Monday, 19 December 2011

பிரபல பதிவர்

பிரபல பதிவர்
பழைய நினைவுகளை
எழுதும் பொழுது ஆட்டோகிராப்
சேரன் ஆனேன் ,
காதல் கவிதை
எழுதும் பொழுது 'தபு ஷங்கர்'
ஆனேன் ,
சமூக படைப்புகள் , விமர்சனங்கள்
எழுதும் பொழுது மார்காசாய் நினைத்துக்கொள்வேன் ,
FACEBOOK ,TWITTER மூலம் புரட்சி
சாத்தியம் என நினைத்துக்கொள்வேன் ,
பஸ்ஸில் இடிப்பவனை எதிர்க்காத நான்
பெண்ணியம் பற்றி எழுதுவேன் ,
ஏன் இப்படி என்று வினவினால் ?
ஒரு எழுத்தாளன் சாட்சி மட்டுமே என்று மழுப்புவேன் ............
தோழர் போராட வாருங்கள் என்றால் ,
"SORRY பாஸ் எனக்கு லீவ் இல்லை என்பேன் " ,
நான் போராட்டத்திற்கு தயார் ,
போராடும் இடம் மெரினாவாக இருக்க வேண்டும் ,
SUNDAY EVENING ஆக இருக்க வேண்டும் ,
மெழுகுவர்த்தி வேண்டும் ,
கண்டிப்பாய் ஊழலை ஒழிக்க முடியும் ,ஈழத்தை
மீட்க முடியும் , மனிதகுல விடுதலை அடைய முடியும் .

3 comments:

குமரன் said...

இந்த பதிவின் சாரத்தை, இன்னும் அசைப்போட்டு, இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

வலிப்போக்கன் said...

மெழுகுவத்தி மூலமா எல்லாத்தையும் சாதிக்க கிளம்பியிருக்காரு ஒருத்தரு.கரண்ட இல்லாத நேரத்திலகூட மெழுகுவத்திய வச்சுதான் வெளிக்கே போவாருன்னா பாத்துகுங்க.

வவ்வால் said...

ஹி..ஹி முடியல அவ்வ்வ்!

மெழுகுவர்த்தி யாவாரம் நல்லா நடக்க ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இருக்குமோ?