Tuesday, 29 September 2009

கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..!வானம் தரையையும் தரை வானத்தையும் பார்த்து கொண்டிருந்தன.அனைத்து இடத்திலும் மௌனத்தின் இசை கேட்டுக் கொண்டிருந்தது.அந்த இடத்தில் வலியுடன் கூடிய அமைதி அப்பிக்கொண்டிருந்தது.ஒரு தனி மனிதனின் மரணத்தின் போது வலி ஒட்டி கொண்டிருக்கும்,ஒரு இனமே மரண படுக்கையில் இருக்கும் போது ஏற்படும் வலி அமைதியில் நிரம்பிக்கடந்தது.அழுவதற்கு யாரவது இருந்தால் அழுகலாம்,யாருமே உயிருடன் இல்லை.அமைதி மட்டுமே மௌன சாட்சியாய் இருந்தது.அமைதி அமைதி இல்லாமல் மௌனமாய் அழுது கொண்டிருந்தது.இது தான் மயான அமைதியோ?மழையும் அழ தொடங்கியது.
ஆம் இது 2011 , காலன் பேசுகிறேன்! .ஒரு இனமே அழிந்ததால் அவர்கள் சார்பாக பேசுகிறேன்.சகோதரிகள் கற்பழிக்க பட்டார்கள் .குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டார்கள்.முள் வேலிகள் மயானம் ஆகின.2011 ஜூன் 23 முள் வேலிக்குள் அனைத்து தமிழர்களும் கொல்லப்பட்டனர்.முள் வேலிக்குள் முழுவதும் பிண வாடைகள்.இறந்து கிடந்த பெண் பிணங்களை புணர்ந்தான் ராணுவ கோழை(வீரன்). யாவரும் இறந்து விட்டனர்.தமிழன் என்று சொல்லிக் கொள்ள கொள்ள ஒருவன் இல்லை.
இலங்கை ராணுவ அதிகாரிகள் மூவர் மற்றும் அதிபர் பிணங்களை பார்வை இட்டனர்."அனைவரும் இறந்து விட்டனர் தானே" அதிபர்.
"ஆம்" அதிகாரி தோரணையுடன்.
கண் மூடி இருந்த திலீபன் கண் முழித்து பார்த்தான்.பிண குவியலாக சகோதர சகோதரிகள்.அவன் அப்பா வீரசேகரன் மாவீரன் திலீபன் பெயரை மகனுக்கு வைத்தார்.தாயார் யாழினி கற்பழிக்கப்பட்டு இறந்தார்.அக்காவின் பெயர் மதிவதனி,அந்த பெயருக்காகவே நான்கு பேர் புணர்ந்து கொன்றனர்..தம்பி பிரபாகரன் அவனும் படுகொலை செய்யப்பட்டான்.அனைவரையும் கொல்லும் போதுஅவன் கழிவறைக்குள் சென்றதால் தப்பித்தான்.அவன் கண்மூடி படுத்துக்கொண்டிருந்தான்.
அவன் பக்கத்தில் சென்ற அதிகாரியின் துப்பாக்கி அவன் பிடுங்குவதற்கு தோதாக இருந்தது.கண் இமைக்கும் நேரத்தில் அதை பிடுங்கி அதிபர் மற்றும் மூன்று அதிகாரிகளை சுட்டான் கடைசி தமிழன்.
காலன் உறைந்து போய் பார்த்து கொண்டிருந்தது.கடைசி தமிழன் வேலியில் இருந்து வெளியே வந்தான்.அவன் கண்ணுக்குள் உக்கரம்.
அவன் காலடியில் வீதிகள் மண்டி இட்டு வீர வணக்கம் சொன்னது.இடிகள் முழக்கம் இட்டு கொண்டிருந்தது.மழை அவன் மேல் பூக்கள் தூவிக்கொண்டிருந்தது.கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..........முடிந்தால் மோதிப் பாருங்கள்.

13 comments:

kannan said...

very nice.

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

ஊடகன் said...

//கடைசி தமிழன் உயிரோடு இருக்கறான்..........முடிந்தால் மோதிப் பாருங்கள்//

மிக அருமையான பதிவு....!

கடல் அலைகள்... said...

உருக்கமான பதிவு...

கடைசி தமிழனுக்கு வீர வணக்கம்...

இளந்(இழந்த)தமிழன் said...

உண்மையிலேயே இது நடக்க கூடாத என்று மனம் ஏங்குகிறது.
நல்ல வீரமான பதிவு.

புலவன் புலிகேசி said...

தமிழனுக்கு இப்படி ஒரு பதிவு தேவை தான்... உண்மையில் நல்ல பதிவு... தொடருங்கள்.......

rajeshkannan said...

A good one.........!

வெண்ணிற இரவுகள்....! said...

கடைசி தமிழன் உள்ள வரை ஈழம் உண்டு நண்பர்களே .............நான் எழுத்துகளில் போரிடுவேன் ....

Vijay said...

Not kadaisi tamilan, Kadaisi eela tamilan erukkum varai, Becasue india tamilan vara viruppa patalum, appadiye vanthalum tamil nadu arasiyal vathigal vidamattargal, Sorry to say this eenamana tamil nadu tamilan. Aaanal Naan varuven ... Kandeerudan tamilan , EELAM KIDAIPATHU URUTHI

வால்பையன் said...

உணர்வை கிளர்தெழச்செய்யும் பதிவு!

ஒரு சந்தேகம்!
தமிழ்நாட்டில் இருப்பவர்களும் தமிழ்ர்கள் தானே!?

வெண்ணிற இரவுகள்....! said...

இல்லை வால் அவர்களே இவர்கள் மட்டை பந்துக்கும்,பிரபு தேவா காதலுக்கும் முக்கிய துவம் தருபவர்கள்.............................இல்லை என்றால் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு வோட்டு போடுவார்களா
அதனால் இவர்கள் மானம் விற்ற தமிழர்கள் என்னையும் சேர்த்து .......தமிழர்கள் அங்கே கஷ்ட படுகிறார்கள் இவர்கள் இலங்கை அரசின் பொருளாதாரம் உயர மட்டை பந்து விளையாடுகிறார்கள் நாமும் வெட்கம் இல்லாமல் பார்க்கிறோம்

psananth said...

தமிழர்களின் உணர்சி இன் வெளிப்பாடு! அருமை !!!

நையாண்டி நைனா said...

அருமை, அருமை...