Thursday, 29 April 2010

உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள்






















நாளை உலக உழைப்பாளர்கள் தினம் . உழைக்கும் மக்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள் சுரண்டும் முதலாளி வர்க்கம் சுரண்டிக்கொண்டே இருக்கிறது. இது IT துறை முதல் கீழே இருக்கும் தொழிலாளிகள் வரை ஒன்றே ,சுரண்டும் முறை வேண்டுமென்றால் மாறுபடலாம். நாள் ஒன்றிற்கு பத்து மணி நேர வேலை , நாளை நிற்க வேண்டுமென்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மக்கள் சாரை சாரையாய் கிராமங்களை விட்டு விட்டு நகரங்களுக்கு புலம் பெயரும் சுழல் , நகரமயமாக்கல் இவை எல்லாம் கண் முன்னே அரங்கேறி கொண்டிருக்கிறது.

சரி இந்த உழைப்பு எல்லாம் சரியான பயன் இருக்கிறதா என்ன இல்லை என்றே சொல்ல வேண்டும் . முதாளித்துவ சமூகம் தமக்கு தேவை என்பதற்காக கீழே உள்ள மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது. முன்பு TV வாஷிங் machine போன்ற ஆடம்பர செலவுகள் இப்பொழுது அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. ஒரு பொருளை தயாரிப்பது
அப்பொருளுக்கு சந்தை ஏற்படுத்துவது மக்களுக்கு ஆசையை தூண்டுவது விற்பனை செய்வது என்ற பாணியில் முதலாளித்துவம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது . சென்னை போன்ற நகரங்களில் மாதம் பத்து ஆயிரம் ருபாய் இல்லை என்றால் காலம் தள்ள முடியாது என்கிற சூழலுக்கு கொண்டு செல்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம் . கட்டாயம் நீங்கள் பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டும் குறைந்தது சிலநேரங்களில் பனிரெண்டு பதினைந்து மணி நேரங்கள் கூட உழைக்க வேண்டி உள்ளது . குடும்பங்களில் அக்கறை செலுத்த முடியாமல் அன்பு குறைந்து உடல் நலம் குறைந்து போராட்டமான சூழல் இருக்கின்றது.

ஒருவரது வாழ்க்கையே சுரண்டப்படுகிறது. சரி நாம் சுரண்டப்படுகிறோம் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருப்பது வேதனை. என் நண்பர் முதலாளித்துவம் பற்றி எளிதாய் விளக்கினார் . நூறு சட்டை ஒரு ஊரிற்கு தேவைபட்டால் ஒவ்வொரு முதலாளியும் 1000 சட்டை தைத்தால் என்ன ஆகும் அதுவே இந்த சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது தேவைக்கு அடிக்கமான தயாரிப்பு ஊருக்கே நூறு சட்டை தான் தேவை படும் பொழுது 100 கம்பெனி அதிக லாபம் பெற 1000 சட்டை தைத்தால் உழைப்பு வீண் தானே இதை தான் உபரி மதிப்பு
என்கிறார்கள் எவ்வளவு உழைப்பு வீண் அது பந்தை போலவே சுற்றிக்கொண்டிருக்கும் அது தான் recission போன்றவைகளுக்கு காரணம்.

எவ்வளவு உழைப்பு நேரம் வீண் . தேவை இல்லாத வேலைக்கு ஆள் குறைப்பு சம்பள குறைப்பு . இப்படி உபரி மதிப்பு இருக்கும் வரை முதலாளித்துவத்தால் ஜெயிக்கவே முடியாது என்பதே உண்மை , ஆனால் எவ்வளவு மக்களின் உழைப்பு வீணடிக்க படுகிறது. முதலாளித்துவம் இல்லாத தேசத்தில் மூன்று அல்லது நான்கு மணிநேரம் மட்டுமே
வேலை இருக்கும் . மார்க்ஸ் சொல்வதை போல் உலக உழைப்பாளர்களே ஒன்று கூடுங்கள். அரசியல் ரீதியாக பார்த்தாலும் விஞ்ஞான ரீதியாய் பார்த்தாலும் முதலாளித்துவம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை. மார்க்ஸ் சொன்னது போல் உலக உழைப்பலர்களே ஒன்று கூடுங்கள்.

