Monday 12 October 2009

யார் சொன்னது கடவுள் இல்லை என்று ?



















சின்ன வயதிலிருந்து நான் நட்பால் ஆசிர்வதிக்க பட்டேன்.என்னுடைய முதல் நண்பன்

குருவஜித் ஐந்தாம் வகுப்பில் இருந்து எனக்கு தெரியும்.இப்பொழுதும் அவன் என்னுடன்

தொடர்பில் இருக்கிறான்.அஷிக் முஹம்மத் அப்புறம் கார்த்திக்.அனைவருக்கும் நான்

எவ்வளவோ கடமை பட்டிருக்கிறேன் .

என் எழுத்தை செதுக்கியது என் நண்பர்கள்.எனது B.sc நண்பர்கள் நான் எழுதிய

அரைவேக்காடுகளை எல்லாம் வைரமுத்துவுடன் ஒப்பிட்டு பேசினார்கள்.நான் என்ன தான்

கிரிக்கினாலும் அதை இலக்கியம் என்றனர் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து.

என்னுடைய வாழ்கையில் எனக்கு முக்கியமான நண்பன் லக்ஷ்மணன்.நானும் அவனும்

பேசினால் மூன்று அல்லது நான்கு மணி நேரம் பேசுவோம்.Dostoveskiyai பற்றி பேசுவோம்.

கார்க்கி பேசுவோம் ,யார் சிறந்தவர் என்று சண்டை போடுவோம்.

சினிமா பேசுவோம் கமலகாசன் உன்னை போல் ஒருவனில் இலை மறையாக

ஒளித்திருக்கும் பார்பனியம் பற்றி பேசுவோம்.கலைஞர் அரசியலில் எதிர்க்க நான் தான்

சரியான ஆள் என்பேன்.கம்யூனிசம் பற்றி பேசுவோம்.பழகும் போது நுட்பமான அரசியல்

இருந்தால் கூட என்னால் கண்டுபுடிக்க முடியும் என்றால் அவன் கற்று கொடுத்தது.

என் நண்பர்கள் என்னை ரசிக்கிறார்கள். நான் காதலில் தொலைந்த நாட்கள் உள்ளன.

நான் தற்கொலைக்கு முயன்றது உண்டு.என்னை வாழ்கையில் காப்பற்றியது நான்

இப்பொழுது இருக்கும் ஏரி கரை சாலை தோழர்கள்.


அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு புதினம் தேவை அந்த எண்ணமும்

உள்ளது.இப்பொழுது கூட என் அலுவுகத்தில் நல்ல நண்பர்கள் இம்ரான் பாஸ்கர் முருகுவேல்

சுப்பு......நான் கிழே விழும் போதெல்லாம் அவர்கள் தாங்கி பிடிகிறார்கள்

இப்பொழுது நான் வலை பூவிற்கு புதிது.....நான் எதோ கத்து குட்டி போல் எழுதி

கொண்டிருக்கிறேன்.இங்கே என்னை படித்தான் ஒரு நண்பன்,அவன் பதிவுலகிலே ஒரு முக்கிய

புள்ளி அவனுக்கு என்னை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. படித்தாலும்

அறிமுகப்படுத்த வேண்டுமே....என் நண்பன் செய்தான் ஈகோ மறந்து வலை பூவில்

குழந்தை போல் இருக்கும் என்னை அறிமுகம் செய்தான்.என் முகத்தை அவன் முகத்தில்

அறிமுகம் செய்தான் .அவன் வலை பூவிலே என்னை அறிமுகம் செய்தான்....நண்பா உன்


காலுக்கு முன்னால் என் படைப்புகள் தூசு........

http://irumbuthirai.blogspot.com/2009/10/blog-post_12.html

அரவிந்த் நீயும் எனது உயிர் நண்பன்

நான் நண்பர்களால் ஆசிர்வதிக்க பட்ட குழந்தை..................

யார் சொன்னது கடவுள் இல்லை என்று ?

13 comments:

Menaga Sathia said...

நண்பர்கள் பற்றிய பதிவு நல்லாயிருக்கு.மேலும் சிறப்பால எழுத வாழ்த்துக்கள்!!

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நான் எப்பொழுதும் நண்பர்களுக்கு கடமை பட்டுள்ளேன்

இரும்புத்திரை said...

உன் பதிவைப் பற்றி தம்பி சொன்னான் நெகிழ்ந்து போய் இருக்கிறேன்.

//அவன் பதிவுலகிலே ஒரு முக்கிய புள்ளி//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.நான் விரும்புவது எல்லாமே நட்பு தான் .இப்படி சொல்லும் உன் பெரிய மனதிற்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

நட்பு என்பது மிகப் பெரிய விசயமுங்க. அந்த நட்புக்கு மிகப் பெரிய மரியாதையை செய்து இருக்கீங்க.

வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

I love this post verymuch... Keep it up my dear FRIEND..

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா உன் நட்பிற்கு தலை வணங்குகிறேன் ...........

அ. நம்பி said...

நட்பையும் நண்பர்களையும் மதிக்கும் பண்பு போற்றுதலுக்கு உரியது.

வாழ்க; வளர்க.

வால்பையன் said...

உங்களுக்கு அமைந்ததெல்லாம் நல்ல கடவுள்கள் போல!

சிலருக்கு நண்பர்கள் சாத்தான்களாக அமைந்து விடுகிறார்கள்!

இப்படிக்கு சக கடவுள் அல்லது சாத்தான்!

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமாம் எனக்கு தெரிந்து ஒரே ஒரு சாத்தான் மட்டுமே .........................மற்ற நண்பர்கள் கடவுள்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நம்பி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

ஊடகன் said...

"நல்ல நட்பை நம்பினான் கைவிடபடான்", என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்..........

Unknown said...

good...