Thursday, 3 March 2011

பச்சையப்பன் கல்லூரி தொப்பி தொப்பியிடம் சில கேள்விகள்

பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களை அடித்து நொறுக்கியதற்க்கு தொப்பி தொப்பி என்னும் பதிவர் வாழ்த்து
தெரிவித்து உள்ளார் .முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் போலீஸ் மக்கள் நலன் என்னும் நோக்கில் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா .அப்படி மக்கள் நலனுக்காக தான் அவர்கள் அடித்தார்கள் என்று தொப்பி தொப்பி உண்மையிலேயே சொல்ல முடியுமா ? பஸ் டே கொண்டாடுவதை பற்றி சொல்கிறீர்கள் , தென் தமிழகத்தில் தேவர் ஜெயந்தி நடக்கும் நாள் அன்று பார்த்து இருக்கிறீர்களா ? மதுரை ராமநாதபுரம் ரெண்டு படும் , மக்கள் அப்பொழுது பாதிக்கப்பட்ட பொழுது இந்த காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது . உள்ளே புகுந்து வக்கீல்கள் நீதிபதிகள் தாக்கப்பட்டரே , அடித்ததே போலீஸ் தானே ? வீரப்பனை பிடிப்பதற்கு சென்ற தமிழக காவல்த்துறை பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை எல்லாம் நினைவில்லையா ? தொப்பி தொப்பி . இத்தேசம் 1 76 000 கோடி திருடிய அம்பானி டாடாவை விட்டுவிட்டு ,பர்ஸ் திருடனை புட்டதிலேயே அடிக்கும் போலீஸ் கொண்ட தேசம் , நீங்கள் பார்த்தது இல்லையா . அப்படிப்பட்ட தேசத்தில் இருந்து வரும் போலீஸ் காவலன் தான் ஆனால் முதலாளிக்கு , ஆளும் வர்கதிற்க்கும் காவலன் . உண்மையிலேயே இவர்கள் ஒருநாள் பஸ் டே கொண்டாடிவிட்டு அமைதி ஆகிவிடுவார்கள் , உள்ளே ஓரசிக்கொண்டிருக்கும் பெருசைவிட படியில் தொங்கிக்கொண்டிருக்கும் கானா பாட்டு
பாடும் பையனால் பெண்களுக்கு தீங்கு கம்மியே . அப்படி இருக்க ஏதொ இது கொலைகுற்றம் போல அவர்களை அடிப்பது எல்லாம் ஜனநாயக படுகொலை , ஏன் இத்தனை வருடமாய் இதை கண்டிக்காமல் இப்பொழுது மட்டும் கண்டிக்கிறார்கள் . நியூ இயர் பொழுது பபுகளில் பெண்கள் சரக்கடித்து விட்டு ஆடுகிறார்கள் , அந்த பப்புகள் பெண்களுக்கு ஆபத்தானது தானே அதை இந்த போலிஸ் கேட்டுள்ளதா ?

போலிஸ் காவலன் தான் முதலாளிகளுக்கு , ஆள்பவர்களுக்கும் .

6 comments:

Yoga.s.FR said...

உங்களுக்கு விஷயமே தெரியாதா?அவர் (தொப்பி,தொப்பி)தான் "கலாசார" காவலர் ஆயிற்றே?

ராஜ நடராஜன் said...

//போலீஸ் மக்கள் நலன் என்னும் நோக்கில் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா //

உலகளாவிய போராட்டங்கள்,காவல்துறை அடக்குமுறையில் முதலின் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது காவல்துறையே என்பது விழுக்காட்டு உண்மை.

காவல்துறை வன்முறைக்கு வக்காலத்தும்,அது மகுடம் அணிந்து தமிழ்மணத்தில் உட்கார்ந்து கொண்டால் தமிழ்நாடு விளங்குன மாதிரிதான்.

podang_maan said...

http://www.mathavaraj.com/2011/02/blog-post_26.html

இங்கே அரசு ஊழியரை தாக்கியுள்ள போலீசு எந்த பொதுமக்களின் நலனுக்காக இவ்வாறு செய்துள்ளது?

THOPPITHOPPI said...

தேவர் சமுதாயத்தினர் செய்வதால் தாழ்தப்பட்டவர்கள் செய்வதில் என்ன தவறு இருக்கு என்று சொல்றீங்க போல?

படிக்கும் மாணவர்கள் செய்த தவறை ஞாயப்படுத்த ஊழல்வாதிகளுடனும், ஜாதி கோஸ்டிகளுடனும், சமூக விரோதிகளுடனும் ஒப்பிடுகிறேன் என்பதை மறந்துவிட வேண்டாம்.

//உள்ளே ஓரசிக்கொண்டிருக்கும் பெருசைவிட படியில் தொங்கிக்கொண்டிருக்கும் கானா பாட்டு பாடும் பையனால் பெண்களுக்கு தீங்கு கம்மியே//

பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிய கற்பழிக்கிரதவிட உன்பொண்டட்டி கையப்புடிச்சி இழுக்குரதனால தீங்கு கம்மியே என்று உங்களிடம் எதிர்வீட்டுக்காரன் சொன்னா என்ன செய்வீங்க?

எப்படியோ எனக்கு எதிர் பதிவு எழுதுகிறேன் என்பதற்காக பஸ் டே கொண்டாட்டத்தை ஞயாயப்படுத்திட்டிங்க போங்க. பார்த்து நண்பரே நாளை மாணவர்கள் கிஸ் டே கொண்டாடினாலும் இதே மாதிரி தீங்கு கம்மியே என்று பதிவு எழுதிடபோரிங்க!

Unknown said...

///உள்ளே ஓரசிக்கொண்டிருக்கும் பெருசைவிட படியில் தொங்கிக்கொண்டிருக்கும் கானா பாட்டு
பாடும் பையனால் பெண்களுக்கு தீங்கு கம்மியே//
gud one... double like Karthi.. கார்த்திதானே உங்கட பேர்?

வெண்ணிற இரவுகள்....! said...

@THPOOI THOPPI உங்களுக்கு எதிர்ப்பதிவாய் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் ? நான் சொல்லவந்தது இவர்களை எல்லாம் விட்டு விடும்
போலிஸ் , காவல் நிலையத்தில் கற்பழிப்பு செய்யும் போலிசுக்கு வாழ்த்து சொல்வது ஏன்? உண்மையில் மாணவர்களை விட
போலிசை கண்டால் தான் பெண்களுக்கு பயம் வாதாச்சியில் கேட்டுப்பாருங்கள்