Friday 23 October 2009

ஏவுகணை மேல் ஒரு பறவை















போர் நடந்து கொண்டு இருந்தது ,


இந்தியா பாகிஸ்தான் சண்டை இட்டுக்கொண்டனர் .............எல்லை பிரச்சனை


ஏவுகணைகள் வான் நோக்கி பறந்தன ..........................................


அந்த ஏவுகணை மேல் ஒரு பறவை அழகாய் பறந்து கொண்டிருந்தது .......


இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ............
எல்லைகள் இல்லாமல் தொல்லைகள் இல்லாமல் ...........


மனிதன் மட்டுமே மனிதம் பேசி விட்டு .........மனிதனை திண்பவன்


நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே


27 comments:

புலவன் புலிகேசி said...

//நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே //

நல்ல விஷயம் தான் ஆனால் நம்மை அழிக்க நினைக்கும் பொழுது வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டிருக்க நான் ஒன்றும் மரம் அல்ல இந்தியன்...

வெண்ணிற இரவுகள்....! said...

அப்படி என்றால் ஜாதி பிரச்சனைகளையும் ...சரி என்று சொல்கிறிர்களா .......
அந்த ஜாதி அருவாள் எடுத்தால் நான் துப்பாக்கி எடுக்கவா ...........

தமிழ் அமுதன் said...

///நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே ///

உண்மைதான் ...!


///அந்த ஜாதி அருவாள் எடுத்தால் நான் துப்பாக்கி எடுக்கவா ...........///

துப்பாக்கி எடுக்க வேண்டிய அவசியம் இருக்கோ இல்லையோ?

அருவாளிலிருந்து காத்து கொள்ள எதையாவது எடுத்துதான் ஆகணும்...!

க.பாலாசி said...

//மனிதன் மட்டுமே மனிதம் பேசி விட்டு .........மனிதனை திண்பவன்

நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே //

கடைசியா சொன்னீங்க பாருங்க...இது செம டச்....மனிதம் தழைத்தால் மட்டுமே மானுடம் தழைக்கும்....

நல்ல இடுகை...நல்ல சிந்தனை..

வெண்ணிற இரவுகள்....! said...

வன்முறை எப்பொழுதுமே முறை ஆகாது ............................
நான் இந்தியன் என்பது வெறி ........
நான் மனிதன் என்பது மட்டுமே உண்மை ........

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பாலசி

புலவன் புலிகேசி said...

//அப்படி என்றால் ஜாதி பிரச்சனைகளையும் ...சரி என்று சொல்கிறிர்களா .......
அந்த ஜாதி அருவாள் எடுத்தால் நான் துப்பாக்கி எடுக்கவா ...........//

தீவிரவாதிகள் இந்தியாவில் உருவாக்கப்படுவதில்லை...அதை நாம் தீவிரவாதத்தால் எதிர்ப்பதும் இல்லை... அதனால் தேவைப்படும் நேரத்தில் எதிர்த்தே ஆக வேண்டும். இதை கேடுகெட்ட ஜாதியுடன் ஒப்பிட்டு தேசத்தைக் கேவலப்படுத்தாதீர்கள்...

வெண்ணிற இரவுகள்....! said...

இலங்கை ராணுவத்திற்கு பயற்சி கொடுத்தது யாரு ...................??????
எதற்கு பயற்சி கொடுத்தார்கள் ..........தமிழனை கொலை செய்ய ........
அது தீவிரவாதம் இல்லையா .............
பாகிஸ்தானில் வங்காளத்தை பிரித்தது யாரு ...?

தேசம் என்ற ஒன்றே மனிதன் கண்டுபிடித்தது தான் ..................
தேசம் என்ற பற்றும் ஜாதி போன்ற ஒன்றையே குறிக்கிறது .........

ஏன் தண்ணீர் பிரச்சனை என்று ஒன்று வந்தால்
நாம் இந்தியனாக இல்லாமல் தமிழனாக கர்நாடகனாக மாறுகிறோம் ..........?????????

