Tuesday, 22 March 2011

பகத் சிங் நினைவு நாள் -வீர வணக்கங்கள்


போலிகளுக்கு நடுவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ."சச்சின்" பிறந்தநாள் நியாபகம் வைத்துகொள்ளும் நாம் , "பகத் சிங் " நினைவு நாளை , உண்மையான களப்போராளியின் நினைவு நாளாய் மறந்து கடந்து விடுகிறோம் . இன்று பகத் தூக்கிலிடப்பட்ட நாள் , வீர வணக்கங்கள் . உலகக்கோப்பையும் , போலி ஜனநாயகம் உருவாக்கும் தேர்தலையும் நம் சிந்தனையிலே ஒதுக்கிவைத்து விட்டு , பகத்திற்கு வீர வணக்கம் செய்வோம். அரைநாள் உண்ணாவிரதமும் , கொடநாட்டில் ஓய்வும் , திருமணமண்டபம் இடிக்கப்பட்டதால் அரசியலுக்கு வந்தவரையும் ,
லட்சம் கோடிகள் அடித்தவரையும் மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நாட்டில் , இருபத்தோரு
வாயதே ஆன ஒரு போர் வீரன் தூக்கு மேடையிலே முத்தமிட்ட நாள் . வீர வணக்கங்கள் .

9 comments:

பாலா said...

நண்பரே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். இவர்கள் எல்லாம் உயிரோடல்லவா இருக்கிறார்கள்? எண்பது ஆண்டுகள் கழித்து நம் மனதில் பகத்சிங் இருக்கிறார். இன்னும் எண்பது ஆண்டுகள் கழித்து இவர்கள் அனைவரும் நினைவில் இருப்பார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.

அப்புறம் ஒரு விஷயம். சச்சினிடம் என்ன போலித்தனத்தை கண்டுவிட்டீர்கள்? உண்ணாவிரத நாடகம், அரசியல் ஓட்டு பொறுக்கித்தனம் என்று எதுவும் செய்தாரா. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தான் சொத்தை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு அவரை தற்கொலை செய்துகொள்ள சொல்கிறீர்களா?

சமுத்ரா said...

hmm thanks!

வெண்ணிற இரவுகள்....! said...

இங்கே விமர்சனம் செய்வது சச்சினை அல்ல மக்களை ...............................!!!!இரண்டாவது நீங்கள் கூறுவது போல்
சச்சின் உத்தம புத்திரரா ????? விவசாயிகளை உலகம் முழுவதும் அழிக்கும் பெப்சி நிறுவன விளம்பரத்தில் வருகிறாரே ?
அவர் பக்கத்து ஊரு விதர்பாவில் விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான் , ஆனால் இவர் பெப்சி விளம்பரத்தில் வருவார் .
இதைபோன்ற விடயங்களுக்கு உங்களுக்கு கோபம் வருவதில்லை ஆனால் சச்சின் பிறந்தநாளை நியாபகம் வைக்கும் நாம்
பகத் நினைவு நாளை நியாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று விமர்சனம் வைத்தால் எதற்கு கோபபடவேண்டுமோ வேண்டுமோ
அதற்கு படமால் உப்பு சப்பு இல்லாத சச்சினுக்கு கோபப்படுவதும் வருத்தப்படுவதும் என்ன கொடும சரவணன் ?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வீர வணக்கம் செலுத்துவோம்...

எவனோ ஒருவன் said...

neenga sachin apram matha ellarai patri solrathukku pathila veeran BHAGAT singh patri innum athigama eluthiyirukkalam.

oru vagayil ippadi neengalum athagayavargalukku athiga mukkiyathuvam kudukkave seikirirgal.

veeranin ninavu naal idugaiyil etharku ivargalathu sangathi?

பாலா said...

நண்பரே என்னுடைய கருத்துறையில் முதல் பாராவை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் என் மன நிலையை சொல்லி இருக்கிறேன்.

