Friday, 31 May 2024

MAD COMPANY == தனிமையை நிரப்பும் வியாபாரம் == SPOILER ALERT

 முதலாளித்துவம் வேர்களை பிடுங்கி எரிகிறது.  பணத்தேவைக்கு நம்மை வெளியூருக்கு அடித்து துரத்துகிறது.  நண்பர்களை  வெவ்வேறு சமூக அடுக்குகளில் நிறுத்துகிறது.  ஒன்றாக இருந்த நண்பர்கள் வர்க்கமாக உடைந்து கொண்டே இருக்கிறார்கள் .  கூட்டுகுடும்பங்கள் தனிகுடும்பாகிறது. அண்ணனுக்கு வேலை சென்னை என்றால் தம்பி மதுரை இன்னொரு தம்பி சிங்கப்பூர் என்று குடும்பங்கள் இயல்பிலேயே தனித்தனியாகிறது.    அது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து  கணவன் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் என்று பொருளாதாரம் தேவைகள் எந்த உறவையும்  மாற்றிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் எந்த உறவையும்விட   பொருளாதாரமே முக்கியமானதாக்குகிறது. 

அந்தப் பொருளாதாரம் தனிப்பட்ட உறவுகளை நட்பை, காதலை, திருமணத்தை, உறவுகளை, குடும்பம் என்னும் அமைப்பை அனைத்தையும் மாற்றுகிறது. ஒரு காலத்தில் புனிதமென்றல்லாம்  பார்க்கப்பட்ட உறவு, நட்பு, காதலெல்லாம்  இந்த முதலாளித்துவ தாக்குதல்களால் செயலிழந்து விட்டன. ஈரமிருக்கும் இடங்களில் எல்லாம்   காய்ந்திருக்கிறது.  நம் மனதளவில்  ஈரமே இல்லாத வறண்ட  மனதுடைவராக மாற்றுகிறது முதலாளித்துவம். 

கொஞ்ச நாட்களுக்கு முன்னே "பர்ஹானா " என்றொரு படம் தனிமையில் இருப்பவர்கள் பேசுவதற்கு  ஒரு கம்பெனி  அந்த முகத்தை மறைத்துக்கொண்டு பேசும் நபரைப்பற்றி நமக்கு எந்த தகவலும் இருக்காது, ஆனால்   அந்தத்தனிமைக்கு   ஒரு உறவைபோல போனில் பேசுவதைப்போல ஒரு நிறுவனத்தில்  நாயகி  வேலை  செய்வார்.  அதாவது emotional service என்று சொல்கிறார்கள், அந்த service கொடுக்கும் நிறுவனத்தைப்பற்றி   பர்ஹானா  பேசியிருக்கும். 80 களில்  இப்படி ஒரு கதை சொல்லியிருந்தால் இது எல்லாம்  கதையா என்று சிரித்திருப்பார்கள் சொல்லப்போனால் இப்படி ஒரு சிந்தனைப்போக்கே இயக்குனர்களுக்கு   வந்திருக்காது. 

ஒரு கலை ஏன்  ஒரு கற்பனைகூட    சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்குமல்லவா. பர்ஹானா  படத்தில் போன்  கால்   மூலமாக  emotional service செய்வார்கள்.    அப்படியொரு கதையே "தனிமையை" விலை பொருளாக விளைவிக்கும்  சமூகத்தில் தானே உற்பத்தி செய்ய முடியும் .  அப்படி ஒரு வெப் சீரிஸ்  தான் "MAD  COMPANY ".

ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நடிகர் ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்.  நிறுவனத்தின் நோக்கம் emotional service.  அம்மா, அப்பா, மனைவி, காதலி. மகள் என்று மக்கள் தேவைக்காக  நடிக்க வேண்டும்  அதற்கொரு application.   அந்த நிறுவனம் நடத்தும் போது ஏற்படும் சிக்கல்கள்,  நடிப்பு பற்றிய உரையாடல்,   ஒவ்வொரு கதைக்கு பின்னால் இருக்கும் emotional தேவைகள்  என்று புதிய கதைக்களம்.   தமிழில் crime, அரசியல் என்று   அரைத்த  மாவையே அரைக்காமல்  புதிய கண்ணோட்டத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

எத்தனை விதமான emotion  தேவைகள் உண்டு என்பதை  நல்ல விறுவிறுப்பாக சுவாரசியமாக கொடுத்திருக்கிறார்கள்.   அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.  இந்தக் கதையை விட இந்தக் கதை   உருவான  சமூக பொருளாதார தேவைகளே இந்தக் கதையை முக்கியமான கதையாக மாற்றியிருக்கிறது, குறைந்தபட்சம்  எனக்கு அப்படி ஒரு நவீன கதையாக உளவியல் ரீதியான கதையாகத் தோன்றியது.  

இருந்தாலும் வந்தது ஆஹா ott ,  பிரசன்னா எல்லாம் தமிழக மக்கள் மனதில் பெரிய ஸ்டார் இல்லை என்பதிலேயே   கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சீரிஸ் என்று தோன்றியது. தமிழிலும் புதிய கதை சொல்லல்களும்,  புதிய களங்களுடன் வரும் கதைகளும் இருக்கவே செய்கிறது. மார்க்கெட் பெரிதாக இல்லாததால்  கண்டுகொள்ளப்படாமல் போவதால் மறுபடியம் அரைத்த மாவுக்கு வந்துவிடுகிறோம். 

2024  இல் சட்டென்று யாரிடமாவது பேசவேண்டுமென்று போனை நோண்டுகிறோம்,   போன் பேச முடியாதவர்கள்  whatsapp மட்டும் பண்ணுங்கள் கொஞ்சம் பிஸி என்று சொல்லிவிட்டால்,  ஆவேஷம்  பகத் பாசில்  போல ஆகிறோம். கடைசியில் உணர்ச்சிகளை சினிமா, நாவலில் தேடிக்கொண்டிருக்கிறோம். கடைசியில்  உணர்ச்சிகளுக்கு OTT  யில்  சரணடைகிறோம்.  

ஏன் மஞ்சுமல் பாய்ஸ் படம் ஓடுகிறது,  அப்படி ஒரு நட்பு 2024 இல் இருக்க வாய்ப்பில்லை. முதலாளித்துவத்தில் உணர்ச்சிகளே  உணர்வுகளே  fantasy ஆகிவிட்டது.  அதனால் அப்படி ஒரு நட்பை திரையில் பார்த்தவுடன் இல்லாத ஒன்றை  பார்த்தால்  ஓரு உணர்ச்சி பீறிடும் அல்லவா அது திரையரங்கில் ஏற்பட்டது , முன்பெல்லாம்   

பாட்ஷா படம் போல படம் பார்த்தால் தான் goose bumbs  வரும், இப்போது எல்லாம் எளிய உணர்ச்சிகளை  எதார்த்த  உணர்ச்சிகளை காட்டினால்  கல்லா காட்டுகிறது இயல்பில்  நம் வாழ்வில் வெற்றிடத்தை  சினிமா,  ott  இவை நிரப்புகின்றன.

சொல்லப்போனால் இது தான் "mad company ". உணர்ச்சிகள் இல்லாத இடத்தையெல்லாம் சினிமா ott மூலம்  நிரப்புவது. அப்படி சிலருக்கு குடி mad company ஆகிறது, சிலருக்கு  இளையராஜா இசை mad company ஆகிறது. 

இந்த mad company என்பதே metaphor தான்.  நிஜத்தில் தேட முடியாததை virutual ஆகத் தேடுவது mad company  சொல்லப்போனால்  facebook writeup கூட mad company யாக இருக்கலாம்.



No comments: