Tuesday 8 June 2010

தனிமையின் இசை






















வாழ்க்கை முழுவதும் தனிமை கவ்விக்கொண்டிருக்கிறது , ஏதேதோ சொல்ல முடியாத வலிகள் ரணங்கள் . மார்க்ஸ் சொன்ன இயக்கவியல் உயிருடன் இருக்கும் மனிதனுக்கு ,இறந்த மனிதன் எங்கே செல்வான். நாம் இறந்தவர்களை எல்லாம் சந்திக்கவே முடியாதா????? எத்தனை காதல்களை இந்த உலகம் பதிவு செய்திருக்கும் , எத்தனை பார்வை
பரிமாற்றங்களை பதிவு செய்திருக்கும். இருந்தும் ஒரு நேரத்தில் இறந்து தானே ஆக வேண்டும் , இல்லை நமக்கு பிடித்தவர் நம்மை விட்டு இறந்து தானே ஆக வேண்டும்என்பது மனதின் ஆழமான துயரத்தை ஏற்ப்படுதிக்கொண்டே இருக்கிறது . இதை எல்லாம் நினைத்து நினைத்து இரவு கவ்வி கொள்ளும் வேளையில் , விளக்கிற்கு வேலை இல்லாத
வேலையில் குலுங்கி குலுங்கி அழுததுண்டு . நான் மரணங்கள் ஏற்ப்படும் பொழுது அழுவதில்லை , அழுது புலம்பும் மற்ற நண்பர்கள் , உறவினர்களை தேற்றும் வேலையே செய்து கொண்டே இருப்பேன் , ஆனால் இறந்த அந்த நபரை என்னால் மறக்க முடியாது , தொடர்ச்சியாய் பல நாட்கள் நினைத்து நினைத்து அழுவேன் , இதை எல்லாம்நினைக்கும்
பொழுது என்ன வாழ்க்கை என்ன காதல் , என்ன குடும்பம் என்று தோன்றுகிறது . தனிமையின் இசை கொடூரமாய் இருக்கிறது , நீ தனியானவன் என்று ஆணித்தனமாய் சொல்கிறது . எந்த இசை கோர்வை உடன் சேராத இசையை வாசித்துக்கொண்டிருக்கிறது . ஒரு நேரத்தில் அந்த ஒற்றை இசை கூட காற்றில் கலந்து விடுகிறது , பேரமைதி மட்டும் இருக்கிறது . அப்பேரமைதியில் ஒரு அமைதி இல்லாத அமைதி இருக்கிறது . இறந்தவர்கள் எங்கே போய் இருப்பார்கள் , அந்த மன நிலையில் ஒரே ஒரு பாடலை மட்டும் கேட்பேன் , புதுப்பேட்டையில் வரும் " ஒரு நாளில் வாழ்கை " என்ற பாடல் . " தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை" " இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் " ....போன்ற வரிகள் , தனிமையின் இசை கொடூரமானது , நாம் எங்கெங்கோ ஓடி கொண்டிருக்கிறோம் , கடைசியில் பார்த்தால் ஒன்னுமிள்ளததர்க்கு ஓடிக்கொண்டிருப்பது போல் உள்ளது , துக்கம் பீரிட்டு வருகிறது எதற்கு இந்த உலகம் . சில நேரம் மார்க்ஸ் போல இருக்க வேண்டும் என்று இயக்கவியல் மற்றும் மனிதர்களை கூர்ந்து படிக்க வேண்டும் , போராட வேண்டும் என்று சொல்லும் மனம் , பல நேரம் dostovesky போல தனிமைக்கு தாவுகிறது , அது அர்ப்பவாதமே ஆனால் அதை நோக்கியே மனம் போகிறது .

4 comments:

Unknown said...

இளையராஜாவின் nothing but wind, how to name it கேட்டுப் பாருங்கள்..

வெண்ணிற இரவுகள்....! said...

கேட்டு இருக்கிறேன்

Madumitha said...

தனிமைதான் சாஸ்வதம்.

pichaikaaran said...

தனிமை கண்டதுண்டு... அதிலே சாரம் இருக்குதம்மா.... - பாரதியார் ...

ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் வெண்ணிற இரவுகள் குறித்து உங்கலுடன் விவாதிக்க ஆசை