Sunday 24 April 2011

கோ

சனிக்கிழமை மதியம் "கோ" படம் பார்க்க நேர்ந்தது , படம் அரசியல் ரீதியான படம் , பத்திரகையாளர்கள் கதை இவை எல்லாம் படத்தை பார்க்க தூண்டியது . படத்தில் முதல் காட்சியிலேயே வெறுத்து போனேன் , நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடிக்கிறார்கள் , அதை பறந்து பறந்து போட்டோ எடுக்கிறார் நாயகன் , எனக்கு தெரிந்து நக்க்சல்கள் வங்கியை கொள்ளை அடித்தது போன்று தெரியவில்லை , அவர்கள் மக்களை கொள்ளை அடிக்கிற பன்னாட்டு நிறுவனங்களையும் , அரசாங்கத்தயுமே எதிர்க்கிறார்கள் , எதோ வங்கி கொள்ளை பற்றி உலக சினிமாவை பார்த்து விட்டு இயக்குனர் அந்த காட்சியை சேர்த்து இருப்பாரோ என்று எண்ண தூண்டியது .பின்வரும் காட்சிகளில் போட்டோவை எடுத்து குமிக்கிறார்நாயகன் அது அரசியலையே புரட்டி போடுகிறது என்பது தான் கதை.

இது ஆகா சிறந்த அரசியல் படம் என்று சிலர் சொல்கின்றனர் உண்மையில் அப்படி தான் உள்ளதா .
முதலில் எதிர்க்கட்சி தலைவரின் பிம்பத்தை நாயகன் உடைக்கிறார் எப்படி உடைக்கிறார் நீங்கள் ஈழத்தமிழனை
காப்பற்றவில்லை , முல்லை பெரியாறு பிரச்னையை பேசவில்லை , அலைகற்றை ஊழல் பற்றி வாய் திறக்கவில்லை ,விலைவாசி உயர்வு பற்றி பேசவில்லை என்பது போல நினைத்தால் ஏமாற்றம் வரும் .அந்த தலைவர் ஜோசியத்தை
நம்பி ஒரு சிறு பெண்ணை மணமுடிக்க செல்கிறார் , அதை போட்டோ பிடித்து அவர் பிம்பத்தை உடைக்கிராராம் .
நாயகனுக்கு அந்த தலைவரை எதிர்க்க வலுவான கொள்கை காரணங்களே இல்லை , இப்படி போகிறது மக்கள் கொண்டாடும் ஆக சிறந்த அரசியல் படம் .


சரி அடுத்து முதல்வரின் பிம்பத்தை உடைக்க நினைத்த கதாநாயகன் , என்ன செய்கிறார் ஒரு நிருபரை முதல்வர்
செருப்பால் அடிக்கிறார் , அதை மட்டுமே படம் பிடித்துவிட்டு அவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு அடிக்கிறார் நாயகன் .மற்றபடி கொள்கை கத்திரிக்காய் எல்லாம் நாயகனுக்கு ஒரு பொருட்டே அல்ல . சரி இவர்கள் சொல்லும் வணிக ரீதியானநடுநிலை நாளிதழ் எங்கே உள்ளது , அதுவும் நாயகன் என்ன படம் எடுத்தாலும் , ஆளுங்கட்சியை எதிர்கட்சியை எதிர்த்தும் கட்டுரைகள் வருகின்றன , இது தமிழக சூழலில் எப்படி சாத்தியம் .

படத்தின் இறுதியில் நாயகன் நக்க்சல் இயக்க தலைவரிடம் "எல்லாரும் ஒன்னு வச்சுருப்பாங்க , அதே போல நீங்க எத கேட்டாலும் "ஒடுக்கப்பட்டவங்க " அப்படின்னு காரணம் சொல்வீங்க " என்பார் . இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களே இல்லையா என்ன ? சத்தீஸ்கர் தண்டகாரண்யா காஷ்மீர் வரலாறுகள் இயக்குனருக்கு தெரியாது போலும் . "எத்தன பேர உருவாகுறீங்க , காலேஜுல " என்று ஜீவா கேட்கிறார் . அதவாது மாணவர்கள் pub போவதோ , தண்ணி அடிப்பதோ பிரச்சனைகள் அல்ல , அரசியல் படிப்பது தவறு என்பதை போல காட்சி அமைந்துள்ளது . KV ஆனந்த் அவர்களே நீங்கள் சத்யம் theatre மக்களுக்காக படம் எடுப்பது தவறல்ல ,
ஆனால் நீங்கள் சம்பாதிக்க நக்சல் தான் கிடைத்தார்களா ?


சமகால அரசியல் படம் என்று ச்லகிப்பவர்கள் , அப்படி என்ன அரசியல் தான் பேசினார்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா ? ஏன் முதல்வரை எதிர்க்கும் பொழுது கூட கொள்கை ரீதியாய் எதிர்ப்பு காட்டாமல் , கிள்ளிட்டான் அடுசுட்டான் என்பது போன்ற மொக்கை காரணங்களே காட்டப்படுகின்றன . "கோ" பணம் சம்பாதிக்க என்ன வேணும்னாலும் சொல்லலாம் , ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய , ஊடக பத்திரிகை சுதந்திரத்தை பற்றி கூட பேசலாம் , ஒடுக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தலாம் .

5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வித்தியாசமான கோணத்தில் அலசல்

Carfire said...

உங்கள் பார்வையில் உண்மையான விமர்சனம் சகோ......
இப்போ நடக்கும் அரசியலுக்கு நல்லா சைடு டிஷ் இந்த படம். மத்த படி படத்தின் கதை கதைக்களம் எதுவுமே புதுசு இல்ல... பல பழைய தமிழ் படங்களின் கோர்வை, மற்றும் state of play என்னும் படத்தின் கோப்பி என்றும் ஒரு பேச்சு உள்ளது இனி மேல் தான் அந்த state of play படம் பார்க்கணும் ......

Anonymous said...

சரியான விமர்சனம்.

ஸ்பெக்டரம் கொள்ளையில் பந்தி பரிமாறிய குடும்பத்தில் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

பாலா said...

இந்த படம் சமகால அரசியல் படம் என்று சொல்வது மிகதவறு. இது ஒரு பக்கா எண்டர்டெய்னர். அதைத்தாண்டி இந்த படத்தில் எதுவும் பார்க்கத்தேவை இல்லை.

இந்த படம் பார்க்கும்போது உங்கள் ஞாபகம் வந்தது. உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்த்தேன்.

வலிப்போக்கன் said...

சிந்தனை என்பதே சினிமாவுக்கு அதுவும்
தமிழ் சினிமாவுக்க கிடையாது.