Thursday, 8 October 2009

எனக்கு 5 உனக்கு 3......!

சென்னையில் ஒரு மழைக்காலம்

2.எனக்கு 5 உனக்கு 3......!





















ஐந்தில் விளையாதது
ஐம்பதில் விளையாது ............
நான் காதலிக்க ஆரம்பித்த வயது ஐந்து ....!

நாம் சிறுவயிதிலிருந்தே
ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருக்கிறோம் ....!
உன்னை கண்டுபிடித்தாலும் காட்டிக்கொடுக்காமல்
இருப்பதில் ஒளிந்து கொண்டிருந்தது என் காதல்....!

என் அம்மா நிலவை பார்த்து சோறு ஊட்டாமல்
பக்கத்து வீட்டு உன்னை பார்த்து சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள்....!
"அங்க பாரு தங்கச்சி பாப்பா" என்றால் ........
"அப்பாக்கு நீ தங்கச்சி வேணுமா மா" என்றேன்
அப்பாவியாய் ........
"அடப்பாவி" என்றால் அம்மா

காதல் வயதுக்கோளாறு .....
என்பதை நான் ஏற்றுகொள்ளமட்டேன் .......
காதலிக்க ஆரம்பித்த போது
எனக்கு 5 உனக்கு 3 .....!

ராஜா ராணி
விளையாடும் போது எனக்கு ராஜா வர
உனக்கு ராணி வர .....!
நான் உன்னை பார்த்து 32 பல் தெரிய சிரிக்க..
அந்த பற்களின் இடுக்கில் ஒளிந்திருந்தது காதல்..!

நாம் அப்ப அம்மா விளையாட்டு விளையாடுவோம் ....
"ஒழுங்கா seriela பார்க்காம சோத்த போடு டி" என்பேன் ......
"சரிங்க" என்பாய் ................
ஒரு நாள் நீ உன் மாமா பையனிடம் அப்பா அம்மா
விளையாட்டு விளையாட .........
நான் "என்னுடன் தான் விளையாட வேண்டும் "
என்று உன்னை அடித்தேன் ....................
அந்த அடியில் அதற்கடியில் காதல் ஒட்டிக்கொண்டிருந்தது .......!


























பள்ளி செல்லும் பேருந்தில் ......
நாம் இருவரும் இடைவெளி இல்லாமல்
அமர்ந்து கொண்டிருப்போம் .....
இடைவெளி இல்லாத இடைவெளியில்
அமர்ந்து கொண்டது காதல் ...!

அப்பொழுதெல்லாம் என் காதலை
வெளிப்படுத்த ரோஜா பூ கொடுக்க தெரியாது....!
ஜவ்வு மிட்டாய் வாங்கி கொடுத்தேன்.....

பள்ளி ஆண்டு விழாவில்
நாம் நடனம் ஆடினோமே.........நியாபகம்
இருக்கிறதா .....?
நான் அஜித் நீ ஜோதிகா ....

கத்தும் speakaril நானும் கத்தினேன் ......
"ஓ சோனா i love u da"
பக்கத்தில் ஜோடியாக ஆடிய உனக்கு
கேட்டதா....?
"நன்றாக நடித்தாய்" ஆசிரியர் சொன்னார் .........
நடித்தேனா?????

அந்த வயதுலேயே இருந்திருக்கலாம் ...........
நான் நீ நமக்கு குழந்தையாக நாய் குட்டி ............
பால் உணர்வில்லா காதல் ...................
கறந்த பால்

15 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// ராஜா ராணி
விளையாடும் போது எனக்கு ராஜா வர
உனக்கு ராணி வர .....!
நான் உன்னை பார்த்து 32 பல் தெரிய சிரிக்க..
அந்த பற்களின் இடுக்கில் ஒளிந்திருந்தது காதல்..! ////

காதலின் தீபம் உங்க கண்ணுல தெரியுது ....

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமாம் ராஜன்

புலவன் புலிகேசி said...

//அந்த வயதுலேயே இருந்திருக்கலாம் ...........
நான் நீ நமக்கு குழந்தையாக நாய் குட்டி ............
பால் உணர்வில்லா காதல் ...................//

அருமையான வரிகள்.........நீங்க ரொம்ப பீல் பண்றீங்க தல..........

வால்பையன் said...

கவிதை வடிவில் கதை சொல்ல முயற்சிக்கும்போது, கதைகள் நம்மை கொண்டு செல்ல ரைமிங் முக்கியம்!

உதாரணமாக கள்ளிகாட்டு இதிகாசம்,
வாலியின் கிருஷ்ணவிஜயம் சொல்லலாம்!

எதுகை மோனை மிக அவசியம், நல்ல மொழி நடையில் வர்ணனைகள் இருந்தால் படிக்க நன்றாக இருக்கும்!

