
உனது புகைபடத்தை
வைத்துக்கொண்டு ......
புகை பிடித்து கொண்டு இருந்தேன்...!
காலத்தின் அந்த நொடியை
கவிதையாய் பதிவு செய்திருந்தது
அந்த புகை படம் ...!
அந்த புகைப்படம் எடுக்க பட்டது போல்
நீயும் நானும்
நம் காதலும் இல்லை
இத்தருணத்தில் .......!
என் வீட்டுசாளரங்களில் இருந்து
உள்ளே வருகிறது
உன் நினைவு ..!
சினிமா டிக்கெட் ,
உன் கைக்குட்டை,
போன்ற உயிர் அற்ற பொருட்கள்
உயிர் உள்ளவை ஆகின ......!
உயிர் உள்ள
நானும் நீயும் .....
உயிர் அற்ற பிணம் ஆனோம் ....!
காதலில் நீ பார்த்த பார்வை ...........
இப்போது கிடைக்குமா ...?
ஒரு புகைப்படம் உன்னை பதிவு செய்து வைத்திருக்கிறது .....!
நான் ...?
காலங்கள் நம்மை விழிங்கி கொண்டிருகின்றன .......!
இறந்த பிறகு ......
நம் காதலை
ஒரு திரைப்படம் போல் பார்க்க ஆசை.....!
அதில் மட்டுமே
நீ வெட்கப்பட்டு
என்னை பார்க்கும் தருணம் ......
மீண்டும் மீண்டும் வரும் ...!
ஆம் நான்
அந்த காட்சியை மட்டும்
ஓட்டி விட்டு
மறுபடி மறுபடி பார்ப்பேன் .......!
காலங்கள்
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன
10 comments:
அருமையான கவிதை
நல்ல கவிதை
அருமை நண்பா
வாழ்த்துக்கள்
//காலங்கள்
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன //
முத்தாய்ப்பான வரிகள்.. அருமை.
பிரபாகர்.
நல்ல கவிதை நண்பா...
//காலங்கள்
உயிரற்ற புகைப்படத்தை
உயிருள்ளவை ஆக்குகின்றன
உயிருள்ள புகை பிடிபவனை ...
உயிரற்ற புகைப்படம் ஆக்குகின்றன //
நல்ல கவித்துவமான சிந்தனை நண்பா...
//அந்த புகைப்படம் எடுக்க பட்டது போல்
நீயும் நானும்
நம் காதலும் இல்லை
இத்தருணத்தில் .......!//
நல்ல வரிகள் ரசித்தேன் கவிதை முழுதினையும்.
ஆமா....அந்த சிகரெட்டயாவது கீழ போட்டுட்டீங்களா?
கவிதை நல்லாயிருக்கு!!
ஒவ்வொரு பந்தியுமே அர்த்தம் நிறைந்ததாய் இருக்கு.நிறைவாய் வாசித்தேன்.
Legendary lines...It can be believable if it reads the poet's name a renowned poet.
Post a Comment