வெண்ணிற இரவுகள்....! said...

வட கிழக்கு பகுதிகளை அரசு கவனிப்பதில்லை ...........மக்கள் ஒடுக்க படுகிறார்கள் ..............
அது தீவிரவாதத்தை வளர்காதா ..............................இந்தியாவும் தீவிரவாதத்தை தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது .........ஏன் இந்தியன் என்றால் அனைவருக்கும் ஒன்றான கவனிப்பு
இருக்கிறதா

நான் மனிதன் மட்டுமே ...............

புலவன் புலிகேசி said...

//இலங்கை ராணுவத்திற்கு பயற்சி கொடுத்தது யாரு ...................??????
எதற்கு பயற்சி கொடுத்தார்கள் ..........தமிழனை கொலை செய்ய ......//

ஒரு சான்று கொடுங்கள்ப் பார்ப்போம். இந்திய அரசாங்கம் தான் உதவி செய்தது. இராணுவம் அல்ல...

//தேசம் என்ற ஒன்றே மனிதன் கண்டுபிடித்தது தான் ..................
தேசம் என்ற பற்றும் ஜாதி போன்ற ஒன்றையே குறிக்கிறது .........//

உண்மைதான் இது இல்லை என்றால் உலகை ஆள வேண்டும். அதன் பின் உலகை நேரிபடுத்துவது என்பது இயலாத காரியம். இதில் தவறொன்றும் இல்லை.

//ஏன் தண்ணீர் பிரச்சனை என்று ஒன்று வந்தால்
நாம் இந்தியனாக இல்லாமல் தமிழனாக கர்நாடகனாக மாறுகிறோம் ..........????????//

இந்தப் பிரச்சினையும் ஆளுமையால் வந்தது தானே தவிர சாதாரண மனிதனால் வந்தது அல்ல..ஜாதி என்பது சாதாரண மனிதனுக்குண்டு ஆனால் ஆளுமை???

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் இந்திய அரசாங்கம் தான் உதவி செய்தது ...........
தீவிரவாத்தை வளர்த்து .....இலங்கை அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார் ....
இதை விட சான்று வேண்டுமா ..........................."இந்தியா இல்லை என்றால் அவர்கள் ராணுவ பயற்சி கொடுக்க வில்லை என்றால் நாங்கள் சாதித்திருக்க முடியாது " என்று சொல்லி இருக்கிறார் இதை விட வேறு என்ன சான்று சொல்ல முடியும்

வெண்ணிற இரவுகள்....! said...

கோவையில் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து நம் இந்திய ராணுவம் ..........
கோவை விமான நிலையத்தில் இருந்து ஆயுதங்கள் சென்றது எதற்கு .......
இப்படி பல ஆதாரங்கள் உள்ளது நண்பா

அன்புடன் மலிக்கா said...

மகத்துவமான மனிதம் மட்டுமே
மனிதனை மனிதனாக்குகிறது,

பாலாஜி சூப்பர்,
தாங்களின் வரிகளில்
வேகமும் விவேகமும் தெரிகிறது..

அன்புடன் மலிக்கா said...

மன்னிக்கவும் வெண்ணிறவே,
வெண்ணிறவே சூப்பர் ன்னு எழுதுவதற்கு பதிலாக
//பாலாஜி சூப்பர்// என்று எழுதிவிட்டேன்..

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி மல்லிகா நான் பாலாசி அல்ல கார்த்திக்

ஸ்ரீராம். said...

