Thursday 1 December 2011

சில்லறை வியாபாரமும் , குஸ்புவின் விலைவாசி பற்றிய கூட்டமும்

நேற்று சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு பற்றி கலைஞர் குறிப்பிடும் பொழுது " பொருளாதாரம் சுனாமீக்குள் சிக்கிக்கொள்ளும் " என்று சொல்லிவிட்டு ,இன்று கூட்டணி கட்சி அதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தி மு க சொல்லி உள்ளது.அப்படி என்றால் கலைஞர் கூற்றின் படி மக்கள் முக்கியம் அல்ல கூட்டணி கட்சியான காங்கிரஸ் முக்கியம் , தேவை பட்டால் நாட்டையே கூட்டிக்கொடுக்கலாம் .
இப்படி வோட்டு கட்சிகள் மக்கள் முன்பு அம்மனமாய் இருக்கின்றனர் . அதில் இன்று தி நகரில் விலைவாசி உயர்வை பற்றி கூட்டம் போடப்போகிறார்கள் .விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குஷ்பு அதில் வீர உரை ஆற்ற உள்ளார் . இங்கு சிறு வணிகர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு , அங்கே விலைவாசி உயர்வை பற்றி பேசினால் தமிழக மக்களுக்கு புரியவா போகிறது . இருக்கவே இருக்கிறது இலவசங்கள் என்று கலைஞர் நினைத்து இருக்க கூடும் .

சில்லறை வணிகத்தை பற்றி நண்பர்களுடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ,அவர்கள் அதை வரவேற்றார்கள் .இதில் என்ன தவறு உள்ளது , வந்தா நல்லது தானே என்ற தொனியில் பேச்சுக்களை கொடுத்தார்கள் . நான் எனக்கு தெரிந்த அரசியல் மூலமாய் விளக்க முற்ப்பட்டேன் , பெப்சி கோக் இருவரும் எப்படி நாட்டில் உள்ள , பன்னீர் சோடா காளிமார்க் போன்ற வற்றை அழித்தார்கள் என்று விளக்கினேன் . பெப்சி கோக் வைத்து இருக்கும் கடைகளில் ஒரு FRIDGE இருக்கும் அதில் அவர்கள் பொருட்களே விற்பனை செய்யப்படும் , இவர்கள் கடைக்கு கொடுக்கும் பொழுது அந்த குளிரூட்டி இலவசமாய் கொடுக்கப்படும்
பின்பு அவர்கள் கடைக்காரர்களை மிரட்டுவார்கள் , எங்கள் பொருட்களை மட்டுமே விற்க வேண்டுமென்று . அந்த குளிரூட்டியில் பன்னீர் சோடா , போன்ற ஏனைய
பொருட்களை விற்க கூடாது என்று கடைக்காரர்கள் மிரட்டப்படுவார்கள் . அப்படி மற்ற குளிர்பானங்கள் அழிக்கப்படும் . நான் நாகப்பட்டினம் சென்ற பொழுது ஒரு கடையில் பன்னீர் சோடா கேட்டேன் அங்கு இல்லை ஆனால் பெப்சி இருந்தது என்பதே உண்மை நிலை .

மாப்பிளை விநாயகர் திரையரங்கிலே அவர்கள் சோடா விற்க முடியாது இதுவே இன்றைய நிலை , என்பதை விளக்கினேன் . மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் தண்ணீர் இலவசமாய் வழங்கப்படும் இல்லை குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் , மின்சாரமும் அப்படியே . ஆனால் அச்செலவுகள் சாமனிய மக்களின் சட்டை பையிலிருந்து உருவப்படும் .
இதனால் தான் நடக்கிறது விலைவாசி ஏற்றம் . இப்படி பெப்சி கோக் இவ்வளவு வேலை செய்தால் , வால் மார்ட் நம் சந்தையில் நுழைந்தால் ,சந்தை கைப்பற்றிவிட்டால் , அவர்கள் வைப்பது தான் விலை , அரசும் அவர்களுக்கு துணை புரியும் , விலைவாசி ஏற்றத்தை மக்கள் தலையில் கட்டும் .
இப்படி விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து , அதே நேரத்தில் சில்லறை வியாபாரத்தையும் ஆதரித்து வாக்களிக்க முடியுமா . அதை தான்
தி மு க செய்கிறது . அதிலும் குஷ்பு போன்ற வறுமையில் வாடுபவர் , தி மு க கட்சியில் இருந்து ஆரம்பம் முதல் போஸ்டர் ஒட்டிய தொண்டர் குஷ்பு பேசப்போகிறார் நானும் பார்க்க போகிறேன் .

2 comments:

வவ்வால் said...

வெண்ணிறம்,

//வால் மார்ட் நம் சந்தையில் நுழைந்தால் ,சந்தை கைப்பற்றிவிட்டால் , அவர்கள் வைப்பது தான் விலை , அரசும் அவர்களுக்கு துணை புரியும் , விலைவாசி ஏற்றத்தை மக்கள் தலையில் கட்டும் .//

அப்போ இப்ப மட்டும் விவசாயி தான் விளைப்பொருளுக்கு விலை நிர்ணயம் செய்றானா , சொல்லவே இல்லை :-))

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளை இடைத்தரகர்களும், வியாபாரிகளும் சுரண்டிவிட்டார்கள், மக்களுக்கும் பெப்பே காட்டினார்கள், இனிமேல் உள்நாட்டு தரகர்கள் வியாபாரிகள் சுரண்டலுக்கு ஒரு போட்டி வருதுனு பயப்படுறாங்க.

விவசாயம் செய்வது 60% மக்கள், வியாபாரம் செய்வது ஒரு சதவீதம் இருப்பார்கள், இத்தனை நாளா விவசாயிகள் பற்றி இந்த வியாபாரிகள் என்ன கவலைப்பட்டாங்க!

அடப்போங்கப்பா எல்லாத்துக்கும் சுதேசம் என்ற சுண்ணாம்பு தடவாதிங்க , தடவி தடவி வெந்து போச்சு!

இந்த எனது பதிவுகளையும் படிச்சுப்பாருங்க,

வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

வால்மார்ட்,கம்மோடிடி,செயற்கைத்தட்டுப்பாடு

PUTHIYATHENRAL said...

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.