Monday, 7 June 2010

விடத்தை கக்கிய சட்டம் போபால்
















இன்று காலையில் தேனீர் கடையில் செய்தித்தாளை புரட்டியவுடன் எனக்கு பேரதிர்ச்சி என்று சொன்னால் அது மிகை , நான் என்ன தீர்ப்பு வரும் என்று நினைத்தேனோ அதைபோலவே போபால் விடவாயு வழக்கில் நம் சட்டம் நடந்து கொண்டிருக்கிறது . நமக்கு சரி தவறு என்று விமர்சனம் செய்ய தகுதி இல்லை என்று வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்டஅந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன என்பது கண்கூடாய் தெரிகிறது . அதிலும் ஏழு பேருக்கு மட்டுமே தண்டனை இரண்டு ஆண்டுகள் , முதாலாளி வாரேன் அன்டேர்சன் சொகுசாய் உள்ளார் . அதுவும் அந்த தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொகை இருபத்தி ஐயாரிரம் கட்டிவிட்டு ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார்களாம் . என்ன கொடுமை???? தீர்ப்பே இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து தான் என்றால் , என்ன கொடுமை . இந்திய அரசு, அமெரிக்கா அண்டேர்சென்னை விசாரணைக்கு அனுமதிக்க வில்லை என்று சப்பை கட்டுகட்டுகிறது . ஆனால் காசாப் கூட பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் , அவன் வழக்கு என்றால் ஒரு ஆண்டில் தீர்ப்பு வரும் , தூக்கில் போடப்படுவான் ஏன் என்றால் அங்கு அவன் கலகம் செய்த இடம் முதலாளிகளின் கூடாரம் தாஜ் ஹோட்டல் ஓபராய் ஹோட்டல் போன்ற இடங்கள் . ஆனால் இங்கு போபால் விடயத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கபட்டாலும் இங்கு மாட்டிக்கொண்டது முதலாளி, சட்டம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. BSNL NETWORK வைத்து சுமார் 1500 கோடி ஏமாற்றிய அம்பானி வெறும் 90 லட்சம் அபராதம் கட்டிவிட்டு வெளியே வருவார்கள் , இதை 100 ரூபாய் திருடிய திருடன் ஐம்பது பைசா மட்டும் அபராதம் கட்டி அடிவாங்காமல் வெளியே வரமுடியுமா என்ன??? விட வாயு கொன்றதை விட , சட்டம் விடவாயுவை கக்கிகொண்டிருக்கிறது.


ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை . சரி போபால் விடயத்திற்கு வருவோம், 100 பேரை கொன்ற கசாப் தீவிரவாதி என்றால் , 1000 கணக்கில் கொன்ற இன்னும் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் போபால் போன்ற இடத்தில் எப்படி இருக்க வேண்டும் தண்டனை . வெறும் ரெண்டு ஆண்டு தண்டனையாம் அதுவும் முதலாளி அன்டேர்சன் அவருக்கு
கிடையாது , ஏன் என்றால் அவரை விசாரிக்க அமெரிக்க அனுமதிக்கவில்லையாம். அப்படி அனுமதிக்கவில்லை என்றால் உலகத்தின் முன் இந்திய ஊடகங்கள் இதை கவனத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்க வேண்டுமே . உலகமே அன்டேர்சன் எதிராய் குரல் கொடுக்க வைத்திருக்க வேண்டுமே . கசாப் விடயத்தில் வீரத்தை காட்டிய ஊடகங்கள் இதில் ஏன் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை . ஏன் என்றால் இவர்கள் நோக்கமே முதலாளியை காப்பாற்றுவது . முதலாளிக்கு ஓபராய் ஹோடேலில் தீங்கு நேர்ந்தால் உலகத்தின் முன் தீவிரவாதம் என்று கூச்சலிடு . ஆனால் போபாலில் செத்து இருப்பது வெறும் பத்தாயிரம் பேர் தானாம் அதுவும் சாமானியர்கள் , போய் சாகட்டும் , அன்டேர்சன் பாதுக்காபாய் இருக்கிறாரா என்று பாதுகாக்கிறது சட்டம் . இந்திய அரசு அவரை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காது என்பதே உண்மை ,மனித உயிர் என்பது முதலாளிகளின் எச்சமா ????? பணம் உள்ளவனே வாழ தகுதி உள்ளவனா?????

7 comments:

Unknown said...

பணம் நண்பா.., அது பாதாளம் வரை பாய்ந்து விட்டது..

விஸ்வாமித்திரன் said...

மிக அழுத்தமான பதிவு. இதே விஷயத்தில் என்னுடைய பதிவையும் இங்கு பாருங்களேன்
http://www.wisewamitran.blogspot.com

வெண்ணிற இரவுகள்....! said...

முடிந்தால் இந்த சுட்டியை கூட பாருங்கள் http://nanduonorandu.blogspot.com/2010/06/blog-post_08.html

Chandramohan said...

இந்தியால பொறந்துட்டு நீதி நாயம்னு எதிர் பார்ப்பது எல்லாம் சுத்த TIME WASTE, இந்த மாதிரி ஒரு தேசத்தில் பிறந்ததற்கு ஒரு நிமிடம் வருந்திவிட்டு, அவரவர் பிரச்சனைகளை போய் பாருங்க. இரண்டு முக்கியமான விசியத்துல பலமா இருக்கனும் ஒன்னு பணம் இரண்டு பவர், இது இல்லீன நீங்க இந்தியால வாழ தகுதி இல்லாத ஆளு.

ஒன்று சேர் said...

nalla pathivu vazhththukkal. Enathu muthal muyarchiyai ithil parththu karuththu theriviyungal - Chithragupthan

seeprabagaran said...

இந்திய அரசுக்கும் அரசியல் செயல்பாடுகளுக்கும் எதிரான போராளிகளை அரசே திட்டமிட்டு சட்டப்படி உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.

Jackiesekar said...

நல்லா எழுதி இருக்கிங்க நண்பா... இதேல்லாம் எழுதி என்னவாக போகின்றது என்று சிலர் கேட்கின்றார்கள்.. இந்த விசயமே தெரியாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள்... அவர்களுக்காக என்பது என் வாதம்..