மனிதன் மட்டுமே மனிதம் புனிதம் என்றெல்லாம் பெருமை பேசுகிறான். பேசத் தெரிந்தவன், முடிந்தவன் அல்லவா...? விலங்குகளும் பறவைகளும் சொல்ல முடியா சொந்தத்தைட் தம்முள் சொல்லாமலே பகிர்ந்து கொள்கின்றன.
பிடித்த விஷயங்களில் 'என் பெயர் ராமசேஷன்', 'கதா விலாசம்' பெயர்களைப் பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் பரவியது.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் மனிதன் பெருமை மட்டும் தான் பேசுகிறான் ..........ஆனால் விலங்குகள் அதை செய்கின்றன ....எந்த பறவையும் இது என் தேசம் என்று சண்டை இடுவதில்லை ,,,,,,,,,,
மனிதன் பெருமை பேசாமல் மனிதத்தை ....செயலில் கொண்டு வர வேண்டும்

ஹேமா said...

புலவன் புலிகேசி ...
//இலங்கை ராணுவத்திற்கு பயற்சி கொடுத்தது யாரு ...................??????
எதற்கு பயற்சி கொடுத்தார்கள் ..........தமிழனை கொலை செய்ய ......//

ஒரு சான்று கொடுங்கள்ப் பார்ப்போம். இந்திய அரசாங்கம் தான் உதவி செய்தது. இராணுவம் அல்ல...//

என்ன புலிகேசி...முழுப்பூசனிக்காயை அரசியல்தான் மறைக்கிறது என்றால் நீங்களுமா !

மனித இனம் மட்டுமே தன் இனத்தைத் தானே தின்னும்.மனிதன் மனிதம் மறந்து நிறையக் காலங்களாச்சு.

அன்புடன் மலிக்கா said...

நன்றி கார்த்திக், என் பெயரும் /மல்லிகா/ அல்ல
மலிக்கா, ஓகேவா..

புலவன் புலிகேசி said...

//என்ன புலிகேசி...முழுப்பூசனிக்காயை அரசியல்தான் மறைக்கிறது என்றால் நீங்களுமா !//

தவறாக நினைக்காதீர்கள் ஹேமா. நான் சொல்லியிருப்பது இந்திய இராணுவத்தை குறை சொல்லாதீர்கள். இந்திய அரசாங்கத்தை சொல்லுங்கள் என்று தான். அரசாங்கம் சொல்வதை விருப்பம் இல்லை என்றாலும் செய்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.....

மா.குருபரன் said...

//நான் 'இந்தியன்' என்று சொல்வது கூட ஜாதி வெறியே ...........
நான் 'மனிதன்' மட்டுமே //

நன்றாக உள்ளது நண்பரே..

மா.குருபரன் said...

//
//இலங்கை ராணுவத்திற்கு பயற்சி கொடுத்தது யாரு ...................??????
எதற்கு பயற்சி கொடுத்தார்கள் ..........தமிழனை கொலை செய்ய ......//

ஒரு சான்று கொடுங்கள்ப் பார்ப்போம். இந்திய அரசாங்கம் தான் உதவி செய்தது. இராணுவம் அல்ல...// //

நண்பர் புலவன் புலிகேசிக்கு....
இலங்கை தமிழனை எப்படி எப்படியெல்லாம் இந்திய ராணுவம் கொலை செய்தார்கள் என்று பட்டியல் இட எல்லா ஈழத்தமிழனாலும் முடியும்.
பிஞ்சுக் குழந்தைகளை கொதிக்கும் தார் பீப்பாவுக்குள் போட்டு காட்டியதே இந்திய ராணுவம் தான்.தாய்முன் பிள்ளையை கற்பழித்து வீதியில் வீசியதும் இந்த இந்திய இராணுவமும் தான்....
அதவுடுங்க... கோபிக்காதீங்க.. என்னமோ கவலையா இருந்திச்சு... பலபேருக்கு தெரியாமலே எம்மீதான கொடுமைகளை கச்சிதமாக இந்தியா (முடித்துள்ளது)மறைத்துள்ளது...hhhhmmm

Anonymous said...

//////////தவறாக நினைக்காதீர்கள் ஹேமா. நான் சொல்லியிருப்பது இந்திய இராணுவத்தை குறை சொல்லாதீர்கள். இந்திய அரசாங்கத்தை சொல்லுங்கள் என்று தான். அரசாங்கம் சொல்வதை விருப்பம் இல்லை என்றாலும் செய்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு...../////////


அய்யய்யோ என்ன ஒரு தேச பக்தி !!

