Sunday 31 October 2010

2000 ரூபாய்க்கு வாக்கும் ,பசி போக்கும் மனிதாபிமானமும்

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் அனைத்து கணிப்பொறியையும் தொட்டிருக்கும் . அதாவது CNN நடத்தும் இந்த வருடத்தின் கதாநாயகன் யார் என்ற வாக்கெடுப்பில் ஒரு தமிழர் இருக்கிறாராம் அவர் மதுரைக்காரராம் அவருக்கு வாக்களிக்கும்படி பல மின்னஞ்சல்கள் வந்து கொண்டு இருக்கின்றன . அப்படி என்ன தான் செய்தார் அந்த மதுரைக்காரர் என்று பார்ப்போம் . அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன் , ஐந்து நட்சத்திர உணவகத்தில் குக் ஆக வேலை செய்துள்ளார் , மதுரைக்கு வந்த பொழுது ஒரு கிழவர் உணவு கிடைக்காமல் பசியில் மலத்தை உண்ணுவதை கண்டு இருக்கிறார் இவர் மனம் நெகிழ்ந்து விட்டது , அதனால் தினமும் நானூறு பேருக்கு மூன்று வேலை உணவளித்துக்கொண்டிருக்கிறார் . இதை மேலோட்டமாய் பார்க்கும் பொழுது நமக்கு அவர் கதாநாயகனாய் தெரிகிறார் , ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானம் அவரை கதாநாயகனாய் ஆக்குகிறது .

சரி அவர் செய்வது சரியா ???? என்று விமர்சனம் செய்யும் பொழுது இயல்பாய் அவரை கதாநாயகனாய் ஏற்கும் நம் மனதும் சரியா என்பதும் விமர்சனத்திற்கு உரியது . ஆட்டோகிராப் படத்தில் ஒரு பாடல் வரி வரும் "தாகம் என்று சொல்கிறேன் , மரக்கன்று ஒன்று தருகிறாய் . பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மணி ஒன்று தருகிறாய் " என்ற ஒரு வரி வரும் அந்த வரி இந்த விமர்சனத்திற்கு உகந்த வரி.பிசைக்கார்களுக்கு உணவளிப்பது
என்பதை விட , ஏன் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள் என்று பார்த்து அதை களைய முற்ப்பட வேண்டும் அதுவே நிரந்தர தீர்வு . இப்படி நாம் சொல்லும் பொழுது இயல்பாய் நமக்குள் ஒரு கேள்வி வரும் ????? பசியால் ஒருவன் வாடிக்கொண்டிருக்கிறான் அப்படி இருக்கும் பொழுது அந்த தருணத்தில் பசியை போக்குவது தவறா என்ற கேள்வி வரும் . எந்த ஒரு விடயத்திற்கும் நிரந்தர தீர்வு , தர்க்காலிக தீர்வு என்று இரு தீர்வு இருக்கும் .தற்காலிக தீர்வை விட நிரந்தர தீர்வு முக்கியமானது .

தற்காலிக தீர்வு எல்லா தருணங்களிலும் நிரந்தர தீர்வை தடுக்கும் , இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் . உதாரணமாய் தொழிலாளர்கள் தன்னை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டி போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . நிறுவனத்தின் முதலாளி சம்பளத்தை ஒரு இரு நூறு ரூபாய் ஏற்றுகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னால் ????? போராட்டத்தை விட்டு விட்டால் அது நாளைக்கு அவர்கள் வேலையை உலை வைத்து விடும் . எந்த ஒரு நிரந்தர தீர்வையையும் நீர்த்து போக செய்வது தர்க்காலிக தீர்வுகள் . எப்படி சில மாத்திரைகள் அப்பொழுது உள்ள தலைவலியை மட்டும் போக்கிவிட்டு , SIDE EFFECTS கொடுக்குமோ அதை போலவே தர்க்காலிக தீர்வுகள் . நாராயணன் செய்வது கூட ஒரு தர்க்காலிக தீர்வு அதற்கும் SIDE EFFECTS உண்டு .

