Thursday, 2 May 2024

இளையராஜா இசை கேட்டால் கால் வலி தீர்ந்துவிடுமா ?

 "இளையராஜா இசை இருந்துவிட்டால் பசியை தள்ளிப்போட்டு விடலாம்" என்று சொல்கிறார் ஷாலின் அக்கா. இங்கு பாடல் கேட்பது பாடல் பாடுவதெல்லாம் privilege.எப்போதும் உணவு கிடைப்பவருக்கு பசியென்பது choice, உழைக்கும் மக்களுக்கு "பசி" என்பது தேவை. உணவும், வறுமையும் இப்போதும் கொடுமையான விடயங்களே இசையைக் கேட்பதை விடுங்கள் சினிமா என்பது கூட சிலருக்கு privilege தான், அதிகம் நேரம், அதிகம் பணமிருந்தால் தான் ott யிலும் திரையிலும் படம் பார்க்க முடியும். ஏன் வாசிப்பென்பதே சில பேருக்கு மட்டுமே வாய்க்கப்பெறுகிறது.


ஒரு ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு பார்க்கும் மக்களிடமெல்லாம் தொடர்ச்சியாக வாசிக்க சொல்லிக்கொண்டே இருப்பேன். அலுவுலகத்தில் அந்தோணி என்ற நண்பர் இப்படிச் சொன்னார் "கார்த்தி உனக்கு நேரம் அதிகமா இருக்கு போல " என்றார் நண்பர் வடச்சென்னை காரார், காலை எழுந்தவுடன் வீட்டுக்கு தண்ணீர் அடித்துக்கொடுப்பதிலிருந்து நண்பரின் போராட்டம் தொடங்கிவிடும். இலக்கியம் வாசிக்கும் இன்னொரு நண்பர் தம்பி முகேஷிடம் ஒரு உரையாடலைத் தொடங்க அழைப்பேன், நண்பர் சில கிலோமீட்டர் தள்ளி தண்ணீர் பிடிக்க வந்திருப்பார்.


அவரிடம் என்ன தம்பி இப்ப எல்லாம் வாசிக்கறதே இல்லையா? என்று கேட்டால் எவ்வளவு பெரிய அபத்தமான கேள்வி, இதைக்கூட புரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் வாசித்து என்ன பயன். வாசிப்பு கடுமையான விடயம் தான் ஆனால் வாசிக்க நேரம் கிடைத்தால் மட்டுமே வாசிக்க முடியும் பொருளாதாரம் தன்னிறைவு பெற்ற ஒருவர் அதைப்பற்றி கவலை கொள்ளத்தேவையில்லை என்ற சூழலில் மட்டுமே கலை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த முடியும்.


சிலநேரங்களில் பொருளாதாரத்தில் தன்னிறைவு வந்தால் கூட நேரம் போதாமை முக்கியக்காரணமாக இருக்கும் . IT துறையில் இப்போதும் work from home க்கு பிறகு 16 மணிநேரம் வேலை செய்கிறார்கள் நண்பர்கள்.அதைத்தாண்டி தூங்குகிறார்கள், எழுகிறார்கள், காலை login நிறைய மீட்டிங், நிறைய coding , அதேநேரம் வேலை செய்த பிறகு online இல் அமெரிக்காவில் ஒரு டீம் இருந்தால் அந்த டீமுடனும் மீட்டிங்

என்று நீண்டுகொண்டே போகும்.


IT துறையில் வேலை செய்யும்போது இருக்கும் எட்டு மணிநேரத்தில் கூட நிம்மதியாக எல்லாம் தூங்கிவிட முடியாது, ஏதோ ஒன்று வேலைசெய்யவில்லை ப்ரொஜெக்ட்டில் அதைப்பற்றி யோசித்துக்கொண்டே தூங்குவோம். இது வேலை என்பதைவிட ஒரு புதிய உலகத்தில் ஒரு virutual உலகத்தில் நம்மை உலாவ விடுவார்கள். கடைசியில் அதுமட்டுமே நமக்குத்தெரியும் வெளியுலகம் நமக்கேதெரியவே தெரியாது.

