா போட்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு படத்தில் தயாரிப்பாளர் பணப்பிரச்சனையால் பாதிக்கப்பட, அந்த படத்தில் தன் சம்பளத்தை குறைத்து கொண்டவர் அஜீத். அந்த படத்தில் அவர் வாங்கிய சம்பளம் 30ஆயிரம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

TechTamil Karthik said...

ரஜினி என்ன சமூகப் பொறுப்பில் இருக்கார்? நடிகனை நடிகனாக மட்டும் பார்க்காமல் உங்கள் சொந்த பிரச்னை அனைத்தையும் அவன் வந்து தான் தீர்க்க வேண்டும் என நினைக்கும் உங்கள் ஆக்கம் அருமை.