சுப்பு பாட்டி சாப்பிடவில்லை .....தினமும் ராதிகா சீரியல் பார்க்கும் பாட்டி அன்று NDTV பார்த்துக்கொண்டிருந்தாள்."என்னடா சொல்றா சங்கரர விடுவிச்சுருவால..." "இல்லை கேஸ் stronga இருக்கு,கஷ்டம் தான்..,, மேலும் நடிகையோட எல்லாம் தொடர்ப்பு இருக்காம் ...கேவலம் இனிமே நம்மலவால யாரும் மதிக்க மாட்டான் "
சுப்பு பாட்டி இரவு கண்ணீருடன் படுத்துக்கொண்டிருந்தாள்.கடவுள் என்பது உண்மையானால் சங்கரர் என்பது உண்மையானால் எப்படி தரம் கெட்டவர்கள் மடத்தின் அதிபதி ஆகி இருப்பார்கள்.கடவுள் என்பது இல்லையா அவள் மனது அடைத்தது.ஜாதி மதம் தீட்டு மடி என்று நிறைய பேரை தொடாமல் இருந்திருக்கிறோமே,இப்படி நினைத்து போலியாக வாழ்ந்து இருக்கிறோமே நானெல்லாம் ஒரு பிறப்பா??????அந்த ஹரிஜன குழந்தை என்ன செய்தது அதை தூக்க கூட சங்கட பட்டோமே.அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் அவளை துளைத்து எடுத்தன.
கடவுள் என்று ஒன்று இருந்தால் அது எப்படி தப்பு செய்பவனை அவனுடைய மடத்திற்கு அதிபதி ஆக்கும்.நெஞ்சு வெடித்து பாட்டிக்கு.கண்களில் நீர் வழிந்து அவள் பாவங்களை கழுவியது,எந்த பிறப்பும் பிறப்பு மட்டுமே தெய்வ பிறப்பல்ல.அப்படியே கடவுள் இருந்தாலும் நடுவில் எதற்கு ஒருவன் ,நடுவில் எதற்கு மடம்.கடவுளுக்கு ஊடகம் தேவையா என்ன....
அவன் அம்மாவாக இருந்திருந்தால் அனைத்து படைப்புமே ஒன்று தானே எப்படி ஏற்ற தாழ்வுகள்...அவள் மனது வலித்தது.
கடவுள் இல்லையா இல்லை இருக்கிறாரா....பாட்டி மன உளைச்சலுக்கு உள்ளானால்....
அவள் நம்பிக்கை சிதைந்து,உண்மை உணர்ந்து ஒரு ஞான நிலையை எட்டினால்.காலை விடிந்தது சுப்பு பாட்டிக்கும். பாட்டி எழுந்தவுடன், கடவுளை சேவிக்க வில்லை.எதிர் வீடு அரிஜன சென்றால் அது அரிஜன வீடு.கதவை திறந்த எதிர் வீட்டு பெண் அதிர்ச்சி அடைந்தாள்.
"ஏன் டீ மா நான் எல்லாம் உங்க ஆத்துக்கு வரப்டதா ???" "இல்ல பாட்டி வரலாம் ".
"ஒரு காபி தா டீ..." அந்த காபி குடித்த போது அவளுக்கு புனித நீரில் நீராடியதை போல் இருந்தது. அவள் குழந்தைக்கு பாட்டி முத்தம் கொடுத்தாள் .அதில் மனிதன் என்னும் ஈரம் இருந்தது .பாட்டி அன்று குளிக்க வில்லை ஆனாள் சுத்தமாக இருந்தாள்.
10 comments:
ஏம்பா எல்லாத்துக்கும் பாப்பான் தான் கெடச்சானா ஒனக்கு. வேற ஜாதிக்காரங்களைச் சொல்லேன்.
எது அதிகார ஜாதியோ அதை தான் சொல்ல முடியும் . நானும் பார்ப்பன வகுப்பை சார்ந்தவன்
//பாட்டி அன்று குளிக்க வில்லை ஆனாள் ஸுத்தமாக இருந்தாள்.//
அருமையா சொன்னீங்க நண்பரே.....இது தான் சுத்தம். இதை விட்டு எதையோ கடவுள் என்றுத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.......
//அப்படியே கடவுள் இருந்தாலும் நடுவில் எதற்கு ஒருவன் ,நடுவில் எதற்கு மடம்.கடவுளுக்கு ஊடகம் தேவையா என்ன....//
அதானே...
கடைசியா செம டச்...
ஆனா இடுகையில சில சாதிகளை குறிப்பிடும் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கவேண்டாம் என்றே எண்ணுகிறேன்.
சங்கரனுக்கு சொறிஞ்சி விட்டது பாப்பான் தான்!, இந்த கதை களத்துக்கு பாப்பான் தான் சரியான தேர்வு!
பிறகுவிற்கு, கதையில் கூட பாப்பான் ஹரிஜனம் வீட்டிற்கு போவது பிடிக்கவில்லை போல!
ஆம் வால் இவர்களை என்ன செய்வது
கதையிலாவது ஒன்றுபடுத்திப் பாருங்கள்.ஒற்றுமையாய் இருப்போம்.
நல்லாருக்குங்க... வாழ்த்துக்கள்
பிரபாகர்.
nice...
much better karthik...
Post a Comment