Sunday 20 November 2011

பஸ் பால் விலை ஏற்றம் குறித்து கார்ல் மார்க்ஸ்

இன்று விலைவாசி ஏறி இருக்கிறது . பேருந்துகளில் போக இரண்டு ரூபாய் வர இரண்டு ரூபாய் என்ற காலம் மலை ஏறி விட்டது . குறைந்தது இருபது ரூபாய் இல்லாமல் நாம் பேருந்தில் பயணம் செய்வதை நினைத்து கூட பார்க்க முடியாது . நான் மதுரையில் இருந்த நாட்களில் கூடையில் பழம் காய்கறி விற்கும் கிழவிகள் , LSS பஸ் ரேட் ஐம்பது பைசா கூட என்பதற்காய் , வெள்ளை போர்டு பேருந்துகளுக்கு கால் கடுக்க காத்திருப்பார்கள் .அப்படி இருந்த மதுரையில் இன்று இருப்பது வெறும் கதவு போட்ட வண்டிகளே . வெள்ளை போர்டு வண்டிகள் பேருக்கு ஒரு மணி நேரத்திற்கு எப்பொழுதாவது ஒரு பேருந்து வரும் . அடுத்த நிறுத்தத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் குறைந்த பஸ் கட்டணம் ஐந்து ரூபாய் என்ற நிலைமைக்கு வந்தாயிற்று .

என் தம்பி ஒருவன் வேலை தேடிக்கொண்டிருக்கிறான் , மாதம் 6௦௦ ரூபாய் பாஸ் வைத்துக்கொண்டு , சென்னையை சுற்றிவருவான் . அவனுக்காவது இங்கே வீடு உள்ளது . ஆனால் இங்கே தங்கி வேலை தேடும் எண்ணற்ற கீழ் நடுத்தர குடும்பத்தை
சேர்ந்தவர்கள் , பொருளாதார பின்னணி இல்லாதவர்கள் எப்படி மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்து பாஸ் எடுப்பார்கள் . ஒரு அனுபவதிற்காய் சென்னையில் பட்டினபாக்கத்தை சுற்றி திருந்தேன் , வீடுகள் எல்லாம் குடிசைகள் ,நடுதரகுடும்பங்கள் கோமான்கள் அங்கே சென்று பார்த்தால் உண்மையான வாழ்க்கை புரியவரும் , இந்த பக்கம் மரினா கடற்கரை அங்கு ஒரு விதமான வாழ்க்கை , அப்படியே கொஞ்சம் காலாற நடந்து போனால் வேறு ஒரு உலகம் . அப்படி இருக்கும் பின்னணியில் ஒருவன் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செலவாகிவிடுகிறது .


சரி ரூமில் இருக்கும் நண்பர்கள் இவ்விடயத்தை பற்றி விவாதிக்கும் பொழுது , அம்மா ரசிகர்கள் ஆகிய அவர்களால் அம்மாவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . "மக்கள் கொந்தளிக்கிறார்கள் " என்று கலைஞர் டிவி சொன்ன உடன் , "அப்படி ஒன்னும் வெளில தெரியல , இவங்களா அடிச்சு விடுறாங்க " என்று
சொன்னான் வருடம் லட்சகணக்கில் வாங்கும் கார் வைத்து இருக்கிற நண்பன் . அவன் பேருந்துகளில் செல்வதில்லை .வேறு மாநிலங்களில் விலை ஏற்றி இருக்கிறார்கள் , அவர்களும் அரசை நடத்த வேண்டாமா என்று சொன்னான் மாதம்
அறுபதாயிரம் வாங்கும் நண்பன் . இன்னொரு நண்பர் வருஷத்துக்கு BONUS கேட்கிறீங்க அப்ப போக்குவரத்து துறை நட்டத்தில் தான் போகும் , முதல்ல அதெல்லாம் கட் செய்ய வேண்டும் . என்று அரசியல் விளக்கம் கொடுத்தார் .

அவர்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை ,போக்குவரத்து கழகம் நட்டத்தில் செல்லவில்லை , விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகும் மாணவர்களே அதற்கு சாட்சி .அதே போல் SEZ சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கீழ் இருக்கும் தொழிற்சாலைகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது ,அதுவும்
அடிமாட்டு விலையில் (எவ்வளவு என்ற புள்ளி விவரம் தெரியாது ) . நோக்கியா FOXCONN அந்த பிளான்டின் மொத்த செலவு 600 கோடி ரூபாய் , அதற்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் 750 கோடிகள். சாதாரண மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கொடுக்கப்படவில்லை ஆனால் இவர்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது மின்சாரமும் தடையின்றி கிடைக்கிறது . இம்முரணை புரிந்து கொண்டால் , அரசு ஏன் இப்படி செய்ய முடிகறது என்பது புரியும் . லாபக்கணக்கை பன்னாட்டு முதலாளிகளிடம் கட்டும் அரசு நட்டக்கணக்கை மக்களின் தலையில் எழுதுகிறது .

