"கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள் " என்ற மாதவாஜின் . அவரிடம் ஒரு எளிமையான பாமரனின்
கேள்வி
1 ஒரு திருடன் உங்கள் வீட்டை திருடுகிறான் , அவனை விட இன்னொரு திருடன் கம்மியாக திருடுவான் என்று வைத்துக்கொள்வோம் , இரண்டாம்
திருடனை துணைக்கு அழைத்து முதல் திருடனை ஒழித்துவிட்டு , இரண்டாம் திருடனுக்கு வழி விடுவீர்களா ?
2 communism இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை காணச்சொல்கிறதா ? இது முதலாளிக்கான ஜனநாயகம் என்று தெரிந்தும் , இந்த அரசியல் முறையிலேயே
தீர்வு காணவேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் இல்லையா ?
3 இந்த வாக்குசீட்டு முறையிலேயே தீர்வு காண முடியும் என்று நம்புகிறீர்களா ?
http://www.mathavaraj.com/2011/03/blog-post_10.html
1 comment:
அவர் விளக்கம் இருக்கட்டும்..
இடது சாரிகள் மீது மரியாதை வைத்துள்ள, இந்தியாவில் இடது சாரி கருத்துக்களுக்கு பிரதிநிதிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் என நம்பும் ஒரு பாமரனின் பதில்கள்...
1 ஒரு திருடன் உங்கள் வீட்டை திருடுகிறான் , அவனை விட இன்னொரு திருடன் கம்மியாக திருடுவான் என்று வைத்துக்கொள்வோம் , இரண்டாம்
திருடனை துணைக்கு அழைத்து முதல் திருடனை ஒழித்துவிட்டு , இரண்டாம் திருடனுக்கு வழி விடுவீர்களா ?
ஊரிலிருந்து வருகிறோம்... யாரோ சில திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து இருப்பது தெரிய வருகிறது... அக்கம் பக்க ஆட்களை சேர்த்து கொண்டு அவர்களை பிடிக்க, அடிக்க நினைப்போம்... இதுவே யதார்த்தம்.. அந்த நெருக்கடியான நிலையில், பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் யோசிக்க மாட்டோம்.. அந்த திருடர்களை விரட்டிய பின்பு, பக்கத்து வீட்டுக்காரன் கேட்டது செய்ய ஆரம்பித்தால் , அவனை திட்டுவோம்.. அது வேறு விஷயம்.. அனால் ஒரு நெருக்கடியான நிலையில், பக்கத்து வீட்டுக்கரன்ப உதவியை மறுக்க மாட்டோம்...
2 communism இந்த அமைப்புக்குள்ளேயே தீர்வை காணச்சொல்கிறதா ? இது முதலாளிக்கான ஜனநாயகம் என்று தெரிந்தும் , இந்த அரசியல் முறையிலேயே
தீர்வு காணவேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் இல்லையா ?
என்றாவது ஒரு நாள் வரப்போகும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காக காத்து இருந்தால், இன்றைய அரசியல் அரங்கில் , இடது சாரி கருத்துக்களை எடுத்து வைக்க ஆள் இல்லாமல் போய் விடுவார்கள்... இதைத்தான் விரும்புகிறீர்களா?
3 இந்த வாக்குசீட்டு முறையிலேயே தீர்வு காண முடியும் என்று நம்புகிறீர்களா ?
இந்த முறையில் தீர்வு வராது எனபதே இடது சாரிகளின் அதிகார பூர்வ கருத்தாக இருக்க முடியும்...
ஆனால் அந்த தீர்வு வரும் வரை, இருக்கின்ற அமைப்பிற்குள் எதாவது நல்லது செய்ய முடியுமா என பார்ப்பதும் நல்லதுதான்...
***************************************************
அவர்களே பாவம்.. டி சாப்பிட்டும் , சைக்கிளில் சென்றும் இயன்றவரை ஏதோ செய்கிறார்கள்..இன்று இடது சாரி கருத்துக்கள் கொஞ்சமாவது மக்களை சென்று அடைய காரணம் அவர்கள்தான்..
எனவே அவர்களை குறை சொல்வது தவறு...
Post a Comment