ஏனென்றால் நீங்கள் எழுதியிருப்பதை கவிதையென்று சொல்லி கொள்ளலாமே தவிர, கவிதையாக எடுத்து கொள்ளமுடியாது!

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

வெண்ணிற இரவுகள்....! said...

நான் இப்பொழுது தான் பழகி கொண்டிருக்கிறேன் ......................................நான் எப்பொழுதுமே மாணவன் வால் சீக்கிரம் நன்றாக நீங்கள் சொன்னது போல் எதுகை மோனையில் எழுத கற்று கொள்வேன் நன்றி

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் புலிகேசி ...................ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு feeling

ஊடகன் said...

//
நாம் சிறுவயிதிலிருந்தே
ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருக்கிறோம் ....!
உன்னை கண்டுபிடித்தாலும் காட்டிக்கொடுக்காமல்
இருப்பதில் ஒளிந்து கொண்டிருந்தது என் காதல்....!

கத்தும் speakaril நானும் கத்தினேன் ......
"ஓ சோனா i love u da"
பக்கத்தில் ஜோடியாக ஆடிய உனக்கு
கேட்டதா....?
"நன்றாக நடித்தாய்" ஆசிரியர் சொன்னார் .........
நடித்தேனா?????

//


நீங்கள் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்தது ..........
தொடருங்கள் நண்பரே....

வெண்ணிற இரவுகள்....! said...

ம்ம்ம் கட்டாயம் தொடருவேன்

ஆர்வா said...

//அப்பொழுதெல்லாம் என் காதலை
வெளிப்படுத்த ரோஜா பூ கொடுக்க தெரியாது....!
ஜவ்வு மிட்டாய் வாங்கி கொடுத்தேன்.....//

நைஸ்.. அழகான ஒரு Feeling இருக்கு.

ஆர்வா said...

காதலை கவிதையா சொல்லனும்ன்னா வைரமுத்துவும், வாலியும்தான் காதலிக்க முடியும். காதல்ங்கிறது ஒரு அழகான Feeling. அதை வார்த்தைகள்'ல வெளிப்படுத்த தெரிஞ்சா போதும். உங்க வார்த்தைகள் உங்க காதலோட மென்மையை அழகா வெளிப்படுத்தி இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் வாலி, வைரமுத்துவோட வரிகள்ல அவங்க எழுத்துக்களை தாண்டி ஒரு புத்திசாலித்தனம் தெரியும். ஆனா தாமரையோட வரிகள்ல ரொம்ப இயல்பான காதல் ஒளிஞ்சிகிட்டு இருக்கும்.

// உலகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் பேசிப் பேசி தீர்த்த பின்னும், ஏதோ ஒன்று குறையுதே //

காதலோட தயக்கத்தை இதைவிட அழகா வெளிப்படுத்த முடியுமா? கவித்துவமான வரிகள்ல வசிக்க முடியும். ஆனா இயல்பான வரிகள்லதான் வாழ முடியும். Keep it up

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமாம் எனக்கும் தாமரையை பிடிக்கும் "எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனி துளி "
கமல் வயதானவர் என்பதை எழுத்தில் காண்பிப்பார் .......................
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை " ஒரு பெண் ஆணாக கற்பனை செய்து எழுதிருக்கிறார் அற்புதம் ..................
மேலும் அவர் ஈழத்திற்காக குரல் கொடுப்பவர் எனக்கு மரியாதை அதிகம்

நாடோடி இலக்கியன் said...

நண்பரே,
//உன்னை கண்டுபிடித்தாலும் காட்டிக்கொடுக்காமல்
இருப்பதில் ஒளிந்து கொண்டிருந்தது என் காதல்....!
//

//இடைவெளி இல்லாத இடைவெளியில்
அமர்ந்து கொண்டது காதல் ...!//

நான் ரசித்த வரிகள்.

அருமையான கவிதை எண்ணம் இருக்கிறது நண்பரே,மொத்தமாய் வாசிக்கும் போது வார்த்தைகள்தான் கொஞ்சம் கவனிக்கணும்.எழுத எழுத வசப்பட்டுவிடும்.

//அந்த அடியில் அதற்கடியில் காதல் ஒட்டிக்கொண்டிருந்தது //

அந்த அடியின் அடியில் காதல் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது போன்று சுருக்கமாகவும்,வாசிக்கும் போது ஓரே மாதிரியான சந்தத்தில் முடிந்தவரை ஒலிக்கும் படியும் எழுதினால் இன்னும் சிறப்பான இடம் இருக்கிறது.

வாழ்த்துகள்..!

வெண்ணிற இரவுகள்....! said...

மிகவும் நன்றி தோழரே .........நான் எனது தரத்தை வளர்த்துக்கொள்வேன்

கலையரசன் said...

ரொம்ப ஃபீல் பண்ணி எழுதிட்டீங்க!

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமாம் கலை அரசன் .....அந்த உணர்ச்சிகளே கவிதைக்கு அழகு சேர்கின்றன