சரி ரூம் நண்பர்கள் ஏன் அப்படி சிந்திக்கிறார்கள் , அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் இதை எல்லாம் சமாளித்து விடலாம் அதனால் அவர்களால் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை . ஆனால் காலச்சுழற்சியில் நம் நடுத்தர குடும்பங்களும் , ஏழைகள் ஆகும் ,சுரண்டல் அதிகமாய் இருக்கும் ,அடக்குமுறை அதிகமாய் இருக்கும் இன்று பத்தாயிரம் ,இருபது ஆயிரம் வாங்குபவர்களை கூட ஏழை ஆக்கும் அரசு , நாளை அறுபது ஆயிரம்
வாங்குபவனை ஆக்கும் பொழுது , இவர்களால் இதே கருத்தை சொல்ல முடியாது . அமெரிக்காவில் WALL ஸ்ட்ரீட் மக்கள் இறங்கி போராடுகிறார்கள் . இது எப்படி சாத்தியம் ஆயிற்று . புத்தகங்கள் சொல்லிக்கொடுக்காத அரசியலை புறநிலை எதார்த்தம் சொல்லிக்கொடுக்கும் . அதுவே அங்கு நடந்தது .

சரி இம்மாதிரி அனுபவங்கள் நமக்கு சூழல் கற்றுக்கொடுக்கிறது , ஆனால் இதே விடயங்களை ௧௮௪௮
வந்த ஒரு அரசியல் புத்தகம் சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அந்த புத்தகத்தின் பெயர்
மார்க்ஸ் எங்கெல்ஸ் அளித்த "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை " . அந்த புத்தகத்தில் இருந்து சில வரிகள்

* வரலாற்றில் முந்திய சாகப்தங்களில் அநேகமாய் எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைவு இருக்க காண்கிறோம் (இந்த பன்மடிப்படிநிலை இந்தியாவில் இருக்கும் சாதிய அமைப்பு ,கிராம வாழ்கையில் இருக்கும் அந்தஸ்து , அனைவருக்கும்
மேலே நிலப்பிரபு .முதலில் பார்ப்பனர்கள் ,அதற்கு அடுத்த நிலை ஆதிக்க சாதியினர் , அதற்கு அடுத்த நிலை பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் ,


கிராம வாழ்க்கையிலிருந்து முதலாளித்துவ வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறும் பொழுது .
இங்கு சென்னையிலே சாதி என்பதை பார்க்காமல் அனைவரும் ஒரே தொழிற்சாலையில்
வேலை செய்ய வேண்டும் ,சாதியால் பிளவு படும் வர்க்க அமைப்பு , தொழில் முறையால் வாழ்க்கை முறையால் ஒன்று படுகிறது . இன்று அம்மா தனி தனியாய் சாதி பார்த்து வேலை ஏற்றம் செய்ய முடியாது , நாளுக்கு நாளாய் வாழ்க்கை தரம் குறைய குறைய , தொழிலாளி உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் ஒரே விதமான சிக்கல் வருகிறது , விஞ்ஞான ரீதியாகவே அவர்கள் ஒன்று கூடுகிறார்கள் .

வாழ்க்கை முறை மாறும்பொழுது , நடுத்தர வர்க்கம் கூட ஏழை ஆகிறது , ஒரு தொழிலாளி வாழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . பணம் ஒரு பக்கமே குவிகிறது ,அதனால் UPPER MIDDLE CLASS MIDDLE CLASS ஆகிறது middlE CLASS ஏழைகள் ஆகின்றனர் . இப்படி நடக்க நடக்க , அனைவரும் ஒரு சமநிலைக்கு வருகின்றனர் .இதையே தான் மார்க்ஸ்

"ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவெனில் வர்கப்பகமைகளை இது சுருக்கி எளிமையாக்கி உள்ளது .சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாய் ,எதிரும் புதிருமான இரு வர்கங்களாய்- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாய் -பிளவுண்டு வருகிறது "



ஒரு நேரத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் , அனைவரும் ஏழை ஆகிக்கொண்டிருக்கும் வேளையில் சாதிகள் ஒழிக்கப்பட்டு ,அனைவரும் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வார்கள் .

குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முத்திரையை கிழிதெறிந்து ,குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுற செய்தது .


எவ்வளவு ஆத்ரசமான வரிகள் . இப்படி அந்தப்புத்தகத்தை சொல்லிக்கொண்டே போகலாம் . கழிசடை புத்தகங்கள் எல்லாம் அதிக விலையில் விற்கும் பொழுது இதன் விலை பதினைந்து ரூபாய் தான் . சென்னையில் கீழை காற்று மட்டும் NCBH இல் கிடைக்கிறது . வரிக்கு வரி இக்கால சூழலோடு பொருத்தி பார்த்து சொல்ல முடிகறது , அது தான் மார்க்ஸ் அவர்களின் பலம் , மார்க்சியத்தின் பலமும் அதுவே .

2 comments:

வலிப்போக்கன் said...

அது தான் மார்க்ஸ் அவர்களின் பலம் , மார்க்சியத்தின் பலமும் அதுவே .

karthik said...

ungal ariyamai kandu yennaku viyapaga irukiruthu...Karpaniyil pathivu poda vendam nanbari..nangu araianthu ungalludaya karuthai theriyvikavendum...thappana karuthai makkalidam kondu sella vendam...Pokuvarathu thurai labathil iyangikiranthu yendru sonal ungal pathiulagu nanbargal kuda sirpargal...விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகும் மாணவர்களே--அதற்கு சாட்சி--yetharkku Saatchi....avargalukku illavas pass irukirathu athu ungalukku theriyatha yenna...

விசிலடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு ponnal labathil iyangigirathu yendra arutham...neegal sollugal...