Sunday 25 October 2009
நடமாடும் ராணுவமே
நாட்டின் எல்லைக்குள் தீவிரவாதிகள் ,போருக்கு தயாரானான் ராணுவ வீரன் மதுரைக்காரன் மாரி.லே பகுதி லடாக்கின் தலை நகரம் ,வடக்கு காஷ்மீர் .சில பாகிஸ்தானிய வரைபடங்களில் அவர்கள் நாட்டில் அதை சேர்த்து உள்ளதாக தகவல்.மொத்தமாக சொல்ல போனால் POK Pakisthan occupid kashmir.
ஆம் கடும் குளிர் ,நாமெல்லாம் IPL வீரர்களை போர் வீரர்களாக பார்த்து கொண்டிருந்த சமயம்.அவர்கள் battalion சேர்ந்த வீரர்களில் அவனது உயிர் நண்பன் சரண்தீப் சிங்க் தற்போது தான் கல்யாணம் ஆனவன் . M14 ரக கன்னி வெடியில் காலடி வைத்து சிதறி போனான் .குருதி மாரியின் முகத்தில் தெறித்தது.உடல் சிதறி போக மாரியின் மனமும் சிதறியது....சிங் கடைசி நேரத்தில் யாரை நினைத்து இருப்பான் ,மனைவியை அல்லது அம்மாவை.மனது அவனை உலுக்கியது.
எது சண்டை இட சொல்கிறது.எவனுடைய மண்ணாசை??????எதற்கு அதிகாரம்????பல அப்பாவி மக்கள் சாவதை தவிர சண்டையால் எதை சாதித்தோம்.நான் மண் ஆசையோடு இல்லை என்றாலும் .எதிரி நம்மை கொன்று விட்டு மண்ணை பிடிப்பான். மண் தின்னும் உடலுக்குள் மண் திங்க ஆசையோ......இப்படி யோசித்து கொண்டிருக்கும் போதே, அவனை குண்டு ஒன்று துளைத்தது.ஆம் சண்டை முடியாமல் போனால் அவன் உடல் கூட மிஞ்சாது .கழுகிற்கு இரையாக போகிறதா உடல் ?????
ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே .....................
உள்துறை அமைச்சருக்கு பத்திரிகைகள் பாராட்டு, இந்தியா சண்டையில் வெற்றி பெற்று விட்டதாம் ......"RAW,MOZART போன்ற உளவு அமைப்புகள் ஏற்கனவே ஊடுருவல் பற்றி சொன்னதாமே .நீங்கள் தாமதமாக நடவடிக்கைகள் எடுத்தீர்கலாமே ? " என்று ஒரு பத்திரிகையாளன் ....."அது தான் election வருதே அதை வைத்து தான் வோட்டு வாங்க வேண்டும் " என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார் அமைச்சர் "No questions" என்று கோபமாக கத்தினார் .......
அவர் தமிழகத்தை சேர்ந்தவர் .கட்சி அல்லகைகள் "நடமாடும் ராணுவமே " என்று சுவரொட்டிகள் வைத்தனர் .அடுத்த முறை MP யும் அவரே .ஒரு ராணுவ வீரனின் உயிரின் மதிப்பு அமைச்சரின் வோட்டுக்கள் .
ஒரு தனி மனிதனின் சுயநலம் கோபம் அதிகாரம் மனித படுகொலைகள் செய்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....//
இவனுங்க match fixing பண்ணி வேற சம்பாதிக்கிறானுங்க. நம் இராணுவம் அதே போல் செய்தால்? நன்றி கேட்ட அரசாங்கம்.........
ஆம் ஒரு கிரிக்கெட் வீரனுக்கு கிடைக்கிற மரியாதை யாருக்கும் கிடைப்பதில்லை அது வருத்தமே
//ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே .....................//
வீணான காரியங்களுக்காக விருது கொடுக்கும் அரசுக்கு இது ஒரு செருப்படி....
இந்த பாரத தாய் ஒரு பிள்ளைக்கு தன் ஒரு கொங்கையில்(மார்பில்) இருந்து பாலும், மறு பிள்ளைக்கு மறு கொங்கையில் இருந்து விஷமும் கொடுக்கிறாள். :-(
அருமை நண்பா...
//ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே//
அருமையான வரிகள்..........
உண்மை தான் தோழரே........
//எதிரி நம்மை கொன்று விட்டு மண்ணை பிடிப்பான். மண் தின்னும் உடலுக்குள் மண் திங்க ஆசையோ......//
மிகச்சரியான சிந்தனை.
//ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே .....................//
கொடுமை...நமது நாட்டின் எழுதப்படாத சட்டங்கள் இவை. இதைவிட கேவலம் இல்லை என்றே கருதுகிறேன்.
தங்களின் சிந்தனையும் அதற்கான இடுகையும் மிக நன்று.
உண்மையான வார்த்தைகள்! ஆனால் இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு மக்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது?
ஆம் சண்டை முடிந்தது....சிங்கிற்கும் மாரிக்கும் பரம் வீர் சக்ரா விருது.......இரண்டு லட்சம் காசோலை..அதே சமயத்தில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு அர்ஜுனா விருது ,ஐந்து லட்சம் ரொக்கம்....அவர்கள் வீரர்கள் ஆச்சே
ஒரு தனி மனிதனின் சுயநலம் கோபம் அதிகாரம் மனித படுகொலைகள் செய்கின்றன
உண்மை!
குடியரசு தினங்களில் தொலைக் காட்சியில் ராணுவ அணிவகுப்பு நேரடி ஒளிபரப்பு, விடுமுறை தின சினிமா நிகழ்ச்சிகள், இந்தியத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாகத் திரைப் படம், கிரிக்கெட் மேட்ச், மக்கள் எதைப் பார்ப்பார்கள்?
//இந்தியத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாகத் திரைப் படம், கிரிக்கெட் மேட்ச், மக்கள் எதைப் பார்ப்பார்கள்?
//
மக்கள் அப்படி பார்க்க பழக்க படுத்தி விட்டனர் .......ஊடகங்கள் .....இரண்டவது நான் ராணுவத்தை ஆதரிக்க வில்லை சிலரின் அதிகார போதைக்காக ராணுவத்தில் பல உயிர்கள் பலி ஆகின்றனர் .............எந்த நாட்டிலும் ராணுவம் சிலரின் போதைக்காக உபயோக படுத்தபடுகின்றன ...........இது சரியா...அனைத்து நாட்டிலும் இருப்பவரும் நம் மக்களே நாடு என்பதே மூட நம்பிக்கை ..........மனிதன் என்பதே உண்மை ராம்
நன்றி பாலாசி,நன்றி தமிழ் நாடன் ,நன்றி இது நம்ம ஆளு ,நன்றி ஊடகன்,நன்றி ரோச்விக்
//எது சண்டை இட சொல்கிறது.எவனுடைய மண்ணாசை??????எதற்கு அதிகாரம்????பல அப்பாவி மக்கள் சாவதை தவிர சண்டையால் எதை சாதித்தோம்//
இலங்கை நினைவுக்கு வருது
ஆம் நான் குறிப்பிட்டது இலங்கை மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்தும் ...
இலங்கைக்கு மிக சரியாக பொருந்தும்
Post a Comment