சில பேர் இயல்பாய் சொல்வார்கள் "என்னால் முடிந்ததை செய்கிறேன் ????" சரி ஒரு பிச்சைக்காரனுக்கு நாம்
பிச்சை போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம் , நாம் விருப்பப்பட்டால் போடுவோம் . நமக்கு சாத்தியப்பட்டால்
போடுவோம் , நம்மிடம் பத்து ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் போடுவோம் . நம்மிடம் காசு இல்லை என்றால் ??????? அவனுடைய பசி நம் விருப்பத்தின் பெயராலேயே தீர்க்கப்படுகிறது . நாளைக்கே நாராயணன் விருப்பம் இல்லை என்றால் இதை செய்யவில்லை என்றால் , அந்த நானூறு பேரின் கதி .நீங்கள் அவருக்கு கட்டாயம் சோறிட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது ????? அவர்களை மேலும் பிசைக்காரனாக்குவதே இதை போல செயல்கள் செய்யும்.

உங்கள் பகுதிக்கு சாலை ஒன்று தேவைப்படுகிறது , அதை ஒரு நபர் ஒரு வள்ளல் சொந்த செலவில் போட்டுக்கொடுக்கிறார் . அந்த தொகுதி MLA அந்த பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம் . நாளைக்கு அந்த வள்ளல் இறந்துவிட்டாலோ , இல்லை விருப்பம் இல்லை என்றாலோ அவரை இச்செயல்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது . அந்த தொகுதி மக்களும் தனக்காய்
யாரோ ஒருவர் செய்கிறார் என்ற நம்பிக்கையில் , போராடும் குணம் இல்லாமல் நீர்த்து போய் இருப்பார்கள் அது அவர்களுக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை . சாலையே இல்லாமல் இருப்பதற்கு ஒருவன் சாலை போட்டு தருகிறானே என்று சொல்பவர்கள் மட்டுமே பசியால் வாடுபவருக்கு ஒருவன் சோறு போடுகிறானே என்று சொல்லி வாக்களிக்க சொல்கிறார்கள் .

விதர்பா விவசாயி பிச்சைக்காரர் ஆகிறார் விவசாயம் படுப்பதால் . அவருக்கு தேவை உணவளிப்பதா ??? இல்லை அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்ற ஏகாதிபத்தியத்தை விரட்ட போராட அணி திரட்டுவதா ????? அவருக்கு உணவளிப்பது என்பது உங்கள் தீர்வானால் நீங்கள் அவர் போராட்ட குணத்தை நீர்த்து போக செய்கிறீர்கள் ?????? இது ஒரு வகையில் ஏகாதிப்பதியதிற்கு துணை போவது இந்த நீர்த்து போகும் வேலையை தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் நாராயணன்.

கலைஞர் தொலைகாட்சி தருகிறார் வாக்கிற்கு 2000 ரூபாய் தருகிறார் , அது கூட சாமனிய மக்களுக்கு அந்த தருணத்தில் மகிழ்ச்சியே , இதனால் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வரப்போகிறதா , இல்லை முல்லைப்பெரியார் பிரச்சனை தீரப்போகிறாதா. இல்லை பல தயாரிப்பாளர்களை ஏழைகளாக்கும் சன் குழுமத்தின் ஏகாதிப்பத்தியம் அழியப்போகிறதா ???? இப்படி 2000 ரூபாய் அப்பொழுது தருகிறார்கள் என்று நீர்த்துபோன சிந்தனை உள்ளவர்கள் மனிதாபிமான கண்ணோடு பார்த்து ,நாராயணனுக்கு வாக்களியுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் .

ஒரு ஊடகம் ஆளும்வர்கத்தின் ஏதாவது ஒரு குரலாய் இருந்தால் மட்டுமே அது பரிசீலிக்கும் . CNN அவ்வகையில்
எடுத்து இருக்கும் நபர் ஒரு ஐரோம் ஷர்மிலாவோ , இல்லை அருந்ததி ராயோ அல்ல ஏன் என்றால் அவர்கள் பழங்குடி மக்களை பிரதிபலிக்கிறார்கள் , அவர் ஏதோ ஒரு விதத்தில் ஆளும் வர்க்கத்தை பிரதிபலித்தால் தான் அவர் முன்னிலை படுத்த படுகிறார் .நீங்கள் ஆளும் வர்கத்தின் குரலா ???

43 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

thala,

he is not giving food to the beggers, but to the mentally challenged, for those who can never know who they are.

Do you think these people ever will be getting job some where?

வெண்ணிற இரவுகள்....! said...