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்....

Madumitha said...

ஆயிரம் சட்டைத்
தைத்ததற்கு
சம்பளம் கிடைத்ததா
இல்லையா?

அகல்விளக்கு said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் தல...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்... நல்ல பதிவு

ராஜரத்தினம் said...

நல்ல பதிவு.. உங்கள் பதிவுகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன். இந்த பதிவு சார்ந்தும் பிற பதிவுகள் சார்ந்தும் சில கேள்விகள்.
பயனற்ற உழைப்பு என்று நீங்கள் சொல்வது தேவையை விட உற்பத்தி அதிகம் இருப்பதையா? ரெசெஷன் குறித்து சொல்லி இருப்பதால் இந்த உபரி மதிப்பு தான் அதற்க்கு காரணமா? ஆனால் இப்பொதைய நிலையில் ரெசஷனை மீறி உலகம் சென்றுவிட்டதை போல் தோன்றுகிறது.சுற்றும் பந்து நின்றால் அடி இன்னும் பலமாக இருந்து இருக்க வேண்டுமோ என யோசனை.என் புரிதலில் பிழை உள்ளதா? அதிஉற்பத்தி, உபரி மதிப்பு இவற்றிற்க்கு ஏதேனும் சமீபத்திய உதாரணங்கள் இருக்கிறதா?
நுகர் கலாச்சாரத்திற்க்கு முதலாளித்துவம் மட்டுமே காரணமா? நம் மக்கள் அடிப்படை தேவைகளை தாண்டி செய்யும் செலவுகள் காலம் காலமாய் வருவதாகவே உணர்கிறேன் (நம் கல்யாணங்கள், இன்ன பிற சம்பிரதாயங்கள் என எதேதோ அளவு மீறீய செலவுகள்).. இதை முதலாளித்துவ சமூகம் மேலும் ஊதிகொண்டிருக்கிறது என சொல்லலாம். அது தான் அவர்களது வேலையும் கூட. மாற்ற்ம் அங்கல்ல வாங்குபவனிடம் ஏற்பட வேண்டும்.
இன்னும் முக்கியமான கேள்வி. தமிழ் அறிவு சார் தளத்தில் மார்க்சியம் குறித்து நிறைய விவாதங்கள். ஆனால் சித்தாந்தங்கள் குறித்த தெளிவின்மை அல்லது அது குறித்த அறியாமை தான் என் முதல்கொண்டு அனேக சராசரி தமிழருக்கும் உள்ளது. சித்தாந்தங்களை அதன் பொருள் சார்ந்த செயல்தளத்திற்க்கு முன் செலுத்துதல், அவற்றின் சாரத்தை தெளிவுபடுத்துதல் இது எதுவுமே சொல்லிகொள்ளும் அளவில் தமிழ் சமூகத்தில் நிகழ்வதாய் காணோம். பல வருடங்களாய் நான் சித்தாந்த குழு சண்டைகளை மட்டுமே பார்த்து வருகிறேன். இதனாலேயே அவற்றின் மீது நம்பிக்கையில்லாமல் போகிறது.

மற்றபடி உங்கள் வால்மார்ட் சுட்டிகளை படித்தேன். பெருநிறுவனங்களை கண்டும் காணாமல் விட்டு விடுவதில் ஊடகங்களுக்கும் பங்கு உள்ளதோ? ஏன் இவை எல்லம் விவாத செய்திகளாய் மாறுவதே இல்லை?ஹ்ம்ம்..
கடைசியாக ஒரு வேண்டுகோள். எல்லா செய்தி சார் தகவல்களுக்கும் சுட்டி கொடுங்கள். நம்பகத்தன்மை, மேலாரய்ச்சி,ஆதாரம் என அதற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. நன்றி.