Tuesday 6 October 2009
சென்னையில் ஒரு மழைக்காலம்
வறண்ட நாட்களில் சென்னையில்
எப்போதாவது பெய்யும் மழை
போல....!
என் வறண்ட வாழ்வின் ஈரமான நாட்கள்.....
"சென்னையில் ஒரு மழைக்காலம்"
கவிதை வடிவில் ஒரு புதினம் ....
புதினம் வடிவில் சில கவிதைகள் !
1.ரங்கநாதன் தெரு மிக மிக அருகில்
"உலகின் அனைத்து பாதைகளும் என் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன"
"ஒரு புளிய மரத்தின் கதையின்" தொடக்க வரிகள்...........!
எனது அனைத்து பாதைகளும்
என் காதலியின் வீட்டை நோக்கியே
முடிகின்றன
ஆம் ரங்கநாதன் தெரு
மிக மிக அருகில் என் காதலியின்
வீடு...!
நான் அவள் வீட்டருகே நடந்ததை ...
மேல் நோக்கி நடந்திருந்தால் ....
சந்திர மண்டலம் தாண்டி இருப்பேன்...
தரையில் நடந்திருந்தால் அமெரிக்க கூட சென்று இருப்பேன்
இந்த கவிதை
எழுதிகொண்டிருக்கும் போது.....
என் காதலி வேறு தேசத்தில்....
அவளின் நினைவுகளை கவிதைகளாக
மீட்டுக்கொண்டிருகிறேன்
அவள் பார்த்த பார்வை
இன்றும் அவள் வீட்டு ஜன்னல் அருகே
ஊர்ந்து கொண்டிருக்கின்றன .......!
அவள் ஒட்டிய வண்டி ....
தூசி படிந்து வீட்டு வாசலில் நின்று
என்னை பார்க்கும் ...........
அந்த தூசியை தட்டுவேன் அதில் ஒளிந்திருக்கிறது
என் காதல் ....!
காதலி இல்லை ....
என் காதலை அவள் வீட்டு வண்டியிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறேன் ..!
அவள் இல்லாத வீட்டை நான்
பார்த்துக்கொண்டிருப்பதை வீடும் ....!
அத்தெருவும் பார்த்து கொண்டே இருந்தன ......
சூன்யம் ஆட்கொண்டது அத்தெருவை ..!
மழை மன அழுத்தத்தில்
கதறி அழுதது ...........
சென்னையில் மழைகாலம் தான் ...................
ஆனால் மனம் ஏனோ வறண்டு கிடக்கிறது ......!
ஆம் என் வாழ்வு புதைந்த இடம் ....
நான் உயிரோடு இருந்த நாட்கள்
2005 ............
இருந்த இடம் No 111 lake view road west mambalam.......
என் காதலி இருந்த அதே தெரு........
இருந்த இடம் No 103 அதே தெரு ...........
புதினம் புதிர்களுடன் தொடரும் .......
இந்த முதல் தலைப்பு
முடியும் போது என் மனஅழுத்தம் தொடங்கி விட்டது.....
என்னுடைய வெண்ணிற இரவுகள் தூங்கா இரவுகள்
தொடரும் .....!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//நான் உயிரோடு இருந்த நாட்கள்
2005 ............
இருந்த இடம் No 111 lake view road west mambalam.......
என் காதலி இருந்த அதே தெரு........
இருந்த இடம் No 103 அதே தெரு ...........//
உன்னுடைய உண்மைக் கதை போலத் தோன்றுகிறது.......நல்ல முயற்சிதான் பாராட்டுக்கள்........
வேற நல்ல பிகராப் பாக்கவேண்டியதுதான.........
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.
நல்லாயிருக்கு தொடரட்டும்! தொடரட்டும்!!
கவிதை நடையில் ஒரு இயல்பான காதல் கதை ..............!
மிக அருமை தோழா........!
இது ஒரு உண்மை கதை என்று நினைகிறேன்........!
நன்றி நண்பர்களே .............
இது கயிற்றில் நடப்பது போன்று உள்ளது .................
சிறப்பாக செய்ய வேண்டும் ...உங்கள் ஆசிகள் இருபதால் கட்டாயம் செய்வேன் .........
புலிகேசி இனி எந்த பிகரும் எனக்கு கிடைக்காது என் personality அப்படி ,,,,,,,,,,
இரண்டாவது அந்த காயங்களே இனும் ரணமாக இருகின்றன என்னத்த சொல்ல ....................
நன்றி கலைஅரசன் ஊடகா சூர்யா
//புலிகேசி இனி எந்த பிகரும் எனக்கு கிடைக்காது என் personality அப்படி ,,,,,,,,,,
இரண்டாவது அந்த காயங்களே இனும் ரணமாக இருகின்றன என்னத்த சொல்ல ....................//
கவலைப் படாதீங்க தல........பர்சனாளிட்டிஎல்லாம் எந்த பிகரும் பாக்கறதில்ல. பர்சத்தான்....அத நிரப்பி வச்சுக்குங்க நெறைய கெடைக்கும் (பிகருங்க)........
கவிதையில் ஒரு ஏக்கம் கலந்த துக்கம் தெரிகிறது
தொடர்ந்து எழுதுங்கள்
நேரம் போகலைன்னா கொஞ்சம் எங்க பிளாக் பக்கமும் வந்துபோங்க
http://niroodai.blogspot.com/
காதலியை பிரிந்து ஒன்னும் முடியலையோ!
அப்படி இல்லை வால் ஒரு கற்பனை கதை
//அப்படி இல்லை வால் ஒரு கற்பனை கதை//
என்ன கத உடுறியா??? எல்லாம் தெரியுமுடா எங்களுக்கு.....
Post a Comment