முதலில் இந்தியா உதவியே செய்யவில்லை என்றார் இப்போதோ
இந்திய இராணுவத்தை குற்றம் சொல்லக்கூடாதாம் இந்திய அரசை தான் சொல்ல வேண்டுமாம்!
விருப்பம் இல்லை என்றாலும் அவர்கள் சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவ‌ர்களாம், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த அடிமைகள் தான் காக்ஷ்மீரி பெண்களையும், வடகிழக்கு மாநில பெண்களையும்,ஈழப்பெண்களையும் கற்பழித்தது.

பொதுவாகவே இராணுவத்தை பற்றி டால்ஸ்டாய் அழகாக ஒன்றை சொல்லியுள்ளார். 'அவர்கள் மேலதிகாரிகளுக்கு அடிமைகள் தமக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டான்கள், மொத்தத்தில் ஒழிக்கப்பட வேண்டிய‌ காட்டுமிராண்டிகள்'.

எனவே இந்திய இராணுவம் ஒன்றும் அப்பாவி கூட்டம் அல்ல மாபெரும் பாவிகளின் கூட்டம் அது.

புலிகேசிக்கு..
இராணுவத்தை நேசிப்பது நாட்டை நேசிப்பது ஆகாது. மக்களை நேசியுங்கள்.

இளந்தமிழன் said...

///இராணுவத்தை நேசிப்பது நாட்டை நேசிப்பது ஆகாது. மக்களை நேசியுங்கள்///

சூப்பர் !

புலவன் புலிகேசி said...

//முதலில் இந்தியா உதவியே செய்யவில்லை என்றார் இப்போதோ
இந்திய இராணுவத்தை குற்றம் சொல்லக்கூடாதாம் இந்திய அரசை தான் சொல்ல வேண்டுமாம்!//

//ஒரு சான்று கொடுங்கள்ப் பார்ப்போம். இந்திய அரசாங்கம் தான் உதவி செய்தது. இராணுவம் அல்ல... //

நண்பரே இங்கு நான் சொல்லியிருப்பதை நன்றாக படித்து விட்டு பதில் சொல்லுங்கள். இந்திய அரசாங்கம் உதவி செய்கிறது என்று சொல்லியிருக்கிறேன். உதவி செய்ய வில்லை என்று எங்கே சொல்லி இருக்கிறேன்????

புலவன் புலிகேசி said...

//எனவே இந்திய இராணுவம் ஒன்றும் அப்பாவி கூட்டம் அல்ல மாபெரும் பாவிகளின் கூட்டம் அது.//

//சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த அடிமைகள் தான் காக்ஷ்மீரி பெண்களையும், வடகிழக்கு மாநில பெண்களையும்,ஈழப்பெண்களையும் கற்பழித்தது.//

அவர்களை அப்பாவிக் கூட்டம் என்று சொல்லவில்லை. எல்லாத்துறைகளிலும் இருக்கும் சில தவறானவர்களை வைத்து இராணுவத்தை தரக்குறைவாக பேசாதீர்கள். இத் தேசத்திற்காக உயிர் நீத்த உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் வீரர்களை போல் தேசத்திற்கு உயிர் கொடுக்க உங்களுக்குத் துனிவிருக்கிறதா????

வெண்ணிற இரவுகள்....! said...

புலிகேசி நான் ராணுவத்தையே குறை சொல்ல வில்லை ............ராணுவம் என்பது அம்பு அதை எரியும் அதிகாரத்தை நான் வெறுக்கிறேன் ................ஆனால் காஷ்மீரில் ஈழத்தில் ராணுவம் செய்த தவறு கருப்பு வரலாறு ....நண்பரே ...........மனிதம் என்பதே உண்மை .........