இரண்டாவது பாராவில் நான் கேட்டது கேள்வி. கோபம் அல்ல. உப்பு சப்பில்லாத சச்சினை எப்போதும் ஏன் இழுத்துக்கொண்டு அலைகிறீர்கள் என்றுதான் கேட்டேன். அவனவன் தொழில் எல்லோரும் உத்தம புத்திரன்தான். இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். இன்னைக்கு பெப்சி விளம்பரத்தில் நடிக்கிறார் என்று கோபம் வரும். நாளை அதிக சொத்து வைத்துள்ளார் என்று கோபம் வரும். அடுத்தநாள் பாரின் ஜட்டி போட்டிருக்கிறார் என்று கோபம் வரும்.

உங்கள் மீதே இந்த கேள்வியை கேட்கலாம். பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை பார்க்காமல் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் ஏன் இருக்கவில்லை? என்று.

சரி அதை விடுங்கள் அது நடந்து முடிந்த விஷயம்.
ஒவ்வொருவனும் இன்னொருவன் செய்வதை விட செய்யாததை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்ய முடியும். சச்சினை விட பெரிய அயோக்கியர்கள் இருக்கிறார்கள்.

பாலா said...

சரி பிரச்சனையை விடுங்கள். இன்னும் எண்பது ஆண்டுகள் ஆனாலும் பகத்சிங் நினைவில் இருப்பார். ஆனால் அடுத்த தலைமுறையில் சச்சின் இருக்கமாட்டார். இது உண்மை. பகத்சிங் நினைவுநாள் ஞாபகத்தில் இருக்க தேவை இல்லை. பகத்சிங்கின் வரலாறு மனதில் இருந்தால் போதும்.

என்னடா இவன் எப்பவுமே எதிர் கருத்தா சொல்றானேன்னு நினைக்காதீர்கள். இவன் சரியில்லை அவன் சரியில்லை என்று சொல்வதை விட இது சரி, அது சரி என்று சொல்லலாமே. இது பொதுவாக தோழர்களின் கட்டுரைகளை பார்த்தபோது வந்த எண்ணம். அயோக்கியர்களின் வரலாறு அரை நூற்றாண்டு கூட தாண்டாது. ஆகவே அயோக்கியர்களை அடையாளம் காட்டுவதை விட நல்லவர்களை அடையாளம் காட்டலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

பாலா said...

சச்சின் போலி என்று சொன்னதற்கு நான் அர்த்தம் கேட்டதன் காரணம், அவர் நான் விவசாயிகளுக்கு போராடுவேன் என்று சொல்லிக்கொண்டு மறுபக்கம் பெப்சி விளம்பரத்தில் நடிக்கவில்லை. அதே போல அவர் பத்தாவது கூட தாண்டவில்லை. அதனால் தங்களை போல பக்குவம் அடைந்திருக்க வாய்ப்பில்லை. அவரை பொறுத்தவரை கிரிக்கெட், விளம்பரம் எல்லாம் தொழில். அதில் வரும் பணத்தில் தான தர்மம் செய்வது புண்ணியம். யாரையும் ஏமாற்றி அவர் பணம் சம்பாதிக்கவில்லை. கம்யூனிஸ்ட்காரனாக நடித்துக்கொண்டு இன்னொருபக்கம் சொத்துக்களை குவிக்கவில்லை.

இதை சொல்வதால் நான் சச்சினின் ரசிகன் அல்ல. அவர் சார்ந்த விளையாட்டில் அவர் ஒரு திறமைசாலிதான். அந்த இடத்துக்கு கண்டிப்பாக போலியாக மோசடித்தனம் செய்து வரவில்லை.

naxalbari said...

வணக்கம் தோழர்,

உங்களுடைய மின்னஞ்சல் முகவரி இல்லை எனவே இப்பதிவை பின்னூட்டமாக இடுகிறேன் பதிப்பிக்கவும். வேர்டில் வேண்டும் என்றால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன்.மின்னஞ்சல் முகவரி naxalbaari@gmail.com

நாலா பக்கமும் அவர்கள் அம்ப‌லப்பட வேண்டும் எனவே வேறு சில தளங்களிலும் இதே பதிவு வெளிவரும்.

தோழமையுடன்
சரவணன்

பின்னூட்டமிட்டுப்பார்த்தேன் முழு பதிவையும் இட முடியவில்லை எனவே ஒரு சோதனை மின்னஞ்சல் அனுப்புங்கள் உடனடியாக பதிவை அனுப்பி வைக்கிறேன்