
என் வீட்டில் எனக்கு பிடித்த இடம் மாடி.என் எதிர் வீட்டில் இருக்கும் பூங்குழலி,இரவு பத்து மணி வரை படித்து கொண்டிருப்பாள் அவள் வீட்டு மாடியில்.நான் அவளை படித்துக்கொண்டிருப்பேன்.
என் பெயர்.....கதாநயகன் என்றால் பெயரை சொல்லி தான் ஆக வேண்டுமா ? எத்தனயோ பூங்குழளிகளை காதல் பண்ணி சொல்லாமல் காதலித்து கொண்டு இருக்கும் எதிர் வீட்டு பையன்களுக்குள் நானும் ஒருவன்.
ஒரு நாள் என் உயிர் நண்பனிடம் "நான் முக்கியமா ஒண்ணு சொல்லணும் டா goverment girls college கிட்ட வந்திடு"."அங்க தான் டா என் ஆளும் படிக்கறா என்ன டா love தானே சொல்லு டா மாப்ள" புன்னகைத்தேன்.
நான்கு மணி பெண்கள் கல்லூரி கூட்டம் கூட்டமாய் வெளியேறினர்.என்னை போல நண்பர்களிடம் காதலியை அறிமுகம் படுத்த டி கடை முன்பாக நின்று கொண்டு இருந்தனர்.
"மாப்ள அவ தான் டா என் ஆளு" என்று காட்டி குண்டை போட்டான் என் நண்பன்.
பொறுங்கள் என்னடா சினிமா தனமாக உள்ளதே.
"இதை எல்லாம் காதல் தேசத்திலேயே பார்த்தாச்சு என்ன முக்கோண காதலா?"
நீங்கள் சொல்வது கேட்கிறது.....!
நான் சொல்லா காதலை என் நண்பனுக்காக விட்டு கொடுத்தேன் அன்று இரவு beer அடித்தேன்.
"உன் ஆள் யாருடா?"
"அவள் வரலை டா".
" நீ காட்டின பொண்ணு அது எங்க வீட்டு எதிர் வீட்டு பொண்ணு ஆச்சே" நான் சொன்னேன்.
"உங்க வீட்டு மாடிக்கு வரப்ப தான் டா பாத்தேன்" .
நான் அவளை மட்டும் பார்த்து கொண்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை.
அவன் சொன்னது என் மனதிற்குள் cinema editing போல் வந்து கொண்டிருந்தது.
தினமும் மாடிக்கு போவதால் அவள் என் friend ஆகிவிட்டாள்.
ஒரு நாள் ரோட்டில் அழுது கொண்டிருந்தாள் .
"என்ன ஆச்சு?"
"MLA பையன் என்னை கிண்டல் செஞ்சுட்டான்"
"சரி வா எவனு காட்டு" என் நண்பனின் காதலியாச்சே ,அந்த பையன் இவள் உறவு வேற.
அவனை போய் பளாரென் அறைந்தேன்.அவன் கட்சிகாரர்கள் என்னை மிரட்டினர்.என் தந்தை அந்தக்கட்சியில் இருப்பதால் தப்பித்தேன்.
"சண்டியர் தனம் பண்றியோ?" என் தந்தை.நான் முறைப்பையே பதிலாக சொன்னேன் கண்களால்.
அவள் மாடியில் எனக்கு கல்யாண பத்திரிகையை தந்தாள்
என் நண்பனும் என்னை போலவே சொல்லாமல் காதலித்து இருக்கிறான்.....நானாவது
சொல்லி இருப்பேனே ? கல்யாணத்திற்கு அவனிடம் சொல்லாமல் சென்றேன்.
கல்யாண மண்டபத்தில் speakar "ஆனந்தம் ஆனந்தம் பாடும் " பாடல் பாடிக்கொண்டிருந்தது. நான் சாப்பாடு போட்டு கொண்டு இருந்தேன். நான் ரசத்தை ஊற்றி கொண்டிருக்க, என் நண்பன் பாயாசம் ஊற்றி கொண்டிருந்தான்.....!
இருவரும் பக்கத்தில் பக்கத்தில் பரிமாறி கொண்டிருந்தோம். நாங்கள் பரிமாறி கொண்டிருந்தது நான் அந்த பெண்ணிற்க்காக அடித்த MLA மகனுக்கு. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தோம்.

அடுத்த scene wine shop .....பீர் பாட்டிலும் சோகத்தை sorry எங்கள் சோகத்தை பீர் பாட்டிலிடம் எங்கள் வாயால் சொன்னோம் .
"மாப்ள sorry உனைய அந்த பிள்ளைக்காக அடிச்சதுக்கு" நான் MLA மகனிடம்.
"பரவைல டா..."
"நண்பா முதல்ல அந்த பிள்ளைய பார்த்தது நானு" நான்....................
"அது எல்லாம் infactuation மச்சி................."
ஒரு பீர்ற நம்பற அளவு கூட figura நம்ப முடியல டா"
எங்கள் உளறல்கள் ஒரு novel போல வரும் ...........அதனால் so
"டேய் கேளு டா"
"I LOVE HER" என் நண்பன் "நானும் தான்" MLA மகன் ............
"இதுக்கு தானே அடிச்சேன்" நான்
மூவரும் half boil சாபிட்டு ஒரு "full boil" வெளியே எடுத்து .............
வீட்டுக்கு கிளம்பினோம்.........
இப்பொழுது எல்லாம் எதிர் வீட்டு மாடியை பார்ப்பதே இல்லை ....................
பக்கத்துக்கு வீட்டில் புது பெண் வந்திருக்கிறாள் பெயர் கயல்விழி .............
இப்பொழுது எல்லாம் என் நண்பர்களை வீட்டிற்குள் சேர்ப்பதில்லை ............
1 comment:
:)
Post a Comment