Thursday 17 June 2010

ரத்த சரித்திரம்















நேற்று இரவு குமுதம் reporter படித்துக்கொண்டிருந்தேன் , சீமானின் பேட்டி கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது "தம்பி சூர்யவிற்க்காக விட்டுதருகிறேன்" என்று ஒரு பேட்டி , சரி உள்ளே என்ன விடயம் என்று பார்த்தால் , சூர்யாவின் "ரத்த சரித்திரம்" என்ற ஹிந்தி படம் வருகிறதாம் , அதிலே இலங்கை படவிழாவிற்கு ஆதரவு தந்த விவேக் ஓபராய் நடிக்கிறார் , அவருடன் சூர்யா நடிக்கிறார் . "அந்த படம் வந்தால் எதிர்ப்பு சொல்வீர்களா " என்று கேட்டதற்கு சீமான் அப்படி சொல்கிறார் , படத்தில் சூர்யா நடிக்கிறாராம் "அவர் தமிழ் உணர்வு மிக்கவராம் " . அதை சீமான் மதிக்கிறாராம் அதனால் இப்படத்தை மட்டும் வெளியிட தடை சொல்லப்போவதில்லயாம் . என்ன கொடுமை , சீமான் அவர்களே உங்கள் கொள்கையில் மாற்று கருத்து உண்டு , ஆனால் ஒரு நடிகரின் படம் என்பதற்காக , கொள்கைகளை நீர்த்து போக செய்யும் உங்களை போன்ற தலைமையை என்ன சொல்வது என்றே தெரியவில்லை . என் சூர்யா உங்கள் தம்பி என்பீர்கள் ,அதனால் படம் வரும் அந்த படத்தை ஒன்னும் செய்ய மாட்டோம் என்கிறீர்கள் . "அதுவும் சூர்யாவின் தமிழ் உணர்வை மதிக்கிறேன் " என்கிறீர்கள்.

அப்படி என்ன தமிழ் உணர்வை கண்டீர்கள் , "பெப்சி ,சன் குழுமம் ,ரெட் giant , cloud Nine " போன்ற ஏகதிபத்தியத்தோடு கூட்டணி போட்டு விளம்பரத்தில் நடிப்பதை விட என்ன செய்துவிட்டார் . சரி அவர் நல்ல மனிதர் என்று நீங்கள் சொல்லலாம் , அகரம் foudation வைத்து இருக்கிறார் என்று சொல்லலாம் . இது எல்லாம் NGO வேலைகள் , இரண்டாம் கட்ட தீர்வு , இது ஒரு பிரச்னையை முழுமையாய் தீர்பதில்லை நான் சொல்லவில்லை
மார்க்ஸ் சொல்லி இருக்கிறார் . சரி அப்படி பார்த்தால் நான் கூட நல்லவன் , எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு காசு விடயத்தில் உதவிகள் செய்து உள்ளேன் , சில பிச்சைக்காரர்களுக்கு காசு போடுகிறேன் . இன்று பிச்சைக்காரனுக்கு காசு போடுகிறேன் , நாளை என்னிடம் காசு இல்லை அப்பொழுது முடியாது என்று சொல்லிவிட்டு போவேன் . இது தான் எதார்த்தம் . இதன் பேர் தான் NGO வேலை , உலகத்திலே மிகப்பெரிய அரசியல் "முடிந்ததை செய்வேன்"
என்பது , அகரம் foundation என்பது கூட இதை போல செயலே . ஒரு தனிமனிதனிடம் இருந்து தீர்வு எப்பொழுதுமே வருவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் .

சரி உங்கள் கொள்கைகளை தம்பிக்காய் விட்டுகொடுப்பீர்கள் என்றால் என்ன கொடுமை . நீங்கள் இவர்களை எதிர்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று நானே சொல்லுவேன் .நீங்கள் அமிதாப் வீட்டிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை , ஆனால் கொண்ட கொள்கை தவறாக இருந்தாலும் உங்களிடம் ஒருநேர்மையை எதிர்ப்பார்த்தேன் , ஆனால் அது கூட இல்லை . எனக்கு தெரிந்து இதிலும் சகபதிவர்கள் வருவார்க minus வாகுகளை குத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் . ஏன் என்றால் இங்கே தமிழ் உணர்வு என்பது ஒருவருக்கு கொடிப்பிடிப்பதாய் ஆகி விட்டது என்ன செய்ய .

உங்கள் உணர்வை விட , உங்கள் தம்பியின் தொழில் தான் முக்கியாமா . இந்த படம் தமிழ் நாட்டில் ஓட வில்லை என்றால் , சூர்யா வீட்டில் அடுப்பு எரியாதா . தனி மனிதர்களுக்காய் கொள்கைகள் தகர்த்த படலமா ?????? "ரத்த சரித்திரம் " படம் பற்றி கவலை படுகிறீர்களே , ஈழத்தின் "ரத்த சரித்திரம்" தெரிந்த பின்பும் .

8 comments:

RAVI said...

MOST URGENT www.avsrm.blogspot.com

BIGLE ! பிகில் said...

ரவி ஏதோ என்னால முடிஞ்சது
http://bikeel.blogspot.com/2010/06/blog-post_17.html

BIGLE ! பிகில் said...

வெண்ணிற இரவு... சீமானை பத்தி எழுதிட்டு அப்புறம் இப்படி தலைப்பு வச்சா எப்புடி?

தலைப்ப இப்படி மாத்துங்க

ச்ச்சீமான்

வால்பையன் said...

சீமானிடம் எதிர்பார்த்தேன்!

pichaikaaran said...

superb view... one must be true to himself

எவனோ ஒருவன் said...

சீமான் அவர்களது கருத்துகள், செயல்கள் சிலவற்றில் எனக்கு கருத்தொற்றுமை இல்லை என்றாலும் அவருடைய கொள்கையின்பால் அவர் கொண்ட நேர்மை நான் வெகுவாக மதித்தேன்.
ஆனால் அவர் ஏதோ ஒரு நடிகனுக்கு தனது கொள்கைகளை தளர்த்துவார் என்று நான் நினைக்கவில்லை.

இதே இந்த நடிகர் சூர்யா எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டு தன்னுடைய தேசப்பற்றையும் தமிழுணுர்வையும் காட்டியிருக்கிறார் ?

//
அகரம் foudation வைத்து இருக்கிறார் என்று சொல்லலாம் . இது எல்லாம் NGO வேலைகள் , இரண்டாம் கட்ட தீர்வு
//
வாழ்த்துகள், நன்றி அவருக்கு.,
பூக்கள் வீசினால் மட்டும் போதாது, களை எடுக்கவும் களத்தில் இறங்க வேண்டும்.

புலவன் புலிகேசி said...

அவரோடது கொள்கையே இல்லைன்னு தோனுது நண்பா. ஈழத்திற்காகக் குரல் கொடுத்து பெயர் சம்பாதிக்கும் வேலை செய்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.

Unknown said...

எப்போ ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டா ஈழ பிரச்சனை தீர்ந்திடும்னு ஓட்டு பொறுக்குனாங்களோ அப்பவே இவங்க மேல நம்பிக்கை போய்ட்டு