Wednesday 2 March 2011

அஞ்சா நெஞ்சர் அழகிரியும் அடிபொடிகளும்


மதுரை சுற்றி எங்கு பார்த்தாலும் மதுரை மன்னர் அழகிரியின் படமும், இளவரசர் துரை அவர்கள் தலைமையில் நடைபெறும் ஏதோ ஒரு திருமணம் சம்பந்தமான ப்ளெக்ஸ் நம்மை பார்த்து சிரிக்கும் . அதுவும் ஜனவரி மாதம் அஞ்சா நெஞ்சரின் பிறந்தநாள் வருவதால் கழக கண்மணிகள் இரண்டு அடிக்கு ஒரு ப்ளெக்ஸ் வைப்பர் . இதனால் பல லட்சம் பேருக்கு மறைமுகமாய் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று கலைஞர் சொல்லக்கூடும் . நாடோடிகள் படத்தில் ஒரு காட்சி அப்பொழுது தான் நடந்து முடிந்திருக்கும் அதற்குள் ஒரு ப்ளெக்ஸ் வைத்துவிடுவார்கள் அக்காட்சி அழகிரியை நியாபகப்படுத்தும் .

அனைத்து பிரபலங்களின் மூஞ்சியை அழகிரி மூஞ்சியாய் மாற்றி ப்ளெக்ஸ் வைப்பது வாடிக்கை . ரஜினி அஜித் விஜய் டோனி சச்சின் உடம்புகள் அழகிரி மூஞ்சிக்குள் சிரிக்கும் .தி மு காவின் "MAN OF THE மேட்ச்" போன்ற வாசகங்கள் அங்கிங்கே கண்ணடிக்கும் . கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் அவர்களுக்கே ப்ளெக்ஸ் வைக்கவில்லை , அண்ணன் துரை தயாநிதி கிரிக்கெட் ஆடுவதற்கு , அவர் மட்டையை வைத்துக்கொண்டு பெவிலியனில் அமர்ந்தது போன்ற ப்ளெக்ஸ் வைத்த ஊர் இது .

கழக கண்மணிகள் வராலாறு தெரியாமல் ப்ளெக்ஸ் வைத்து மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்துவதுண்டு .
சே குவேரா என்னும் மாபெரும் போராளியை அழகிரியுடன் ஒப்பிட்டு ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மதுரையில்
சே குவேரா ஒடுக்கும் மக்களுக்காக போராடினார் , வேறு வேறு தேசம் சென்று போராடினார் , அவரை பற்றி வரலாறு தெரியாமல் கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது . நான் மற்ற போஸ்டர்களை நகைச்சுவையாய் கடந்து சென்றதுண்டு , ஆனால் இது மிகவும் எரிச்சலை ஏற்ப்படுத்தும் விதமாய் உள்ளது . ஒரு தடவை கூட பாராளுமன்றத்தில் பேசாத அழகிரி "அஞ்சா நெஞ்சராம் "கேக்கறவன் கேனப்பயலா இருந்தா எருமைமாடு aeroplane ஓட்டுமாம் "

பின் குறிப்பு :
படம் ஆதிஷ தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே மதுரைக்கு இப்ப வாங்க, அரசியல்வாதிகள், அழகிரி ப்ளெக்ஸ் இப்ப வைப்பது அதிகமா இல்லை. ஆனால் இந்த விஷேச நிகழ்ச்சிக்கு வைக்கும் ப்ளெக்ஸ் இருக்கே, அவங்க தொல்ல தான் தாங்க முடியல. சின்ன குழந்தைகளுக்கு கூட பெரிய தாதா மாதிரி வேஷம் போட்டு வைத்துள்ள ப்ளெக்ஸ் இப்ப ரொம்ப அதிகமா வைக்கிறாங்க.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

Pons sunder said...

thalaiva koduma padthuraanga!!!!!
flex apdinra perla.....