Sunday 20 March 2011

கலைஞரின் "ஒரு ரூபாய்க்கு மது " திட்டம்

மக்களை தன்வச படுத்த எதிரிகளை துவம்ச படுத்த இலவசம் தேவைப்படுகிறது ."குழந்தைகளை சச்சின் ஆக்கும் திட்டம் " என்ற திட்டம் கொண்டுவரப்போகிறோம் , ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச பேட் பந்துகள் கொடுக்கப்படும் , ஒரு தெருவிற்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்கப்படும் , ஒளிவிளக்குகளில் ஆடுவதற்கு பயிற்சி கொடுக்கப்படும் , என் பிறந்த நாள் , தயாளு அம்மாள் பிறந்தநாள் , ராசாத்தி பிறந்தநாள் ,
கயல்விழி பிறந்தநாள் ,ஸ்டாலின் , அழகிரி ,துறைதயாநிதி , உதயநிதி , மாறன் , கயவிழி பிறந்தநாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் . இத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் பெயர் வைத்தால் , சச்சின் நான் ஆட்சியில் அமர்ந்தவுடன் எனக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா வழங்குவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் . நாட்டின் முக்கிய பிரச்சனை கிரிக்கெட் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துகிறேன் .

இத்தேர்தலில் அடுத்த கதாநாயகி திட்டம் தாய்மார்களுக்காக , கணவர்கள் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு தெரு ஓரங்களில் விழுந்து கிடப்பதுண்டு , பெண்கள் கண்ணீரை பார்க்கமுடியாத நான் , வீட்டிற்கு வரும் மது திட்டத்தை செயல்ப்படுத்த உள்ளேன் .அதுவும் ஒரு ரூபாய்க்கு பீர் , ஐம்பது பைசாவிற்கு quater , தமிழ் நாட்டில் தலையாய பிரச்சனை குடித்து விட்டு ரோட்டில் விழுவது தான் என்று எழுத்துமேதை சாரு கூறி உள்ளார் ,
அதற்க்கு நம் குருஜியும் ஆதரவு தெரிவித்து buzz விட்டதால் , அவர்கள் துயர் துடைக்க வீட்டுக்கு வீடு டாஸ்மாக் திட்டம் , வீடு தேடி வரும் மது , ஒரு ஊறுகாய் பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்க முடியாத நாட்டில் ஒரு ரூபாய்க்கு மது அதுவும் வீடு தேடி வரும் மதுவினால் அனைவரும் பயன் அடைவர் .
மனைவிமார்களும் கணவன் எந்த ரோட்டில் விழுந்து கிடக்கிறான் என்பதை பற்றி கவலை இல்லாமல் இனி கலைஞர் டிவியில் என்னுடைய பாராட்டு விழா நிகழ்ச்சியை பார்க்கலாம் .

இளைங்ர்களுக்கான திட்டம் வேணாமா என்று பேரன் துறை தயாநிதி கேட்டான் ? இளைஞன் படத்திற்கு வசனம் எழுதியவன் நான் இருக்கிறது பேராண்டி , தமிழகம் முழுவதும் தெருக்கு தெரு குட்டிசுவர்கள் வைக்கப்படும் ,அந்த சுவற்றில் உட்க்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளான கிரிக்கெட் , அசின் , எந்திரன் , முடிந்தால் இளைஞன் படத்தில் கலைஞரின் வசனம் போன்ற முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கலாம் . விவாதிப்பதற்கு அலுப்பு தட்டாமல் இருக்க நாள் ஒன்றிற்கு இரண்டு கிங்க்ஸ் சிகரட் இலவசமாகவும் , சுறுசுறுப்பாய் சுறாவளி
போல செயல்பட ஒரு அரட்டைக்கு இரண்டு கோப்பை தேனீரும் வழக்கப்படும் .

தி மு க ஆட்சியில் ஏரியவுடன் "கலைஞர் வெற்றிக்கு காரணம் இலவசமா சொல்வனமா " என்ற தலைப்பில் ரஜினி கமல் வாலி வைரமுத்து கனிமொழி தமிழச்சி தங்கப்பாண்டியன் நமிதா பிருந்தா ராஜா(spectrum ) ராஜா (பாப்பையா ) உரையாட சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படும் தீபத்திருநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் .

1 comment:

DR said...

மேற்சொன்ன திட்டங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.