

மழை நாட்களில் குடை கொண்டு செல்லாமல் இருப்பது கூட வசதி தான் அவள் தாவணி குடைக்குள் ஒளிந்து கொண்டு கடை ஓரமாய் உரசி கொண்டு நின்றோம்."ஏய் அழகி கருப்பா இருந்தாலும் கலையா தாண்டி இருக்க???" "போடா கருவாயா". என் பெயர் பாஸ்கர சேதுபதி என் அம்மாவின் அண்ணன் மகள் முத்தழகி நான் பனிரெண்டாம் வகுப்பு அவள் என்னை விட ஒரு வயது இளையவள் என் முறை பெண் என் மாமன் மகள்.
"ஏய் கருவாச்சி ஒரே ஒரு கிஸ்""போடாநாயே கிட்ட வராத செருப்பு" முத்தமிட முயற்சி செய்த போது கிழே படுத்திருந்த எங்க வீட்டு கிழவி மேல் விழுந்தேன்.......கனவு .......! "பொசங்கேட்ட பயலே" கிழவி அலறினாள் அப்பொழுது இரவு 12 .
"தொரட்டி கண்ணு கருவாச்சியே" பாடல் என் காதில் மட்டும் கேட்டது..."முத்தழகி முத்தழகி" என்று யாருக்குமே கேட்கமால் பருத்தி வீரன் கார்த்தி போல மனதிற்குள் சொல்லி கொண்டேன்.முத்தழகி என் அம்மாவின் அண்ணன் மகள் முறை இருக்கிறது நாளைக்கு எப்படியும் காதலை சொல்ல வேண்டும் பாஸ்கரா...!
மினி பஸ் நான் என் காதலியை பார்க்கும் இடம் இருவரும் ஒன்றாக பள்ளி செல்லும்
வாகனம் எனக்கு அது தேவதை பயணிக்கும் தேர்.நான் பேருந்திற்குள் தொங்கி கொண்டு வெளியில் இருந்து அவளை பார்த்து கொண்டே இருப்பேன்.அவளும் அடிக்கடி பார்ப்பாள். S A rajkumar பாடல்களை இசைத்து கொண்டிருக்கும் மினி பஸ். அன்று "காதல் என்ன கண்ணா மூச்சி ஆட்டமா" அவள் வருவாளா படத்தில் இருந்து பாடி கொண்டிருந்தது.நான் அஜித் அவள் சிம்ரன் போல் கற்பனை செய்து கொண்டேன்.
கிழே இறங்கியவுடம் அவள் அருகில் வந்தால் நான் சொல்வதற்கு முன்னாலேயே அவள் "நான் முக்கியமா ஒண்ணு சொல்லணும் கருவாயா" என்றால்.என் மனதிற்குள் பட்டாம் பூச்சி பறந்தது....இருந்தாலும் கெத்தாக "சொல்லுடி கருவாச்சி " என்றேன்."என்னைய பரிசம் போட தாய் மாமா வந்துட்டாரு டா அவர் மகனுக்கு பரிசம் போட வந்தாக அம்மாச்சி சொல்ல வேணாம்னு சொல்லிச்சு நீங்களும் என்னய்யா கேட்டுருவிகளாம் தப்பா நினைக்காத நீ என் நண்பன் உன்ட சொல்லாம இருக்க முடியல டா"
கல்யாணத்துக்கு அஜித் மன்றம் சார்பா flex வைக்கணும் கருவாயா தேவர் உட்கார்ந்திருந்து அஜித் பின்னால் நிற்பதை போன்ற ஸ்டில் வைப்பாயே அந்த flex வச்சு
வாழ்த்து சொல்லணும் டா கருவாபயலே......என்று சொல்லிவிட்டு போனால்.
போகும் போது சும்மா போனாளா திரும்பி ஒரு பார்வை பார்த்தால் தூரத்தில்
எனக்கு பிடித்த "கண்கள் இரண்டால்" பாட்டு ஓடி கொண்டிருந்தது என்னால் ரசிக்க முடியவில்லை....
3 comments:
Hi, it's a very great blog.
I could tell how much efforts you've taken on it.
Keep doing!
அழகான ஒரு சிறுகதை... காட்சிகள் கண்முன்னே வந்து சென்றன. தொடருங்கள் அன்பரே!!!
பாரதிராஜா படம் பார்த்த அனுபவம் இந்த பதிவில் உள்ளது.
தொடருங்கள் நண்பரே.
எழுத்து இடையில் மற்றும் முடிவில் இணைக்கோளை(, .) சேர்த்தால் நன்றாக இருக்கும்.
Post a Comment