அதனால்தான் பார்ட்டி, ஜங்க் உணவுகள் உடல் எடை போடுவது என்று உடல்நிலை பாதிப்புகள் கூடவே வரும் விடயம் IT துறை.


இரவு 11 மணிக்கு மீட்டிங் attend செய்துவிட்டு 1 மணிக்கு இறந்து போன நண்பரைத் தெரியும். இப்படி நேரமே இல்லாத போது போட்டியில் ஓடிக்கொண்டே இருக்கும்போது கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது படிங்க என்று சொல்வதுகூட வன்முறை ஆகிறது அல்லவா? படிக்க வாய்ப்பிருப்பவர்கள் படிக்கட்டும் என்ற புள்ளிக்கே நகர முடியும்.


உடல் உழைப்பை எடுத்துக்கொள்வோம் நண்பர் நம் தம்பி ஆகப்பெரிய வாசிப்பாளர் நம் தம்பி. பல வேலைகளுக்கு சென்று பலவிதமான சுரண்டலைப் பார்த்தவர் நம் தம்பி. ஒரு பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறார். அதாவது showroom fridge , washing machine . tv என்று சேல்ஸில் நம்பர் ஒன் கடை. 18 பேர் வேலை செய்கிறார்களாம் ஆனால் மூன்று இருக்கைகள் தான் இருக்குமாம். கடையில் 12 மணிநேரம் நிற்க வேண்டும், அந்த இருக்கைகளில் மூன்று பேர் உட்காரலாம், rotating system இல் உட்காருவாருக்கலாம்.

கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் நிற்பதெல்லாம் எவ்வளவு கொடுமை.


கேட்டால் customer ஐ கவனிக்காமல் உட்கார்ந்துகொண்டு நேரத்தை ஓட்டிவிடுவார்கள் என்று முதலாளிக்கு பயம். இத்தனைக்கும் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தான் உட்காருவதற்கான சட்டங்கள் உள்ளது


செப்டம்பர் 6 2021 இல் Tamil Nadu Shops and Establishments Act என்ற ஒரு சட்டம் அமைச்சர் கணேசனால் கொண்டுவரப்படுகிறது. அது தொழிலாளியின் உட்காரும் உரிமையை உறுதி செய்கிறது. இது எதிர்ப்பே இல்லாமல் ஒத்தகுரலில் நிறைவேற்றப்படுகிறது. சட்டமெல்லாம் சரிதான் ஆனால் 2024 மே தினம் முடிந்திருக்கிறியாது அந்த சட்டம் அடிமட்டத்தில் எப்படி உள்ளது என்று உறுதி செய்வது யார்?


இப்படி மே தினம் எட்டு மணி நேரத்தை வேலைக்கு உறுதி செய்தாலும் களத்தில் corperate தொழிலாளியாக இருந்தாலும் ஒரு ஷோரூம் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்தாலும் எந்த அளவு சுரண்டப்படுவோமோ அந்த அளவு சுரண்டப்படவே செய்வோம். அப்படியிருக்க அவர்களை வாசி வாசித்தால் உன் வாழ்க்கை வசந்தமாகிவிடும் என்று சொல்வது எப்படி?


அவர்களிடம் அக்கா ராஜா பாட்டைக் கேட்டால் கால்வலி பறந்துவிடும் என்று சொன்னால் எரிச்சல் வருமல்லவா? IT துறையில் அத்தனை call களை பேசிவிட்டு வரும்போது, காதில் தென்றல் வந்து தீண்டும் போது பாடல் கேட்டால்கூட எரிச்சல் தான் வரும். சில நேரங்களில் ஐடி துறை நண்பர்கள் தோழர்கள் மனதை பறி கொடுத்தமாதிரியே இருப்பார்கள், வேலை pressure அதிகமிருக்கும். சில இடங்களில் உடலால் பாதிக்க படுவார்கள் சிலர் மனதால் பாதிக்கப்படுவார்கள். நாமெல்லாம் நாகரிக சமூகத்தில் இல்லை என்பதுதான் உண்மை, ஒன்று சாதிய சுரண்டல் இந்த நகர்ப்பக்கம் வந்தால் முதலாளித்துவ சுரண்டல்.


