
அமருக்கு கல்யாண நாள். அவன் மென்பொருள் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜர்.அன்று மனைவியுடன் படம் பார்ப்பதற்கு சத்யம் தியேட்டரில்
மாலை நான்கு மணி காட்சிக்கு புக் செய்து இருந்தான்.மாதம் நான்கு லட்சம் சம்பளம்,நல்ல மனைவி,காதல் திருமணம்,அதுவும் இன்று கல்யாண நாள்.மூன்று மணிக்கு தனது டீமில் உள்ள டீம் தலைவரிடம் அன்று செய்ய வேண்டிய வேலையை சொல்லி விட்டு,டோயோடோ காரிலே சிட்டாக பறந்தான்.
டீம் leader கணேஷ் அமர் சொன்ன வேலையை முடிக்க நான்கு முப்பது
ஆனது.அவனிற்கு வேலை என்று அன்று அவசரமாக வீடு திரும்பினான்.வீடு
வந்து சேரும் போது மணி ஐந்து பதினைந்து.கணேஷ் மனைவி உமா
காத்துக்கொண்டிருந்தாள்.
"என்னங்க கல்யாண நாள்,கொஞ்சம் சீக்கிரம் வந்திர்கலாம்". என்றாள்
"காசில படம் போலாமா" என்றான்.
"என்ன படம்"
"அஜித் படம் கௌதம் மேனன் இயக்குனர்".
"உனக்கு தான் அஜித் பிடிக்குமே" என்றான்.
"ஆனா இன்னிக்கு எப்படி டிக்கெட் கிடைக்கும்" என்றாள்.
"அப்படி இல்லைனா கோயம்பேடு ரோகினி போவோமே ஆறு theatre எல்லா
theatrelayum முதல் நாள் அதனால தல படம் தான் போட்டிருப்பாங்க அங்க
கிடைக்கும்" சரி ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடலாம்.
ஆட்டோ பிடித்தான்,ஆட்டோ ஓட்டுனர் மாரி,அவர்களை
ரோகிணியில் இறக்கி விட்டார்,அதற்க்கு அவருக்கு கிடைத்தது நூறு ருபாய்.
வீட்டிற்கு புயல் வேகத்தில் வந்தார்.அவர் வீடு இருப்பது
கண்ணமாபேட்டை.அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தார் மாரி,மணி
ஆறு பத்து."இன்னிக்கு இன்னா நாலு நம்ப கல்யாண நாலு,கிளம்பு வா டி"
"கிர்ஷ்ணவேணி போகலாம் " என்றான்.
"பதினஞ்சு ரூபா டிக்கெட் நமக்கு தேவையா" .....அவன் மனைவி மல்லி.
"ஒரு நாள் தானே " என்று அவளை பார்த்து சிரித்தான் ........
படங்கள் வேறு இடங்கள் வேறு ........காதல் ஒன்று...