அப்படி பார்த்தால் கூட , மன நலம் ஏன் குன்றி போய் உள்ளது அதற்க்கு நிரந்தர தீர்வு என்று தான்
பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்

வெண்ணிற இரவுகள்....! said...

எத்தனை பேருக்கு அவர் செய்ய முடியும் சொல்லுங்கள் . அது தற்காலிக தீர்வே

கொள்ளிக்காடன் said...

அன்பு நண்பரே--உங்கலை என்னவென்று சொல்ல--எந்த கருத்து உண்டு
கருத்து--எதிர் கருத்து--என்று சொல்லிக்கொண்டே போனால் அது சிந்துபாத்
--தாந்-முடியாத தொடர்கதை--நாரயணன் கிருஷ்ணன் விஷயத்தில் அவர்
எடுத்திருப்பது--ஒரு பணி--ந்ச்சயமாக் நற்ப்பணி---முடிந்தால் பாராட்டுங்கள்-
இல்லையாயின் பார்த்திருக்கொண்டிருங்கள்--உங்கள் தூஷனைகள் எங்கோ
ஓரிடத்தில் ஒருவேளை பசியாரும் அந்த மலநலம் குன்றியவனின் சாபத்தை
உங்களுக்கு பெற்றுத்தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்

அக்னி பார்வை said...

இந்த நல்ல பணியை அவர் முன் எடுத்து நடத்தி வருகிறார் பாராட்டுகள் ஆனால், அடுத்து?
இதை நிறந்தரமாக செய்ய அரசு நிர்பந்திக்க பட்டு, மொத்த் மக்களிடம் பெறப்படும் வரியிலிருந்து, இப்படி இந்தியாவில் உள்ள அனனைத்து ஆதரவற்றவர்களை பரமரிக்க வேண்டும் இது கூட நிறந்தரமானது என்ன உங்கள் அர்சு சிஸ்டமில் ஊழல் இருக்கும்...

த்ற்காலிகமாக ஒரு வேலையை செய்யும் அதே நேரம் , நிரந்தைரமானதக்க சில வேலைகளை முன்னெடுத்து செல்ல படவும் வேண்டும்...

Unknown said...

தற்காலிக தீர்வை அவர் செய்கிறார்.நிரந்தர தீர்விற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

எல்லாரும் ஒன்றல்லவே..

சிலருக்கு உதவும் குணம், சிலருக்கு போராடும் குணம்...

அவரவரால் முடிந்ததை அவரவர் செய்யலாம் .. தப்பில்லை...

ஆனால் ஊக்கம் கொடுப்பது கூட அரசியலாகிட வாய்ப்புள்ளது இக்காலம்..

சேவை செய்பவர்கள் பழி, புகழ் சமமாக ஏற்பவராயிருக்கணும்..

பிச்சையெடுப்பது கூட மிக கடினமான வேலை மனதளவில் எல்லாவற்றையும் துறந்து...சிலர் மனப்பிறழ்வு ஏற்பட்டும்..

We are friends said...

உங்களுடைய தவறான புரிதல் துரதிருஷ்டவசமானது. அவர் உணவிடுவது மன நலம் பாதிக்கப்பட்டு சுய உணர்வற்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. பல்வேறு காரணிகளால், சூழ்நிலைகளால் இந்நிலை எப்பொழுதும் யாருக்கும் ஏற்படலாம். எல்லா குடும்பத்தினரும் இப்படிப்பட்டவர்களை நல்ல முறையில் பேணவோ பாதுகாக்கவோ செய்வதில்லை அல்லது முடிவதில்லை என்பதே நிதர்சனம். ஆனால் அவர்களும் மனிதர்களே. உயிர் வாழ வேண்டிய கட்டாயத்தில் சமுதாயத்தின் ஆதரவற்ற நிலையில் அவர்கள் மீது உண்மையான அக்கறையுடன் அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஒருவராவது இருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். மக்களுக்கு மனநலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நிரந்தரத்தீர்வை எவ்வாறு எட்டுவது என்பதை தயவு செய்து விளக்கவும். தயவு செய்து அவரது தன்னலமற்ற சேவையை சிறுமைப்படுத்தாதீர்கள்.

Guru said...

நாராயணன் மனநலம் குன்றி திரியும் ஆதரவற்றவர்களுக்கு தான் உணவு வழங்குகிறாரே தவிர பிச்சைக்காரகளுக்கு அல்ல. உணவு வழங்குவதோடு அல்லாமல் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் பொருட்டும் அக்ஷயா இல்லங்கள் கட்டி கொண்டு இருக்கிறார். நாம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த அளவுக்காவது ஒரு தனிமனிதன் செய்யும் பொழுது பாராட்டி ஊக்குவிக்கலாமே. லக்கி சொன்ன மாதிரி, புதிய தலைமுறையில் எழுத்து பொழுது பெரிதாக கவனிக்கப்படாத இவர் இன்று சி.என்.என். மூலம் பரவலாக அறியப்படுகிறார். அவர் ஹீரோவாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கும் மீடியா வெளிச்சத்தில், நம் சமூகத்தால் பண்ண முடியாததை வெளிநாட்டு,என்.ஆர்.ஐ. நலம்விரும்பிகள் யாராவது செய்யட்டுமே அதில் என்ன வருத்தம்?
கடலில் விழுந்து உயிருக்கு போராடும் ஒருவனுக்கு முதலில் நீச்சல் கற்று தருவீர்களா இல்லை அவனுக்கு உதவ கயிற்றை நீட்டுவீர்களா?

Anonymous said...

ஐயா கொட பிடிச்சுட்டு போற பெரியவரே!
உனக்கு அடிப்படையில் எதோ பிரச்சினை இருக்குதுன்னு நெனைக்குறேன்!
நீ எதோ நாலு எழுத்து படிச்சுட்டு கம்பியுட்டர் கம்பெனில வேல பாக்குற திமிர்ல பேசுற!

ஒரு கணம் கீழுள்ளவற்றை நினைத்து பார்!

கடும் பசியின் போது...
எண்பது வயது முதியவர் என்ன செய்வார்?
கண் இல்லாத குருடர்கள் என்ன செய்வர்?
கால் இல்லாத முடவர்கள் என்ன செய்வர்?

ஒரு வேளை சோறு போடுவதென்பது எவ்வளவு பெரிய தொண்டு தெரியுமா!
ஒரு வேளை சாதம் உனக்கு தெரியாத நபருக்கு வழங்கிவிட்டால் அதன் பேர் பிச்சையா?
உன் தந்தைக்கு நீ போடும் சோறு பிச்சையா?
உன் தந்தையை வயதான காலத்தில் வேலை செய்து அல்லது உழைத்து சாப்பிட சொல்வாயா?
தானத்திற்கும் பிச்சைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளே!
உலகிலேயே சிறந்ததனாம் "அன்ன தானம்" என்று உனக்கெல்லாம் எங்கே தெரியப்போகிறது!
அறிவு ஜீவி போல எல்லாவற்றையும் விமரிசனம் செய்யாதே!
கலைஞர் காசு கொடுப்பது மக்கள் வரிப்பணத்தில்!
இவர் சோறு போடுவது தன் சொந்தக்காசில்!
அந்தப் பரதேசியை இவரோடு ஒப்பிடாதே!
முதிர்ந்த வயதில் எதை நோக்கி போராட சொல்கிறாய்!

ஒன்று சொல்கிறேன் கேள்!
எங்காவது ஆள் அரவமே இல்லாத இடத்தில், உண்ண சோறு கிடைக்காத இடத்தில் ஒரு மூன்று நாள் பட்டினியாக இருந்துவிட்டு வந்து நீ எழுதிய இதே பதிவை ஒரு முறை, ஒரே ஒரு முறை படித்து பார்!
உணவளிக்கும் அந்த மதுரைக்காரர் ஹீரோவா இல்லை சீரோவா என்று தெரியும்!

இந்த பின்னூட்டத்தை பதிவேற்றம் செய்ய மாட்டாய் என்ற நம்பிக்கையுடன்...

நண்பன்...
நண்டு...!

நண்பர்கள் உலகம் said...

உங்களைப்போன்றவர்களுக்கு நல்ல சிந்தனைகளே தோன்றாதா?

வெண்ணிற இரவுகள்....! said...

நண்டு நான் இதை தற்காலிக தீர்வு என்கிறேன் ............ஆனால் அது நிரந்தர தீர்விற்கு எதிரி
பதிவை முழுவதுமாய் படித்தீர்களா நண்டு

வெண்ணிற இரவுகள்....! said...

கலைஞர் 20000 ரூபாய் தருகிறாரே அது தற்காலிக தீர்வா நிரந்தர தீர்வா ஹீரோ நண்டு

வெண்ணிற இரவுகள்....! said...

சரி அந்த ஹீரோ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புத்தி சுவாதீனம் இல்லாதவருக்கும் சாப்பாடு போடுவாரா ???

ஏன் விதர்பாவில் விவசாயி தற்கொலை செய்கிறார் அவர்களுக்கு உணவளிப்பாரா ???? இல்லை ஏகாதிபத்தியத்தை

எதிர்த்து போரிடுவாரா ?????? உலகில் உள்ள அனைத்து விடயத்திற்கும் நிரந்தர தீர்வு தற்காலிக தீர்வு பொருந்தும் ...........

இது தற்காலிக தீர்வு என்றால் அது தவறே ??????????????

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல சிந்தனை என்பது என்ன சேகர் காசு வாங்கிவிட்டு வாக்கு அளிப்பதா ??? அது அப்பொழுது

உள்ள ஏழை மக்களுக்கு தர்க்காலிக தீர்வு .......அது சரி என்றால் இது சரி தான்

எண்ணங்கள் 13189034291840215795 said...

சரி அந்த ஹீரோ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புத்தி சுவாதீனம் இல்லாதவருக்கும் சாப்பாடு போடுவாரா ???

-----------

இது என்ன கேள்விங்க..?

அவரால் முடிந்ததை அவர் செய்கிறார். அதை கூட நாம் செய்வதில்லை என்ற குற்ற உணர்ச்சி வருதே..

இவர் செய்வதன் மூலம் ஒரு முன்னோடியாக திகழ்கிறாரே .?. அதுவே மிகப்பெரிய விஷயம்....

எத்தனை கேலி கிண்டல் விமர்சனங்களை தாங்கியிருப்பார்.?.

நண்பர் சொன்னதுபோல , இவர்கள் வெளிச்சம் போட்டு காண்பிப்பதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நம் நாட்டு மக்களுக்கு கிடைக்குமாயின் அதுவே மாபெரும் வெற்றி நிரந்தரமாக கூட,.,.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இயற்கை அழிவு வரும்போது உடனடி செய்யப்படுவது தற்காலிக தீர்வு மட்டுமே..

மெல்ல மெல்ல நிரந்தர தீர்வு எடுக்கப்படும் /படணும்..

ஆக தனிமனித நேய செயல்கள், அரசியலோடு ஒப்பிடக்கூடாது...

அவரின் நோக்கம் இங்கே அவமானப்படுத்தப்படக்கூடாது...

தற்காலிகம் என்றாலும் , அதை கூட செய்ய நம்மில் எத்தனை பேர் தயார் என யோசித்து பார்க்கணும்..

அழகி said...

சா​​லை ​​போடுவதும் ​​சோறு ​போடுவதும் ஒன்றா?
சா​​லை இல்லாமல் உயிர் வாழலாம் ​சோறில்லாமல் உயிர் வாழ முடியுமா?

//இதை தற்காலிக தீர்வு என்கிறேன் ............ஆனால் அது நிரந்தர தீர்விற்கு எதிரி //

ஒரு மன​நோய் பாதிக்கப்பட்டவனுக்கு நிரந்தர தீர்வு என்று எ​தைப் ​செய்வீர்கள்?
உங்கள் வீட்டில் இருக்கும் வயதான முதியவர்களுக்கு நிரந்தர தீர்வாக எ​தைச்​செய்வீர்கள்?
இந்தப் பதிவில் இதற்கு நீங்கள் பதில் ​சொல்லி​யே ஆக​வேண்டும்.

Anonymous said...

நண்பரே உலகில் எல்லா விஷயங்களுக்கும் நிரந்தர தீர்வு அல்லது விடை காண முடியாது...
சூத்திரங்களைக் கொண்டு இயங்கும் கணிதவியலுக்கே இது பொருந்தும்...
உதாரணத்திற்கு 22 / 7 அதாவது "pi " இதற்கு சரியான வகுபட்ட மதிப்பை உங்களால் கூற முடியுமா? (3 . 14 ) என்பது ஒரு தற்காலிக தீர்வே!
அப்படியிருக்க அடுத்த கணம் என்ன நிகழும் என்று தெரியாத நிச்சயமில்லாத இந்த மனித வாழ்வில் நிரந்தர தீர்வு என்று எதைக் கூறுகிறீர்கள்?
மருத்துவ துறையில் எவ்வளவோ முன்னேறிவிட்ட நம் மனித இனத்தால் இன்னமும் சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு காண முடிவில்லை என்பது அனைவரும் அறிந்ததே!
நீங்கள் பார்க்கும் வேலை உங்களின் வருமானத்திற்கு ஒரு நிரந்தர தீர்வா?
நாளைக்கே உங்களின் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டால் என்ன செய்வீர்கள்?
நிரந்தரமே இல்லாத இந்த உலகில் நிரந்தர தீர்வென்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?

- நான் பதிவை தெளிவாக படித்துதான் பின்னூட்டமிட்டேன்!
நுனிப்புல் மேய்வது நண்டுவிற்கு தெரியாது!
அது ஆழ்ந்து குடையும்!

உங்களை 180 கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்து சரியான தெளிவான சிந்தனையோடு பதிவுகளை எழுதவும்!

- நன்றி
நண்டு.

Anonymous said...

Thati kodukala naalum parava illa... Thati vidama irunga!! He is really doin gr8 works...stop 2 criticise him and c how v can help dem..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படீங்க இப்படி..

சூப்பரா எழுதியிருக்கீங்க...

அந்த மனிசனை தூக்கிப்போட்டு மிதுக்கனும் பாஸ்.. அவனவன் குடும்பம், குட்டினு அலைஞ்சுக்கிட்டு இருக்கும்போது.. நல்லது பண்றாராம்..

( வழக்கம் போல நெகடிவ் ஓட்டு போட்டுட்டேன்.)


நீங்க விடாதீங்க.. போட்டு நொறுக்குங்க...

Veliyoorkaran said...

@@Rettaivaals..///

http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html

ஹலோ யாரு ரெட்டைவால்ஸா,மாப்ள நான் வெளியூர்காரன் பேசறண்டா..இங்க ஒருத்தன் சிக்கிருக்கான்..அவன ஆட்டோல தூக்கி போட்டுக்கிட்டு மூத்தர சந்துக்கு வந்துடறேன்..நீ பட்டாபட்டிக்கு போன் போட்டு சொல்லிடு...அப்டியே நம்ம பசங்களுக்கெல்லாம் சொல்லி விட்ரு...இன்னிக்கு இவன ரொம்ப நேரம் அடிக்கனும்னு நெனைக்கறேன்...எதுக்கும் ஆபிஸ் லீவ் போட்டுட்டு வந்துரு....! :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இது ஒரு சுத்த முட்டாள் தனமான தேவையற்ற பதிவு...

இவ்வளவு பேசுகிறீர்களே உங்களால் ஒரு ஊனமுற்றவர் அல்லது புத்தி சுவாதீனமில்லாதவருக்கு ஒரு மாதம் முகம் சுளிக்காமல் ஒரு வாய் சோறு போட முடியுமா.?

நீங்கள் சொல்வதை பார்த்தால் உங்களை பெற்றவர்கள் கூட அவர்களது தள்ளாத காலத்தில் தங்களை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போலிருக்கிறது...

அன்பரே நம்மால் உதவி செய்ய முடியாமல் போனாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே..!!

Rettaival's Blog said...

என்ன செய்வது வெண்ணிற இரவுகள்! ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை!
உங்களை போல் லூசாகவும் , விளம்பர டுபாகூராகவும் இன்னொருத்தரால் இருக்க முடியுமா . பாவம் அந்த ஆளால் என்ன பண்ணிவிட முடியும். உலக சரித்திரமெல்லாம் படித்திருப்பீர்கள். அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து பண்ணவேண்டுமானால் சச்சினை நாடு கடத்த வேண்டுமென்பீர்கள். இந்த அறிவு இதைப் படிக்கும் முட்டாள்களுக்குப் புரியுமா? நீங்கள் பாட்டுக்குக் காமெடியில் கலக்குங்கள் நண்பரே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓட்டுதான் உங்கள் குறிக்கோளா பிரதர்?.. வெட்கப்படாமல் சொல்லலுங்க..

Veliyoorkaran said...

@Vennira Iravugal..//

இங்க பாரு தம்பி...நீ தப்பு பண்ணிருக்க...நாங்க அடிக்கபோறோம்..அதுக்கு நீ பாட்டுக்கும் ப்ளாக க்ளோஸ் பண்ணிட்டு சொந்தகாரர் செத்துபோயட்டாறு பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டி செத்துபோயிருசுன்னு எதாச்சும் காரணம் சொல்லிட்டு பூட்டிட்டு போன கொன்ருவேன் உன்ன..ஒழுங்கா பெரிய மனுஷனா லட்சணமா நின்னு அடிவாங்குற இன்னிக்கு ..சரியா..!

(மொதொள்ள அந்த கமென்ட் மாடரேசன எடுத்து விடு..அடிக்கறதுக்கு வாவாவே இல்ல..நீ அப்ப்ரூவ் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதா இருக்கு...)

கருடன் said...

//About Me
பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் ........................//

ஆத்தாடி!!! நல்லது பண்ணா எம்புட்டு கோவம் வருது உங்களுக்கு!! சார் சார் மாட்ரேஷன் எடுங்க சார்... மாட்ரேஷன் இருந்தா எனக்கு வாந்தி வரும்... உங்க பதிவ படிச்ச வர மாதிரி....

செல்வா said...

உங்கள் ஆதங்கம் புரியுதுங்க ..
ஆனா எல்லோரும் சொன்னது மாதிரி அவரு மனநலம் குன்றியவர்களுக்கு செய்கிறார் ..!! அதனால நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்றே..
அதிலும் இப்பொழுது அவர்பற்றி வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்களும் தேவையானதே .. ஏனெனில் அவர் பற்றியும் அவரது சேவை பற்றியும் அதிகம் பேர் தெரிந்துகொள்ள முடியும் . இதனால் மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் .. அவர் அதனை செய்யாமல் இருந்திருந்தால் நீங்க இந்தப் பதிவே எழுதிருக்க மாட்டீங்க. !!!

taaru said...

நீங்கள் சொல்றது ஆணித்தரமான உண்மை வெண்ணிற இரவுகள்...இங்க வந்து தப்புத்தப்பா பேசுரவிங்கள வாங்க நாம போய் ஒரு கை பாக்கலாம்... நான் மற்றும் ஒரு கூட்டமே இருக்கிறோம்... தைரியமா வாங்க...

taaru said...

யோவ் மாமா..
//நீங்கள் சொல்றது ஆணித்தரமான உண்மை வெண்ணிற இரவுகள்...இங்க வந்து தப்புத்தப்பா பேசுரவிங்கள வாங்க நாம போய் ஒரு கை பாக்கலாம்... நான் மற்றும் ஒரு கூட்டமே இருக்கிறோம்... தைரியமா வாங்க... //

அங்கனக்குள்ள[white night] மேல இருக்குறத போட்டு இருக்கேன்....எப்டியும் கொஞ்ச நேரத்துல நம்பி இங்க வரும்... அது வரைக்கும் பேயாம இருக்கணும்.. சரியா? டேய் மங்கு,வெளி,ரெட்டை , டெர்ரர் ... ஓடியாங்க.. ஓடியாங்க.....
beeReady....

வெட்டிப்பேச்சு said...

அய்யா.. வள்ளலார் மூட்டிய அடுப்பு இன்னமும் பலரது பசித்தீயை அனைத்துக் கொண்டிருக்கிறதே...

ஒருவேளைச் சோறு எத்துனையோ உயிர்களைக் காக்கிறதே..

பசியில் போகின்ற உயிர்க்கு நிரந்தரத் தீர்வு சாவுதானோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலே என்னலே இது? யாருலே நீய்யி? என்ன வேணும்லே ஓனக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா கமென்ட் மாடரேசன் வேறயா? தப்பிச்சேய்யா நீய்யி!

கருடன் said...

@ வெண்ணிற இரவுகள்

நிறந்தர தீர்வு அப்படினு எதோ சொல்றிங்களே அது என்னா?? ஏன் ஒரு மனுஷன் நல்லது பண்ணா உங்களுக்கு பிடிக்கல?? பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் அப்படினு பெருமையா போட்டு இருக்கிங்க.. இதான் உங்க அன்பா?? உங்க பெரும் கோவம்னா அடுத்தவன் செய்யர நல்லத பார்த்து வயிறு எரியரதா??

கருடன் said...

@வெண்ணிற இரவுகள்.

