Thursday 29 October 2009

மேகம்,மழை,ரயில்,மேகலா
















ச்சோ என்ற மழையில் ரயில் நகர துடங்கியது.செல்வத்திற்கு மழையும் ரயிலும் அவன் காதலின் குறியீடு.ஒரு மழை நாளில் அவளை சந்தித்தான்.தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் அவன் அவளை பார்த்தது ஒரு மழைகள் நாளில் மின்சார ரயிலில்.ரயில் காதலானது ரயில் பயணம் போல பாதியிலேயே நின்று விட்டது. ஆம் மனித வாழ்க்கையே ரயில் பயணம் தானே என்று மனதிருக்குள் நினைத்துக்கொண்டான். பக்கத்தில் மனைவி குழந்தைகள் இருப்பதால் கண்களில் நீர் வராமல் அழுது கொண்டான்.
ரயில் தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.மதுரை வந்த போது, ஏனோ இனம் புரியாத வலி. மேகலா மதுரையில் அல்லவா இருக்கிறாள். ஒரு மேகம் சூழ்ந்த நாளில் மேகலாவை ரயிலில் பார்த்தேன் சென்னையில். இன்று மழை பெய்கிறது ரயில் மதுரையில் நிற்கிறது. மேகலா வருவாளா மேகங்கள் வந்துவிட்டன மேகலா ஒரு முறை என் வாழ்கையில் வா...இப்பொழுதெல்லாம் சென்னையில் மழை பார்க்க முடிகிறது என் மேகலாவை பார்க்க முடிய வில்லை.....மேகங்கள் இல்லாமல் கண்களில் மழை நீர் சுரந்தன.
மதுரையிலிருந்து ரயில் புறப்பட்டு இருந்தது. கண்ணை திறக்கையில் அவனுக்கு அதிர்ச்சி , மேகலா தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் எதிர் இருக்கையில். இயற்கை என்றும் பொய் சொல்லாது, மேகம்,மழை,ரயில்,மேகலா.

"மேகலா" என்றான் ....

"செல்வம்" என்றாள்.........

அவள் கணவருக்கும் குழந்தைக்களுக்கும் அறிமுகம் செய்தாள் தன் நண்பன் என்று.
"பார்த்தியா உனக்கும் ஒரு மகன் ஒரு மகள் எனக்கும் ஒரு மகன் ஒரு மகள்" என்று சிரித்தாள்.
"என் மகள் பெயர் கூட மேகலா தான்".அவன் மனைவி கவனித்து இருக்க கூடும்.அவள் மகன் மகள் பெயரை கேட்டேன்.மகன் பெயர் செல்வமாம்,மகள் பெயர் சௌந்தர்யா.அவன் கணவன் இதை கவனித்திருக்க கூடும்.அதை அவன் மனைவியும் அவள் கணவனும் பெருந்தன்மையாக கண்டு கொல்லாமல் இருந்தார்கள்
அவன் மகன் பெயர் தினேஷ் அவன் மனைவியின் பழைய காதலனாய் இருக்குமோ.அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாளே அது அவள் கணவருடைய காதலியாய் இருக்குமோ........மனைவியின் காதலை மதிக்க வேண்டும் .ஒரு நாள் அவள் காதலித்தாளா என்று கேட்க வேண்டும்.
சென்னை ரயில் நிலையம் வந்தது. மழை நின்றது மேகலா சென்றுவிட்டாள்.ரயில் மழை மேகலா மூவரையும் பிரிந்து வந்தேன்

18 comments:

ஊடகன் said...

//அவன் மகன் பெயர் தினேஷ் அவன் மனைவியின் பழைய காதலனாய் இருக்குமோ.அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாளே அது அவள் கணவருடைய காதலியாய் இருக்குமோ//

மீண்டும் உங்களிடமிருந்து மிக அழகான , ஒரு இயல்பான ஒரு காதல் கதை........

மழையும் காதலும் மிக அழகாக பின்னப்பட்டுள்ளது.....

ப்ரியமுடன் வசந்த் said...

காதல் சொட்டுது..நல்லாயிருக்குங்க

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ஊடகன் நன்றி வசந்த்

க.பாலாசி said...

கதைக்கான கரு நன்றாயிருக்கிறது.

//அதை அவன் மனைவியும் அவள் கணவனும் பெருந்தன்மையாக கண்டு கொல்லாமல் இருந்தார்கள் //

இப்படி பலபேர் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

எல்லோரது வாழ்க்கையிலும் ஒரு மேகலா...ஒரு செல்வம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்ல கதை....இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தியிருக்கலாம். வாழ்த்துக்கள் நண்பரே....

புலவன் புலிகேசி said...

நல்ல கதை தான் நண்பரே. எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்....

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பாலசி ......பெரிதாக எழுதினால் படிப்பார்களா என்று தெரிய வில்லை அதனால் சுருக்காமாக் எழுதுகிறேன் ..........கவித்துவமாக எழுத ஆசை ....ஆனால் புரிய வில்லை என்று சொல்லுவதால் எளிமையாக எழுதுகிறேன்

பிரபாகர் said...

நல்லாருக்குங்க... நண்பர் புலிகேசி சொன்னதுபோல் எழுத்து பிழைகளை சரி செய்துவிடுங்கள்...

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி புலிகேசி நன்றி பிரபாகர்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ஊடகன்

Anonymous said...

அவள் கணவருக்கும் குழந்தைக்களுக்கும் அறிமுகம் செய்தால் தன் நண்பன் என்று.
"பார்த்தியா உனக்கும் ஒரு மகன் ஒரு மகள் எனக்கும் ஒரு மகன் ஒரு மகள்" என்று சிரித்தால்.

செய்தாள்.சிரித்தாள். எழுத்துப்பிழை. இடம் விட்டு எழுதுங்கள். பத்தி பிரிங்க. நல்ல கதை. ஓட்டு போடலை.

ஹேமா said...

காதலோடு மழை சேர்ந்தாலென்ன மழையோடு காதல் சேர்ந்தாலென்ன அழகுதான்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ஹேமா

இராகவன் நைஜிரியா said...

அருமையாக சொல்லியிருக்கீங்க. முறிந்த காதலை, மழையுடன் சேர்த்து, இயற்கையாக சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ராகவன்

Menaga Sathia said...

கதையில் காதல் சொட்டுது.நன்றாகயிருக்கு..

அன்புடன் அருணா said...

அச்சோ...எப்பிடி இப்பிடில்லாம்?

அன்புடன் மலிக்கா said...

கதை அருமை,அதை சொல்லியவிதமும் சூப்பர்..