Saturday, 25 June 2011

சாரு ( CHA ரூ )

சாரு இலக்கிய சாரு , சாருவின் அடுத்த அடியாள் என்று எழுதிய நான் அதற்காக வெட்கப்படும் தருணம் இது .ப்ளாக் படிக்கவந்த புதிதில் இலக்கியமே தெரியாத புதிதில் , யாருமே வாசிக்காத புதிதில் ,நான் படித்தது அவர் மட்டுமே .பேருந்தில் நம் வீட்டு பெண்கள் யாரவது இடிபட்டால் , அவர்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் சொல்ல தயங்கி , சொல்லாமல்
இருப்பதால் ,ஐந்து நிமடத்திற்கு பிறகு சொல்லியவுடன் , நாம் நம் வீட்டு பெண்களிடம் " ஏன் தாமதமாய் சொன்னீர்கள் "என்று சொல்வோமா ? இல்லை உடனடியாக அந்த பொறுக்கியை அரைய பார்ப்போமா ? ஆனால் இணையத்தில் ஒரு இலக்கிய பொறுக்கி என்ன வேண்டுமானாலும் செய்வார் , ஆதாரத்துடன் பிடிபட்டுவிட்டார் .என்ன செய்ய முடியும்
அவர் சரி என்று சொல்ல முடியாத சூழல் , அடுத்து என்ன நடக்கும் அவரது ஆதரவாளர்கள் அந்த பெண்ணே அப்படி தான் என்று திசை திருப்புகிறார்கள் . இப்படி பேருந்தில் நம் வீட்டு பெண்களிடம் நடந்தால் நாம் திசை திருப்புவோமா .இல்லை அவர்களுக்கு தான்
சொம்பு தூக்குவோமா ?

சாரு பற்றி புரியாதவர்கள் இந்த கட்டுரைகளை படியுங்கள்

vinavu

agnipaarvai

tamilachi

9 comments:

பாலா said...

உங்களைபோல நான் வருத்தப்படப்போவதில்லை. ஏனென்றால் நான் சாருவை படித்ததில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவரின் எழுத்துக்களின் மீது ஆர்வம் இல்லை.

அது சரி விஷயத்துக்கு வருகொம். நம்ம வீட்டு பெண்கள் தவறு நடந்தால் நம்மிடம்தான் வந்து சொல்வார்கள் அல்லவா? இல்லை வேண்டுமென்றே அந்த பொறுக்கியை தூண்டி,அவனை மேலும் உரச விட்டு, அவன் உரசுவதை படம்பிடித்து அதை பத்திரிக்கையில் போடுவார்களா? எதற்கெடுத்தாலும் நம் வீட்டு பெண்ணை இழுப்பதே இந்த புரட்சியாளர்களுக்கு வேலையாகி விட்டது. அடுத்தவனை திட்டுவதற்கு மட்டுமல்ல, அவனை மடக்குவதற்கும் வீட்டு பெண்களை இழுப்பது கூட ஆணாதிக்கம்தான் நண்பரே...

நான் சாருவை உத்தமர் என்று சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட பெண்ணை மோசமானவள் என்றும் சொல்லவில்லை. யாரையும் சொம்பு தூக்கவும் சொல்லவில்லை. ஆனால் புரட்சிக்காரர்கள், பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பஞ்சாயத்து பண்ண சொம்பு தூக்கிக்கொண்டு அலையவேண்டாம் என்றுதான் சொல்லவருகிறேன்.

அந்த பெண் அப்பாவி என்றால், சாரு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கு வேண்டுமானால் அவருக்கு உதவுங்கள். அதை விட்டு விட்டு இப்படி பிளாக்கில் எழுதி அதை பிஸினஸ் ஆக்காதீர்கள். (உங்களை சொல்லவில்லை. பொதுவாக சொன்னேன்.)

பாலா said...

என் முந்தைய கமெண்ட்டுக்கு பதில் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் நண்பரே...

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே அம்பலப்படுத்துவது பிசினஸ் என்று பார்க்கும் உங்களை என்ன சொல்வது. நீங்கள் சொல்வதை பார்த்தால் எதுவுமே எழுத முடியாது.
இரண்டாவது நான் பிசினஸ் பண்ணுவதற்கு எழுதவில்லை நான் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. சமூகத்தில் ஒரு விடயம் நடக்கிறது என்றால்
அது கண்டிப்பாய் விமர்சன பார்வைக்கு வர வேண்டும். தவறுகள் தட்டிக்கேட்க்கப்படவேண்டும், இதே போல தவறுகள் நடக்காமல் இருக்க
அம்பலப்படுத்த வேண்டும் இதையே நான் செய்கிறேன் நண்பரே.

பாலா said...

அதுக்கு மேல எவ்வளவு எழுதி இருக்கேன். அதை எல்லாம் விட்டுட்டு அந்த பிஸினஸ் என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பார்த்திருக்கிறீர்களே. நான் பொதுவாதானே சொன்னேன்.நீங்கள் பிஸினஸ் செய்யவில்லை என்று எனக்கு தெரியும். அந்த வரி அதை செய்பவர்களுக்காக எழுதியது.

இப்போதெல்லாம் நான்தான் நாட்டாமை, நான் சொல்வதுதான் தீர்ப்பு என்று ஆளாளுக்கு அலைகிறார்கள். அவர்களின் சொற்களில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, தனி நபர் துவேஷம் நிறைய இருக்கிறது இல்லையா?

பாலா said...

சரி அதை எல்லாம் விடுங்கள். அநியாயங்கள் தட்டி கேட்கப்பட வேண்டும்தான். அதற்காக கும்பலாக சேர்ந்து நானும் ஒரு அடி அடிக்கிறேன் என்பது எந்த வகையில் நியாயம்? இதே தமிழச்சியின் கட்டுரை, சாருவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிய சான்றுகளுடன் வெளி வந்திருந்தால் இதற்கு தலை வணங்கும் முதல் ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன்.

இதென்னவோ உங்கள் புரட்சிக்கும், பெண்ணியத்துக்கும் அந்த பெண்ணை ஊருகாய் ஆக்கி விட்டதை போலல்லாவா இருக்கிறது. இதற்கு மிட்நைட்ல ஆக்ட் குடுத்த கலைஞர் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறதே?

நீங்கள் செய்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் வினவு சொல்வது எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. இதை சுட்டிக்காட்டத்தான் என் முதல் கமெண்டின் முதல் வரி. எடுத்த நேற்று நல்லவராக தெரிந்த சாரு இன்று உங்களுக்கு கெட்டவர். இதே நிலை நாளை வினவுக்கும் வரலாம் இல்லையா?

♔ம.தி.சுதா♔ said...

தங்கள் ஆதங்கம் புரிகிறது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

ஊடகன் said...

பதிவுலகில் இருந்து தாங்கள் மறைந்திருப்பத்தின் நோக்கமென்ன???
தங்கள் பதிவை அவளோடு எதிர்நோக்கி கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் "ஊடகன்"...!

ஊடகன் said...

பதிவுலகில் இருந்து தாங்கள் மறைந்திருப்பத்தின் நோக்கமென்ன?
தங்கள் பதிவை அவளோடு எதிர்நோக்கி கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் "ஊடகன்"...!