Saturday 19 June 2010

நிர்மூலமான நிர்மலா

விழுப்புரம் அருகே ஒரு திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . மணப்பெண் காதலனை கைப்பிடிக்க, எதிர்வீட்டு பெண் மணமகள் ஆகி இருக்கிறாள் என்பதே செய்தி . அந்த எதிர்வீட்டு பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்க இல்லையா என்று கூட கேட்டு இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது .திருமணங்கள் என்னும் ஒரு சடங்குகள் , பெண்ணை சொத்து உரிமை ஆக்குகிறது . பெண்களால் தனியாக இயங்கமுடிவதில்லை . "வீட்டோட மாப்பிளை " என்றசொற்பதம் கேலி செய்வதற்காய் இருக்கிறது , எந்த சமூகத்தில் கேலி பொருளாய் இருக்கிறதோ அது ஆணாதிக்க சமூகமாய் தான் இருக்க முடியும். ஏன் "வீட்டோடு மருமகள் " இருக்கும் பொழுது வீட்டோடு மருமகன் இருக்க கூடாதா என்ன???? அதுவும் இந்த வேலைக்கு போகிற சமூகத்தில் தான் பெண்கள் அதிகமாய் சுரண்டப்படுகிறார்கள் . வீட்டிலும்வேலை வெளியிலும் வேலை , வேறொரு வீட்டில் அட்ஜஸ்ட் செய்து இருக்க வேண்டும் , என்ற நெருக்கடிகள் அவளுக்கு இயல்பாகவே இருக்கின்றன . இன்று காலை அந்த செய்தியை படித்தவுடன் எனக்கு நிர்மலா நினைப்பாகவே இருந்தது . அவளும் யாரையாவது காதலித்து இருப்பாளா??? அவளுக்கு எதிர் வீட்டு பையன் பிடித்து இருக்குமா ????????? திடீர் என்று திருமணம் என்று சொல்கிறார்களே எப்படி அவள் மனம் ஏற்றுக்கொள்ளும் ?????? பெண் என்ன சந்தை பொருளா ???????? இது இல்லை என்றால் அது என்று மாற்றிக்கொள்ள???இந்த ஊடகங்கள் நிர்மலா பற்றி எழுதாமல் ....... சினிமா பாணியில் விறுவிறுப்பாய் நடந்த திருமணம் என்று எழுதியது மனஉளைச்சலை ஏற்படுத்தியது . அடுத்தவர் வாழ்க்கை பரபரப்பான படமா என்ன ????? நிர்மலா மனதில் தற்பொழுது என்ன ஓடி கொண்டிருக்கும் .

4 comments:

புலவன் புலிகேசி said...

ஜாதியையும், மதத்தையும், சம்பிரதாய மூட நம்பிக்கைகளையும் மதித்து பெண்களீன் உணர்வுகளை மிதிக்கும் இந்த சமூகம் திருந்தாதா? என ஏங்கிக் கொண்டிருப்போரில் நானும் ஒருவன்..

வனம் said...

வணக்கம் வெண்ணிற இரவுகள்

எனக்கு தெரிந்து சொந்த புத்தியும், சொந்தமாக கொள்கைகளும் இல்லாதவர்கள் இத்தகைய சந்தைப்பொருளாக பாவிக்கப்படுவது இயல்பானதுதான்.

தங்களுக்கு நிகழும் அநியாயங்களுக்கு எதிராக கலக குரல் தறக்கூட விரும்பாதவர்களை என்ன சொல்வது.

நிர்மலாவை பற்றி பேசும்போது அந்த கணவனை பற்றியும் சிந்திக்க வேண்டும் ஒன்று அந்த மாப்பிள்ளை மனிதனாய் இருக்கமாட்டான் அல்லது சொந்த புத்தி இல்லாத எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார். -- எப்படி இருந்தாலும் நிர்மலாவுக்க நிச்சயம் நிம்மதி கிடைக்கப்போவது இல்லை.

இராஜராஜன்

Madumitha said...

இப்படி திடீர் திருமணமா இல்லாம
நிதானமாச் செய்ற திருமணத்திலும்
பெண்ணோட மனசை யாரும் கேட்பதில்லை என்னும் பொது
விதிதான் இங்கு
அமுலில் உள்ளது.

புலவன் புலிகேசி said...

//எனக்கு தெரிந்து சொந்த புத்தியும், சொந்தமாக கொள்கைகளும் இல்லாதவர்கள் இத்தகைய சந்தைப்பொருளாக பாவிக்கப்படுவது இயல்பானதுதான்.

தங்களுக்கு நிகழும் அநியாயங்களுக்கு எதிராக கலக குரல் தறக்கூட விரும்பாதவர்களை என்ன சொல்வது.//

நண்பரே ராஜராஜன், அந்தப் பெண் குரல் கொடுக்கத் துணிந்தாலும் அதைக் கேட்கும் மக்க்ள் அங்கு இல்லை. வெறும் மாக்கள் இருக்கும் இடத்தில் அப்பெண்ணின் குரல் எம்மாத்திரம் எடுபடும். அந்த மாக்கள் மக்களாக மாற வேண்டும்.