Showing posts with label டோனி. Show all posts
Showing posts with label டோனி. Show all posts

Tuesday, 1 March 2011

காசு வாங்கிய சச்சின் டோனி கதை


"இப்ப பாரு டெண்டுல்கர் எட்டு ரன் அடிச்சிருக்கார் பத்துக்குள்ள அவுட் ஆவார் " என்றான் விஷ்வா
ஓடக்கூடாத ரன்னிற்கு ஓடி அவுட் ஆனார் சச்சின் , "எப்படி டா சொன்ன "என்று அதிர்ந்தான் குமார் .
"டோனி அஞ்சு ரன் தாண்ட மாட்டன் பார் " , மூன்று ரன்களின் போது ஏறி அடிக்க போய் அவுட் ஆனான் டோனி "எப்படி மச்சான் கலாசுற " என்றான் குமார் . "இந்தியா இன்னிக்கு எப்படியும் தோத்துரும் , 150 ரன் தான் அடிசுருக்காங்க " என்றான் விஷ்வா . hundred for நோ லாஸ் என்று தொலைகாட்சி ஸ்கோர் காட்டியது ,திடிரென 102 for Five என்று ஸ்கோரை பார்த்தவுடன் சன் தொலைக்காட்சியில் இருந்த சேனலை உற்சாகத்துடன் திருப்பினான் குமார் ,மட மட என்று விக்கெட் விழுக ஆரம்பித்தது 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா , விஷ்வா முகம் வாடியது ...........................
"என்ன மச்சான் ரெண்டு கோடி போச்சே இந்தியா தோக்கறதுக்கு எவ்வளவு கொடுத்தும் வீண் ஆயுடுச்சே ,
இவங்க காசு வாங்கின மாதிரி ஆடினாங்க ஆஸ்திரேலியா அத விட மட்டமா ஆடிட்டாங்க நம்மள விட எதோ புக்கி விளையாடி இருக்கான் " என்றான் விஷ்வா ..................................................
தண்ணி அடித்து கொண்டிருந்த குமாருக்கு ஒரு போன் வந்தது ...................எழுந்து சென்ற அவன்
"மச்சான் நல்லவேளைக்கு தோத்து போகல இந்தியா ஜெயிச்சுருச்சு , ஆஸ்திரேலியா மேல போட்ட அஞ்சு கோடி வீணா போகல "கலக்கல் மச்சான் என்று போனை வைத்தான்