Friday, 9 October 2009

காதல்(1982 a love story)

என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!


gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்."இளமை என்னும்
பூங்காற்று" கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக........!
"கண்ணே கலை மானே" ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது "மடை திறந்து" பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் "உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்" முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.

அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்."இதயம் ஒரு கோவில்""பூ மலையே தோள் சேரவா" "மன்றம் வந்த
தென்றலுக்கு" "என்ன சத்தம் இந்த நேரம்..."


மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்....! அவளும் காதலிக்கிறாள் .....

"ஒரு கோலமே

கோலம் போடுகிறதே.....!"


நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்."அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்".இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.

நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.


"உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே"......அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்."சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்"
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்

பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் "நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்"

24 comments:

kannan said...

"நாம் இருவரும்

கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று

நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை

ஆக்கிவிட்டார்கள்"

good da

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி கண்ணன் .

prabhu said...

very good imagination. congrats

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பிரபு

இளந்(இழந்த)தமிழன் said...

நல்லா இருக்குடா ! ஒரு பதிவின் வெற்றி, அதை படிக்கும்போது (காதல்) காட்சிகள்
கண்முன்னே தோன்ற வேண்டும். அதில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் தனக்கே ஏற்பட்டதாக அவன்
உணர வேண்டும். மனதிற்குள்ளும் அவன் சிரிக்க வேண்டும். இந்த பதிவை படிக்கும்போது எனக்கு அப்படி தோன்றியது :-(
ஆனால் கடைசியில் சினிமாத்தனம்.

எனக்கு பிடித்த வரிகள் :

"மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டாள் "

"உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே"......அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.

"இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் ." - யாரும் மறுக்க முடியாது.

"அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்."

இதே மாதிரி எழுதின..... நீ எங்கேயோ போயிருவடா .....

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி..................பாஸ்கர்

Kiran said...

Excellent Karthi... Keep the good work going..

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி கிரண்

ஊடகன் said...

//அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் "நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்//

கிராமத்து பின்னணியில் நடக்கும் அருமையான கதை.....
வாழ்த்துக்கள்.........

அன்புடன் மலிக்கா said...

கலக்கலோ கலக்கல் சூப்பராக இருக்கிறது வெண்ணிறவே, வாழ்த்துக்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி மல்லிகா

பிரபாகர் said...

உறவினை மாற்றிய குழைந்தைகள்...? நல்லாருக்குங்க....

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பிரபாகர்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

முடிவில் நல்ல திடீர் திருப்பம். ரசிக்க வைத்தது. பாராட்டுக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கார்த்திக் , அருமையான பதிவு

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ராஜன் நன்றி முருகானந்தம்

இராகவன் நைஜிரியா said...

அருமை, அருமை... இளையராஜா பாடல்கள்... வைத்து அதைச் சொல்லியவிதம் மிக அருமை. இத்தனை நாட்களாக உங்கள் பதிவைப் பற்றி தெரியாமல் இருந்ததற்காக வருந்துகின்றேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

ராகவன் நீங்கள் பாராட்டும் அளவிற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை .
நான் கடந்த ஒரு மாதமாக தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்

Cable Sankar said...

வெண்ணிர இரவுகள்.. பதிவாக நல்லருக்கு. ஆனா ஒரு நல்ல அருமையான சிறுகதையை மிஸ் செய்துவிட்டீர்கள்..

வெண்ணிற இரவுகள்....! said...

தங்கள் வருகைக்கு நன்றி சங்கர்....
நான் எதை மிஸ் செய்தேனென்று தெரியவில்லை .....
நான் சிறு கதைக்கு புதிது .....நீங்கள் சொல்லுங்கள் திரிதிக்கொண்டு கற்று கொள்கிறேன்
ஓ எதை மிஸ் செய்திருக்கிறேன் எனக்கு புரியவில்லை

புலவன் புலிகேசி said...

//"ஒரு கோலமே

கோலம் போடுகிறதே.....!"
//

அடடே ஆச்சர்யக்குறி!!!!!

ponnee said...

ரொம்பவே நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பொன்னி

senthil said...

karthi superb...