Wednesday 21 October 2009

3

first வரணும்


















"வீட்ல எல்லாம் நல்ல தான் ஒப்பிச்சான் அப்புறம் எப்படி மார்க் கம்மி ஆச்சு "
அம்மா ..........
"ஸ்கூல நல்ல தான் படிச்சான் " டீச்சர் ..........
அம்மா " ஏன் டா மார்க் கம்மியா ஆச்சு "........
என்று கேட்க ..............
"நீ தான first வரணும்னு சொன்ன ..."
அப்பாவியாய் சொன்னது pre KG குழந்தை
அதனால்தான் வேகமாய் பரீட்சை எழுதி முடிததாம் ..........
வேகமாய் போகும் வேகாத வாழ்க்கை

வாழ்கை சுருக்கம்

















கிராமத்து கிழவி பக்கத்து வீட்டிற்கு சென்றாள் ..........
பக்கத்து வீட்டு கிழவன் ......................அவளிடம்
"இங்க பாரு கிழவி cell phonu.....என் dubai பையன்ட்ட பேசுவேன் "
"இது தான் web camera என் பேரன் விளையாடறத பார்பேன் அவன்ட
பேசலாம் எப்படி இருக்கு???" என்று பந்தாவாக கேட்க ........
"என் பசங்க பேரங்க தான் கூடவே இருக்காங்களே " என்றால் கம்பீரமாக
கிழவன் கண்ணிலே வலி மனதில் ரணம் .........
உலகம் சுருங்கி விட்டதாம் ....தகவல் தொழில் நுட்பம் ...........
கிழவனின் முகத்தில் தெரிந்தது வாழ்கை சுருக்கம்

ஜாதகம்














பள்ளி பற்றி எரிந்தது ..............
37 குழந்தைகள் இறந்து போயினர் ...............
கருகினர் ............
அந்த குழந்தைகள் அனைத்திற்குமே வேறு வேறு பிறந்த தேதி
ஒரே இறந்த தேதி .............................
வேறு வேறு பிறந்த தேதி என்றால் ....ஜாதகம் வேறு தானே ..........
அப்புறம் எப்படி ஒரே மரணம் ..........
இலங்கையில் இறக்கும் தமிழன் எல்லாருமே ஒரே நொடியில் பிறந்தானா??
சுனாமியில் இறப்பவர்கள் ........பூகம்பம் ..................
ஜாதக புலிகளே கொஞ்சம் விளக்குங்கள்

15 comments:

வால்பையன் said...

ஜாதக புலிகள் இவ்விசயத்தில் ஜகா வாங்கி விடுவார்கள்!

காசு பார்க்க முடியாதே!

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் ஜாதகம் எல்லாம் சுத்த பொய் வால் அவர்களே .......................

அன்புடன் மலிக்கா said...

மனிதனுக்கெங்கே தெரியும் மற்றொருமனிதன் இனி பிறப்பன் என்றும் இனிஎப்போது இறப்பானென்றும்,

புலவன் புலிகேசி said...

சரியா சொன்னீங்க தல....ஜாதகம் எல்லாம் சும்மா ஒரு வியாபாரம் அவ்வளவுதான்..

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் மல்லிகா ..........ஆனால் ஜாதகம் பார்பவர்கள் எல்லாம் தெரிந்தது போல பேசுகிறார்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

எல்லாம் வியாபாரம்

தமிழ் நாடன் said...

அந்த இரண்டாவது டாப்!

வாழ்க்கையின் இலக்கு என்ன என்று தெரியாமல் எப்போதும் பிறர் பார்க்கவே வாழ வேண்டியிருக்கிறது. கசக்கும் உண்மை!

கடல் அலைகள்... said...

"first வரணும்"

இன்றைய குழந்தைகளை எப்படி மனஉளைச்சல் என்னும் வட்டத்துக்குள் தள்ளுகிறோம் என்பதை குழந்தைதனமாகவே படைத்தது சிறப்பு.

ஹேமா said...

முதலாவது நகைச்சுவையும் குழந்தைமனமும் கூடிக்கிடந்தது.மற்றையது இரண்டும் உண்மை சொல்லி மனம் கனக்க வைத்தது.

ஊடகன் said...

நான் படித்ததில் ரசித்தது "ஜாதகம்", "வாழ்கை சுருக்கம்"
நல்ல கருத்துள்ள பதிவு.........

நாளும் நலமே விளையட்டும் said...

ஒரு ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் ஒரு நீச்ச கிரகம் மிக வலுவுடன் இருந்தால் அந்த ஜாதகர் மட்டும் இல்லாமல் தன் சகாக்களையும் சொர்கத்துக்கு அழைத்து செல்வார்.

ஈழ விசயத்தில் தனி மனிதர் ஜாதகம் பார்க்க கூடாது. இங்கு அந்த நாட்டின் ஜாதகம் பார்த்து விளக்கம் சொல்லலாம். குறிப்பிட்ட இந்த நாளில் அந்த ஜாதகப் படி இது நடந்தது.

நாங்கள் நாட்டின் ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்து இருந்தால் நிச்சயம் இது நடந்திருக்க விட மாட்டோம்.

சந்திரயான் அனுப்ப ஆகும் செலவில் நாங்கள் இந்தியாவின் எதிகாலத்தையே மாற்றி விடுவோம்(நாட்டின் ஜாதகம் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் பரிகாரம் செய்து).

எங்களை நம்புங்கள்!

க.பாலாசி said...

//வேகமாய் போகும் வேகாத வாழ்க்கை //

உண்மை...

//கிழவன் கண்ணிலே வலி மனதில் ரணம் .........
உலகம் சுருங்கி விட்டதாம் ....தகவல் தொழில் நுட்பம் ...........
கிழவனின் முகத்தில் தெரிந்தது வாழ்கை சுருக்கம் //

சரிதான். நல்ல சிந்தனை...

//சந்திரயான் அனுப்ப ஆகும் செலவில் நாங்கள் இந்தியாவின் எதிகாலத்தையே மாற்றி விடுவோம்(நாட்டின் ஜாதகம் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் பரிகாரம் செய்து).//

இப்படியும் இருக்காங்க....

வெண்ணிற இரவுகள்....! said...

பாருங்கள் இப்படியும் இருக்கிறார்கள் ...............
உலகமே அழிந்தால் உலகத்துக்கே ஜாதகம் பார்பார்கள் போல ...........
எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் ..................
நாட்டிற்கே ஜாதகம் பார்த்தால் எதற்கு எல்லாருக்கும் ஜாதகம் ...........
ஜாதகம் பார்த்த எத்தனையோ கல்யாணம் ஏன் தோல்வி அடைகிறது ..........................
ஏன் இப்பொழுது உங்களுக்கு நேரம் சரி இல்லையா ............
உங்களுக்கு எதற்கு பணம் ஜாதகத்தை வைத்து கொண்டு இந்தியாவை காப்ற்றலாமே ...
இவ்வளவு பொய் சொல்றிங்க எப்படி உங்களை நம்ப .........................

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் பாலாசி இப்படியும் இருக்கிறார்கள்....

புலவன் புலிகேசி said...

//சந்திரயான் அனுப்ப ஆகும் செலவில் நாங்கள் இந்தியாவின் எதிகாலத்தையே மாற்றி விடுவோம்(நாட்டின் ஜாதகம் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் பரிகாரம் செய்து).எங்களை நம்புங்கள்!//

இவுங்கல்லாம் இப்பிடித்தான் ஊற ஏமாத்திக்கிட்டுத் திரியுறாங்க தல....