Tuesday 13 October 2009

குருதியால் எழுதுதிறேன் .

















நான் இந்த கவிதை
எழுதி கொண்டிருக்கும் போது........
ஒரு ஈழ குழந்தை இறந்திருக்கும் ........
ஒரு தங்கை கற்பு இழந்திருப்பாள்.......!

எங்களுக்கு வெடி சத்தம்
புதிதல்ல....ஈழ குழந்தை சொல்கிறது ..........
இங்கே வெடிகள் கீழிருந்து மேலே பொய் வெடிக்கும் ...
அங்கே குண்டுகள் மேலிருந்து கீழே வந்து வெடிக்கும் ....!

ஒரு தாயை சிங்களன் சுட்டு விட்டன்
மார்பிலிருந்து குருதி வருகிறது ...
குழந்தைக்கு பசி ................
தவழ்ந்து வந்து அந்த தாயின் முலையிலிருந்து ...
குருதி குடிக்கிறது ..........

ஈழ கவிதை
எழுதும் போது மட்டும் .....
என் சகோதரன் குருதியால்
எழுதுதிறேன் ....!

இங்கே நான் தீபாவளிக்கு
இனிப்பு சாப்பிடும் பொழுது..........
சிங்களன் மனித கரி
சாப்பிட்டு கொண்டிருக்கிறான் ....!

10 comments:

ஊடகன் said...

//
எங்களுக்கு வெடி சத்தம்
புதிதல்ல....ஈழ குழந்தை சொல்கிறது ..........
இங்கே வெடிகள் கீழிருந்து மேலே பொய் வெடிக்கும் ...
அங்கே குண்டுகள் மேலிருந்து கீழே வந்து வெடிக்கும் ....!
//

நையாண்டி நைனா said...

So sad. but it is a real one in Eelam.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் தினம் தினம் சோகம் ..........................
எனக்கு எழுதி கொண்டிருக்கும் போதே வலிக்கிறது

அன்புடன் மலிக்கா said...

வெண்ணிறவே,
நிஜமாகவே மனம் வலிக்கிறது,
ஏனோதெரியவில்லை, இன்று இதைபற்றிதான் நானும் எழுதியுள்ளேன்.

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
தமிழ் நாடன் said...

////நான் இந்த கவிதை
எழுதி கொண்டிருக்கும் போது........
ஒரு ஈழ குழந்தை இறந்திருக்கும் ........
ஒரு தங்கை கற்பு இழந்திருப்பாள்.......!///

எத்தனை பேருக்கு நண்பா இது குறித்த பிரஞ்ஞை இருக்கிறது. கேட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கே ஆயிரம் பிரச்சினை இதில் இவர்களை யார் பார்ப்பது என்று கேட்கிறார்கள் மனசாட்சியே இல்லாமல். ஆயிரம் பிரச்சினையில் இவர்கள் மானாடுவதையும் மயிலாடுவதையும் பார்க்காமல் விட்டு விட்டார்களா? இல்லை காமரசம் சொட்டும் அற்ப சினிமாக்களை பார்க்காமல் விட்டு விட்டார்களா? வலிக்கிறது நண்பா !

வேல்தர்மா எழுதியுள்ள வரிகள்தான் ஞாபகம் வருது.
பொங்கும் தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆறரை கோடி உறவுகளும்
அறிக்கை விட்டு விட்டு
அம்போ என்று விட்டு விடும்
என்று முழங்கு சங்கே!

வெண்ணிற இரவுகள்....! said...

//ஆயிரம் பிரச்சினையில் இவர்கள் மானாடுவதையும் மயிலாடுவதையும் பார்க்காமல் விட்டு விட்டார்களா? இல்லை காமரசம் சொட்டும் அற்ப சினிமாக்களை பார்க்காமல் விட்டு விட்டார்களா? வலிக்கிறது நண்பா !
//
கவலை பட கூட நேரம் இருக்காது ..............இலங்கையில் நடக்கிற மட்டை பந்து வீச்சை பார்பார்கள் .............பிணங்கள் நடுவே விபசாரம் செய்வது போன்று எனக்கு இருக்கிறது .........
இங்கே மானாடமயிலாட காமம் சொட்ட சொட்ட பார்பார்கள் ...........கவலை பட நேரம் இல்லையாம் அது அவர்கள் நாட்டு பிரச்சனையாம் .......................நாம் அங்கு மனிதனாக கவலை கூட பட வில்லை என்பது தான் என் வலி ...............

பாலா said...

வோட்டு மட்டுமே போட முடியும்.. இன்னொரு இந்தியன். :( :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனம் வலிக்கிறது,

ஹேமா said...

வணக்கம் வெண்ணிற இரவுகள்.எப்படி உங்கள் பதிவுகளைத் தவறவிட்டேனென்று தெரியவில்லை.அருமையான பதிவுகள்.

சேகுவரா.ஈழத்து உணர்வோடு ஒரு கவிதை.கலங்கிவிட்டேன்.கறி என்றுதானே வரும் !உணர்வுக்கும் கைகோர்த்தமைக்கும் மிக்க நன்றி.