//சரி அந்த ஹீரோ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புத்தி சுவாதீனம் இல்லாதவருக்கும் சாப்பாடு போடுவாரா ???//

நிஜமா நீங்க படிச்சவரா?? கண்ணு முன்னாடி கஷ்டபடர ஒருத்தனுக்கு உதவி பண்ற அவரை என் குறை சொல்றிங்க கேட்ட அப்பொ ஏன் அவர் அமெரிக்காவுல இருக்க மனநோயாளிக்கு உதவி செய்யல கேப்பிங்க போல? உங்க கேள்வி நீங்களே திருப்பி படிங்க அதுல லாஜிக் இருக்க பருங்க.

கருடன் said...

@வெண்ணிற இரவுகள்.

//ஏன் விதர்பாவில் விவசாயி தற்கொலை செய்கிறார் அவர்களுக்கு உணவளிப்பாரா ???? //

ஏன் நீங்க உணவு கொடுத்து இருக்கிங்களா?? இல்லை அங்க இருக்க பிரச்சனை எல்லாம் தீர்த்து வச்சிடிங்களா?? சும்மா விதிர்பா விதிர்பானு பேசிட்டு இருக்கிங்க அதானா? அங்க போய் அவரால முடிஞ்சது அப்படினு ஒரு விவசாயிக்கு சோறு போட்ட அதையும் தட்டிவிட்டு உன்னால முடிஞ்சா எல்லா விவசாயிக்கும் வாழ்நாள் பூர சோறு போடு இல்லைனா பட்டினி கிடந்து சாக விடு இப்படி தற்காலிகமா தீர்வு கொடுக்காத சொல்லுவிங்க.

கருடன் said...

@வெண்ணிற இரவுகள்.

//நாளைக்கே நாராயணன் விருப்பம் இல்லை என்றால் இதை செய்யவில்லை என்றால் , அந்த நானூறு பேரின் கதி .//

அவரால சோறு போட முடியல சொல்லி அந்த நானூறு பேர்ல எதோ ஒரு நாற்பது அப்படி இல்லைனா நானூறு பேரையும் நல்ல சேவை நிலையத்துல சேர்த்து விடமாட்டாரு என்ன நிச்சயம்? சரிங்க ரோட்ல விட்டுட்டு போறார்னே வச்சிகலாம். அதுக்கு ஏன் இன்னைக்கு நல்லது செய்யகூடாது? ஓ!! நாளைக்கு பிச்சைதான் எடுக்க போறாங்க அதை இன்னைக்கே செய்யட்டும் சொல்றிங்களா எப்படி??

(நீங்க பிரபலபதிவரா எனக்கு தெரியாது. அதை பற்றி கவலையும் எனக்கு இல்லை... சர்சைகுறிய பதிவு எழுதினா தைரியமா மாட்ரேஷன் இல்லாம எழுதுங்க.. நெகட்டிவ் ஓட்டு போட்டேன்..)

kumar said...

தற்காலிகம் - நிரந்தரம். தீர்வு என்று வரும்போது இரண்டாவதாக இருப்பதே முன்னுரிமை பெற
வேண்டும்.ஆனால் இங்கே நீங்கள் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் உங்களை வில்லனாக எல்லோருக்கும்
காட்டிவிட்டது.தவறு செய்வதை விட அதை ஒத்து கொள்வதற்குத்தான் அதிக துணிச்சல் தேவை.

கணேஷ் said...

என்ன செய்ய..

அப்படி ஒருவர நல்லது செய்து கொண்டு இருக்கும்போது...அவருக்கு உதவி செய்யாவிட்டாலும்..இந்த மாதிரி செய்யாமல் இருந்தால் நலம்...

யூர்கன் க்ருகியர் said...

U need medical attention!

தமிழ் பையன் said...

விதண்டாவாதம். சும்மா ஹிட்டுக்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரை. இது போன்ற பதிவுகளுக்கு நெகடிவ் வோட்டு போடுவது தற்காலிகத் தீர்வு. இது போன்ற பதிவர்களை நாராயணன் கிருஷ்ணனின் காப்பகத்தில் போடுவது நிரந்தரத் தீர்வு :-)

அருண் பிரசாத் said...

Pity on you

DR said...

பதிவு நல்ல ஜாலியா காமெடியா இருக்குது படிக்கிறதுக்கு. இன்னும் நீங்க நெறைய எழுதணும்...