Friday 18 September 2009

petersburg நகரமும் மேற்கு மாம்பலமும்




என் இடுக்கைகளை படித்து யாரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம்.தனிமையை பகிர்ந்து கொள்ள முடியாதவர்களே இலக்கியவாதி ஆகிறார்கள்.என் மனதிற்கு ஏற்படும் வலிகளுக்கு வடிகாலாக இடுக்கைகளை பதிவு செய்கிறேன் வலி உள்ளவனே நல்ல படைப்பாளி உலக இலக்கியம் சொல்கிறது.


Fydor Dostovesky எழுதிய வெண்ணிற இரவுகள் ஒருவனின் தனிமையை தரிசனம் செய்கிறது. Maxim Gorky தாய் புதினம் சொல்வதும் வலி தான்.S.ராமகிருஷ்ணன் எழுதிய
உறுபசி ஒருவனின் மரணத்தை சொல்கிறது.உலக இலக்கியங்கள் வலியையும் அதனால் ஏற்படும் துயரத்தையும் தரிசனம் செய்கின்றன.


மனதுக்குள் வலி ஏற்படும் பொழுது மனிதனுக்கு கிடைக்கும் அன்பு அரவணைப்பில் தான் வாழ்கையின் ருசி இருக்கிறது.

உலக இலக்கியங்கள் யாவும் அழிவின் மௌன சாட்சியாக இருகின்றன.மனிதனின் வாழ்க்கை புல்லின் மேல் இருக்கும் பனி துளி போல உலர்ந்து கிடக்கின்றது.மனித படைப்பு மெழுகு வர்த்தி போல படைக்கும் போதே அதன் மரணம் எழுத படுகிறது.
என்னுடைய தனிமையை பதிவு செய்கிறேன்.


எனக்கும் Dostovesky நாயகனுக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு petersburg நகரம் எனக்கு சென்னை மேற்கு மாம்பலம்.என்னுடைய தூங்கா வெண்ணிற இரவுகளை பதிவு செய்கிறேன்.என்னுடைய தூங்காவெண்ணிற இரவுகள் தொடரும்.தூங்கதவனின் இரவும் துயரமும் நீளமானது.எனக்கு வலிஅதிகமானதால் நானும் படைப்பாளி

3 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல முயற்சி!!! நல்ல கருத்துக்களை வழங்குங்கள்......................

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி புலிகேசி

அகல்விளக்கு said...

வலையுலகுக்கு வருக...