சரி குறைவாக சம்பளத்துக்கு வேலைக்கு போகவேண்டியது தானே என்றால், LKG பள்ளி பீஸ் நம்மை தலை சுற்ற வைக்கும். ஓடியே ஆகவேண்டும், இல்லையென்றால் பின்தங்க மாட்டோம், புதைந்துவிடுவோம்.

அரசு பள்ளிகள் இருக்கிறதா? சேர்ப்பதற்கு, உலகமயத்துக்கு பிறகு அரசுப்பள்ளிகள் குறைந்த அளவிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைத்தாண்டி பொது புத்தி என்ன சொல்கிறது தனியார் பள்ளிகள் தரமான பள்ளிகள் என்று சொல்லிக்கொடுக்கிறது. அத்தனை நெருக்கடியில் இருக்கும் இருந்துகொண்டே இருக்கும் மனிதர்கள் நம்மவர்கள்.


அதாவது இங்கு அமைதியான வாழ்க்கை என்பதே privelage. நானெல்லாம் போட்டியில் ஓடும் குதிரை அல்ல.

எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிம்மதி இருந்தால் போதும் என்று இருப்பவன், நம் மனநிலை எல்லாம் போட்டியாளரின் மனநிலை அல்ல கவிஞனின் மனநிலையில் இருப்பவன். அப்படியிருக்க நாம் survive ஆக்கவேண்டுமென்றாலும் ஒரு ஆட்டை போல மாட்டை போல இருக்க முடியாது ஓடவே செய்யமுடியுமல்லவா? இந்த சுரண்டல் வடிவத்தில் பிடித்த படத்தை பார்த்து. பிடித்த புத்தகத்தை படித்து, பிடித்த அருவியில் குளித்து. நான்கு விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் கொஞ்சம் backup இருக்கவேண்டும். அதுவும் விலைவாசியில் எத்தனை நாட்கள் நாம் தாக்குப்பிடிக்க முடியுமென்பதற்கு உத்தரவாதம் இல்லை.


ஆனாலும் உழைக்கும் மக்கள் வாசிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அப்போதுதான் உழைக்கும்

மக்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார்கள், இருந்தாலும் ஒட்டுமொத்த பிரச்சினையை சொல்கிறேன், படிப்பதற்கு தடையை சொல்கிறேன். டால்ஸ்டாய் படித்துவிட்டால் பசி தீர்ந்துவிடும் என்று நான் சொல்ல மாட்டேன். கலை, கலைஞன் முக்கியமே ஆனால் அதை romanticise செய்வது அபத்தத்தின் அபத்தம். ஓரளவுக்கு மேல் இலக்கியம், கலை என்பதைத்தாண்டி ரத்தமும் சதையுமான வாழ்வே முக்கியமானது. அதை ஒழுங்குபடுத்த கலை தேவை, சிறுகதை தேவை மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அது கண்ணாடி.


கலை என்பது கண்ணாடி, இருப்பதை நமக்கு சுட்டிக்காட்டும் அளவு கலையின் முக்கியத்துவம் உண்டு. இருந்தாலும் நாம் எப்படி இருக்கிறோம் நம் சமூகம் எப்படி இருக்கிறது என்பதையே கண்ணாடி பிரதிபலிக்கும். சில நேரம் உரையாடவும் செய்யும் அந்த அளவில் கலை முக்கியம். அதற்காக கலையை வைத்தே அனைத்தையும் மாற்றிவிட முடியுமெனபதல்ல, அது ஒரு parellel movement அது main movement அல்ல.


அது parellel movement என்றாலும் எல்லா கலையும் அந்த இடத்துக்கு வராது, ஓரளவு மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் கலைகளே அந்த இடத்துக்கு வரமுடியும். நம் வாழ்வை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள தான் கலை. அதாவது கலைந்திருக்கும் முடியை கண்ணாடியை பார்த்து சரி செய்வோமே அந்த அளவு கலையின் தேவை இங்கு உண்டு.


இன்னொரு விடயம் முதலில் இசையா? மொழியா? என்றொரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. " சென்ராயன் நாம இப்ப இருக்கற சூழலில் இதெல்லாம் தேவையா சென்ராயன் " என்ற வசனம் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது


No comments: